கலைஞர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியல்வெற்றிடம் இல்லா தமிழகத்தில் இருந்து...



அண்ணே முன்ன எல்லாம் அரசியல்லாம் அதிகம் எழுதிவிங்க... இப்ப ஏன் எழுதறதே இல்லை....?

ரொம்ப சிம்பிள்... 10 வருஷமா வேளச்சேரி மேம்பாலம் கட்டிக்கிட்டே இருக்கானுங்க... அதுவும் சென்னையில் பல லட்சக்கணக்கான மக்கள் புழங்கற இடத்துல... அதுவழியா ஆபிஸ் போயிட்டு வருபவனே... எடப்பாடி பம்பரமா சுத்துறார்ன்றான்...

ஆனாலும் திமுக வேஸ்ட்டுன்னு சொல்றான்...



ஸ்டாலின் வெறும் ஐந்து வருடத்தில் சென்னையில் அத்தனை மேம்பாலத்தையும் கட்டினார்.... துக்ளக் பாய்ஸ் கலைஞர் வீட்டூக்கிட்ட பாலம் கட்டிக்கிட்டார்ன்னு கதை கட்டி விட்டானுங்க... அதையும் நம்பி தொலைச்சுதுங்க சனியன்க...

60 ரூபா பெட்ரோல் 80 வரை போயிடுச்சி.... கேஸ் சிலின்டர் 500 ரூபாய் இப்ப 900 ஆயிடுச்சி...டி மானிட்டிசேஷன் கருப்பு பணத்தை ஒழிச்சிடுவேன்னு சொல்லி... நிறைய பேரை சாவடிச்சானுங்க.. ஆனாலும் 24 மணி நேரம் தூங்கம லே பார்க்கறேன்னு அந்த ஆள் சொன்ன அதையும் அப்படியே நம்பி சலங்கை கட்டி ஆட ஆரம்பிச்சிதுங்க...

இங்க எப்படி ஜெ மீடியாக்களை கைக்குள்ள போட்டுக்கிட்டு நீதித்துறையை பணம் அல்லது மிரட்டல் மூலம் காரியத்தை சாதித்து மக்களால் நான் மக்களுக்காக நான் என்று மக்கள் மத்தியில் திரும்ப திரும்ப பதிய வைத்தாரோ அதே ஸ்டைலைதான் அம்மாவாசை என்கிற நாகராஜ சோழனும் மத்தியில் செய்ய ஆரம்பித்தார்...ஜெ மோடி ரெண்டு பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு... இரண்டு பேருக்குமே பத்திரிக்கையாளர் சந்திப்புன்னா கிலி புடிச்சிக்கும்...

ஜெவாவது பராவாயில்லை... ஜெயா டிவி மைக் முன்ன தமிழகத்தின் மிக முக்கிய பிரச்சனையான விஸ்ரூப பிரச்சனைக்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்... மோடி பக்கத்துல அமித்ஷா வச்சிக்கிட்டு அமைதியாக இருந்தது உலகத்துக்கே தெரியும்.

ஆனாலும் இப்படி ஒரு மோடி மஸ்தானை நாங்க பார்த்ததே இல்லை... காங்கிரஸ் வேஸ்ட்ன்னு கூவறாங்க...

எல்லாத்தை விட கொடுமை தமிழக அரசியல்ல கலைஞர் ஜெவுக்கு பிறகு வெற்றிடம்ன்னு துக்ளக் பாய்ஸ் சொல்லிக்கிட்டு திரிஞ்சா... அதை அப்படியே தாலே தாலாலேலோன்னு எசப்பாட்டு பாடிக்கிட்டு திரிஞ்ச பய புள்ளைங்களுக்கு தினமும் பதிவு எழுதி விளக்கமயிறு சொல்லிக்கிட்டு திரிய நேரம் இல்லை... அதனால எழுதலை...

அப்புறம் இப்ப மட்டும்...?

நான் இருக்கறவரைக்கு தமிழகத்துல வெற்றிடம்ன்னு சொன்னா மொங்குன்னு அடி வயித்துலேயே குத்துவேன்னு சொல்லி தளபதி ஸ்டாலின் நிருபிச்சிட்டார் இல்லை..

அதனால...இனிமே அரசியல் பதிவுகள் எழுதப்பபடும்..

கலைஞர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியல்வெற்றிடம் இல்லா தமிழகத்தில் இருந்து
ஜாக்கிசேகர்.
23/05/2019



நினைப்பது அல்ல நீ

நிரூபிப்பதே நீ.....EVER YOURS..

.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner