NGK Movie Review By Jackiesekar | #என்ஜிகே #NGKMovieReview #Suriya #SaiPallavi #RakulPreetSingh
#NGK #Suriya | #SaiPallavi | #Selvaraghavan
#NGK #NGKWORLDsLargestCutout #NGKreview #NGKFromMay30 #NGKDAY #Ngkfromtoday
நீண்ட இடைவேளைக்கு பின் வந்து இருக்கும் செல்வராகவன் படம்... அதுவும் சூர்யாவோடு இணைந்து இருக்கின்றார் எனும் போதும் ஆர்வம் அதிகரிப்பது இயல்புதானே ?
பரம் வீர் சக்கரா விருது வாங்கிய ராணுவ வீரர் நிழல்கள் ரவி உமாபத்மநாபன் மகன் சூர்யா நாட்டின் மீது பிரியா காதல் கொண்டுள்ளார்.. ஆனால் அந்த பிரியத்தை அரசியல்வாதிகள் சிதைக்க பார்க்க வீறு கொண்டு எழும் சூர்யா முள்ளை முள்ளால் எடுத்தாரா ? இல்லையா என்பதே படத்தின் கதை.
ஒரே வார்த்தையில் சொல்வதாயின் செல்வாவின் படம் அதுவும் அரசியல் படம் யூ சர்ட்டிபிகேட்டா..? இறங்கி அடித்து விளையாடக்கூடிய செல்வா கிரவுன்ட்... படம் பார்க்கும் போது உங்களுக்கே தெரியும்....
எல்கேஜி படத்துக்கு முன் வந்து இருந்தால் அந்த கார்ப்பரேட் பொலிட்டிகள் ரேஷியோ கம்பெனி
மேட்டர் செம்மையா ஒர்க் அவுட் ஆகி இருக்கும்...
சாய் பல்லவி சென்ட் மேட்டர் மற்றும் குல்பி சீனில் நன்றாக நடித்து இருக்கின்றார்.
ரகுல் பிரீத் சிங் தன் பெயரை தெனாவெட்டாக சொல்ல சொல்லி கண்களால் விழுங்கி விடுவது போல பார்ப்பது செம.
பாலாசிங் சூர்யா பேசும் அந்த தியேட்டர் வசனமும் சீனும் அற்புதம்.
ஆனாலும் முதல் பாதியில் இருந்து அந்த கிரிப்பிங் இரண்டாம் பாதியில் அதிகம் எடுத்து எதை வைப்பது எதை விடுப்பது என்று ஒத்தையா ரெட்டையா பிடித்து இருப்பது படம் பார்க்கையில் உணர முடிகின்றது..
செவன் ஜி ரெயின் போ காலனியில் சோனியா ஹீரோவிடம் திட்டி கத்தி பேசுவாரே... அப்படி எல்லோரும் கத்தி பேசுகின்றார்கள்..
செல்வா டச் திருமணத்துக்கு பிறகு குறைந்து போய் விட்டது போல ஒரு பிரமை... அது எனக்கு மட்டும்தானா.?
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS..
.
0 comments:
Post a Comment