காதலுடன்........ part 1 (நான் ரசித்தவை)
காமம் என்பது எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?
நல்ல பசியில் முதல் நாள் இரவில் தண்ணீர் ஊற்றி வைத்த பழய சாதத்தை எடுத்து குண்டானில் எடுத்து போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அதில் கொஞ்சம் தயிரை சாஸ்திராப்புக்கு காட்டி எண்ணெயில் வறுத்த மோர் மொளகாயோ.. அல்லது அவசரத்துக்கு கிடைத்த சின்ன வெங்காயமோ எடுத்து ஒரு கடி வெங்காயமும் சோறுமாக சாப்பிட்டு கடைசியாக குண்டானில் இருக்கும் தண்ணீரை பசியடங்கும் மட்டும் குடித்துவிட்டு சின்ன ஏப்பம் விடும் போது ஒரு நிறைவு வரும் இல்லையா..? அப்படித்தான் காமம் இருக்க வேண்டும்..
ஆனால் கூட்டுக்குடும்பங்களில் அப்படியான உடனடி காமம் சாத்தியமில்லை.. இன்று இரவு கூட வேண்டும் என்றால் நிறைய மராமத்து வேலைகள் செய்தே இலக்கை அடையவேண்டும்.
எறும்புகள் சாரை சாரையாக கடந்து செல்லும் போது கேட்காத சத்தம் போல கப்சிப் என்று காமத்தில் ஈடுபடவேண்டும்… சின்ன முக்கலோ முனகலோ வெளியே கசியக்கூடாது… உச்சக்கட்டத்தில் கடத்தல்காரன் போல கை வைத்து வாய் பொத்தி ஈடுபடவேண்டும் அது காமத்தில் ஈடுபடும் இரண்டு பேருக்குமே எரிச்சலை கொடுக்கும்.
காமம் என்பது இவ்வளவு சுத்தி வளைத்து மூக்கை தொட்டுவதும் அதன்பின் காமத்தில் உச்சம் அடைவது என்பது எல்லாம் ஏழு மலை ஏழு கடல் தாண்டி இருக்கும் மாயாவி கையில் இருக்கும் கிளியை அபகறித்து வரும் செயல்..
ஆனால் நம்மில் பெரும்பாலான குடும்பங்களில் இதுதான் எதார்த்தம்.. நிறைய கூட்டு குடும்ப வீடுகளில் பெட்ரூமில் டிவி இருப்பது அதற்குதான்…
ஏன்டா நேத்து நைட்டு இரண்டு மணி வரைக்கு உன் ரூம்ல டிவி ஓடிக்கிட்டு இருந்துச்சி..?
நல்ல இங்கிலிஷ் படம்மா அதான் நேரம் போனதே தெரியலை….
ஆனா அவ பதினோரு மணிக்கு எல்லாம்… தூங்கிட்டா… என்று பதட்டத்தில் பொய் சொல்லும்..
ஆனால் விஷயம் வேறு….
காமம் என்பது எளிமையாக நினைத்த போது தீர்க்கப்பட வேண்டும்.. வெற்றிலையில் சுண்ணாம்பு தடவுவது போல.. எளிமையாக இருக்க வேண்டும்.
தனியாக ஆபிஸ் கவர் வாங்கி அதில் எழுதிய கடிதத்தை வைத்து, பசைக்கு தேடி அலைந்து அதனை ஒட்டி அதன் மேல் ஐந்து ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி போஸ்ட் செய்யும் போது ஒரு எரிச்சல் வரும்…
ஆனால் இன்லேன்ட் லட்டர் வாங்கி எழுதி நாக்கால் ஈரப்படுத்தி அதனை சட்டென ஒட்டி போஸ்ட் செய்து விடலாம்… இன்லேன்ட் லட்டர் போல காமம் எளிமையாகவும் உடனடி தீர்வாகவும் இருக்க வேண்டும்..
பட்… கூட்டு குடும்ப உறவு சிக்கல்களில் காமம் ஆடிக்கொரு அம்மாவாசைக்கு ஒரு முறை நிகழும் நிகழ்வே… அப்படியே நடந்தாலும் மேற்கூறிய உதாரணங்களோடு நிகழும்.
காதல்திருமணம் என்றால் கூட ஆணின் விருப்பம் மற்றும் பெண்ணின் விருப்பம் தெரியும்.. ஆனால் அரேஞ் மேரேஜில் விருப்பங்கள் புரிந்து காமம் கனிந்து செயல்பட மாமாங்கம் ஆகும்… அப்படியே காமம் இருவருக்குள்ளும் நிகழ்ந்தாலும் அது ரசனையற்று இருக்கும்…. அடுக்களையில் சின்கில் கிடக்கும் பத்து பாத்திரத்தை கழுவும் போது என்ன வித ரசனை ஏற்ப்பட்டு விட போகின்றது..???
முதலில் பாத்திரத்தை கழுவி சமையல் மேடை துடைத்து அந்த இடத்தை விட்டு அகன்றால் போதும் என்பதாய் இருக்கும்… காமம் என்பது அது முடிந்த பின்னும் அது பற்றிய நினைவுகள் மனதை நினைக்க செய்ய வேண்டும்…
ரசகுல்லாவை வாயில் போட்டு மெல்ல மிடறு மிடறாய் விழுங்கும் ருசி போல காமம் நினைவில் தங்க வேண்டும்..
தனுஷ் நடித்த தங்கமகன் படத்தில் என்ன சொல்ல பாடல் கூட்டுக்குடும்ப காமத்தையும் காதலையும் மான்டேஜுகளில் கண் முன் நிறுத்தியபாடல் என்றால் அது மிகையில்லை.
தங்கமகன் படத்தில் தனுஷுக்கும் சமந்தாவுக்கு அரேஞ் மேரேஜ்… முதல்நாள் ராத்திரி என்ன புடிக்கும் என்று கேட்க தனுஷ் மொக்கையாக பேசுவார்.. ஆனால் பாடல் மான்டேஜில் மொக்கையாக ஒரு கதை சொல்லி இம்பரஸ் பண்ண நினைத்த புருஷனின் கையை எடுத்து மேலே எடுத்து வைத்துக்கொள்ளுவார்..
கூட்டுக்குடும்பத்தில் வீட்டில் யாரும் இல்லாத அந்த கணங்கள்தான் சுதந்திரதினம்.. வீடு என்பது எது பற்றியம் கவலை இல்லாத இடம் என்பதும் உணரும் இடம்.
பழனிக்கு ரவிகுமாரும் ராதிகாவும் இங்கீதம் கருதி செல்வார்கள்… ஆனால் நிறைய பெற்றோர் பெவிக்காலின் பலமான இணைப்பு போல வீட்டை விட்டு வெளியே செல்லாமல் சீரியலே கதி என்று கிடந்து சாகடிப்பார்கள்.. இப்போது சனிக்கிழமையும் சீரியல்… என்ன கொடுமைங்க இது..
ரவிக்குமாரும் ராதிகாவும், கிளம்பியதும்… ஐ ஜாலி என்ற மன நிலையில் தனுஷூ சமந்தாவும் இருவரும் ஒரு கணம் நின்றாலும்.. தனுஷ் தலை சிலுப்பி நான் ஆபிஸ் கிளம்பறேன் என்பார்…
இரவு அலுவலகத்தில் இருந்து மழையில் நனைந்து வர தலை துவட்டி உடை மாற்றலாம் என்று செல்ல நினைக்கும் தனுஷை சமந்தா விட மாட்டார்…
காலையிலே வேலைக்கு போகாமல் காதலும் காமமும் கரை புரண்டு ஓடி இருக்க வேண்டும்… ஆனால் இரவு ஆகிவிட்டது…. ஹாலில் இருந்தே அது தொடங்கும்…
அதன் பின் யாருமற்ற அந்த வீட்டில் அவர்களுக்கான நெருக்கம் காட்சிகளாக விரியும்.. தனிக்குடித்தனம் போக வேண்டும் என்பது நிறைய இடங்களில் அம்மாவையும் பிள்ளையும் பிரிக்க அல்ல… இது போன்ற நெருக்கங்களுக்கும் சந்தோஷங்களையும் இழக்க கூடாது என்ற பயமாக இருக்கலாம் என்பது என் அபிப்பராயம்…
கதவை தட்டறாங்க… நாளைக்கு போய் தெறந்துக்கலாம்..
என்னப்பா அதுக்குள்ள வந்துட்டிங்க என்பது இயல்பான கேள்வியே.. அதை விட அம்மாவும் அப்பாவும் ஹாலில் படுத்த உடன் அவர்களின் வெளிச்ச அசைவு தெரிகின்றதா ? என்று பார்த்து விட்டு கட்டிலை தவிர்த்து விட்டு கிளவராக தரைக்கு இருவரும் ஷிப்ட் ஆகி இருப்பார்கள்… அந்த ரூமில் டீவி இல்லை என்பதையும் நாம் மறக்க கூடாது.
கதவிடம் இருக்கும் தனுஷை சமந்தா அழைப்பார்…. மனைவியோ, காதலியோ அவர்களாகவே அழைக்கும் கலவி சுவாரஸ்யம் பெரும்..
அதன் பின் வரும் நெருக்கமாக ரசனையான காட்சிகளில் அப்பா அம்மா இரண்டு பேரும் இருக்கமாட்டார்கள்.. திரும்பவும் ஒரு வாரம் திருப்பதி டூர் போய் இருக்கலாம்..
இந்த பாடல் மனதுக்கு மிக நெருக்கமான பாடல்… சமகால காதல் மற்றும் காம அவஸ்த்தையை , சந்தோஷத்தை சொல்லிய பாடல்…
என் தோழி சொன்னாள்.. இந்த பாட்டுல சமந்தாவுக்கு காட்டன் சாரி ஓட்டவே இல்லை என்று ரோமான்டிக்காக பார்த்த போது ஒன்றும் தெரியவில்லை… பிரேமுக்கு பிரேம் சமந்தா அணிந்து வரும் காட்டன் சாரி ஓட்டாமல் துருத்திக்கொண்டு இருப்பது இந்த பாடலின் மைனஸ்…
சுடிதார் செட் ஆன அளவுக்கு சமந்தாவுக்கு புது காட்டன் சாரி காட்சியின் ரியலிட்டியை குறைத்து விடுகின்றது.. கொஞ்சம் காட்டன் புடவையின் மொடமொடப்பை குறைத்து இருந்தால் இன்னும் இயல்பாய் இருந்து இருக்கும்.
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/SSbec1Um1z0" frameborder="0" allowfullscreen></iframe>
ஜாக்கிசேகர்
17/03/2016
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
தங்கமகன் படத்தை ரசித்தேனோ இல்லையோ, இந்த வித்தியாசமான காதல் ஆராய்ச்சி உண்மையாகவே மிகவும் ரசிக்கும்படியாக, நிறைய இடத்தில் ‘அட, ஆமா இல்லே?’ என்று கேட்கும்படியாக இருக்கிறது ஜாக்கி! தொடருங்க! ஐயாம் வெயிட்டிங்!
ReplyDeleteஅருமையான காதல் ஆராய்ச்சி அண்ணா...
ReplyDeleteநல்லாயிருக்கு... தொடருங்க...
HI JACKEY VERY INTERSETING IT IS MOSTLY TRUE THAT YOUNGSTERS PREFER thani kuditthanam TO AVOID ALL THESE EMBARASSMENTS
ReplyDeletehi jackey ji this is what happens in all middle class families
ReplyDelete