ஆண் பெண் பாகுபாடு


கார் பந்தய வீரர் விகாஷ்…. ரேஸ் டிராக்கல காரை ஓட்றதுக்கு பதில் சென்னை ராதாகிருஷ்ணன் ரோட்டுல குடிச்சிட்டு இரண்டே கால் கோடி மதிப்பிலான போஷ் காரை ரேஸ் வேகத்தில் நள்ளிரவில் சென்னை சாலையில் ஓட்ட…


தறி கெட்டு போன கார் ஆட்டோ ஸ்டேன்டில் நின்று இருந்த ஆட்டோக்களில் ஒன்றல்ல இரண்டு அல்ல… பத்துக்கு மேற்பட்ட ஆட்டோக்களில் மேல் மோதி பத்துக்கு மேற்பட்டவரை பலத்த காயத்துக்கு உள்ளாக்கி ஒருவரை சாகடித்து தற்போது விகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்…

அதே போல ஒரு சம்பவம் சில மாதங்களுக்கு முன் ஐஸ்வர்யா என்ற பெண் போதையில் கார் ஓட்டி ஒரு கூலித் தொழிலாளியை சாகடித்த போது பேஸ் புக் எங்கும் ஐஸ்வர்யா வியாபித்து இருந்தார்.. அது மட்டுமல்ல… அவரது உருவத்தை கேலி செய்து இந்த மூஞ்சிக்கு எல்லாம் எதுக்கு ஐஸ்வர்யான்னு பேரு வைக்கனும் என்று ஏகத்துக்கு பேஸ்புக்கில் பொங்கி பொங்கல் வைத்தார்கள்…


நேற்றில் இருந்து விகாஷ் செய்தி வந்து கொண்ட இருக்கின்றது.. ஆனால் ஒருத்தன் கூட வாய் திறக்கவில்லை.. அதுவும் பத்துக்கு மேற்பட்டோரை பலத்த காயத்தை உண்டாக்கி பத்து குடும்பங்களின் நாளைய வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி இருக்கின்றான் எவனுமே பொங்கவில்லை….


காரணம் குடித்து விட்டு மோதியது ஆண்… பெண் எதற்கு குடிக்க வேண்டும் என்ற ஆண் மனோபாவம் ஆடிக்கார் ஐஸ்வர்யா என்று எல்லோரையும் நக்கல் அடிக்க வைத்துள்ளது…


உண்மையிலேயே நீங்கள் சமுகத்தில் நடக்கும் நிகழ்வுகளை சாட வேண்டும் என்றால் ஆண் பெண் பேதம் இல்லாமல் சாடுவதே நடு நிலையாகும் அதை விடுத்து பெண் என்றால் அதற்கு அதிக சவுண்ட் விடுவதும் ஆண் என்றால் /பம்முவதும் என்ன மாதிரியான மனநிலை என்று தெரியவில்லை…


உங்களுக்காகவே ஒரு திரைப்படம் இந்தியில் வெளியாகி இருக்கின்றது.. அந்த திரைப்படத்துக்கு பெயர் பிங்க்.. இந்தி தெரியாவிட்டாலும் இந்தி தெரிந்தவர்களை அழைத்து சென்றாவது அந்த படத்தை காணுங்கள் நிச்சயம் அந்த திரைப்படத்தை பார்க்கும் போது உங்கள் கண்ணோட்டம் நிச்சயம் மாறும் என்பது என் எண்ணம்.

ஜாக்கிசேகர்.


20/09/2016


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

2 comments:

  1. bro your views are correct we have the tendency to criticise women for everything......

    ReplyDelete
  2. நடுநிலையான பதிவு. நன்றி Jack

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner