Bangalore frazer town - பெங்களூர் பிரேசர் டவுன் ரம்ஜான் அசைவ உணவு திருவிழா




பெங்களூருவில்  வெள்ளைக்காரர்கள் ஆட்சி செய்த காலத்தில் உருவாக்கிய சிறிய  நகரம்… பின்னாளில்  பிரேசர் டவுன் என்று அழைக்கப்பட்டது…தற்போது புலகேஷிநகர் என்று அதனை அழைத்தாலும்… இன்னமும் பிரேசர் டவுன் என்றே அழைக்ப்பட்டு வருகின்றது… உதாரணத்துக்கு  இன்னமும்  எப்படி அண்ணாசாலை என்று அழைக்காமல் மவுண்ட் ரோடு என்பது மனதில் பதிந்து விட்டதோ??? அதே போல பெண்களூரில் பிரேசர் டவுனும் அப்படியே..


ரம்ஜான் மாதத்தில் இங்கே பிரேசர் டவுன்  பள்ளிவாசலை சுற்றிலும் நிறைய  நான் வெஜ் கடைகள் இருக்கும் என்று ஒரு பெரியவர் சொல்ல… மிக ஆர்வத்துடன் அங்கு சென்றேன்..

சும்மா சொல்லக்கூடாது… நிறைய வெரைட்டிகளில் சிக்கன் , மீன், பீப், மட்டன்  போன்றவற்றை  ஏழை  பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் நிறைய பேர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.. விலை மிகவும் குறைவாகவே இருந்தது…

ஐந்து  அங்குலம் சமதளமான  பெரிய கருங்கல்லில்  ஒரு பக்கம் மட்டனும்  மறுபக்கம் சிக்கனையும் பிரை செய்துக்கொண்டு இருந்தார்கள்.. மிக மிக காரமாக சுவையாக சுட சுட வாங்கி சாப்பிட்டேன்.. பொதுவாக காடாய், தோசைக்கல் போன்றவற்றில்தான் சிக்கன் மட்டன் பிரை செய்து பார்த்து இருக்கின்றேன்… முதல் முறையாக  கருங்கல்லில்  பிரை செய்வதை இப்போதுதான் பார்க்கின்றேன்.. 

அதற்கு பதர்கோஷ் என்று பெயர்.. பதர் என்றால் கருங்கல்… கோஷ் என்றால் இறைச்சி என்பதால் அந்த பெயர்… மதியம் ஒரு மணியில் இருந்தே  அந்த பெரிய கருங்கல்லை சூடு செய்ய ஆரம்பிப்பார்களாம்….

 விதவிதமான இனிப்புகள்… மற்றும் சுடசுட சமோசா கிடைக்கின்றன… போன வருடம் வரை ரம்ஜான் முடியும் வரை  விடிய விடிய இருக்குமாம்.. ஆனால் இந்த வருடம்… பிரேசர் குடியிருப்புவாசிகள் மற்றும் பிரேசகர் மசூதி கமிட்டி  ஆகியோர் ஒன்று சேர்ந்து நான் வெஜ்  கடைகளை இரவு பண்ணிரண்டு மணிக்கு முடிவிட முடிவு செய்து இருக்கின்றார்கள்…

காரணம் விரும்பத்தாத சில நிகழ்வுகள்  நடந்து விட்டதால் இந்த முடிவை மேற்கொண்டுள்ளார்கள்..

பெங்களூருவில் இருந்துக்கொண்டு அசைவ பிரியர்களாக நீங்கள் இருந்தால் அவசியம் பிரேசர் டவுன் சென்று  விதவிதமான அசைவ உணவுகளை ஒரு பிடி பிடியுங்கள்.



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

23/06/2015



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

1 comment:

  1. வருட கணக்கில் நான் வாழ்ந்த இடம். இங்கே இருக்கும் ஒவ்வொரு கடையிலும் நமது கால் சுவடி பதிந்தே இருக்கும். அருமையான உணவு கிடைக்கும். மிகவும் ரசித்தேன் தங்கள் பதிவை. நன்றி.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner