கலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்
ஆமாய்யா.... அந்த ஆள் செத்து இன்னும் ரெண்டு மாசம் வந்தா  ஒரு வருஷம் ஆவப்போவது... அவர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்.

சன்னுக்கு ஏது சண்டேன்னு  சொல்றது போல.... அந்த ஓய்வறிய சூரியனுக்கு என்றும் விடுமுறையே இல்லை...அவரு செத்துட்டா போல ஒரு பீலிங் எல்லாம் எனக்கு இல்லைவே இல்லை...

எனக்கு மட்டும் இல்லை எந்த திமுககாரனுக்கு அவர் எங்களை  எல்லாம் விட்டு போய் விட்டார் என்ற பீலிங்க இல்லவே இல்லை.. பின்ன ஒக்காலி வாழும் வரலாறேன்னு சும்மாவா சொன்னாங்க...கலைஞர் இல்லாத கலைஞர் பொறந்தநாள்...ஆனாலும் நேத்து சமுகவலைதளங்கள் கலை கட்ட ஆரம்பிச்சது ஒன்னு போதும்யா... அந்த ஆள் இன்னமும் வாழ்ந்துக்கிட்டு இருக்கான்னு சொல்ல...

ஒருத்தன் தன் பின்னுக்கு இருக்கும் பட்டத்துக்கு கலைஞர் காரணம்ன்னு சொல்றான்...இன்னோருத்தன் சொல்றான்...  எங்க அப்பன் படிக்கலை ஆத்தா படிக்கலை  நான் கணணி துறையில் வேலையில் இருக்க கலைஞர் காரணம்ன்னு சொல்றான்.

எங்க அப்பாரு ஐந்தாவதுதான் எங்க அம்மா ஜெயலட்சுமி அந்த கால பியூசி...தெரு தெருவா ஜாக்கெட் துணி வித்த காசுல எங்க அம்மாவை  பத்தாவது வரை படிக்க வச்சது எங்க பாட்டி ...

படிப்புதான் உன் வாழ்க்கையை முன்னேத்தும்ன்னு என் பாட்டி சத்யா நம்பி எங்க அம்மாவை படிக்க வச்சா...படிப்பு அறிவு இல்லாத என் பாட்டிக்கு எப்படி தெரியும் - ? அக்காலத்தில்  சமுக மற்றும் குடும்ப திரைப்படங்களில் கல்வியின் முக்கியத்துவம் பரப்புறை செய்த திரைப்படங்கள்.

நாங்க ஐந்து பேர்... எங்க எல்லாரையும் எங்க அம்மா படிக்க வச்சாங்க...  சொத்து பத்து  உற்றார் உறவினர் இல்லாத தன் குடும்பத்து உறுப்பினர் உயர வேண்டும் என்றால் கல்விதான் முக்கியம் என்பதை உணர்ந்து எங்கள் அம்மா எல்லோரையும் படிக்க வைத்தார்...

எனக்கும் என் பெரிய தங்கைக்கும்தான் படிப்பு ஏறலை எனது  மூன்று தங்கைகளும் இன்று அரசு பணியில் இருக்கின்றார்கள்...

ஒருத்தங்க   தொடக்க பள்ளி ஆசிரியர்...ஒருத்தர் காவல்துறையில் வேலை பார்க்கிறார், ஒருத்தர் வருவாய்  துறையில் வேலை பார்க்கிறார்...

எந்த பின்புலமும் இல்லாத என் குடும்பத்தில்  மூன்று தங்கைகளுக்கு எங்கேயும் ஒரு பைசா லஞ்சம் கொடுக்காமல் எப்படி அரசு பணி சாத்தியம்...

இதற்கு மறைமுக காரணம் கடந்த ஐம்பது வருடத்தில் தமிழகத்தில் திராவிடஇயக்கம் செய்த சமுக நீதியும்  உள் கட்டமைப்புகள்தான்... இதுல துன்னுடைய இரண்டு பர்சென்ட் பசங்க பாதிக்கப்பட்டதை வச்சி பிராமணர்கள் ஏற்படுத்திய பிம்பம்தான் இரண்டு திராவிட கட்சியும் தமிழகத்தை குட்டி சுவராக்கிட்டாங்கன்னு திரும்ப திரும்ப  தனது பத்திரிக்கை மூலமாக கட்டமைத்தார்கள்.

 இதை அப்படியே நம்பனவன் அத்தனை பேரும்  கோவிலுக்கு போய் ஐயரு என்ன மந்திரம் சொல்றார்ன்னு தெரியாம பேந்த பேந்த முழிச்சி ஐயரு நம்ம நல்லா வாழதான் மந்திரம் சொல்றார்ன்னு நம்பி நிப்போமே அந்த கதையா நம்பி அதை வாட்சப்ல பார்வேட் பண்ணி தொலைஞ்சானுங்க.....

ஆனாலும் கலைஞர் போட்ட பேஸ்மென்ட் ஒடைக்கவே முடியலை... சங்கிங்க இங்க கதறிக்கிட்டு இருக்கானுங்க..

நேத்து முகநூல் முழுக்க தரமணி ஐடி பார்க், கத்திபாரா  பிரிட்ஜ், மெட்ரோ ரயில், புதிய தலைமைசெயலகம், அண்ணா நுற்றாண்டு நூலகம், கோயம் பேடு பேருந்து நிலையம், செம்மொழிபூங்கா, ராஜிவ்காந்தி  மருத்துவமனை, வள்ளுவர் சிலைன்னு போட்டோவை பகிர்ந்து கிட்டு இருக்கானுங்க.. சுயமரியாதை திருமணம், விதைவை மறுவாழ்வு,குடிசை மாற்றுவாரியம்ன்னு அவர் சாதனைகளை சொல்லிக்கிட்டே போகலாம்..

 இதுதான்டா நிறைவான வாழ்க்கை... ஒரு தலைவன் செத்தும் அவன் பிறந்தநாளில் அவன் செய்த சாதனைகளால் நினைவு  கூறப்படுவதுதான் பெருமை.... அதுதான் ஒரு கட்சிக்கும் தலைவனுக்கு அடிமட்ட தொண்டனுக்கும் பெருமை.

 ஆனா ஒன்னு...

முன்னாள் முதல்வரும் சொத்து குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளியுமான செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாள் அல்லது நினைவுநாளில்  சங்கிகள் கட்டமைத்த பிம்பங்களோடு என்ன சொல்லுவர்கள் தெரியுமா ?

''ஐயன்லேடி''

என்பதோடு முடித்துக்கொள்வார்கள்.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
04/06/2019

நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner