105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2



105 நாட்கள்…
காணாமல் போய் இருந்தேன்…

ஆம் சோசியல் மீடியாவில் லைக் ஷேர் கமென்ட்  எதுவும் அதிக அளவில்  செய்யவில்லை..  அதில்நண்பர்களுக்கு   கோபம் கூட இருக்கலாம்…

105 நாள் பிக் பாஸ் ரிவியூவ் விடாமல்  செய்தேன்… அதுவும்  பத்து நிமிடம் எல்லாம் இல்லை..  குறைந்தது ஒரு மணிநேரம்…

முதலில் இதை நான்  ஏன் செய்கிறேன் என்று கேள்விகள்தான் அதிகம்..
என்னை  பொருத்தவரை…
 அங்கே நடமாடும் மனிதர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் மனிதர்களின்  எண்ண வோட்டத்தை நான் படிக்க   இந்த ரிவியூவை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டேன்…


 எப்படியும்  விடாமல் செய்ய வேண்டும் என்று  நினைத்து அதில் முழுமையாக  வெற்றியும் பெற்றேன் என்றே  சொல்ல  வேண்டும்…

 மூன்றரை மாதங்கள் தொடர்ந்து ஒரு நிகழ்ச்சியை பார்த்து  விட்டு இரவு  பதினோரு மணிக்கு மேல் ஷூட்டிங் ஆரம்பித்து 12 ஒரு மணிக்கு முடித்து அதன் பின் அதை சிஸ்டத்துக்கு கன்வெர்ட் செய்து… எடிட்டிங் ஆரம்பித்து  முடிந்து திரும்ப ரென்டர் செய்து…. பைனல் ஆவுட் எடுத்து   திரும்பவும் யூடியூபில்  வலையேற்றி  அதனை மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல  தினமும் வியடியற்காலை நான்கு அல்லது ஐந்து மணி ஆகிவிடும்…

105 நாட்களும் தூக்கம் இல்லாத இரவுகள்தான். ஆனாலும் விடாமல்  செய்தோம்…
 அது என்ன தோம்…???

ஒரு கட்டத்தில் நான் பேசும் போதும் சில விஷயங்களை நியாபகப்படுத்திக்கொண்டு இருந்தார் என்  மனைவி… புளுபர்சில் அந்த ஆடியோக்களை  கட் செய்யாமல் போக… அது தொடர்ந்து பார்க்கும் நேயர்களுக்கு  பிடித்து போன காரணத்தால் ஒரு 30 எபிசோடுக்கு பிறகு மனைவியும்  முகம் காட்டாமல் வாய்ஸ் ஓவராக தன்னுடைய கருத்துக்களை  என்னுடன் சேர்ந்து   பகிர்ந்து கொள்ள இன்னும் பிக் பாஸ் ரிவீயூவ் கலைகட்டியது…

 நடுவில்  நிறைய   மின் தடங்கல்கள், கம்யூட்டர் பிரச்சனைகள்… வெளியூர் பயணங்கள் என்று நிறைய சொந்த குடும்ப விஷயங்கள் இருந்த போதிலும் விடாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை  தொடர்ந்து செய்தோம்… 

தினமும்  மனைவி இரண்டு மணிக்கு தூங்க போக நான் விடிய விடிய தேவுடுகாத்து வலையேற்றிய இரவுகள் என்னால் மறக்க முடியாதவை… மீண்டும் காலையில் யாழினியை பள்ளிக்கு அனுப்பி மனைவியை அலுவலகத்தில் விட்டு  மாலைதிரும்ப இருவரையும் அழைத்து கிடைத்த நேரத்தில் தூங்கி பிரஸ் மீட் அட்டன் செய்து.. வெள்ளிக்கிழமை ரிலிஸ் திரைப்படங்களை விடாமல் பார்த்து ரிவியூவ் செய்து… எங்களை    பொருத்தவரை இது பெரும் சாதனை..

உலகம் எங்கும்  இன்னும் அதிக நண்பர்களை உருவாக்கி கொடுத்தது பிக்பாஸ்,.., மகனாக தம்பியாக தோழனாக அண்ணன்  அண்ணி என்று உறவுகளாய்  பழகினார்கள்..

எப்போதுமே உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும் என்பதில்  நம்பிக்கை உள்ளவன்… … பணமாக , உறவுகளாக, நண்பர்களாக, மிக  அதிகம் கிடைத்தார்கள்…

வழக்கம் போல… உங்களை எனக்கு பிடிக்கவே பிடிக்காது… இப்போது உங்களை  பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று பிளாக் காலத்தில்இருந்து சொல்லப்படும் கிளிஷே வாசகங்கள் இப்போது பல்வேறு நபர்களுடைய வாயில் இருந்து வெளிப்படுவது சந்தோஷத்தை கொடுக்கின்றது…

மனைவிக்கு என்று தனி ரசிகர் கூட்டம் நண்பகர்கள் கூட்டம் என்று உருவாகி இருப்பது  நான் எதிர்பார்த்த ஒன்று என்ற போதிலும் அவள் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை.

வெளிநாட்டு வாழ் நண்பர்கள் சொன்ன ஒரே விஷயம்.. காலையில் காபியோடு உங்கள் வீடியோவை பார்க்க  உட்கார்ந்தால்... குடும்ப உறுப்பினர்களோடு உறையாடுவது போல இருக்கின்றது என்று  எல்லோருமே சொன்னது  எங்கள் இருவரின் வெற்றி என்று கருதுகிறேன்.

  பேஸ்புக் இன்பாக்சில் ஏன் எதுவுமே எழுதலை என்று  கேட்ட நண்பர்களுக்காக இந்த விரிவான பதிவு…

தோள் கொடுத்த நண்பர்கள் அத்தனை பேருக்கும் நன்றியும் பேரன்பும்.

 மீண்டும் உங்களோடு….

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
04- 10- 2018



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

2 comments:

  1. வாழ்த்துக்கள் நண்பா மேன்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன் அண்ணிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இருவரின் பேருழைப்புக்கும் பல்லாயிரம் வாழ்த்துகளும் நன்றிகளும்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner