பதிவர் சிங்கை கிரிக்காகவும், ரஜினிக்காகவும் நான் எடுத்த புகைப்படம்...
பதிவர் கிரிக்காக நான் எடுத்த புகைப்படம் இது...
பின் புற படத்தில் இயந்திர தனமாய் கையில் ரோஜாப்பூ வைத்து இருப்பவர் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர், இந்த வயதிலும் அடுத்தவன் பொண்டாட்டியோடு மன்னிக்கவும், ஜஸ்வர்யாராயோடு ஆடுபவர்.
கீழே பிளாட்பாரத்தில் உட்கார்ந்து இருப்பவர்கள் கொஞ்சமாக ஆசிர்வதிக்கபட்டவர்கள்.
ஊண் குருடு இல்லாமல் பிறந்து தனது அந்திம காலத்தில் மருமகள், மகனின் வசவுகளை ஏற்று வாழ்பவர்கள்,
தன் சோகத்தை ரோட்டோரத்தில் உட்கார்ந்துதன் வயது ஒத்த நண்பர்களுடன் பேசுபவர்கள்.
ஹீம் ரஜினியோட பிறந்த நேரம் அப்படி, பாருங்கள் கடவுளின் திருவிளையாடல்களை ஒரே பூமி ரத்தம் சதை அழுகை உணர்வு, காமம் எல்லாம் ஒன்றே ஆனால் வாழ்க்கை தரம் மட்டும்????????
ஆனால் ரஜினிக்கு இந்த வாய்ப்பு சும்மா ஒன்றும் கிடைக்கவில்லை அந்த அசுர வளர்ச்சிக்கு பின் நிறைய காயங்களும் வேதனைகளும் இருக்கிறது, ரஜினி பெங்களுருவில் பஸ் கண்டக்டர், அவர் சென்னை லாயாலோ கல்லுரியில் படிக்க வில்லை. அவர் அப்பா பெயர் ஒன்றும் எஸ் ஏ சந்திரசேகர் அல்ல....
ஆனாலும் ரஜினி கடவுளால் ஆசிர்வதிக்கபட்டவர்தானே....
நான் எடுத்த புகைபடங்களில் இந்த படமும் என் ரசனை பட்டியலில்....
அன்புடன்/ ஜாக்கிசேகர்
Labels:
இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல படம் & நல்ல கருத்துகள் ஜாக்கி. ஆசிர்வதிக்கப்பட்ட அறுபது வயதுக்காரரையும் ஆசிர்வதிக்கப்படாத அறுபதுகளையும் ஒரே ப்ரேமில் கொண்டு வந்துள்ளீர்கள். :))))
ReplyDeleteநன்றி வெண் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
ReplyDelete//
ReplyDeleteரஜினி பெங்களுருவில் பஸ் கண்டக்டர், அவர் சென்னை லாயாலோ கல்லுரியில் படிக்க வில்லை. அவர் அப்பா பெயர் ஒன்றும் எஸ் ஏ சந்திரசேகர் அல்ல....
//
haa haa
:))))))))))))))))))))
கலக்கல்!
மன்னிக்கவும் ஜாக்கி சேகர் உங்களின் இந்த பதிவை தற்போது தான் பார்த்தேன், ஒருவேளை நான் அந்த சமயத்தில் ஊருக்கு சென்று இருக்கலாம்.
ReplyDelete// இந்த வயதிலும் அடுத்தவன் பொண்டாட்டியோடு மன்னிக்கவும், ஜஸ்வர்யாராயோடு ஆடுபவர்.//
உங்கள் மீது மரியாதை உண்டு, உங்களுக்கு ரஜினி பிடிக்காது என்பதால் இதை போல கேவலமான உதாரணத்துடன் பதிவு எழுதாதீர்கள்.
மற்றபடி உங்கள் பதிவு(படம்) நன்றாக உள்ளது.
இது போன்று எழுத வேண்டாம் என்று சொல்ல "//இந்த வயதிலும் அடுத்தவன் பொண்டாட்டியோடு மன்னிக்கவும், ஜஸ்வர்யாராயோடு ஆடுபவர்.//" என்பதை காப்பி செய்து விட்டு கமெண்ட் போட வந்தால்,
ReplyDeleteகிரி , நான் சொல்ல வந்ததை அப்படியே கூறி இருக்கிறார்.
வாய்ப்புகள் இல்லை என்று சொல்பவன் முட்டால்,
ReplyDeleteவாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்பவன் தான் திறமை சாலி,
எல்லோருக்கும் இருப்பது 24 மணி நேரம் தான் ,
அதை எப்படி பயன் படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியம்
அடுத்தவர்களை குறை சொல்வதை விட,
நம்மை திரிதிக்கொல்வது நல்லது
வாய்ப்புகள் இல்லை என்று சொல்பவன் முட்டால்,
ReplyDeleteவாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்பவன் தான் திறமை சாலி,
எல்லோருக்கும் இருப்பது 24 மணி நேரம் தான் ,
அதை எப்படி பயன் படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியம்
அடுத்தவர்களை குறை சொல்வதை விட,
நம்மை திரிதிக்கொல்வது நல்லது
This comment has been removed by the author.
ReplyDeleteநெஞ்சை உலுக்கும் பதிவு நிழல் படத்க்கு ஏற்ப நல்ல பதிவு வாசிக்கும் போது அந்த வயோதிபர்களை நினைத்து ஏதொ இனம் புரியாத கவலையாய் இருந்தது.
ReplyDelete