SABARI MALAI DOLLY STORY - சபரிமலை… டோலிகள்




சபரிமலை… டோலிகள்

தென்னிந்தியாவில் உள்ள   கேரளாவில் , மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் ஆன்மிக ஸ்தலம் சபரிமலை . 18 மலைகள்  சூழ்ந்து இருக்கும் மலையில் ஒரு மலையில் இறைவன் ஐயப்பன் வீற்று இருக்கின்றான்…  ஐய்யப்பனை காண , பம்பையில் இருந்து நீலிமலை வழியாக நான்கு கிலோ  மீட்டர் ஏற்றமான  மலைபாதையை  கடக்க வேண்டும்…


தன்  உடம்பை தூக்கிக்கொண்டு தானே  நீலி மலை மேலே ஏற முடியாமல்   பக்தர்கள் தினறும் போது… உடல் சுகமில்லாதவர்கள். வயதான பெரியவர்கள்… 50 வயதை கடந்த  பெண்கள்  ஐய்யப்பனை தரிசிக்க டோலி என்றழைக்கப்படும். மனித வாகனத்தையே  நம்பியே உள்ளார்கள்…

 சரி டோலி என்றால் என்ன??

அந்த காலத்தில் மன்னர்களை  தூக்கி செல்லும் பல்லாக்குகள்தான் சபரிமலையில்   டோலி என்றழைக்கபடுகின்றது.  மலையேற முடியாத, நடக்க முடியாத பக்தர்கள் பம்பையில் இருந்து சபரிமலை  சன்னிதானத்திற்கு செல்ல டோலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த டோலி சேலைவசேவை, திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு கண்காணிப்பில் நடந்து வருகிறது.
ஏற்க்குறைய 5அரை  கிலோ மீட்டர் செங்குத்தான நீலிமலையில் ஐயப்ப பக்தர்கள்  நடந்து செல்லவே சிரமப்படும் போது  , வயதான பக்தர்களை  டோலியில் ஏற்றிக்கொண்டு, நான்கு பேர் தோளிலும், தலையிலும்  மாற்றி மாற்றி டோலி பல்லக்கை சுமந்த படி  செல்லும்  காட்சியை  பார்க்கவே பாவமாக இருக்கும்…

கானகத்தின் ஊடே நடந்து செல்லும் போது பெரும்  மழையில் கூட டோலி பல்லக்கை  தூக்கிக்கொண்டு நடக்கின்றார்கள்.. பல்லக்கில் இருப்பவர் ,ஒரு என்பது கிலோவுக்கு இருக்கின்றார் என்று  வைத்துக்கொள்ளுவோம்.. அவர் எடுத்துவரும் துணிப்பை முதல் அவர் அழைத்து வரும் அவர் குழந்தையையும்  சேர்த்து ஏற்றிக்கொண்டு சபரிமலையில் இருந்து  சன்னிதானம் வரை தூக்கிக்கொண்டு நடக்க வேண்டும்.. அதே போல  திரும்புவும் அழைத்து  வந்த இடத்திலேயே அவர்களை விட வேண்டும்..



எரிமேலியில் இருந்து பம்பை வரை  மலை ஏற முடியாத ஐயப்ப சாமிகள் 48 கிலோ மீட்டர்   தூரம் கூட டோலிகளில் வருவதுண்டு. அவர்கள் 20  ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் ரூபாய்  வரை கூலி கொடுப்பதும்  உண்டு…

முதலில் டோலி தூக்க கட்டணம் மிக குறைவாக இருந்தது...ஒருவர் 50 கிலோ  இருப்பார்… ஒருவர் 100 கிலோ இருப்பார்… எல்லோருக்கும் ஒரே மாதிரியான  கட்டண தொகை கட்டுபடியாகாது என்று டோலிக்காரர்கள் போராட்டம் செய்தார்கள்… நிறைய பிரச்சனையை சந்தித்த காரணத்தால் டோலியில்  ஒரு முறை  மலைக்கு சென்று திரும்ப   சபரிமலை தேவஸ்தானம்  போர்டு நிர்ணியத்து இருக்கும் கட்டணம்  தற்போதைய 3600ரூபாய்….


 மலையில் தனியாக  ஏறுவதே   கடுமையாக இருக்கும் நிலையில்… 100 கிலோ எடையுள்ள  பக்தரை  தூக்கிக்கொண்டு , செங்குத்தாக இறக்கும் மலை பாதையில் மழையின் ஊடே ஏறுவதும்  இறங்குவதும்  என்பது சாதாரண விஷயம் இல்லை… சபரிமலை சென்று மலை யேறி இறங்கி வந்தவர்களுக்கு அதன் வலியும் வேதனையும் தெரியும்..

ஒரு சிலர் முதலில்  கறாராக இருந்தாலும், தன்னை தூக்கிக்கொண்டு   மலையேற நான்கு மனிதர்கள் சிரமப்படுவதை பார்த்து விட்டு  500 ஆயிரம் என்று கூடுதலாக பக்தர்கள்  டிப்ஸ்  கொடுப்பதும்  உண்டு… சிலர் டீ வாங்கி கொடுக்க கூட பைசா கொடுக்காமல் செல்பவர்களும் உண்டு…

 (சில டோலிக்காரர்கள்    அடவடியாக பணம் கேட்பதும் உண்டு…  நிறைய பிரச்சனைகள் இது போன்று வந்த  காரணத்தால் திருவாங்கூர் தேவசம் போர்டு இந்த விஷயத்தில்  தலையிட்டு.. கட்டனத்தை   நிர்ணயம் செய்தது என்பது குறிப்பிடதக்கது…)

நான்கு கிலோ மீட்டர் செங்குத்தான பாதையில் ஏறி இறங்குவதற்குள் நாக்கு தள்ளும் … காலில் வலி  பின்னி எடுக்கும்.. ஆனால்  நான்கு பேர் சராசரியாக  100 கிலோ எடையுள்ள மனிதளை சுமந்துக்கொண்டு  5 கிலோ மீட்டர் மலை பாதையில்  பக்தர்கள் விழுந்து விடாமல் சன்னிதானம்  அழைத்து சென்று….. திரும்ப   பம்பைக்கு அழைத்து வந்து விடும் அந்த வல்லமையையும் சக்தியையும் என்னவென்று சொல்வது….



முன்பு எல்லாம் எதுவாக இருந்தாலும்  கழுதை மீது வைத்துதான் சுமைகளை  ஏற்றி செல்வார்கள்.. ஆனால் இப்போது சபரிமலை  தேவஸ்தானத்துக்கு   சொந்தமான டிராக்டர்  மட்டும் சென்று வர  சிமென்ட் பாதை அமைத்து இருக்கிறார்கள்… எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும்  பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானம்  செல்ல வேண்டும் என்றால்…???   ஒன்று மலையேறி நடக்க வேண்டும்  அல்லது  டோலியில்  செல்ல வேண்டும்…

  ரோப் கார் அமைக்காலம் என்று பேச்சுவார்த்தை நடந்தாலும் , சபரிமலையின் பழமை கெட்டு விடும் என்பதாலும், மிக  எளிதாக ஐயப்பனை  தரிசித்தல்  என்பது அலட்சியத்தை கொடுத்து விடும் என்பதால்…  ரோப் கார் திட்டத்தை நிறைவேற்றவில்லை என்கின்றார்கள் பம்மை  வாசிகள்.


எது எப்படியாக இருந்தாலும் 400க்கு அதிகமான டோலிகளும்… 1600க்கு மேற்ப்பட்ட நபர்களும்  டோலி  தூக்குபவர்களக பணி புரிகின்றார்கள்..  டோலி தூக்குபவர்களில் அதிக அளவு தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள்.. முக்கியமாக வண்டிபுதூர்,  குமளி ,தேனியை சுற்றி உள்ளவர்கள் இங்கே வந்து டோலி தூக்குகின்றார்கள்


ஒரு முறை ஏறி இறங்கவே சிரமப்படும் இந்த செங்குத்தான  மலை வனத்தில் பிசியான   கார்த்திகை  மாதத்தில்  மக்கள் பெருங்கூட்டத்தில் ஒரு நாளைக்கு   நான்கு முறை கூட ஏறி இறங்குவார்களாம்… சிசன் நேரமான
ஒரு முறை  சபரிமலை  ஐயப்பனை காண நீலி மலையில் ஏறி இறங்கியவர்கள்  டோலி தூக்குபவர்களின் உழைப்பு எத்தகையது  என்பதை உணர முடியும்…


 கடுமையான உழைப்புக்கு சரியான உதாரணமாக இந்த டோலி தூக்கும் தொழிலாளிகளை கண்டிப்பாக சொல்லலாம்… வறுமை மற்றும் குடும்ப சூழல்  காரணமாக டோலி  தூக்குபவர்களுக்கு … ஒரு  வேலை ‘ நீங்கள் ஜயப்பனை காண டோலியில் பயணம் செய்தால் பணம் இருந்தால் அல்லது மனம் இருந்தால்   தாரளமாக  அவர்களுக்கு  கொடுத்து உதவி செய்யலாம்.


சுவாமியே சரணம் ஐயப்பா…


 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...

=======
மேலும்  நான் அவர்களை பற்றி  எடுத்த ஆவணப்படத்தில் , இன்னும் விரிவாய்  காட்சி படுத்தி இருக்கின்றேன்... அது மட்டுமல்ல 35 வருடமாக டோலி தூக்கும் வேலாயுதம்... பத்து வருடமாக இந்த தொழிலில் இருக்கும் கலை  போன்றவர்களிடம்  பேட்டி எடுத்து ஆவணமாக்கியுள்ளேன்.. அவசியம் வீடியோவை பாருங்கள்... கருத்துக்களை பகிருங்கள்... யூடியூபை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்..



 நன்றி.






நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

2 comments:

  1. டோலி தூக்குபவர்களின் பணி மகத்தானது! ரோப் கார் போன்றவை அமைத்தால் இவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாமல் செய்யவேண்டும்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner