#PacificRim:Uprising (2018) Review By Jackiesekar
#பிசிப்பிக்ரிம்அப்ரைசிங்
பசிப்பிக் ரிம் அப்ரைசிங் திரைவிமர்சனம்.
2013 பசிப்பிக் ரிம் வந்து பட்டையை கிளப்பிச்சி… டிரான்ஸ்பார்மர் மேட்டரை அப்படியே உல்டா பண்ணி கொஙசம் கரம் மசாலா தூவி.. அப்படியே அரை முழம் மல்லிகை பூவையும் காதில் சுற்ற வச்சி சக்சஸ் பண்ணிய படம்.
தமிழ்ல கூட ருத்ரநகரம்ன்னு வந்ததா நியாபகம்…
=
கதை என்னன்னா…. பசிப்பிக் கடல்ல ஆழத்தின் வழியா பூமி பந்தில் வந்து ரச வடை சாப்பிட்டு போகும் வழியை ஏலியின்கள் கண்டுக்கொள்ள…
மிஷ்கின் கத்துவது போல டாய் யார்க்கிட்ட காதுல பூ சுத்தற..???
இதுக்கு என்ன ஆதாரம் என்று நீங்கள் நீட்டி முழங்க வேண்டாம்.. அவர்கள் சொல்லும் பதில்… டைனோசரஸ் இந்த பூமியில் இருந்துச்சி இல்லை.. அது யாரு…?? அதெல்லாம் ஏலியன்களோடு கொள்ளுதாத்தாக்கள்தான்…
ஏதோ இயற்கை செய்த கிரகம் ஏலியன் டைனோசரஸ் எல்லாம் செத்து போச்சி… நாங்க எல்லாம் எப்பயோ.. பூமிக்கு வர வழி கண்டுபிடிச்சவங்க.. தெர்தா என்று படத்தின் கதை குழுவினர் ஏலியன்கள் சார்பாக பார்வையாளர்களை நக்கல் விடுகின்றார்கள்.
சரி மேட்டருக்கு வருவோம்… ஏலியன்களின் பெட் அனிமல் பெயர் கெய்ஜூ அதுங்க வேலை என்னன்னா பசிப்பிக் கடல் வழியா பூமிக்கு வந்து இங்க இருக்கற மனிதர்கள் தொம்சம் செஞ்சி கூப்பிடும் தூரத்தில் பூமின்னு மற்ற ஏலியன்கள் இருக்கும் கிரகத்துக்கு சிக்னல் கொடுத்தா..?
நல்ல நாள் பார்த்து பீடை பாட்டிமை ராகுகால எமகென்டம் எல்லாம் பார்த்து ஒரு நல்ல நாள் பார்த்து பால் காய்ச்சி பூமிக்கு குடித்தனம் நடத்த வருவாங்க.. எஜமான ஏலியன்கள்.
பூமி போல பல கிரகங்கள் பிளாட் போட்டு வித்த அனுபவம் எலியன்களுக்கு உண்டு…
பூமியில இந்த கெய்ஜூங்க தொல்லை அதிகம் ஆக ஆங்… கெய்ஜூ எப்படி இருக்கும்ன்னா கற்பனை செய்ய முடியவே முடியாத பெரிய மான்ஸ்ட்டர்… அது பூமியில் இருக்கும் நகரங்களை அழிக்க வருது..
பூமியில் இருக்கும் எல்லாம் நாடும் ஒன்னா சேர்ந்து இன்டிபன்டன்ஸ்டே போல ஏலியன்களை அழக்க ppdc என்ற அமைப்பை ஏற்படுத்துகின்றார்ள்.
பேன் பசிப்பிக் டிப்பன்ஸ் காப் என்ற உலக போலிசை நிறுவுகின்றார்கள்…எல்லா நாட்டுகாரனும் சேர்ந்து கய்ஜுவை காலி பண்ண ஜகார்ன்னு ஒரு பெரிய ஜெயின்ட் ரோபோவை கண்டு புடிக்கறாங்க.. இந்த ரோபோவை இயக்க பைலட் ரெண்டு பேர் வேண்டும் ஒத்த சிந்தனை இருந்தால்தான் இயக்க முடியும்..
இப்படி உலக நாடுகள் ஒன்று சேர்ந்து ஏலியன்களின் பெட் அனிமால் கெய்ஜுக்களை அழிக்க ஜாகர்களை வைத்து அழித்தார்களா? இல்லையா என்பது முதல் பாகம்..
இரண்டாம்பாகத்தில்
ஜெகர் ரோபார்ட்டுகளின் உதிரிகளை திருடி கள்ள மார்க்கெட்டில் விற்கும் ஜேக் என்பனை பிபிடிசி போலிசார் கைது செய்கின்றார்கள்… அவனுக்கு இரண்டு வாய்ப்பு ஒன்று ஜெயிலுக்கு போவது மற்றது ஜெகர் பைலட்டாக மாறி உலகை காப்பது… உலகை காத்தானா இல்லையா.? கய்ஜுக்கள் எந்த மாதிரி பூமியை கபளீகரம் செய்தன என்பதை திரையில் பார்த்து மகிழுங்கள்…
இந்த படம் பார்க்கவேண்டிய திரைப்படம் என்று ஜாக்கி சினிமா பரிந்துரைக்கின்றது..
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment