DarbarReview #DarbarMovieReview #Rajinikanth
#Darbar Movie Review By #JackieSekar
#தர்பார் விமர்சனம்
ரொம்ப நாள் கழிச்சி ஒரு உண்மையான ரஜினி படம் பார்த்த திருப்தியை இந்த படம் ஏற்படுத்துகின்றது..
காலா கபாலி எல்லாம் நிறைய எதிர்பார்த்து ஏமாற்றம் கொடுத்த திரைப்படங்கள்... சார் பேட்ட... அது கூட ஓகே படம்தான்...
ஆனால் இந்த படம் ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல ஜென்ட்ரல் ஆடியன்சும் ரசிப்பார்கள்..
முதல் பாதி யோகிபாபு, ரஜினி துள்ளல், நயன்தாரா கழுத்து மச்சம் மற்றும் பா கழுத்து பிளவுஸ் என்று ஜாலியா சென்றாலும்
ஒரு சின்ன உறுத்தல் கதை டிஸ்கஷனில் வந்து இருக்க வேண்டும்..
ரஜினி ரசிகர்கள் நயன்தாராவை ஏற்றுக்கொள்வார்கள்... அதே நேரத்தில் நயன்தாரா ரசிகர்களும் அந்த காமினேஷனை ஏற்றுக்கொண்டாலும் நிவேதிதா தாமஸ் போல பெரிய பெண்ணின் தகப்பனான ரஜினிக்கு நயன்தாரா என்றால் செட் ஆகாதே என்று டிஸ்கஷனில் கேள்வி ஏழுப்பி இருக்க வேண்டும்...
ஸ்ரீமனை ஒரு காட்சியில் ரஜினி வீட்டுக்கு வர வைத்து சிறப்பு செய்து விட்டார்கள்... அது கொஞ்சம் கிளவர் மேட்டர்தான்.
நிறைய இடங்களில் ரஜினி ஸ்டைல் ஒர்க் அவுட் ஆகி இருக்கின்றது...
கூடுமானவரை அவர் வயதை மறைக்க ரொம்பவே மென்க்கெட்டு இருக்கின்றார்கள்.. இரண்டாவது பாடலில் அவர் காஸ்ட்டியூம்களில் செம இளமை ரஜினி..
ஆனால்....
ரஜினி கோவத்தில் காரை சேற்றில் சுற்று சுற்று என சுற்றி நிறுத்தி விட்டு காரை எட்டி உதைப்பது இந்த படத்துக்கு திருஷ்ட்டி என்பேன்.
குறை என்று பார்த்தால் என்கவுன்டரை ஆதாரிக்க வந்து இருக்கும் இன்னோரு படம் என்றாலும் அப்பாவிகளை என்கவுன்டர் செய்யாமல் போதை மருந்துக்கடத்தல் தாதாக்களை என்கவுன்டர் செய்கின்றார் என்று மனதை தேத்திக்கொள்ள வேண்டியதுதான்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
#DarbarReview #DarbarMovieReview #DarbarPublicReview #DarbarMoviePublicReview #DarbarFromToday #Nayanthara #NivethaThomas #YogiBabu #SunielShetty #ARMurugadoss #தர்பார்விமர்சனம் #தர்பார்மக்கள்கருத்து
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

0 comments:
Post a Comment