எல்லாம் இந்த எழுத்தாளர் பிகேபியால் வந்தது…
பரத் சுசிலா கதைகளில் சுசிலா டிஷர்ட்டுகளில் வாசகம் எழுதி போட்டுக்கொண்டு வருவார்…
கடலூர் கூத்தப்பாக்கம் போன்ற இடங்களில் இருந்து அந்த கதைகளை படிக்கும் போது காட்சிகளை கண் முன் வரியும்… அந்த டீ ஷர்ட் வாசகங்கள் கொஞ்சம் கிறங்க வைக்கும் என்பதே உண்மை.…
ஆனால் சென்னை வந்து இந்த 25 வருடத்தில் டி ஷர்ட்டில் வாசகம் அணிந்து செல்லும் பெண்கள் நிறைய ஆனாலும் ஆங்கிலத்தை எழுத்தை கூட்டி படிப்பதற்குள் கடந்து போய் விடுவார்கள்.. காரணம் நம் ஆங்கிலம் அந்த அளவுக்குதான் அப்போது..
போக்கிரி திரைப்படத்தில் மகேஷ் பாபு இலியானா போட்டு வரும் டி ஷர்ட் பார்த்ததும் அப்படியே தோள் பட்டையை பிடித்து படிப்பார்…
‘’he may not to be perfect
but parts of me are pretty awesome’’
என்று ஏழுதி இருப்பதை நிறுத்தி நிதானமாக படிப்பார்… ஆனால் அப்படி இயல்பு வாழ்க்கையில் படிக்கவே முடியாது.. டின் கட்டிவிடுவார்கள். பார்த்தும் பார்க்காத்து போல படிக்க வேண்டும்…
சில கற்பனை காட்சிகள் இன்னமும் ரசிக்க வைக்கும்… அதனாலே அந்த காட்சிக்காகவே நான் அந்த படத்தை இரண்டு முறை பார்த்தது உண்டு.
இன்று காலை மனைவியை அழைத்துக்கொண்டு ஆர்ஏ புரம் வழியாக காலையில் பல்லாவரம் சென்ற போது… நாய் மேய்த்துக்கொண்டு ஒரு பெண் இரவு நேர பேண்டும் டீ ஷர்ட்டுமாக நடந்து வந்துக்கொண்டு இருந்தார்…
டிஷர்ட்டில் இருந்த வாசகத்தை வண்டியில் சென்ற படியே படித்து அர்த்தம் புரிந்துக்கொண்டேன்…
ஆனால் அந்த பெண் நான் படிப்பதை பார்த்து விட்டாள்….
எங்க வீட்டம்மா சொன்னாங்க… இப்படியா பக்கி மாறி பார்ப்பாங்க… அந்த பொண்ணு உன்னை திரும்பி பார்த்துட்டு போகுது…
மிசஸ் ஜாக்கி ஒரு திருத்தம்...
நான் பார்க்கலை படிச்சேன்… என் ஆங்கில அறிவை வளர்த்துக்க என்றேன்..
வீட்ல டைம்ஸ் ஆப் இந்தியா வாங்கறேன் ஒரு நாளாவது பிரிச்சி படிச்சி இருப்பியா? மிஸ்டர். எப்பவாவது சென்னை டைம்ஸ் படிப்ப… அதிலேயும் சினிமா…
நான் உடனே சொன்னேன்…
எந்த விஷயம் செய்தாலும் அதில் ஈர்ப்பு இருக்க வேண்டும் என்றேன்...
ஒன்னோட 20 வருஷமா குப்பை கொட்டுறேன்.. என்று பழைய பஞ்சாக்கத்தை ஆரம்பித்தது இந்த கட்டுரைக்கு இனி தேவையில்லாதது...
கம் டூ த பாயிண்ட்.
இதனால் அறியப்படும் நீதி யாதெனில்... மகேஷ் பாபு போல நிறுத்தி நிதானமாக டீ ஷர்ட்டை படிக்காமல் வண்டியில் செல்லும் போது ஆங்கில வாசகத்தை படித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு பாஸ் செய்து இருக்கின்றேன் என்பதை தெரிவித்துக்கொள்ள கடமைபட்டுள்ளேன்.
அப்புறம் டீ ஷர்ட்டில் எழுதிய வாசகத்தை சொல்ல வில்லையென்றால் தமிழ்சமுகம் என்னை மன்னிக்காது என்பதால் அது கீழே.
‘’அது எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும் நீ ஒன்னும் கருத்து சொல்ல தேவையில்லை என்பதே.’’
ஜாக்கிசேகர்
22/02/2017
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

Ha Ha!!
ReplyDelete