ஆல்பம்..
மாநிலத்தில் எப்படியோ…அதே போலத்தான் மத்தியிலும்.. கச்சா எண்ணெய் விலை அதளபாதாளத்துக்கு குறைந்த பே
போதிலும் இன்னும் விலைக்குறைப்பு செய்யமால் இரண்டு ரூபாய் ஒரு ரூபாய் குறைத்து கண்ணா மூச்சி
ஆட்டம் ஆடிக்கொண்டு இருக்கின்றது…. எல்லாத்தையும் விட கொடுமை என்னவென்றால்…. விஜய்
மல்லைய்யா.. ஏழாயிரம் கோடி கடன் வாங்கி இன்னும் கட்டாமல் இருக்கின்றார்… அவரை புடிச்சி
ஜெயில்ல போடுங்க எசமான்.. என்று ஸ்டேட் பேங்க் ஓப்பன் ஸ்டேட்மென்ட் விட்டும் கூட,..
அவர் மேல் இதுவரை பாஜாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை… அது மட்டுமல்ல… சாதாரண குடிமகன் மேல் சட்டம் தன் கடமையை செய்யும்…
===
டெல்லி ஜெஎன்யூ மாணவ சங்க தலைவர் ஜாமினில்
வந்து இருக்கின்றார்.. அவர் நாக்கை அறுத்தால் ஐந்து லட்சம்… ஆளை முடித்தால் 11 லட்சம் என்று அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்கள்….
எங்க போய் இது முடிய போகுதோ தெரியலை…
=======
மிக்சர்
தேர்தல் தேதி அறிவிக்கபட்டு விட்டது… கடந்த வெள்ளிக்கிழமை மூன்று
மணிக்கு அறிவித்தார்கள்… ஒரே கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.. மே மாதம் 16 ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கின்றது, 19 ஆம் தேதி மே மாதம் ஓட்டு எண்ணிக்கை
ஆரம்பமாகின்றது, அன்று மாலை 6 மணிக்குள் முடிவுகள் தெரிந்து விடும் அடுத்து ஐந்து வருடத்துக்கு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற போகின்றவர்கள்
யார் என்று தெரிந்துவிடும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அம்மா புகழ் பாடிய
பேனர்கள் எல்லாம் அகற்றிக்கொண்டு இருந்தார்கள்… ஆனால் சுவற்றில் வரைந்த வாசகங்களை எல்லாம் வெள்ளை அடிக்க எப்படியும் ஒரு மாதத்திற்கு மேல் எடுத்துக்கொள்ளும்…
===========
சென்னையில் பூகம்பம் வரக்கூடாது என்று வேண்டிக்கொள்ளுங்கள்… அப்படி ஒரு வேளை வந்தால் அதிர்ஷ்டம்
செய்தவன் மட்டுமே பிழைக்க முடியும்… சென்னை டிசம்பர் மாத பெரும் வெள்ளத்தில் இரண்டு இடங்களில் பெரும் பள்ளம் ஏற்பட்டது… ஒன்று மத்திய கைலாஷ் எதிரில்
பெரிய பள்ளம் திடிரென்று உள் வாங்கியது…
அதனை இரண்டு நாட்களில் சரி செய்து விட்டார்கள்… அடுத்து மயிலை பிஎஸ் சிவசாமி ரோட்டில் ஒரு பெரும் பள்ளம் ஏற்பட்டது….
நான்கு மாதமாகின்றது இன்னும் அந்த பள்ளம் சரி செய்யபடவில்லை… அதில் மெட்ரோ தண்ணீர்பைப்
லைன், பாதாள சாக்கடை என்று பிரச்சனை பெரிதாகி கொண்டே செல்கின்றதே ஒழிய .. அந்த பள்ளம்
இன்னும் முடிந்த பாடில்லை.. இப்போது சொல்லுங்கள்
டிசம்பர் மாதம் ஏற்பட்ட பள்ளத்துக்கே
நான்கு மாதம் ஆகி இன்னும் முடிவு பெறாமல் இருக்கும் நிலையில்… சப்போஸ் பூகம்பம் என்று ஒன்று வந்தால் நம்மை எல்லாம் ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்பது மட்டுமே நிதர்சன உண்மை.
=======
கல்யாண் ஜுவல்லரி விளம்பரம்
இந்த அளவுக்கு ஓட்டுவார்கள் என்று யாரும் நினைத்து பார்த்து இருக்க முடியாது… ஏள் விளம்பர
படம் எடுத்தவர்களே கூட இப்படி ஓட்டுவார்கள்
என்று எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்.. நெகட்டிவ் பப்ளிசிட்டி என்றாலும் செம கலாய் கலாய்த்துக்கொண்டு இருக்கின்றார்கள்…
அம்மாவான பெண்தான் ரொம்ப பாவம்… எனக்கு தெரிந்து இந்த அளவுக்கு அந்த விளம்பரத்தை ஓட்ட….
பிராமன பாஷையும் ரொம்ப
பீல் பண்ணுகின்றேன் என்று அம்மாவாக மகளாக மாறிவிட்டேன் என்று கொஞ்சம் ஓவராக போய் விட்டார்களோ என்று தோன்றுகின்றது…
ஆனால் என்னை பொருத்தவரை கல்யாண்ஜுவல்லரியின் மாஸ்டர் பீஸ்.. பள்ளி ஆசிரியர்
அமிதாப் பணக்கார மாணவர் பிரபுவிடம் உதவி கேட்டு
செல்லும் விளம்பரம் சான்சே இல்லை என்பேன்.
=======
உல்ப் ஆப் வால் ஸ்டீட் திரைப்படத்துக்கே கேப்ரியோவுக்கு ஆஸ்கார்
கொடுத்து இருக்க வேண்டும்… ரெவணன்ட் படத்துக்கு
இப்போதாவது கொடுத்து இருக்கின்றார்கள்.. ஐந்து முறை நாமிநேட் ஆனவருக்கு இந்த முறையும்
கொடுக்கவில்லை என்றால் ஆஸ்கார் விருதை விஜயகாந்த போல தூ என்று துப்பிவிடுவார்கள் என்பதால்
கேப்ரியோவுக்கு விருது நிச்சயம் என்று பட்சி
சொல்லியது… அது போலவே நடந்தது…
எனக்கு ரொம்பவும் பிடித்த ஸ்பாட் படத்துக்கு சிறந்த படத்துக்கான விருதினை
பெற்றதில் பெரும் மகிழ்ச்சி.
=======
தம்பி அண்ணன் அப்துல்லாவின் நண்பர்கள் நிறைய பேர்
லண்டனில் வசிக்கின்றார்கள்… அவர்கள் ஒன்று
சேர்ந்து தமிழக நண்பர்கள் பலருக்கு பல உதவிகள் செய்து வருகின்றார்கள்…
வருடந்தோரும்
நண்பர்கள் அனைவரும் பணம் போட்டு உதவிகள்
செய்து வந்தாலும் இந்த வருடம் மொத்த
பணத்தையும் முதலீடு செய்து… sarzkitchen என்ற
ரெஸ்ட்டாரண்டை லண்டனில் ஆரம்பித்துள்ளார்கள்…
இதன் மூலம் வரும் வருமானம் 100 சதவீதத்தையும் தமிழகத்தில் உள்ள நலிந்தவர்களுக்கு உதவிட ஆர்வமாய்
உள்ளார்கள்.. காரணம்… சென்னை பெரும் வெள்ளத்தின் போது உதவி செய்ய திடிர் என்று பணம் புரட்ட கொஞ்சம் தடுமாறி போனார்கள் என்பதால் ஒரு ரெஸ்டாரண்ட் ஆரம்பித்து அதன் மூலம் வரும் 100 சதவீத வருவாயையும் மக்கள்
நல பணிகளுக்கு கொடுக்க ஆர்வமாய் உள்ளார்கள்..
நண்பர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்…. அவர்கள் முகநூல் பக்கமான https://m.facebook.com/sarzkitchen/
பக்கத்துக்கு சென்று லைக் போடும் படி நண்பர்களை
கேட்டுக்கொள்கிறேன்..
======
அபுதாபியில் இருக்கின்றார்... நண்பர் பாலாஸ்ரீ.. நேரில் சந்தித்தது கூட இல்லை.. தொடர்ந்து என் எழுத்துக்களை வாசிப்பவர்...
பிறந்தநாளுக்கு முக்கிய தினங்களுக்கு போட்டோ ஷாப் செய்து வாழ்த்து அனுப்பி மகிழ்விப்பார்...
ஜாக்கிசினிமாசுக்காக வேலைமெனக்கெட்டு எடிட்டிங் செய்து அவர் அனுப்பிய கானொளி இது.
யூ மேட் மை டே என்பார்கள்... இந்த வீடியோவை பார்க்கையில் அந்த அனுபவத்தை கொடுத்தது இது என்றால் அது மிகையில்லை..
நிறைய மெனக்கெடல் இருந்தால் மட்டுமே இப்படியான வீடியோவை உருவாக்க முடியும்....
மிக்க நன்றி பாலா.,..
இவரை பற்றி எழுத இன்னும் நிறைய இருக்கின்றது.....
பிரிதொரு சந்தர்பத்தில் பகிர்கிறேன்.
Bala Sri
========
எனது தோழி நிவேதிதா பங்கு
பெற்ற நோலினின் சமன்பாடு பட டிரைலர்.
==========
2014 பிப்ரவரி மாதம் ராயப்பேட்டை பாலாஜி நகர் தெரு முக்குல இந்த போஸ்டர் ஒட்டி இருந்தாங்க..
அற்புதம்மாள் அம்மாவை பார்த்து கதறியதும் ஈழத்தாய் உடனே விடுதலை செய்J வீடுவார்கள் என பெரியார் திராவிட கழக ஆட்கள் போஸ்டர் அடிச்சி அவசரப்பட்டு சென்னை முழுக்கஒட்டினாங்க....
உடனே விடுதலை செய்வாங்கன்னு நானும் ஆர்வமா இருந்தேன்.. ஆனா சட்டுன்னு ஒரு டவுட்டு...
எதுக்கும் யூஸ் ஆகும்ன்னு போட்டோ மட்டும் எடுத்து வச்சேன்...
ஆனா அந்த மூன்று பேர் விடுதலை ஆகவேயில்லை... எந்த தொலைகாட்சியும் அது பற்றி எந்த விவாதமும் நடத்தலை...ஆனா போஸ்டர் மட்டும் அவசரப்பட்டு ஒட்டிட்டாங்க..
இரண்டு வருஷம் கழிச்சி திரும்ப இப்பதான் போட்டோவுல இருக்கற மூன்று பேரை பத்தி பேப்பர்ல நீயூஸ் பார்க்கறேன்..
அதனாலதான் இந்த போட்டோவை பகிர்கிறேன்...சஞ்சய்தத் எல்லாம் விடுதலை ஆகும் போது பேரரிவாளன் எப்போதோ விடுதலை ஆகி இருக்க வேண்டும்....
சரி இப்போதோவது விடுதலை ஆனால் சரி...
============
கொடைக்கானலில் இருந்து 29/02/2016 அதிகாலை சென்னையை நோக்கி வந்துக்கொண்டு இருந்த போது சமயபுரம் டோல் கேட் அருகே ஆம்னி ஸ்லிப்பர் பேருந்து ஒன்று திகு திகு என கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டு இருந்தது..
. நல்லவேளை யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.... கொஞ்ச நேரத்துக்கு முன் பயணிகளை சுமந்து வந்த பேருந்து கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டு இருந்தது...
நமது பயர் பைட்டர்ஸ் நள்ளிரவில் பணி மேச்சதக்கது.. மிக பரபரப்பாய் இயங்கி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தார்கள்..
=============
நான்வெஜ் 18+
Masturbation is like procrastination, it's all good and fun until you realize you are only fucking yourself!
======
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
அடடே.
ReplyDeleteசூப்பர்.
தொடர்ந்து எழுதுங்கள்.
nice..
ReplyDeleteகல்யாண் ஜுவெல்லர்ஸ் விளம்பரம் பற்றி நானும் எழுத வேண்டும் என்று நினைத்தேன். சுத்த அபத்தம்.அதிலும் தேவையில்லாத பிராமண உச்சரிப்பு.அவர்கள் மட்டும்தான் வாங்குகிறார்களா ?அல்லது அவர்கள் மட்டும்தான் வாங்க வேண்டும் என்கிறார்களா?
ReplyDeletekalakarthik
karthik amma
:-)
ReplyDelete