மயிலாப்பூருக்கும் மந்தவெளிக்கும் இடைப்பட்ட இடத்தில் பணக்காரர்கள் மட்டுமே வாழ முழுத்தகுதி
பெற்ற இடத்தில் அந்த பிளாட் இருக்கின்றது...
பிளாட் என்று சொன்னால் அங்கே வாழ்பவர்கள்
காயப்படுத்தும் என்பதால் செமி இண்டிபெண்டன்ட் வீடு அது... செக்யூரிட்டி ,லிப்ட், கண்காணிப்பு
கேமராக்கள், பூங்காக்கள் என்று சகலமும் இருக்கின்றது...
அங்கே கிரிக்கெட் விளையாடும் பிள்ளைகள் அத்தனை பேரும் தெரியாமல்
இடித்துக்கொண்டால் கூட அம்மா என்று கத்தாமல் ஷிட் என்று முனகி கொண்டார்கள்...
மாதம் மெயின்டெனன்ஸ் மட்டும்
ஒரு 5000 ரூபாய் நிச்சயம் இருக்கும்.... உள்ளே
போய் கதவை சாத்திக்கொண்டால் எதிர் வீட்டில் விக்கல் எடுத்துக்கொண்டு
தண்ணி தண்ணி என்று கதறினால் கூட காவை வெடுக்கென்று சாத்தி விட்டு ஆம்புலன்சுக்கு
போன் செய்வார்கள்.... விக்கல் எடுத்து மயக்கமானவனை ஆம்புலன்ஸ்சில் ஏற்றும் போது கூட்டம்
கூடிய பிறகு மெல்ல தலை நீட்டி ஆம்புலன்சுக்கு போன் பண்ணியதே நான்தான் என்று பெருமை
பீத்திக்கொள்வார்கள்... அப்படி பட்ட மக்கள்
வாழும் இடம் அது....
அப்படி பட்ட இடத்தில் தான் அந்த பெண்மணியை சந்தித்தேன்...
அவருக்கு வயது எழுபதை நெருங்க இன்னும்600 நாட்கள் தேவையாய் இருக்கின்றது... தனியாய்
இருக்கின்றார்.... அவர் வாழும் வீடு உள்பக்கம் படி இருப்பது போன்ற டூயூப்ளக்ஸ் வீடு...ஒரு
மூவாயிரம் ஸ்கொய்ர் பீட்டாவது வரும்... நாலு பெரிய ரூம்கள் 50 இன்ச் எல்இடி பக்கா சவுண்ட் சிஸ்டம் என்று அசத்தலாய் இருக்கின்றது... ஓவன், டபுள் டோர் பிரிட்ஜ், எல்லா ரூமுக்கு ஏசி...ஒரு ஹைடெக் வீட்டுக்காக தகுதி அந்த வீட்டில் காண முடிந்தது...
அப்படி பட்ட வீட்டையும்
அந்த முதிய பெண்மணியையும் ஏன் ஊர்க்காரர்கள் பார்த்து இருந்தால்... “கட்டையில போற வயிசில
ங்கோத்தா கிழவி எப்படி அனுபவிக்குது பாரேன்...” ஹூம்“ அவுங்க அப்பன் கோமனம் அவுத்த
நேரம் அப்படி ...”என்று சர்வ நிச்சயமாய் சொல்லி இருப்பார்கள்..
இந்து பத்திரிக்கையை முதல் எழுத்தில் இருந்து கடைசி
எழுத்து வரை வாசிக்கும் அனுபவத்தினால் சரஸ்வதி
தேவி அவர் நாக்கில் ஆங்கிலத்தில் பூந்து விளையாட கட்டளை இட்டுவிட்டார் போல.... பின்னி பெடலெடுக்கின்றார்...
நான்கு பிள்ளைகள் ஆனாலும் அனாதையாக இந்த வீட்டில் அவர் இருக்கின்றார் என்ற தகவல் என்னை வியப்பில் ஆழ்த்தியது... அவர் பேச பிரியபடுகின்றார்
என்பது என்னிடம் பேசிய சில வினாடிகளில் என்னால்
உணர முடிந்தது...
என்னிடம் பெண்கள் அதிகம்
பேசிக்கொண்டு இருக்க பிரியப்படுவார்கள்... காரணம் நான் அவர்கள் பிரச்சனையை என் பிரச்சனை போல உள் வாங்குவேன் கருத்து சொல்லுவேன்... தெரியவில்லை
என்றால் தெரியவில்லை என்று சொல்லி விடுவேன்....
முக்கியமாக அவர் தனிமை அவரை நிறைய பேச வைக்க துடித்தது... அது கண்களில் தெரிந்தது...
வேடில அதிகம் இருந்தும் அச்த பழுத்த பெண்மணியோடு
நேரம் செலவிட முடிவெடுத்தேன்.
எவரிடமாவது கொட்டி விட
கிடைத்த சந்தர்ப்பமாய் அந்த பெண்மணி என்னிடத்தில் கொட்டத் துவங்கினார்... யாரிடமாவது
நட்பு பாராட்டி தன் உள்ளக்குமுறலை சொல்லலாம் என்றால் அதுக்கும் நாதியில்லை... சாத்திய கதவுகளிடம் யாராவது
நட்பு பாராட்டுவார்களா? என்ன?
நல விசாரிப்புகளை தொடங்க... அவர் உற்சாகமானார்... மேலும்
பேச ஆரம்பிக்க குற்றால அறிவியாய் கொட்ட துவங்கினார்.
தென் மாவட்டத்து பக்கம்
சொந்த ஊர்.... வயசுக்கு வரும் முன்னே கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க....14 வயசுல வயசுக்கு
வந்தேன் 23வயசுக்குள்ள பத்துக்குழந்தை... அதுல கலைஞ்சது... கரைச்சதுன்னு ஒரு ஆரை பகவான் எடுத்துண்டான்... சென்னையிலதான் வாழ்க்கை.... எங்க வீட்டுக்காரர்
தங்கம்... என்னை கையில வச்சி ஏந்திக்குவார்.... கல்யாணத்துக்கு பிறகும் என்னை படிக்க
வச்சார்.... நான் அந்தக்கால பீயூசி... என்னை இன்னும் படிக்க சொன்னார்... நான்தான் புள்ளைங்கள
பார்த்துக்க சிரமமா இருக்குன்னு நான் மேல படிக்கலை..
வீட்டுக்காரருக்கு மத்திய
அரசு உத்தியோகம்... காசை எப்படி செலவழிக்கலாம்ன்னு
தெரியாத அளவுக்கு பணம்... பீரோ நிறையா இருக்கும்...
சாகர வரைக்கும் என் புருசன் என்கிட்ட
எவ்வளவு பணம் நம்மக்கிட்ட இருக்குன்னு ஒரு போதும் கேள்வி கேட்டதேயில்லை... அப்படித்தான் நானும் குடும்பம் பண்ணேன்... ஒரு வேளை அப்படி குடும்பம்
பண்ணதாலோ என்னவோ? எவ்வளவு பணம் நம்மக்கிட்ட
இருக்கு என்று ஒரு போதும் கேட்டதேயில்லை....
அவரு ஆராயச்சியாளர் நிறைய படிச்சிக்கிட்டே
இருப்பாரு.. ஆர்க்கியாலஜி டிப்பார்ட்மென்ட்டுல வேலை... சென்னையிலதான் வேலை இருந்தாலும்
இந்தியா முழுக்க கூத்துவார்.... பெரிய பையன்...
விவேகானந்தா கலேஜ்லதான் படிச்சான் கோல்ட் மெடலிஸ்ட்... மத்த மூனு பேரும் ஒன்னும்
மக்கும் இல்லை... லயோலா, மெட்ராஸ் யூனிவர்சிட்டி,
ஐஐடின்னு படிச்ச எல்லா இடத்திலேயும் கோல்டு
மெடலிஸ்ட்டுங்கதான்...
பெருமைக்கு பூரிப்புக்கும்
குறைவில்லாமதான் வாழ்க்கை
போய்க்கிட்டு இருந்திச்சி.
டெல்லிக்கு மாத்தலாகி போனோம்
ஆத்துக்காரருக்கு பெரிய பொசிஷன்... தனி வீடு காரு வேலைக்கு ஆளுன்னு டெல்லி வாழ்க்கை
நல்லாவே போச்சு.... என் புருசன்.... படிப்பு
ஆராய்ச்சின்னு ஒப்படைச்சிக்கிட்டார்... இந்தியாவின்
வரலாற்று செல்வங்களை ஆவணபடுத்தறதுல தன் முழுவாழ்க்கையையும் செலவிட்டு தன் வாழ்நாளை கரைச்சிக்கிட்டார்.... அதுக்கு நான் உறுதுணையாக இருந்தேன்...
நிறைய பொஸ்தகம்
எழுதி இருக்கார்....பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் வீட்டுக்கு வந்து நீங்க எழுதிய புத்தம்
எல்லாம் இந்தியாவோட சொத்துன்னு சொல்லி கை குலுக்கி வாழ்த்தும் போது... ரொம்ப பெருமையா
இருக்கும்... சம்பளத்தை இந்திய சர்கார் லட்சத்துலதான்
கொடுத்துச்சி...
பெரியவன் அங்கதான் அந்த
பழக்கத்தை அவன் கத்துக்கிட்டான்... இன்னைக்கு
வரைக்கும் அவன் அந்த பழக்கத்தை விடவே முடியலை... டிரக் அடிக்ட் ஆகிட்டான்... இப்படியே
போனா எனக்கு முன்னாடி அவன் பிராணனை விட்டுவான்னுதான்
டாக்டருங்க சொல்லறாங்க... அதையும் பார்க்கனும்ன்னு விதி இருந்தா பார்த்துக்கறேன்...
எல்லா மருமாலுக்கும் என்னை கண்டா ஆகறதில்லை... அவுங்க
புள்ளைக்குட்டி மட்டும் இருந்தா போதும்ன்னு நினைக்கறாங்க... ரெண்டாவது புள்ளையோட மருமககூட
ஒரு வருஷம் இருந்தேன்.. சாப்பாட்டுக்கு மட்டும்தான் வாயை திறக்கனும் மத்த யார்க்கிட்டேயும் பேசிடக்கூடாது.. முக்கியமா வீட்டு வேலைக்கு வருவாங்கல்ல..
அவுங்க கிட்ட சுத்தமா பேசவே கூடாது.. ஏன்டிம்மா பேசக்கூடதுன்னா? சர்வன்ட் அப்புறம் மதிக்கவே மாட்டாளாம்... அவளுக்கு பயமே இருக்காதாம்..
நாம என்ன புலியா சிங்கம்மா உர் உர்ன்னு
உருமிக்கிட்டே இருக்க..? பயத்தோடு இருக்க... அப்படி பட்ட வாழ்கையே தேவையில்லைன்னு
வெளியே வந்துட்டேன்..
எந்த பையனும் பொண்டாட்டிங்களை
எதிர்த்து கேள்வியே கேட்கமாட்டானுங்க...
எல்லாருமே அறிவாளிங்க....
கோல்டு மெடலிஸ்ட்டுங்க... எல்லா நகரங்களிலும் சொந்த வீடு இருக்கு... அந்த அளவுக்கு பணம் கொட்டிக்கிட்டு
இருக்கு... இது என் கடைசி பையன் வீடு.... அவனுக்கு அமெரிக்காவுல
இரண்டு வீடு, கல்கத்தாவுல இரண்டு வீடு.. இப்ப புனேவுல இருக்கான்.. சென்னைக்கு
வந்த தங்க இந்த வீட்டை வாங்கினான்.....
நான் தங்கிகிட்டு
இருக்கேன்... எல்லாம் இருக்கு.. ஆனா பேச்சு
தொனைக்கு ஆதரவா பேச ஆள் இல்லை... ஒரு ஆறுமாசத்துக்கு முன்ன நான் மரண அவஸ்த்தை பட்டுட்டேன்...
அக்கி போல முட்டிக்கிட்ட வந்துடுச்சி.. அப்படியே
கவனிக்காம வீட சீஷ் கோத்துக்குச்சி....
காலை
வெட்டி எடுக்கனும்ன்னு சொல்லிட்டாங்க.. என் கடைசி புள்ளை என்னை பார்க்க வந்தான்...
அங்கி... அம்மை, எல்லாமே பரவும் எனக்கும் தொத்திக்கும்ன்னு சொலிட்டு உள்ளேயே வராம கதவு கிரில்லு கேட்டுக்கிட்ட நின்னுட்டு பேசிட்டு போயிட்டான்.... டேய் முகத்தை
பார்க்னும்டான்னு கதறினேன்... உள்ள வரவேயில்லையே... கடைசி வரை வீட்டுக்கு உள்ள வந்து என் மொகத்தை பார்க்கவேயில்லை..
அட அவன் எதுக்கு என் மொகத்தை பார்க்கனும்..??
எனக்குதான் பெத்த வயிறு.... அலைபாஞ்சிக்கிட்டு
கிடக்கு... கடைசி வரை அவன் முகத்தை நான்
பார்க்கனும்ன்தான்யா ஆசைப்பட்டேன்... என்று பெருங்குரலெடுத்து
கண்ணீர் மல்க.... சுற்றம் பார்க்காமல் வேதனையை கொட்டி தீர்த்தார்...
இதுவே அவனுக்கு அம்மை வந்து இருந்து... தொத்திக்கிம்ன்னு
நான் அப்படியே விட்டு விட்டு போய் விடுவேனா?
அப்படி என்னய்யா கல் மனசு.. என்ன கோல்ட் மெடல் வாங்கி படிச்சி என்ன கிழச்சான்...
எத்தனை நாள் தூங்காம இந்த புள்ளைங்களை வளர்ந்து இருப்பேன்.....
கிட்ட கூட வந்து பார்க்காம போற அளவுக்கு மனசாட்சி இல்லாத புள்ளையையா நான் வளர்த்து இருக்கேன் என்று கதறினார்... சீழ் வச்சி காலையே
எடுத்து இருக்கனும் ஒரு புண்ணியவான் டாக்டரால இன்னைக்கு கால் குணமாயிடுச்சி... இவ்லலைன்னா நான் இன்னைக்கு சக்கர நாற்காலியில நடைபினமா வாழ்த்துக்கிட்டு இருக்கனும்....
எனக்கு எங்க வீட்டுக்காரர்
பென்ஷன் மட்டுமே 35 ஆயிரம் ரூபாய் மாசம் வருது..சர்வன்ட் புள்ளைங்க படிப்பு செலவு....
என்னை போல ஆதரவு இல்லாத புள்ளைங்க இல்லாத
வாயசானவங்க நாலு பேருக்கு மாத்திரை
மருந்து என் செலவுலதான் வாங்கி
கொடுக்கறேன் என்றார் அவர் சேவைக்கு
மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தேன்..
ரொம்ப நன்றி உங்க கிட்ட
பேசினதுல.. மனசுல இருக்கற பாரம் அப்படியே இறக்கி
வச்சாப்பல ஆயிடுச்சி... மனசு கணம் இப்ப இல்லை...லகுவா ஆயிடுச்சி.. ரொம்ப நன்றிதம்பி என்றார்.
அப்படியே என் புள்ளைக்கு
அம்மை வந்து இருந்தா நான் அப்படியே விட்டுவிடுவேனா? என்ன? சொல்லுங்க என்று அவர் சொன்னது
நினைவுக்கு வந்தது..
பில்டர் காபி சாப்பிட வற்புறுத்தினார்... நான் விடைபெற்றேன்...
கிளம்பும் போது இரவு எழுமணியானது... வீட்டை வீட்டு வெளியே வந்தேன் செறுப்பு அணிகையில் ...
ஒன்கியோ சவுன்ட் சிஸ்டத்தில் குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா.... என்று
எப்போதோ பாடிய எம் எஸ்சின் பாடல் கிரிஸ்டல்
கிளியர் தரத்தில் நேரில் பாடுவது போல இருந்தது...
நான்கு சுவற்றை வெறிக்க
வெறிக்க பார்த்துக்கொண்டு இருக்கும் அந்த பெண்மணிக்கு கண்ணன்தான் துணையாக இருக்க வேண்டும் அல்லவா...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
நான்கு சுவற்றை வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டு இருக்கும் அந்த பெண்மணிக்கு கண்ணன்தான் துணையாக இருக்க வேண்டும் அல்லவா...
ReplyDeleteஅப்படி பட்ட வீட்டையும் அந்த முதிய பெண்மணியையும் ஏன் ஊர்க்காரர்கள் பார்த்து இருந்தால்... “கட்டையில போற வயிசில ங்கோத்தா கிழவி எப்படி அனுபவிக்குது பாரேன்...” ஹூம்“ அவுங்க அப்பன் கோமனம் அவுத்த நேரம் அப்படி ...”என்று சர்வ நிச்சயமாய் சொல்லி இருப்பார்கள்..
ReplyDeleteஇந்த வார்த்தை எங்க கிராமத்துல கூட அடிக்கடி சொல்லுற வார்த்தை ரொம்ப நாளைக்கு பிறகு கேட்கிறேன்............ உணர்வுபுர்வமான எழுத்துக்கள் அருமை பிரதர் ...... சான்ஸே இல்ல இது தான் ஜாக்கி
Wonderful Jackie
ReplyDeleteRegards
Ramu
don't have a word to express!
ReplyDeletei don't have a word to express!
ReplyDeleteநெகிழ வைத்த பதிவு! எத்தனையோ குறைகள் இருந்தும் அவர் குறையொன்றுமில்லை கேட்கிறார் பக்குவப்பட்ட மனது! இந்த வயதிலும் பிறருக்கு உதவவும் செய்கிறார்! நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்!
ReplyDeleteHard to digest.. First son got drug adict.. rest got money adict. Feel bad for her.. Wish her peaceful -rest of life.
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-6-part-2.html) சென்று பார்க்கவும்... நன்றி...
பாவம் அந்த பாட்டி
ReplyDeleteசிறந்த பதிவு ஜாக்கி...
ReplyDeleteபடித்து முடித்துவிட்டு நல்ல வேலையில் இருப்பவர்கள் அனைவரும் உயர்வானர்கள் என்று நாம் நினைத்துவிட முடியாது, பல நேரங்களில் படிக்காத பாமர மக்க்ளிடம் உள்ள உயர்வான குணங்கள் படித்தவர்களிடம் இருப்பதில்லை...
ஜாக்கி, இது போல எத்தனையோ பேர் எவ்வளவோ பணமிருந்தும் உறவுகளிருந்தும் கடைசி காலத்தில் அனாதைகளாக தங்கள் வாழ்நாளை எண்ணிக்கொண்டுதான் இருக்கின்றனர். இதை பார்க்கும் போது கிராமங்களில் இருப்பவர்கள் எவ்வளவோ பரவாயில்லை என தோன்றும்.(ஏன்னா பேசவாவது அக்கம்பக்கத்தினர் கிடைப்பார்கள்)
ReplyDeleteஇதுவே அவனுக்கு அம்மை வந்து இருந்து... தொத்திக்கிம்ன்னு நான் அப்படியே விட்டு விட்டு போய் விடுவேனா? இந்த வரிகள் மறுபடியும் மறுபடியும் காதில் ஒலித்து மனதை என்னவோ செய்கிறது jacki ji
ReplyDeleteஇதுவே அவனுக்கு அம்மை வந்து இருந்து... தொத்திக்கிம்ன்னு நான் அப்படியே விட்டு விட்டு போய் விடுவேனா? இந்த வரிகள் மறுபடியும் மறுபடியும் காதில் ஒலித்து மனதை என்னவோ செய்கிறது jacki ji
ReplyDeleteஇதுவே அவனுக்கு அம்மை வந்து இருந்து... தொத்திக்கிம்ன்னு நான் அப்படியே விட்டு விட்டு போய் விடுவேனா? இந்த வரிகள் மறுபடியும் மறுபடியும் காதில் ஒலித்து மனதை என்னவோ செய்கிறது jacki ji
ReplyDelete\\ஒன்கியோ சவுன்ட் சிஸ்டத்தில் குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா.... என்று எப்போதோ பாடிய எம் எஸ்சின் பாடல் கிரிஸ்டல் கிளியர் தரத்தில் நேரில் பாடுவது போல இருந்தது...//
ReplyDeleteகண்ணன்தான் துணையாக இருக்க வேண்டும் ஜாக்கி.
@ Ifthfur rahman.
ReplyDelete//இந்த வரிகள் மறுபடியும் மறுபடியும் காதில் ஒலித்து மனதை என்னவோ செய்கிறது jacki ji//
அதனால்தான் நீங்களும் மறுபடியும் மறுபடியும் ஒரே பின்னூட்டத்தை போட்டிருக்கீங்களா?... (Just for Joke.)))
Jackie
ReplyDeleteInspiring entry. You are service minded. I am proud of what you did.
அருமை
ReplyDeletevery disturbing. dont know what to say.
ReplyDeleteஜாக்கி உங்களால் எப்படி தாங்க முடிந்தது. நீ எழுதற எழுத்தே என் மனதை பளுவாக்குகிறது. கிரில் எட்டி பார்த்தவன் என் கைக்கு கிடைத்தால் வெட்டியே போட்டுடுவேன். அவன் கோல்டு மெடல் வாங்கியது உன்மையானால் ஒல்டு மம்மிக்கு காலருகில் இருந்து பணிவிடை செய்தால் தான் என் மனம் ஆரும். ஈன்றெடுத்த எந்தன் அன்னைக்கு என்ன செய்தான் பாரும்; பெத்தமன்ம் அவனுக்கு அம்மை வ்ந்தால் தாய்பாசம் எப்ப்டி துள்ளுகிறது
ReplyDeletewat happened jackie? still you didnt published any post after long time? come soon.
ReplyDeletehow can a son refuse to come inside to see his ailing mother? Will he not reach the same stage one day? Surprised to see how the gold medalists had not read 'murpagal seyyin pirpagal vilaiyum'.
ReplyDelete