ஆல்பம்.
காவிரி மேலாண்மை வாரியம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்து விட்டது.. ஆனாலும் அதை அமைத்தால் குடுமி தன்னிடத்தில் இருக்காது என்ற காரணத்துக்காக காவிரிநதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய ஆளும் பாஜக அரசு முட்டுக்கட்டை போட்டு வருகின்றது… எப்போதுமே மத்திய அரசுக்கு தமிழகம் என்றால் மாற்றான் தாய் மனப்பாண்மைதான்… காரணம் எல்லா மாநிலத்திலும் எல்லா ஊரிலும் ரதம் ஊர்வலம் வந்தால் கொண்டாடப்படும்.. இங்கே மட்டும்தான் ரதம் பின்னங்கால் பிடறியில் படும் அளவுக்கு ஓடும்.. அந்த வன்மம் இருக்காதா பின்னே.?
==========
நமக்கு சேவை மயிறு புடுங்கறேன்னு சொல்லி எலெக்ஷன்ல நின்னு ஜெயிச்சி மாநிலங்களையில் மக்களுக்காகவே வாழும் எம்பிக்களில் 90 சதவிகிதம் பேர் கோடிஸ்வரர்கள் என்ற புள்ளி விவரம் தற்போது தெரியவந்துள்ளது…229 பேர்ல 201 பேர் சராசரியா 50 கோடிக்கு மேல பணம் வச்சி இருக்கறவங்கதானாம்.. அதுல கொடுமை என்னன்னா… 51 பேர்ல கிரிமினல் வழக்கு இருக்காம்.. ஐக்கிய ஜனதாதள `எம்பி மகேந்திர பிரசாத்துக்கு சொத்து மதிப்பு 4000ம் கோடியாம்… நான் கேக்கறேன்.. இவ்வளவு சொத்து மதிப்பு இருந்தா கட்டை வணங்கி வேலை செய்ய தோனுமான்றேன்…?????
=======
தமிழக தலைமை கணக்காயர் அருண்கோயல் சிறையில் களி தின்றுக்கொண்டு இருக்கின்றார்.. எப்படியும் வெளியே வந்து விடுவார் என்பது தெரிந்த விஷயம் என்றாலும் டிரான்ஸ்பருக்கு எல்லாம் லஞ்சம் மானாவாரியாக வாங்கி இருக்கின்றார். ஊழியர்கள் எல்லாம் குமைந்து புகைந்து போட்டுக்கொடுத்துதான் சிக்க வைத்து இருக்கின்றார்கள். எத்தனை பேரின் வயிற்று எரிச்சல்..???
=======
மிக்சர்
ஈரோட்டில் நடந்த திமுக மாநாட்டில் காவிரிநதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்காமல் வேறு எந்த அமைப்பை ஏற்படுத்தினாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று திமுக தீர்மானம் இயற்றி இருக்கின்றது. ஆனால் மத்திய அரசு காவிரி மேற்பார்வை வாரியம் அமைக்கலாம் என்ற ஜல்லியடித்துக்கொண்டு இருக்கும் நிலையில் எதிர்கட்சியின் இந்த தீர்மானம் நல்ல விஷயம்தான்… அதே நேரத்தில் ஆளும் அதிமுக மத்திய அரசு தமிழக அரசு கேட்பதையெல்லாம் செய்துக்கொடுத்து வருகின்றது என்று எடப்பாடி திருவாய் மலர்ந்துள்ளார்.
=======
ஸ்டாலின் தப்பா பழ மொழி சொல்லிவிட்டார் என்று ஏகப்பட்ட நக்கல்கள்.. பொதுவெளியில் பேசும் போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.. சரி விடுங்கள் பேசி விட்டார்… ஒன்றும் மட்டும் சொல்லக்கொள்கிறேன்… ஸ்டாலின் பழமொழியைதான் தப்பாக பேசினார்.. மக்களுக்காகவே நான் என்று முழக்கம் இட்ட சொத்து குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளி ஜெ டான்சி நிலம் வாங்கியதில் தான் போட்ட கையெழுத்தே தன்னுடையது இல்லை என்று பச்சையாக பொய் சொல்லி மாற்றி பேசினார்.. அப்படி ஏதாவது ஸ்டாலின் மாற்றி பேசி இருந்தால் நிச்சமயாக நீங்கள் பஞ்சாயத்தை கூட்டுங்க.
==========
மயிலையில் இருந்து ஆழ்வார் பேட்டைக்கு குடி புகுந்தாகி விட்டது.. தண்ணிர்தான் கொஞ்சம் பிரச்சனை பார்த்துக்கொள்ளலாம். யாழினிக்கு பள்ளி ரொம்பவும் பக்கம் என்பது கூடுதல் சிறப்பு… காலையில் எழுந்து தெருவுக்கு வந்தால் நாய் மேய்க்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது… இன்னும் எழுதுவோம். எல்லாத்தையும் விட யாழினி புது வீட்டில் எனக்கு ஒரு சர்ப்பிரைஸ் கொடுத்து இருந்தாள்… அது உங்களுக்காக..
=========
தமிழக திரைப்பட ஸ்டிரைக் விஷலுக்கு இரைத்த நீர்தான்.. மக்களை எந்த வகையிலும் அது பாதிக்கவில்லை.. அவர்கள்… வெவ்வேறு தளங்களில் அவர்களின் பொழுது போக்கை பார்த்துக்கொள்கின்றார்கள். சினிமா என்பது காஸ்ட்லி கலாச்சாரமாக மாறிவிட்டதே இதற்கு காரணம்.. அது குறித்து நான் பேசி இருக்கும் வீடியோ பதிவு… நேரம் இருப்பவர்கள் பார்துக்கொள்ளுங்கள்..
=======
======
திருப்பத்துதூர் கள்ளக்காதல் ரேகா கொலைக்கதையை கேட்டால் கேட்கும் நமக்கே தலை சுற்றுகின்றது.. சித்திப்பெண்ணுக்கு உதவி செய்யப்போக அவர் கணவரையே லபக்கி தனது கள்ளக்காதலனை சிக்க வைத்து தனது பெரியம்மா பொண்ணை கழுத்து அறுத்து யப்பா தலை சுத்துகின்றது. இந்த காலத்துல எப்படி கொலை செஞ்சாலும் ங்கோத்தா ஒரே வாரத்தில் அமுக்கி விடுவார்கள்… அவ்வளவுதான். மேட்டர்.
====
அலன் வால்கரின் வேர் ஆர்யூ நவ் பாடல் கொஞ்சம் வெறுமையாக இருக்கும். பட்.. இந்த பாடல் ரி ஒர்க் இது பார்க்க கவித்துவமாக இருக்கின்றது..
=======
மயிலையில் 63வர் வீடு மாறி வந்து விட்டேன்.. அது மட்டுமல்ல… திருச்சியில் குடும்ப திருமண விழாவுக்கு செல்ல வேண்டும்..இந்த முறை63வர் மிஸ்சிங்….
=====
18+
A little girl and boy are fighting about the differences between the sexes, and which one is better. Finally, the boy drops his pants and says, “Here’s something I have that you’ll never have!” The little girl is pretty upset by this, since it is clearly true, and runs home crying. A while later, she comes running back with a smile on her face. She drops her pants and says, “My mommy says that with one of these, I can have as many of those as I want!”
தொடர்ந்து இந்த தளத்தில் நேரம் கிடைக்கும் போது எல்லாம் சாண்ட்வெஜ் அண்டு நான் வெஜ் வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.‘
========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment