GOLI SODA-2014/ கோலி சோடா/ திரை விமர்சனம்.



ஒரு காலத்தில் மெரினாவின்  காந்தி சிலை அருகே என் வறுமையை உடன் விரட்டி ... சட்டென   இரண்டு வேளை சாப்பாட்டுக்கு உத்திரவாதமான வேலை எதுவென்று யோசித்துக்கொண்டு இருந்த போது, சட்டென  சுக்கு காபி விற்பவர் என் கண்ணில் பட்டார்..... 


பளிச் என ஒரு ஐடியா உதித்து.. 

ஏன் வாடகை சைக்கிள் டீ கேன் என்று ஒரு ஆயிரம்  ரூபாய் முதலிட்டில் தினம் டீ விற்க கூடாது..???? எப்படியும் 200 டீ அளவுக்கு விற்பனை இருப்பதாக  டீ விற்பவர் தெரிவித்தார்... அன்று டீ விற்க ஆரம்பித்து இருந்தால் இன்று   மெரினாவில் டீ விற்று வளர்ந்து லைட் ஹவுஸ் பக்கத்தில் ஒரு டீக்கடையோடு   ஆவி பறக்கும் பாலோடு என் வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருந்து இருக்கலாம்....


அன்றில் இருந்து  மெரினாவில் எந்த  சுக்கு  காபி சைக்கிளில் விற்பவரை கண்டாலும் அவர்களிடம் இரண்டு வார்த்தையாவது பேசாமல் நான்  அனுப்பியது  இல்லை..

எந்த ஊரு....

காரைக்குடிங்க...

எப்படி இங்க....??

ஊருல எனக்குன்னு யாரும் இல்லை.... ஒரு விபத்துல எல்லாரும் என்னை விட்டுட்டு  போயிட்டாங்க... சொந்தக்காரங்க ஆதரவு கொடுத்தாங்க... ஆனா என்னை வேலைக்காரனா யூஸ் பண்ணாங்க... குடிக்கற தண்ணி கூட அடி பைப்பில புடிச்சிதான் குடிக்க சொன்னாங்க... சொந்தக்காரன்  கிட்ட அடிமை வேலை செய்யறதுக்கு மெட்ராசுக்கு போய் மூட்டை  தூக்கியாவது  பொழச்சிக்கலாம்ன்னு இங்க வந்தேன்...


எனக்கு தெரிஞ்சி சைக்கிள்ள டீ விக்கறதுதான் குறைஞ்ச முதலீட்டில் பணம் சம்பாதிக்கற தொழில்... கடை கண்ணிக்கு அட்வான்ஸ் கொடுக்க வேண்டாம்....   ரவுடி தொல்லை ...அது இதுன்னு இதுல பெரிசா  பாதிப்பு இல்லை... அதனால டீதான் வித்தேன்... நல்லா நாலு  காசு  சேர்த்தேன்..


தோ அந்த இடத்துலதான் படுத்துக்குவேன்..... சின்ன சின்ன வேலை செஞ்சி பணம் சேர்த்தேன்....  அட்ரஸ் இல்லாத இடத்துல சேர்த்து வச்ச பணத்தை பாதுகாக்கறது இருக்கே அது நரக  வேதனை...

 அப்பதான் என்னை போல அப்பன்ஆத்தா இல்லாம ஒரு ஆனாதை ஒருத்தன் என்கிட்ட நட்பானான்...  அந்த பயலுக்கு விழுப்புரத்து பக்கம்....அவனும் நானும் சேர்ந்து டீ விப்போம் ...  ஐஸ் அவுஸ்க்கிட்டு  சின்னதா ரூம் எடுத்துக்கிட்டோம்

 அங்கதான் தங்கினோம்....... 

எங்களுக்குன்னு தங்க ஒரு இடம்.... ஒரு ஆட்ரஸ்...

 ரொம்ப சந்தோஷப்பட்டோம்...

ரப்பகலா தெரு தெருவா டீ வித்து இன்னும் பணம் சேர்தோம்... ஐஸ் அவுஸ்ல டீ கடை போட்டோம்....  நட்புக்கு எடுத்துக்காட்ட வாழ்ந்தோம்....டீக்கடையில செம வியாபாரம்... 


எங்க கடைக்கு எதிர் வீட்டு  முஸ்லீம் பொண்ணை இவன் லவ் பண்ணான்.... அதுவும் கொஞ்சநாள்ல இவனை  லவ் பண்ண ஆரம்பிச்சிது...


ஒரு நாளு அந்த பொண்ணு கண்ணை  கசக்கிட்டு வந்து நின்னுச்சி... சமாதானம் சொல்லி அனுப்பி வச்சான்.. மறுநாள் காலையில் அவனும் இல்லை... அந்த பொண்ணும் இல்லை.....67 அயிரம் சேர்த்து வச்சி இருந்த பணமும் இல்லை.... 

என் டீக்கடையை என் கண் முன்னே போட்டு உடைச்சானுங்க  பொண்ணை பெத்தவனுங்க... வேற வழி.... எல்லாத்தையும் கை கழுவிட்டு திரும்ப  இப்ப சைக்கிள்ள டீ வித்து வயித்தை கழுவிக்கிட்டு இருக்கேன்....

கல்யாணம் ?? புள்ளைகுட்டி...  அடப்போப்பா வெறுத்து போச்சி...மிச்ச சில்லரையை எண்ணி என்னிடத்தில் கொடுத்து விட்டு சைக்கிள் ஸ்டான்ட்   தள்ளி......... சுக்கு காபியேயேயேயேயேயே என்று கணீர் குரலில் விற்றுக்கொண்டு போய்க்கொண்டு இருந்தார்.


இப்படி சென்னை முழுவதும் தள்ளு வண்டி தள்ளறவன்ல இருந்து, மூட்டை துக்கறவன்ல இருந்து ,காவா அள்ளறவன் வரைக்கும் ஒவ்வொருத்தனுக்கு பின்னாடியும் ஒரு கதை  இருக்கு... அதுக்கு பின்னாடி வலி நிறைந்த  வாழ்க்கை கதைகள் நிறையவே  இருக்கு....


அப்படி கோயம்பேடு மார்கெட்டுல கூலி வேலை பார்க்கற  நாலு ஆனாதை பசங்களோட கதைதான்  இந்த கோலி சோடா...

நாலு பசங்க அவுங்க  முன்னேற வேண்டும் என்ற  வேட்கையுடன் இருக்கும் போது  ஆதரவு கொடுத்தவர்களே ஆதரவை பறிக்கும் போது இழந்த அடையாளத்தை மீட்க அந்த  நால்வரும்  போராடுவதுதான் கோலி சோடா திரைப்படத்தின் கதை.

 படம் பார்க்கும் போது நம்மை முதலில்  நம்மை வசீகரிப்பவர்   எடிஎம் பெண்தான்... 


அவ்வளவு பெரிய கோயம்பேடு மார்க்கெட்  அதனுடைய டீடெயிலை இன்னும் சிறப்பாக  கொடுத்து இருக்கலாம்... 

உதாரணத்துக்கு கேப்டன் பிலிப்ஸ் படத்தில் 24 ஆயிரம் டன்  சரக்கோடு கப்பல் கிளம்பும் போது புல் டீடெயில் கொடுப்பார்கள்... காரணம்.... நாம் அந்த  கப்பலின் உள்ளே நம்மை அறியயாமல்  அழைத்து செல்ல வேண்டும் என்பதுதான்...... அதை செய்து இருக்கலாம் .. சென்னையில்  இருக்கும் சிலருக்குதான்  கோயம்பேடு தெரியும்.. தென்மாவட்ட இளைஞனுக்கு இன்னும் அதை பற்றிடீடெயில் கொடுத்து  இருக்கலாம்...


அதே போல அந்த நாலு பசங்க யாரு.... அனாதை... சரி ...??அனாதைன்னா? எப்படி அனாதையானாங்க.. அந்த டீடெயில் கண்டிப்பா இரண்டு வரியில அல்லது மாண்டேஜ்லயாவது சொல்லி இருந்தா இன்னும்  அவர்களோடு பயணிக்க  நமக்கு எந்த தடையும் இருந்து இருக்காது......



படத்துல முதல்ல பார்வையாளன் அவன் படமா நினைக்கற இடம் இமான் அண்ணாச்சி குடிச்சிட்டு போலிஸ்டேஷன்ல உளறுவது உண்மையை அள்ளி தெளிக்கும் அந்த இடத்தில் இருந்துதான் பார்வையாளன் படத்தின் உள்ளே நுழைகின்றான்...

சென்டிமென்ட் சீன்னு பார்த்தா ஏடிஎம் சர்சுல உட்கார்ந்து தன்னை பத்தி சொல்லறது..

அதே போல ஆச்சி கேரக்டர்.. ரொம்ப இயல்பாக வடிவமைத்து  இருக்கின்றார்கள்...

மயிலாக நடித்து இருக்கும் ஆர்ட் டைரக்டர் விஜய் முருகன் நடிப்பில்  பின்னி இருக்கின்றார்...  அந்த கேரக்டர் மாமா  பின்னனியை  வைத்துக்கொண்டு டகுல் பாட்ச்சா வேலை பார்க்கும் என்பதை சின்ன பசங்க அவரை தள்ளி விட்டு ஓடும் போதே... எகிருவதில் காட்சிபடுத்தியதில் இருந்தே அந்த கேரக்டர் கட்டமைக்கபடுகின்றது... 

அதே போல ஒரு நோட்டை கம்மியா கொடுத்துட்டு இந்த  ஏரியா  உட்டு புடுவே என்று பேசும் கேஷூவல்  டயலாக் விஜய் முருகனுக்கு  கச்சிதமாக பொருந்துகின்றது...


 இரண்டு படங்கள்  விஜய் முருகனோடு பணி புரிந்து இருக்கின்றேன்...  வித்தகன் மற்றும் சுறா படங்களில்   அவரோடு பணிபுரியும் போது கூட மனிதர்  இவ்வளவு கேஷூவலாக நடிப்பார்  என்பது தெரியாமல் போய் விட்டது....


குப்பையான  சாக்கடை இடத்தில்  அசிங்கம் பார்க்காமல் விழுந்து பசங்களிடம் உதை வாங்கிய  இடத்தில் விஜய் முருகனுக்கு கலைத்தாயின்  ஆசிர்வாதம் கிடைத்து விட்டது  என்றே  தோன்றுகின்றது.  அந்த அதிர்ச்சியை மிக அழகா உள் வாங்கி  நடிச்சி இருப்பார்...

லோகு கேரக்டர்  கத்தியால் குத்த  வரும் காட்சியில் மகள் வருவது..... காதில் பூ சுற்றவதாக படம் பார்த்தவர் வெளியே வரும் போது பேச... நான் சொன்னேன்.. முதல் காட்சியில் வெள்ளைக்காரி பொட்டியை திருடியதே பிள்ளைக்கு ஸகூல் பிஸ் கட்டத்தான் என்பதை சொல்லி விளக்க அதன் பிறகு புரிந்தது போல தலையை ஆட்டிவைத்தார்...


நாயுடு கேரக்டர் தனது கேஷூவலான நடிப்பல் மிளிர்கின்றார்.. முக்கியமாக ஆச்சி முதன் முறையாக பசங்களோடு  நாயிடுவை  பார்க்க அவர் வீட்டுக்கு வரும் அந்தக்காட்சியில் ரொம்ப இயல்பாக நடித்து இருப்பார்.
....
 படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போது அந்நத பசங்க உதை வாங்கும் காட்சியில்  யாழினி கேட்டாள்..  அம்மா ஆச்சி அம்மா எங்கம்மா போயிட்டாங்க...?அந்த பாசம்... அம்மாவுக்கான குணம் எல்லாம் படம் பார்க்கும் போது உணர முடிகின்றது....


 எப்படி பசங்க எல்லாரையும் பந்தாடுறாங்க என்று கேட்கும் கேள்வி எனக்கு  சிரிப்பாக வருகின்றது.. ஜிப்சி ஜிப்பையே காலில் கயிறு கட்டி நிற்க   வைக்கும் சாமார்த்தியமான நாயகனை கொண்டாடிய நாம்... இங்கே லாஜிக் கேள்வி கேட்கின்றோம்.... பரவாயில்லை... அவர்களுக்கு விருப்பமான பெண்ணை தாக்கும் போதுதான் இன்னும்  வெறி வந்த பொங்கி உதைக்கின்றார்... அதே போல அவர்கள் குத்தூசியை வைத்து குத்தி எதிராளிகளை துவைத்து எடுக்கின்றார்கள்.... அதை எல்லாம் ஒரு குளோசப்பில்  காட்சிபடுத்தி இருந்தால் இந்த கேள்வியே வந்து இருக்காது...


 அதே போல நிறைய இடங்களில் லிப் மூவ்மென்ட் இருக்கின்றது.. டயலாக் இல்லை...  இடைவேளையில் சத்தியம் கக்கூசில் இரண்டு பேர் பேசிக்கொண்டார்கள்.. படம் பரபரன்னு போவுது இல்லை... என்றார்... இன்டர்வெல்லுக்கு பிறகு கொஞ்சம்  கத்திரி வைத்து  இருந்தால் இன்னும் பரபரன்னு முழுபடமும் போய் இருக்கும்.. 

  
இந்த படம் ஜெயிக்க முக்கியகாரணம்... ஒரளவுக்கு  லாஜிக்கா கதை சொன்னது... நாலு பேருல யாரையுமே சாவடிக்கலை.... சோக பாட்டு போட்டு மூக்கை சிந்த வைக்கலை... அதுவும் படத்தை  இன்னும் ரசிக்க  முக்கியகாரணம்...


எங்க வீட்டம்மா படம் பார்த்து முடிச்சதும் கேட்டாங்க... அவுங்க எல்லாம் சின்ன பசங்களா,-? ஒரு பொண்ணு போய்தான் அவுங்களை ஒன்னு சேர்த்து அழைச்சிகிட்டு வருனுமா?


நல்ல கேள்வி....

மூஞ்சி மொகரை பேத்து உயிர் போற அளவுக்கு  அடிச்சி... மத்தவன் உயிரோடு இருக்கறானா இல்லையான்னு அந்த  நாலு பேருக்குமே   யார் எங்ன இருக்காங்க... உயிரோடு இருக்கான இல்லையான்னு  யாருக்குமே தெரியாது... 

நாலு பேரும்  தன் உயிரோடு இருக்கவே முதல்ல   போராடுறாங்க... எல்லாரும் இந்த இடத்துல இருக்காங்கன்னு  டிரைவர் மூலமா  தெரிஞ்சிக்கிட்டு ஏடிஎம் பொண்ணு ... அவுங்களை ஒன்னு  சேர்க்கறா... அதே  போல அவுங்க தனி தனியா இருந்தா பலமே கிடையாது.. 

ஒன்னா இருந்தா மட்டும்தான் பலம்.... அப்படி ஒன்னா ஆனா பிறகுதான் இடிஞ்ச சர்ச்ல காது கம்மலை திருடும் குடிகார பசங்களோடு சண்டை போடுறாங்க... 

அதுல ஒரு பையன் அதாவது ஹீரோவா இருக்கற பையன் மட்டும்... இவுங்க போறதுக்குள்ளே  அவன் அங்க இருக்க மாட்டடான்.... ஏன்னா அவன் மட்டும்தான் நிதானமா யோசிக்கறவன்... அதனால்தான் அவன் இடம் எதுன்னு முடிவு பண்ணி அங்க இருந்து  போயிட்டதா புத்த பிட்சு சொல்லறது  போல ஷாட் வச்சி  இருப்பாரு... இப்ப புரியுதா என்றேன்... தலை உடனே  ஆட்டி வைத்தாள்..  அப்படி புரிந்தது போல எனக்கு உணர்த்த தலையை உடனே வேகமாக  ஆட்டினால் புரிய வில்லை என்பதுதான்  இத்தனை வருடத்தில் நான் கண்ட உண்மை.


பவர் ஸ்டார்  மற்றும்  சாம் அண்டர்சன்  வரும் காட்சிகளில் தியேட்டர் கொல் என்று சிரித்தாலும்...  அது படத்துக்கு வேகத்தடையே....  இந்த படத்தை இன்னும்  நரேட்டிவ் ஸ்டைலில் இந்த கதையை எடுத்துக்கிட்டு போய் இருந்தா இன்னும் இந்த படத்தோட வெற்றி  தாறுமாற இருந்து இருக்கும்....

========
படத்தின் டிரைலர்.



==========
படக்குழுவினர் விபரம்

Directed by Vijay Milton
Produced by Bharath Seeni
Written by Vijay Milton (Story)
Pandiraj (Dialogues)
Starring Kishore
Sree Raam
Pandi
Murugesh
Music by S. N. Arunagiri


A. Seelin (BGM)
Cinematography Vijay Milton
Editing by Anthony
Studio Rough Note
Distributed by Thirrupathi Brothers
Release dates
January 24, 2014
Country India
Language Tamil

===============
பைனல்கிக்.


 அழகாய் இருக்கின்றாய் .. பயமாய் இருக்கின்றது... படம் ஒரு மொக்கையான திரைப்படம்....  அதை எடுத்த மில்டனா இந்த படத்தை எடுத்து இருக்கின்றார் என்று   நிறைய காட்சிகளில் மிரள வைத்து இருக்கின்றார்...மில்டன் இந்த படத்தை மாற்று சினிமாவாக எடுக்கவில்லை... சின்ன பசங்களை வைத்துக்கொண்டு ஓரளவுக்கு லாஜிக்கோடு 75 சதவீகித நம்பகத்தன்மையோடு இந்த படத்தை கொடுத்து இருக்கின்றார்... அதில் வெற்றியும் பெற்று இருக்கின்றார் என்பதை படம் முடியும் போது கிடைக்கும் கைதட்டல்கள் நிரூபிக்கின்றன... கோலி  சோடா பார்க்க வேண்டிய திரைப்படம்.



==========
படத்தோட ரேட்டிங்

 பத்துக்கு ஏழு...

===========

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

4 comments:

  1. விமர்சனத்தவிட சுக்கு காப்பி அண்ணாச்சியின் வாழ்க்கை நரகம்தான்...

    நம்மை சுற்றி எம்புட்டோ நடந்துகிட்டு இருக்கு அண்ணே...அப்பன் ஆத்தா இருந்தும் அனாதையாக வாழ்ந்த வாழ்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்...!

    ReplyDelete
  2. அப்பன் ஆத்தா இருந்தும் அனாதையாக வாழ்ந்த வாழ்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்...!

    ReplyDelete
  3. அப்பன் ஆத்தா இருந்தும் அனாதையாக வாழ்ந்த வாழ்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்...!

    ReplyDelete
  4. Prasanna Vithanage VIDAM ASST A IRRUKUM VISHAVMITHRAN N SCREEN PLAY I
    THIRUDI PADAM YEDUTHAR

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner