MIRACLE IN CELL NO .7-2013/உலகசினிமா/கொரியா/அப்பாவி அப்பா.




இந்த திரை    விமர்சனத்தை படிக்க போகும் முன் ஒரு சிறு வேண்டுகோள்...
ஐயம் சாம் திரைப்படத்தை தெய்வதிருமகளாக்கி கவுரவபடுத்தியது போல தயவு செய்த இந்த படத்துக்கு எந்த கவுரவத்தையும் தேடிக்கொடுக்க வேண்டாம்... 

அவ்வை சண்முகி போல  வேறு  பின் புலத்தில் இந்த கதையின் ஒன்லைன் வைத்துக்கொண்டு முடிந்தால்  இந்த படத்தின் உணர்வுகளை கொண்டு வரும் திறமை உங்களுக்கு இருந்தால் இந்த சப்ஜெக்ட்டை கையில் எடுக்கவும்.....


இல்லையென்றால்   தயவு செய்து தொடாதீர்கள்... இந்த படமே ஐயம் சாம் பார்த்து அதன் இன்ஸ்பிரேஷனில்தான் எடுத்து இருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.. அப்படி இல்லை என்றால் ஒரு திரைப்படத்தின் நாட்டை மட்டும் வைத்துக்கொண்டு கிளைக்காட்சிகள்  அமைத்து அதில் உணர்வுகளை சேர்த்து எப்படி ஒரு அற்புதமான திரைப்படத்தை  கொடுக்கின்றார்கள் என்பதை இந்த படத்தை பார்த்தாவது கற்றுக்கொள்ளுங்கள்.



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...


இந்த உலகத்துல ஜெயில்ல இருக்கற  உண்மையான குற்றவாளிகளுக்கு இணையா  அப்பாவிங்களுக்கும் இருக்காங்க... அதே போல இந்த உலகத்துல கெட்டவன்னு ஒருத்தன் இல்லவே இல்லை.. சந்தர்ப்ப  சூழ்நிலைகள் தான் ஒரு மனிதனை  கெட்டவானாக சித்தரிக்கின்றது... என்பதை  இந்த திரைப்படம் உரக்க சொல்கின்றது...


அதே போல பத்த பர்சென்ட் பேர் என்ன செஞ்சாலும் அவனை திருத்தவே முடியாது அவனுங்களுக்காக கட்டி வச்சதுதான் ஜெயில்...
ஆனா வடை விக்கற தள்ளுவண்டி கடையில் டீயூப் வெளிச்சத்துல எண்ணெய்  தடவி வச்சி இருக்கற  பேப்பர்ல பூச்சிங்க போய் ஒட்டிக்குமே.... அது  போல நிறைய அப்பாவிங்க  ஜெயில்ல மாட்டிக்கறாங்க... அப்படி,ஒரு அப்பாவியோட கதைதான்  மிராக்கள் இன் செல் நம்பர் செவன்அப்படின்கற கொரிய திரைப்படம்.


விசாரனை செய்கின்றேன் என்று மரண அடி கொடுத்தால் அடிக்கு பயப்படாதவன் எவன்  இருக்க முடியும்???  உன் குடும்பத்தை கொன்று விடுவேன் என்று மிரட்டினால் மன நலம் சரியாக இருப்பவனே உதைக்கு பயந்து  நான் தான் குற்றத்தை செய்தேன் என்று உண்மையை ஒத்துக்கொள்ளும் போது  சின்னதாக மனநலம் பிசகியவன் என்ன செய்வான்??? அதுவும் தன் ஆசை மகளை கொன்று  விடுவேன் என்று சொன்னால் ? அவன் செய்யாத குற்றத்தை ஒத்துக்கொள்வதை தவிர அவனக்கு  வேறு வழியில்லை....  ஆனால் இந்த சமுதயமும் அதிகார வர்கமும் அப்படித்தான் இருக்கின்றன...


யாரை போலிஸ் குற்றவாளி என்று கைகாட்டுகின்றதோ? அவன்தான் குற்றறவாளி... அவன் அப்பாவியா? அவன் குற்றம் செய்தவனா,? என்று எதவும் தெரியாது...அதிகார வர்கம் எற்படுத்திய பிம்பம்....  ஊடகங்களும் கட்டுரைகள் எழுதி தள்ளி விட்டு.. அதாவது போலிஸ் யாரை குற்றவாளி என்று கை காட்டுகின்றதோ? அவர்களை குற்றவாளிகளாக சித்தரித்து தூக்கு மேடைக்கு அவர்களை அனுப்பும் வரை ஓய மாட்டேன் என்கின்றார்கள்.......

 மும்பை ரயில் நிலையத்தில் குருவி சுடுவது போல சுட்டு தள்ளினானே கசாப்.. நேரடி  சாட்சிகள், வீடியோ பதிவுகள் இருக்கின்றன... அது போன்ற இரக்கமற்ற பொறம்போக்குகளுக்கு மன்னிப்பே கிடையாது..  கண்டிப்பாக மரண தண்டனை கொடுக்கலாம் என்பது என் வாதம்.



ஆனால்

பேட்டரி வாங்கி கொடுத்தவனுக்கு தூக்கு  தண்டனை கிடைக்கும்ன்னு  நான் நினைக்கலைன்னு இப்ப ஒரு அதிகாரி திருவாய் மலர்ந்து இருக்கின்றார்... 23 வருஷம் ஒரு அப்பாவி ஜெயில்ல தூக்கு தண்டனை பயத்தோட இருக்கான்... அவனை கப்பாத்த அவங்க அம்மா நடையா நடந்தக்கிட்டு இருக்காங்க,...?

அன்னைய நேரத்துக்கு கேசை முடிக்க அதிகாரிகள் நடத்திய விசாரனை லட்சனம்....  , சின்ன அலட்சியம்  தினம் தினம் ஒருவனுக்கு மரண பயத்தை கொடுத்துக்கொண்டு இருக்கின்றது... ராஜீவ் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கும்  பேரரிவாளன்தான் அந்த  அப்பாவி...

.அதே போல குற்றம் செய்த முஸ்லிம் தீவிரவாதிகளை விட அப்பாவி முஸ்லிம் மக்கள் சிறை வாழ்க்கையில் சிக்கித்தவிக்கும் கதைகளும் ஏராளம்... கேசை முடிக்க வேண்டும் என்று நண்டு சிண்டு எல்லாத்து   மேலயும் வழக்கை போட்டு உள்ளே தள்ளி விட வேண்டியது ... 


உண்மையான குற்றவாளிகள் தண்டிக்க படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை... அதே வேளையில் அப்பாவி ஒருவன் சிக்கிக்கொண்டால்  அவனுக்கு மரணதண்டனை வழக்கினால் எப்படி இருக்கும்?-  அவன் மனநிலைல எப்படி இருக்கும்??? அ துவும் அதரவு கொடுக்க யாருமற்ற  ஒரே செல்ல மகளை  தவிக்க விட்டு விட்டு செய்யாத தப்புக்கு தூக்கு தண்டனை பெற்று மரித்தல் என்பது எவ்வளவு பெரிய கொடுமை.


சிறை வாழ்க்கை  எவ்வளவு வலி நிறைந்த வாழ்க்கை.... இந்த படத்தை பார்க்கும்  போது உணர்வதும்.... சிறையில் உள்ள மனிதர்கள் அத்தனை பேரும் கெட்டவர்கள் இல்லை என்பதும் மனிதம் எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கின்றது.... முக்கியமமாக மனைவி கர்பவதியாக  இருப்பதாக நினைத்துக்கொண்டு இருக்கும் போது பிள்ளை பெற்ற   செய்தி செல்போனில் கேட்டு கதறி அழுவது.. அதே போல எங்க அப்பாவை பார்க்கனும் என்று தடி மாடு போல இருக்கும்  கைதி தீ வைத்துக்கொண்டு அலறி  சின்ன பிள்ளை போல அழுவது என்று  நெகிழ வைக்கும் காட்சிகள் நிறைய உண்டு...


 ஐயம் சாம் படத்தின் கான்செப்ட்தான்... மனநலம் குறைபாடு கொண்ட அப்பா  அவருக்கு ஒரு சின்ன பெண்... அதுவும் உயிருக்கு  உயிரான பாசம் கொண்ட பெண்...  அவர்களுக்கு இடையே தென்படும் காதல், பாசம் , நேசம்  இதுதான்   படத்தின் ஒன்லைன்... பட்.. அந்த ஒன்லைனை வைத்தக்கொண்டு பின்னி பெடல் எடுத்து  இருக்கின்றார்கள்....


 செய்யாத குற்றத்துக்கு தண்டை அனுபவிக்கும் மனநலம்  சரியல்லாமல் ஜெயில் வாழ்க்கை வாழும் அப்பா...  அவன் குழந்தையை பார்க்க சிறை   நண்பர்கள் எடுக்கும் முயற்சிகள்... என்று கண்களை குளமாக்கும் காட்சிகள் படம் முழுக்க இருந்தாலும் இந்த  படம் உங்களை சிரிக்க வைத்துக்கொண்டே அழவைக்கும் என்பதுதான் உண்மை.


முதல் முறையாக அட்டை பெட்டி மூலமாக அந்த சின்ன பெண் வந்து  அப்பாவை பார்த்து விட்டு ஏன்பா வீட்டுக்கு வரலை என்று அடித்து அழும் காட்சியில் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கின்றார்கள்...முதன் முறையாக படம் பார்க்கும் போது கண்ணீர் வர வைக்கும் காட்சி அது....
இப்படி படம் நெடுக  நெகிழ வைக்கும் காட்சிகள் நிறைய எதை விடுவது எதை சொல்வது என்று தெரியவில்லை...
  

அப்பாவுக்கு தெரியும் விரைவில் தான் இறக்க போகின்றோம்   காரணம் அவன்  ஒரு தூக்கு தண்டனை கைதி ... அவன்  அவனுடைய பாச மகளுடன் தப்பித்து போக சக கைதிகள் ஒரு திட்டம் தீட்டுகின்றார்கள்....  


ஜெயிலில் கலை  நிகழ்ச்சி நடக்கும் போது ஒரு பெரிய பலூனில்  அப்பா மகள் இரண்டு பேரையும்  தப்பிக்க  வைக்க வேண்டும் என்பது திட்டம்... அது ஜெயிலருக்கு அங்கே உள்ள  கைதிகள் அத்தனை பேருக்கும் தெரியும்.. இருந்தாலும் நீ அடிக்கற போல அடி நான் அழறா போல அழுறேன் என்பதாய் இருப்பார்கள்....

 அப்பா மகளை பிரமாண்ட பலூனில் ஏற்றி விடுகின்றார்கள்..  பலூன் பறக்கின்றது... அப்பாவும் மகளும் பலூனில் பறக்கின்றார்கள்... எல்லோருக்கும் டாட்டா காட்டுகின்றார்கள்.... 


பலூன் மேலும் பறக்க  முடியமல்  அதில் கட்டப்பட்டு இருந்த கயிறு சிறை  மதில் சுவற்றில் உள்ள பாதுகாப்பு கம்பியில் சிக்கிக்கொள்கின்றது....கீழே உள்ள அத்தனை பேரும் அட  அப்பனும்  மோவளும் தப்பிச்சி விடுவார்கள் என்று பார்த்தால் இப்படி இந்த கயிற்றால் அப்படியே நிக்குதே என்று கீழே உள்ளவர்கள் பதைபதைத்து நிற்க.. 


மேலே அப்பாவும்  பெண்ணும் பறக்கும் பலூனில் நின்றுக்கொண்டு   சூரியன் மறையும் காட்சியை கண்டு கொண்டு அமைதியாக  நின்று கொண்டு இருப்பார்கள்...

கைதி மகளை பேர் சொல்லி அழைக்கின்றான்...

என்னப்பா என்கின்றாள்....

மறக்காதே

எதை?

இன்றைய நாளையும் உன்னுடைய தகப்பனையும் என்கின்றான்....

இந்த காட்சி  பார்க்கும் போது அல்லது  படிக்கம் போது  ஒரு ஹம்பக்கான காட்சி என்று நீங்கள்  பார்க்கும் போதும் உணர்வீர்கள்.. ஆனால் படத்தை ஆரம்பத்தில் இருந்து பார்த்துக்கொண்டு வந்தால் இந்த இடத்தில் நீங்கள் மிக பலஹீனமாக கண்ணீர் விட்டு கதறுவீர்கள்....


லைப் ஈஸ் பியூட்டிபுல் படத்தில் வரும்  காட்சிகளில் யூதர்களை கொல்ல அழைத்து செல்லும்  போது எப்படி தன் பிள்ளைக்கு அந்த மரண வாடையை மறைத்து அழைத்து செல்வானோ..  அது போல தன் பிள்ளைக்கு   மரணம் பற்றி தெரியாமல் அவன் செய்யும் முயற்சிகள் சேட்டைகள் என  மனிதர் நடிப்பில் பின்னுகின்றார்...

செய்யாத குற்றத்துக்கு உதைகொடுத்த பயத்துக்காகவும், குற்றத்தை ஒப்பக்கெள்ளவில்லை என்றால்  குழந்தையை கொன்று விடுவேன் என்று சொன்ன  மிரட்டலுக்காவும்  செய்யாத குற்றத்துக்கு  தண்டனையை ஏற்றக்கொண்டு  தூக்கு மேடைக்கு செல்லும் காட்சிகளில்  அவன் செல்ல செல்ல பிள்ளை கம்பிகளுடே பார்த்துக்கொண்டே வர கோணை சேஷ்டைகள் எல்லாம்  செய்துக்கொண்டு வர   சுவர் திரும்பும் வளைவில் குழந்தையை சமாதானப்படுத்தியாகி விட்டது... 



ஆனால் இனி பிள்ளையை பார்க்கவே முடியாதே என்று மரண பபயத்தில் உட்கார்ந்து விட... இன்னும் கொஞ்சம் நேரத்தில்  தூக்கு கயிறு மாட்டி தன் உயிர் பயத்தில் கதறும் கதறல் இருக்கே... யப்பா சாமி....ஜென்மத்துக்கு  அந்த கதறலை மறக்கவே முடியாதப்பா...

பெரிய நடிகர் பட்டாளம் இல்லை...  ஆக்ஷன் காட்சிகள் இல்லை... இருந்தாலும் இது கொரியாவில்  வெற்றிப்படம்... இயக்குனர் Lee Hwan-kyungகை என்ன பாராட்டினாலும் தகும்... அப்பா கேரக்டரில் நடித்த  Ryu Seung-ryong  சின்ன வயது மகள் கேரக்டரில்  நடித்த பட்டாம் பூச்சி செல்லக்குட்டி Kal So-won பாராட்டுக்குறியவர்கள்.


 சிப்பிக்குள் முத்துல கமல் பண்ண  கேரக்டர்தான்  பாட்டு எல்லாம் போட்டு கொஞ்சம் நீட்டி முழங்கி இருப்பாங்க...  பட் அது எந்த படமோ.. இருந்தாலும் ரொம்ப உண்ர்வு பூர்வமா சிப்பிக்குள் முத்து எடுத்து  இருப்பாங்க.


.===================

படம் வாங்கிய விருதுகள்..

2013 Baeksang Arts Awards[23][24]
Grand Prize for Film - Ryu Seung-ryong
Most Popular Actress - Park Shin-hye
Nomination - Best Film
Nomination - Best Actor - Ryu Seung-ryong
Nomination - Best Supporting Actor - Oh Dal-su
Nomination - Best Supporting Actress - Park Shin-hye
Nomination - Best New Actress - Kal So-won
Nomination - Best Screenplay - Lee Hwan-kyung, Kim Hwang-sung, Kim Young-seok
2013 Mnet 20's Choice Awards
20's Movie Star, Male - Ryu Seung-ryong
Nomination - 20's Movie Star, Female - Park Shin-hye
2013 50th Grand Bell Awards
Best Actor - Ryu Seung-ryong
Special Jury Prize - Kal So-won
Best Screenplay - Lee Hwan-kyung
Nomination - Best Cinematography - Kang Seung-gi
Nomination - Best Director - Lee Hwan-kyung
Nomination - Best Supporting Actor - Oh Dal-su
Nomination - Best Actress - Kal So-won
Nomination - Best New Actress - Kal So-won
2013 33rd Korean Association of Film Critics Awards
Best Supporting Actress - Park Shin-hye

========

படத்தின் டிரைலர்


==========
 படக்குழுவினர் விபரம்

Directed by Lee Hwan-kyung
Produced by Kim Min-ki
Lee Sang-hun
Written by Lee Hwan-kyung
Yu Young-a
Kim Hwang-sung
Kim Young-seok
Starring Ryu Seung-ryong
Park Shin-hye
Music by Lee Dong-june
Cinematography Kang Seung-gi
Editing by Choi Jai-geun
Kim So-youn (Rec Studio)
Studio Fineworks/CL Entertainment
Distributed by NEW
Release dates
January 23, 2013
Running time 127 minutes
Country South Korea
Language Korean

==============

பைனல்கிக்.
படத்துல லாஜிக் ஓட்டை இல்லாம இல்லை... ஆனா அது பெரிசா தெரியாத அளவுக்கு திரைக்கதை அமைத்து இருக்கின்றார்கள்... இந்த படம் கண்டிப்பாக  பார்த்தே தீரவேண்டிய திரைப்படம். கொரியாவில் அதிக அளவு மக்கள் கண்டு களித்த முன்றாவது திரைப்படம் இது என்பது கூடுதல்  சிறப்பு...

“ அப்பாவை உயிராய் காதலிக்கும் மகள்களுக்கு மகள்களை  உயராக காதலிக்கும் அப்பாக்களும் இந்த திரைப்படம் சமர்பணம்.”

 ============

படத்தோட ரேட்டிங்

 பத்துக்கு எட்டு.

==========
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

4 comments:

  1. சில நாட்கள் முன்பு இப்படம் பார்த்து அன்று விடிய விடிய தூங்காமல் என் மகள்களை பார்த்தபடியே இருந்தேன்..!!
    +1





    ReplyDelete
  2. அண்ணே ரொம்ப நாளைக்கு அப்புறம் என் மனசுக்கு
    நிறையவா பேசி இருக்கீங்க !!!

    உங்க குரல் எப்புடி இருக்கும்னு தெரியாது
    ஆனா, உங்க குரல்ல கதை கேட்ட மாதிரி இருந்துச்சு..

    நீங்க ஒரு நல்ல கதை சொல்லி !!!!!

    அது எங்க எல்லாருக்கும் தெரியும், ஆனா உங்களயும் மீறி தந்தையா உங்க உணர்வுகள் வெளிப்பட்டு இருக்கு.

    முக்கியமா
    ஸ்பெல் மிஸ்டேக் இல்லாம இருந்தது !!!!
    உங்க போஸ்ட்கு அழகே ஸ்பெல் மிஸ்டேக் தான்
    ஆனா அதுவே அதிகமா ஆகாம பாத்துக்கோங்க அண்ணா !!!!!!

    மத்தபடி

    YOU ALWAYS ROCK !!!!!

    நட்புடன்

    அமீர் ஹாசன்

    ReplyDelete
  3. கசாபை தூக்கில் போட்டது சரி என்பதில் கருத்து மாறுபாடு இல்லாதது போல், அஜ்மல் கசாப் என்கிற போலிசுக்கு கேட்கும் போதெல்லாம் மாமூல் கொடுக்காத குற்றத்துக்காக இல்லாத ஈயைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கி தூக்கில் போட்டதும் மன்னிக்க முடியாத குற்றம். நல்ல வேலை திகார் ஜெயிலில் புதைத்தார்கள். அதனால் அவரை தூக்கில் போடக்காரணமான எந்த அரசியல்வாதியும் திகாருக்கு தண்டனைக்காக போகும்போதெல்லாம் அவர் மண்ணறை அவர்களைப்ழித்துக்கொண்டே இருக்கும்.

    ReplyDelete
  4. //கொரியாவில் அதிக அளவு மக்கள் கண்டு களித்த முன்றாவது திரைப்படம் இது

    what are the other two movies?

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner