வட இந்தியர்களின் தமிழின பார்வை...


இது ரொம்ப நாட்களாக என் மனதில் ஓடிய விஷயம் தான் இப்போது உங்கள் முன்பார்வைக்கு அல்லது யோசிக்க வைக்கிறேன்.

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி எங்கள் தமிழ் குடி என்று பெருமை பட்டு கொண்டு இருக்கிறோம்.
இன்று நேற்று அல்ல பல்லாண்டுகளாக இப்படித்தான் தமிழர்கள்பெருமைபடுகிறார்கள்.
ஆனால் மத்திய இந்தியாவில்இருக்கும் மக்கள் நம்மை பற்றிய அவர்களின் பார்வை எப்படி இருக்கின்றது .

உங்களுக்கு ஒரு கேள்வி நம் நாட்டின் இதிகாசங்கள் என்று எதை சொல்வோம்.

1 ராமாயணம்.
2 மகாபாரதம்.

மகாபாரதத்தை விட்டு தள்ளுவோம்... அது ஒரு பெண்ணை 5 பேர் வைத்துக்கொண்ட கதை...

நம் நாட்டின் முதன்மை இதிகாசம் ராமயணம் தான் அந்த ராமாயணத்தின் கதை என்ன? கதை விட்டவர் வால்மீகி.. அவர் என்ன அக்மார்க் தமிழரா என்ன?


கதையின் களம் இந்தியாவின் மையப்பகுதிஅங்கு இருக்கும் எல்லோரும்அழகானவர்கள் காதாநாயகனான ராமன் புஜபலம் மிக்கவன் நல்ல வில் வீரன், மிக அழகானவன் எல்லோரும் அழகானவர்கள் எல்லோரும் முக்கியமாக மனிதர்கள்...

நல்ல நாடு நல்ல மக்கள் எல்லோருக்கும் அழகான முகங்களை கொண்டவர்கள்

ராமன் மனைவி சீதை கடத்தபடுகிறாள்.
ராமனுக்கு ராவணனால் கடத்தபட்ட செய்தி கிடைக்கிறது .

மத்திய இந்தியாவில் இருந்து கீழே தெற்க்கு பக்கமாக தேடி வர வர எல்லோரும் குரங்காக இருக்கிறார்கள் அதாவது தென்னிந்தியாவில் எல்லோரும் குரங்குகள்...
அப்படியே கொஞ்சம் கிழே உள்ள இலங்கையில் எல்லோரும் ராட்சசரர்கள்.


கதை பல்லாயிரக்கனக்கான வருடத்துதுக்கு முன் எழுதப்பட்ட வெகு சுவாரஸ்யமான புனைவு என்றாலும்

இந்த வளர்ச்சியடைந்த கால கட்டத்திலும் நாம் என்னதான் நாய் மாதிரி கத்தினாலும் மத்திய அரசை பொறுத்தவரை நாம் குரங்குகள் போல்தான் நடத்தபடுகிறோம்...

நம்மை பொறுத்த வரைஅவர்கள் நம்மை எந்த விதத்தி்லும் மனிதர்களாக நடத்தவில்லை, மிருகங்களை போல்தான் நடத்தப்படுகிறோம்.

அதற்க்கு உதாரணங்கள்,இலங்கை பிரச்சனை, நெய்வேலி, முல்லைபெரியாறு, காவிரி போன்ற விஷயங்களை உதாரனமாக சொல்லலாம்...

யோசியுங்கள் தமிழர்களே....

அன்புடன்/ஜாக்கிசேகர்

18 comments:

  1. //இந்த வளர்ச்சியடைந்த கால கட்டத்திலும் நாம் என்னதான் நாய் மாதிரி கத்தினாலும் மத்திய அரசை பொறுத்தவரை நாம் குரங்குகள் போல்தான் நடத்தபடுகிறோம்...

    நம்மை பொறுத்த வரைஅவர்கள் நம்மை எந்த விதத்தி்லும் மனிதர்களாக நடத்தவில்லை, மிருகங்களை போல்தான் நடத்தப்படுகிறோம்.//

    மிக அழகாக உண்மை இங்கே பளிச்சிடுகிறது

    ReplyDelete
  2. Hi

    We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

    Please check your blog post link here

    If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

    Sincerely Yours

    Valaipookkal Team

    ReplyDelete
  3. //மத்திய இந்தியாவில் இருந்து கீழே தெற்க்கு பக்கமாக தேடி வர வர எல்லோரும் குரங்காக இருக்கிறார்கள் அதாவது தென்னிந்தியாவில் எல்லோரும் குரங்குகள்...
    அப்படியே கொஞ்சம் கிழே உள்ள இலங்கையில் எல்லோரும் ராட்சசரர்கள்.//


    செம டச்சிங்
    எனக்கு இடுப்புல லேச அரிக்குது
    எந்த கை வச்சி சொறியுரது?

    ReplyDelete
  4. இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமே. நான் புது தில்லியில் 6 வருடங்கள் இருந்திருக்கிறேன். நீங்கள் சொல்வது உண்மையே. வட இந்தியர்களுக்கும் நமக்கும் இருக்கும், கலாச்சார, மொழி, பண்பாட்டு, இன வேறுபாடுகள் மிக அதிகம். சில சமயங்களில் நாம் வேறு நாட்டில் இருகிறோமோ என்று எண்ணத் தோன்றும். ஏன், தட்ப வெப்ப நிலை கூட வித்தியாசமானதுதான்.

    தென்னிந்தியர்கள், அதிலும் குறிப்பாகத் தமிழர்கள் என்றாலே அவர்களுக்கு ஒருவித இளக்காரம் தான். இந்தி பேசாத இந்தியர்களில், அவர்களின் மேலாதிக்கத்தை ஒத்துக்கொள்ளாத இனம் தமிழர்கள்தான். அந்தக் காழ்ப்புணர்ச்சி வட இந்தியர்களிடம் நிறையவே உண்டு. நாட்டின் தலைநகரத்திற்கருகில் இருந்துகொண்டு எல்லா வாய்ப்பு வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு வாழும் இனமது. தமிழர்கள் இந்தி கற்றுக்கொள்வதில்லை, இந்திப் படங்கள் பார்ப்பதில்லை என்பதெல்லாம், அவர்களுக்கு கோபத்தை கிளரும் விசயங்கள். தமிழ்த் திரைப் படங்கள் நன்றாக இருக்க முடியும் என்று அவர்களால் ஒருபொழுதும் ஒத்துக்கொள்ள முடிவதில்லை.

    வடிவேலு, ஒரு படத்தில், தில்லிக்கும், தமிழகத்துக்கும் உள்ள தூரமே வளர்ச்சி, வாய்ப்புகள் குறைவாக இருப்பதற்குக் காரணமாகக் கூறுவார். அது பெரிதும் உண்மையே. தகவல் தொழிநுட்ப வளரச்சி வந்துதான் நம்மையெல்லாம் மீட்டெடுத்திருக்கிறது.

    நாம் சட்டங்களை மதித்து நாம் ஒழுங்காக வரி கட்டி, ரயில்களில் டிக்கட் எடுத்து, அதன்னல் அரசுக்குக் கிடைக்கும் வருமானம், மானியம் என்ற பெயரில், எந்தச் சட்டத்தையுமே மதிக்காத, ஒழுங்காக வரிகட்டாத, மாநிலங்களுக்கு மத்திய அரசால் வாரிக்கொடுக்கப்படுகிறது (இதில் இந்தி பேசும் மாநிலஙகளுக்குத்தான் முதல் உரிமை).
    சிலநேரங்களில் மனதில், தில்லியின் இடத்தில், நம் சென்னையை வைத்து எண்ணத்தோன்றுவதுண்டு.

    ReplyDelete
  5. விடுதலைபுலிகளின் ஆதரவாளர்கள் நீங்கள், இந்த மாதம் உங்களது சிட்டி வங்கி கணக்கில் 1 லடசம் டாலர் விடுதலைப்புலிகளால் போடப்பட்டுள்ளது. அதானால்தான் இப்படி நாட்டுப்பற்று இல்லாமல் பதிவு போடுகிண்றீர்கள், வரும் தேர்தலில் அத்வானி வெண்றால் உங்கள் மீது ''வடா" சட்டம் கொண்டுவட்ந்து 19 மாதம் சிறையில் அடைக்கப்படுவீர். வாழ்க இந்தி மொழி, வளர்க ''இந்தி''யர்கள். நீச மொழி பேசும் தமிழா உனக்கு இவ்வளவு ஆணவம் கூடாது, அடங்கிப்போ இல்லையெனில் மறைமுகமாக சிங்கள படையினரிடம் ஆயுதம் கொடுத்து அடக்குவோம். இப்போதாவது புரிகிறதா, இந்திய அரசு சிங்களவனுக்கு அயுதமும் பயிற்சியும் கொடுக்கும் காரணம்

    ReplyDelete
  6. ஓகே... என்ன பண்ணலாம்... இதுக்குமேல நீங்க எதையாவது எழுதினா பிரிவினைவாதி, தமிழிஸ்டு (டெரரிஸ்ட் மாதிரியாம்!) அப்படின்னு நம்ம கமெண்ட் கந்தசாமிங்க ரெடியா இருக்காங்களே... இப்படி புலம்பியே சாக வேண்டியதுதான். நல்லதோ கெட்டதோ... நமக்குன்னு ஒரு நாடு இல்லாமப் போச்சே என்ற ஆதங்கம் கோபமாக மாறத்தான் செய்கிறது. ஆனால் ஒரு ஊமையின் அழுகையாய் அதைப் போட்டுப் புதைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

    -ஷங்கர்

    ReplyDelete
  7. நன்றி சிந்திக்க உண்மைகள்

    ReplyDelete
  8. எல் எல் டாசு வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

    ReplyDelete
  9. நாம் சட்டங்களை மதித்து நாம் ஒழுங்காக வரி கட்டி, ரயில்களில் டிக்கட் எடுத்து, அதன்னல் அரசுக்குக் கிடைக்கும் வருமானம், மானியம் என்ற பெயரில், எந்தச் சட்டத்தையுமே மதிக்காத, ஒழுங்காக வரிகட்டாத, மாநிலங்களுக்கு மத்திய அரசால் வாரிக்கொடுக்கப்படுகிறது (இதில் இந்தி பேசும் மாநிலஙகளுக்குத்தான் முதல் உரிமை).
    சிலநேரங்களில் மனதில், தில்லியின் இடத்தில், நம் சென்னையை வைத்து எண்ணத்தோன்றுவதுண்டு.//



    மிக மிக உண்மை பணங்காட்டான் நன்றி தங்க்ள் நீண்ட பின்னட்ட குமுறலுக்கு

    ReplyDelete
  10. பெருமாள் நன்றாக கற்பனை செய்து இருக்கிறீர்கள்

    ReplyDelete
  11. ஓகே... என்ன பண்ணலாம்... இதுக்குமேல நீங்க எதையாவது எழுதினா பிரிவினைவாதி, தமிழிஸ்டு (டெரரிஸ்ட் மாதிரியாம்!) அப்படின்னு நம்ம கமெண்ட் கந்தசாமிங்க ரெடியா இருக்காங்களே... இப்படி புலம்பியே சாக வேண்டியதுதான். நல்லதோ கெட்டதோ... நமக்குன்னு ஒரு நாடு இல்லாமப் போச்சே என்ற ஆதங்கம் கோபமாக மாறத்தான் செய்கிறது. ஆனால் ஒரு ஊமையின் அழுகையாய் அதைப் போட்டுப் புதைத்துக் கொள்ள வேண்டியதுதான்.//

    100க்கு 100 ரொம்ப ரொம்ப உண்மைங்க...

    ReplyDelete
  12. till 1967 our growth was fantastic.infact we got most of the central government projects because of the efforts of the honest leaders.then in central indra has come to power and in tamilnadu kazhgams has come to power.both of them joined together to loot the public.Mooka has failed to renew the cauvery agenda because of indra pressure,and gave.

    ReplyDelete
  13. எப்பொழுதுமே எந்த பொருளையுமே ஆழ்ந்து சிந்தித்தால்தான் உண்மை விளங்கும்.
    எப்படி சித்தர்களின் பாடல்கள் மேலோட்டமாக படிப்பதற்கு ஒரு பொருளையும் அதன் உண்மையை உணர்ந்தவர்கள் விளக்கும் பொருளும் வேறுபடுவதைப்போல் இதுவும்
    ஒன்று. வட நாட்டில் உள்ளவர்கள் அரச குடும்பத்தை சேர்ந்தவர்களாகவும், தென்னாட்டில் இருப்பவர்கள் குரங்குகளாகவும் அதற்கும் கீழே இருப்பவர்கள் அரக்கர்ககளாகவும் சித்தரிக்க பட்டிருக்கிறார்கள் என்று நீங்கள் எழுப்பியுள்ள கருத்துக்கள் மேலோட்டமாக சரியாக தோன்றும்.
    இரண்டு. கதையின்படி ராமன் குரங்கினத்தை சேர்ந்த ஹனுமானின் உதவியுடன் சீதையை கண்டுபிடித்து முடிவில் ராவணனுடன் போரிட்டு சீதையை மீட்டு வருகிறான்.
    நரன் என்றால் மனிதன் என்றும் வானரன் என்றால் வனத்த்தில் வசிக்கும் மனிதன் என்றுதான் பொருள் கொள்ள வேண்டுமே ஒழிய குரங்குகள் என்று எப்படி பொருள் கொள்ளப்பட்டது என்று தெரியவில்லை. மேலும் குரங்கினத்தை சேர்ந்ததாக கருதப்படும் ஹனுமான் மிருக இனத்தை சேர்ந்தவனாக இருந்திருந்தால் எப்படி சொல்லின் செல்வனாகவும்,இன்று உலகம் முழுவதும் வைணவ ஆலயங்களில் சிறிய திருவடி என்றும், மற்றும் அவனுக்கென்றே தனி தனியாக ஆலயங்கள் கட்டப்பட்டு தெய்வமாக பூஜிக்கபடுகிறான் என்பதை சிந்தித்தால் நலம்.
    கம்ப ராமாயணத்தில் ராவணனின் செல்வ செழிப்பு விவரிக்கபட்டிருக்கிறது. அதை படித்தால் தற்காலத்தில் அதுபோன்ற இடங்கள் எங்கும் கிடையாது என்பதை தெரிந்து கொள்ளமுடியும்.
    எனவே மனிதனாக அவதாரம் எடுத்த இறைவன் அனைவரையும் சமமாகத்தான் கருதினான்.
    காலபோக்கில் அவரவர் புராணங்களில் தங்களின் சுயனலத்திற்க்கேர்ப்ப
    தாங்கள் உயர்ந்தவர்களாகவும் மற்றவர்கள் தாழ்ந்தவர்களாகவும் சித்தரித்து அரிப்பை தீர்த்து கொண்டனர்,
    நடுநிலையில்நின்று ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே உண்மை விளங்கும்.
    எந்த காலத்தில் எழுதப்பட்டது என்று அறிய இயலாத
    இந்த புராணங்களை புராணங்களாக மட்டும் பார்க்கவேண்டுமேயன்றி
    தற்கால நிலைமையினை அதனோடு ஒப்பிட்டு பார்த்தல் குழப்பம்தான் மிஞ்சும்.
    புராணங்களை பக்தி இலக்கியம் என்று அணுகினால் ஒரு பொருளையும்,
    அந்தக்கால மக்களின் வாழ்க்கை முறை இருந்த நிலை எப்படி இருந்தது என்று அணுகினால் ஒரு பொருளையும் தரும்.
    இரண்டையும் போட்டு குழப்புவது வீண் வேலை.

    .

    ReplyDelete
  14. தமிழனுக்கு எப்போதும் தாழ்வு மனப்பான்மை
    தமிழனுக்கு தான்தான் உயர்வானவன் என்று தலைக்கனம்
    தமிழர்களிடையே எந்த காலத்திலும் ஒற்றுமை இருந்தது கிடையாது.
    அகநானூறு புறநானூறு காலத்திலிருந்தே ஒருவர் மீது ஒருவர் படையெடுத்து சண்டையிட்டு கொண்டு மடிந்தது வரலாறுகள் காட்டும் சான்று.
    இன்றும் அதே நிலைதான்
    தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு அளவே இல்லை
    அதன் தலைவர்கள் அனைவரும் சுயநலம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படுபவர்கள். அவர்களின் தொண்டர்களும் அப்படியே
    தமிழ்நாட்டை பாதித்த மற்றும் பாதித்து கொண்டிருக்கும்
    எந்த பிரச்சினையிலும் ஒரு தீர்வைக்கான ஒருமித்த கருத்துக்கள் அன்றும் கிடையாது,இன்றும் கிடையாது,
    ஒருவேளை எதிர்காலத்தில் வந்தால் நல்லது
    ஆனால் அதற்கான அறிகுறிகள் தெரியவில்லை
    கடந்த காலத்தில் செய்ததுபோல்தான் இன்றும் காரணமில்லாமல் ஒருவருக்கொருவர்,அவதூறுகள் பேசி அடித்துக்கொண்டு சாகின்றனர்
    எதற்க்கேடுத்தாலும் பிறர் மீதே குற்றம் சுமத்திக்கொண்டு
    பொது பிரச்சினையை காற்றில் விட்டு விடுகின்றனர்.
    மத்திய அரசில் நல்ல செல்வாக்கு இருந்தும்
    தமிழ்நாட்டின் எந்த பிரச்சினைகளையும் தீர்க்க முயற்சிகளின்
    எடுக்காமல் தங்களை வளப்படுத்தி கொள்வதிலேயே இருக்கின்றனர்.
    அதனால்தான் அண்டை மாநிலங்களும்,உலக நாடுகளும்
    நம்மை யாரும் மதிப்பது கிடையாது
    உலகில் எங்கு சென்றாலும் உதை வாங்குவது தமிழனாகத்தான் இருக்கும்
    இருப்பதையெல்லாம் எவனிடமாவது அடகு வைதுவிட்டு பிறகு அவனிடமே போய் பிச்சை போடு என்று கேட்பது அவனின் பாரம்பாரிய குணமாகிவிட்டது.
    அறிவு இருக்கிறது,ஆற்றல் இருக்கிறது. என்ன இருந்து என்ன பயன்
    ஒற்றுமை இல்லையே?
    எதற்கு உணர்சிவசப்படவேண்டும், எந்த பிரச்சினையை அறிவுபூர்வமாக அணுக வேண்டும் என்று சிந்திப்பது கிடையாது.
    நினைத்தால் உடனே வன்முறை
    எதையாவது அடித்து நொறுக்குவது
    அதன் இழப்புகள் தன் தலைமீதுதான் விழும் என்ற சிந்தனையே கிடையாது.
    சிந்தியுங்கள் உலகில் உயரலாம்.

    ReplyDelete
  15. இன்னும் விரிவாக எழுத வேண்டிய விஷயம் இது.....முற்றிலும் உண்மை....
    அன்புடன் அருணா

    ReplyDelete
  16. நாங்கள் வடவர்களால் குரங்குகள் போல் நடத்தபடுகிறோம்-ஜாக்கி சேகர்
    ஆமாம் நீங்கள் சொல்வது சரி- ஒரு சில ஆமாம்சாமிகள்.
    இதிலிருந்து ஒரு உண்மை தெரியவருகிறது
    தமிழர்களில் இன்னும் பாதி பேர் தம்மை டார்வின் சொன்னதுபோல் தங்களை குரங்கிலிருந்து வந்த வழி தோன்றல்கள் என்பதை இன்னும் மறக்கவில்லை என்பது தெரிகிறது.
    எப்படி?
    தேர்தலுக்கு தேர்தல் கட்சி விட்டு கட்சி தாவுவது குரங்குகள் மரம் விட்டு மரம் தாவுவதை போல்.
    எத்தனை முறை மலையாளிகள் தமிழ் நாட்டிற்கு துரோகம் செய்தாலும் அவர்களுக்கு அரிசி கடத்துவது, மணல் கடத்துவது, காய்கறிகள், மாடுகள், கோழிகள் என அனைத்தையும் அவர்களுக்கு கொடுப்பது.
    எத்தனை தடவை வடவர்கள் தமிழ்நாட்டினரை இழிவு செய்தாலும்,பட்டி தொட்டி தோறும் வடவர்களுக்கு வட்டி கடை வைத்துகொடுத்து தங்களிசம் உள்ள அனைத்தையும் அவர்களிடம் அடகு வைத்து வட்டி அழுது தாங்கள் ஒட்டாண்டிகளாகவே இருப்பது.
    தங்களிடையே ஒற்றுமை இல்லாமல் அல்பதனமாய் சண்டை போட்டுகொண்டு தமிழர்களின் எல்லா பிரச்சினைகளையும் கோட்டை விடுவது
    தங்களுக்குள்ளேயே ஒருவர் மீது அவதூறு பேசி பழி வாங்கி அழிந்துபோவது.
    சுயநலன்களுக்காக தமிழர்களின் நலனை காற்றில் பறக்கவிடுவது
    வேற்று மொழி பேசும் நடிகர் நடிகைகளை கோடி கோடியாய் இங்கு சம்பாதிக்கவிட்டுவிட்டு அவர்கள் பின்னால் ஓடுவது
    என்னும் ஏராளம் இருக்கிறது
    இத்துடன் நிறுத்திகொள்கிறேன்
    பிறகு உங்களை எவென் மதிப்பான்?
    தமிழன் சக தமிழனையே மதிப்பதில்லையே
    ஒவ்வொரு கட்சியிலும் நூறு தலைவர்கள்,நூறு கோஷ்டிகள்
    அவர்களிடம் உள்ள சண்டையை தீர்க்க வட நாட்டு தலைவர்களிடம்
    அல்லவோ காவடி தூக்குகிறார்கள்
    அவர்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை தங்களுக்குள்ளே பேசி தீர்க்கும் தகுதியற்றவர்கள்
    ஒரு தமிழன் நாட்டின் உயர்ந்த பதவிக்கு வருவதை இங்குள்ள தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து சதி செய்து வர விடாமல் தடுத்து இவர்களுக்கு எந்த காலத்திலும் விமோசனம் கிடையாது.
    இப்படி இருந்தால் மரியாதை எப்படி கிடைக்கும்?
    புலம்புவதை விடுத்து முதலில் குறைகளை சரி செய்துகொண்டால் மதிப்பு தானே வரும்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner