தளபதி ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி

அடேய் நடுநிலை நக்கீஸ் போர்வையில் இருக்கும் அதிமுக, சங்கிஸ் எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கறேன்....

த்தா தேர்தலுக்கு முன்ன வெற்றிடம்ன்னு சொன்னிங்க....

இப்ப வெற்றிடமும் இல்லை ஒரு மயிறும் இல்லைன்னு நிரூபிச்சாச்சி...எங்களை பொருத்தவரை இந்த வெற்றி தளபதி ஸ்டாலினின் வெற்றி... அவரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி...

தலைவர் கலைஞர் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல்.. ஆனாலும் கலைஞரே மேலோகத்தில் இருந்தே மகிழ்ச்சி படுத்தும் விதமாக இந்த வெற்றிக்கனியை பறித்து கலைஞர் காலடியில் சமர்பித்துவிட்டு அறிவாலயத்தில் இன்று மாலை ஸ்டாலின் கம்பீரமாக நடைபோட்டுவிட்டார்...

ஆனாலும் உங்களுக்கு இது ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றின்னு சொல்ல முடியாமல் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுவதை புரிந்துக்கொள்ள முடியகின்றது...

அதற்காக கலர் கலராக டகுல் பாச்சா வேலை காண்பிக்கும் பொருட்டு.

மோடி எதிர்ப்பு அலையால் திமுகவுக்கு கிடைத்த வெற்றின்னு சொல்றிங்க...

ஏன்டா எல்லா ஸ்டேட்டுலேயும் காங்கிரஸ் செம அடி வாங்கி இருக்கும் போது... தமிழகத்துல மட்டும் மோடி எதிர்ப்பு அலைன்னா... கொஞ்சம் யோசிங்க...

இப்ப ஒத்துக்கிறிங்களா..? திராவிடம்ன்னா என்னான்னு...??? பெரியார் கலைஞர் எல்லாம் எப்படி பட்ட கட்டமைப்பை உருவாக்கி வச்சிட்டு போய் இருக்காங்கன்னு...???

இரண்டாவது எடப்பாடி அதாவது அதிமுக எதிர்ப்பு ஓட்டுதான் திமுக ஜெயிக்ககாரணம்ன்னு சொன்னிங்க...

ஏன்டா எலெக்ஷன் ரிசல்ட் எண்ணுவதற்கு முன் நேற்று கூட எடப்பாடி ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடிச்சி... மய்யம் அடிச்சி கிழிக்கும்... நாம் தமிழர் உறவு பின்னி பெடலெடுக்கும்ன்னு சொன்னிங்க... இப்ப என்னடான்னா அதிமுக எதிர்ப்பு ஒட்டாம்...அதான் திமுக கூட்டனி ஜெயிச்சிடுச்சின்னு சொல்றிங்க...

ஏன்டா இப்படி வெளிய சொல்லிக்கிட்டு திரிய வெட்கமா இல்லையா...?

உங்க அஜென்ட்டா படி திமுக ஊழல் கட்சி... கலைஞருக்கு பிறகு வெற்றிடம் உருவாயிடுச்சி.... கரெக்ட்டா..??

அதிமுக திமுகாவுக்கு மாற்றை மக்கள் எதிர்பார்க்கறாங்க... ரைட்... நான் சரியாத்தானே சொல்றேன்...-?-

அப்படி நீங்க சொல்வது படி பார்த்தா.... திமுக டெபாசிட் இழந்து இருக்க வேண்டும்...

அரசியலில் கன்னி முயற்சியாக களம் இறங்க கறை படியாத கரத்துக்க்கு சொந்தக்காரர் மய்யம் கமலஹாசனை அல்லவா மக்கள் ஜெயிக்க வைத்து இருக்க வேண்டும்...

அட்லிஸ்ட் அடுத்த நாடான இலங்கை பாஸ்போர்ட் வைத்து இருக்கும் ஈழமக்களுக்காக தமிழகத்தில் உட்கார்ந்துக்கொண்டு தொடர்ந்து உரக்க முழக்கமிட்டு போராடும் சீமானனை அல்லவா ஜெயிக்க வைத்து இருக்க வேண்டும்...

அடேய் அவ்வளவு ஏன்டா...-?? ஆர்கே நகர்ல பெரும் வெற்றி பெற்ற 20 ரூபாய் நோட்டு புகழ் தினகரனை ஜெயிக்க வைத்து இருக்கலாம் இல்லை...

எதுக்கு மக்கள் திமுக கூட்டனிக்கு வாக்களிக்க வேண்டும்... ?? அவங்க ஏன் லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும்

நல்ல வேலை காங்கிரஸ் மத்தியில் வாஷ்அவுட்.... அப்படி இல்லாம இப்ப பிஜேபி வாங்கி இருக்கற 300 சீட்டுக்கு மேல முன்னனியில் ஒரு வேளை காங்கிரஸ் முன்னனியில் வந்து இருந்தா..?

இந்த நாற வாயன்க... காங்கிரஸ் தயவால் திமுகவும் ஸ்டாலினும் ஜெயித்தது என்று கூசாமல் சொல்லி இருப்பார்கள்....ஆனால் அதற்கு இடம் கொடுக்காமல் மக்கள் திமுகவை மகுடத்தில் வைத்து விட்டார்கள்

யாராவது இந்த தேர்தலில் மோடி எதிர்ப்பு ஓட்டு, அதிமுக எடப்பாடி எதிர்ப்பு ஓட்டினால் ஸ்டாலின் வெற்றி என்று சொன்னால்...

இது உங்கள் சொத்து ன்னு வடிவேலுவை அறைஞ்சி அறைஞ்சி சொல்ல வைப்பாறே.... அது போல இது தளபதி ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லி வையுங்கள்.

ஜாக்கிசேகர்
23/05/2019
நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner