மீடியாவி்ன் ஆதிக்கம் அதிகமானாதால் இப்போது வளரும் பருவத்தினரின் மனக்கட்டமைப்பு மாறி போய் விட்டது...கடந்த பத்து வருடங்களில் எல்க்ட்ரானிக் மீடியாவின் அசுர வளர்ச்சியே இதற்கு காரணம்...
உலகமயமாக்கல் பல துறைகளில் வேரூன்ற காதல் மட்டும் என்ன பாவம் செய்தது... அது பரிமாணம் பெற்றுவிட்டது... என்ன... கலாசச்சார முகமூடியால் என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடி போய் கிடக்கின்றது... அதை கட்டுடைத்து வெளிவர நாள் நேரம் பார்க்காமல் மெல்ல மெல்ல வந்து கொண்டு இருக்கின்றது...
முன்பெல்லாம் பெண்கள் உள்ளே போடும் பிரா பட்டை வெளியே தெரிந்தாலே.. சட்டென மனம் தந்தி அடிக்கும்.. மனம் கிளர்ச்சி கொள்ளும்... சட்டென நம் தலையில் தட்டி கொண்டு ... தெரியாத பெண்ணாக இருந்தாலும் செய்கையில் நாம் உணர்த்தினால் அவள் சரி செய்து கொண்டு ஒரு நன்றி பார்வை வீசுவாள்.. இப்போது எல்லாம் என்ன சமாச்சாரம் உள்ளே என்பதை அறிவிப்பது போலான உடை சர்வசாதாரணமாகிவிட்டது...
ஆணும் இப்போது பர பரவெனமாறிவிட்டான்... காதலித்து மேட்டர் முடித்து, காதலித்து மேட்டர் முடித்து, அதே போல் பெண்களும்....ஆனால் ஒன்றை கவனிக்க வேண்டும்... இன்னும் ஒழுக்கமான காதலும், பெண்களும் ,ஆண்களும் மிக டிசன்டாக காதலி்த்தபடி இருக்கின்றார்கள்...
மனதை கட்டு படுத்த முடியாதவர்கள்.. மகாபலிபுரம் சவுக்கு தோப்பு,பூங்கா புதர், என்று மறைவிடம் நோக்கி போகின்றார்கள்...
சென்னையில் ஒரு சாலை இருக்கின்றது... சரியாக பதினெட்டு கிலோமீட்டர் நீளம்...பெரிதான வாகன போக்குவரத்து அதிகம் இல்லை...லாரிகள் மற்றும் கார்கள் மட்டும் அதிகம் பயண்படுத்தபடும் சாலை அது... ஆறு மணிக்கு மேல் அந்த சாலையில் விளக்கு இருக்காது.. வரும் வாகனங்களின் வெளிச்சம்தான்...
பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் கிண்டி விழியாக செல்லாமல்...மதுரவயல் செல்லும் அந்த சென்னையின் வெளிவட்டசாலைதான் அது...வாகனங்கள் சீறி பாய்ந்து செல்லும் டபுள் ரோடு அது...
பெருங்களத்தூரில் இருந்து...
விருகம்பாக்கம்,வளசவாக்கம் வர... நாம் எப்போதும்....தாம்பரம் வழியாக வந்து குரோம்பட்டை, பல்லாவரம்,கிண்டி , அசோக்நகர், கே கேநகர், விருகம்பாக்கம் ,வளசரவாக்கம்... வர வேண்டும்...இந்த விழியில் அதிகமான போக்குவரத்து மற்றும் சிக்னல்கள்.. டூவிலரில் வர ஒன்றரை மணிநேரம் எப்படியும் அகி விடும்... ஆனால் வளசரவாக்கத்தில் இருந்து போரூர் போய் இந்த டபுள் ரோட்டை பிடித்தால் அரை மணி நேரத்தில் பெருங்களத்தூர்....
அதனால் நான் பெருங்களத்தூர் செல்ல இந்த சாலையைதான் தேர்ந்து எடுப்பேன்... அதன் வாகன நெரிசலற்ற போக்குவரத்து... என்னை அதிகம் கவரும்...
பெருங்களத்தூரில் என் மனைவியின் அத்தை வீடு இருக்கின்றது... அங்கு இரவு உணவை முடித்து குசாலம் எல்லாம் விசாரித்து கிளம்ப கொஞ்சம் நேரம் ஆயிற்று... மணி இரவு பத்து... தாம்பரம் வழியாக சென்றால் லேட் அகும் என்பதால்... நான் மதுரவயல் பைபாசை தேர்ந்து எடுத்தேன்... அந்த சாலை பற்றியும் அதன் தனிமையும் எனக்கு தெரியும் இருந்தாலும்.. எதாவது ஒரு லாரிக்கு முன்னால் அதன் வெளிச்சத்தில்....சென்று கொண்டே இருக்கலாம் என்று நினைத்து போக... அந்த நேரத்தில் எந்த லாரியும் வரவில்லை... சரி என நானும் என் மனைவியும் பைக்கில் வேகம் எடுத்து செல்கையில்....ரிவர்யூ மீரரில் அந்த இரண்டு தடிப்பயல்களை பார்த்தேன்...ரோட்டில் வாகனத்தில் அளப்பறை செய்த கொண்டு வந்தார்கள்... நல்ல போதை என்பது தெரிந்து போயிற்று.. நான் எனது வண்டியை வேகம் எடுக்க அவர்களும் வேகம் எடுத்து எங்கள் வண்டி அருகில் மோதுவது போலும், நிறுத்துமாறும் செய்கை செய்ய செய்து கொண்டு இருக்க... ஒரு வேனும் ஒரு லாரியும் முன் சென்று கொண்டு இருக்க நான் வேகம் எடுத்து அதன் முன் சென்று விட அதன் பிறகு அவர்களை கானோம்... என் மனைவி கொஞ்சம் பயந்து விட்டாள்....
அதிலிருந்து இரவு பத்துக்கு மேல் இரவு பயணத்தை அந்த சாலையில் தவிர்த்துவிட்டோம்...இரவு வருவதாய் இருந்தால் தாம்பரம் வழியாகவே வருகின்றோம்.. ஆனால் மாலையில் அந்தி சாயும் வேலையில் அந்த பக்கம் எப்போதாவது போகும் போது... இப்போதெல்லாம் பின்னால் உட்கார்ந்து இருக்கும் பெண் முழுதாய் வண்டி ஓட்டும காதலனைஅனைத்த படி மெதுவாய் செல்கின்றார்கள்... அந்த வாகனம் 20 அல்லது 30 கீலோமீட்டா வேகத்தில்தான் செல்கின்றது. அதற்கு நடந்தே போய் விடலாம்...
அந்த சாலையின் பிரச்சனைகள்....
1.பதினெட்டு கிலோமீட்டருக்கு இரவில் விளக்கு இருக்காது...
2. காதல் போதையில் பெட்ரோல் போட மறந்து விட்டால்.... நடராஜா சர்விஸ்தான்...
3.தாம்பரம் அருகில் ஒரு பெட்ரோல் பங்கு உள்ளது.
4. பஞ்சர் ஆனால் எந்த இடத்திலும் கடை கிடையாது..
5. இவ்வளவு ஏன் அந்த சாலையில் ஒரு டீக்கடை கூட கிடையாது....
இப்படி பட்ட சாலையில் சமீபகாலமாக இரு சக்கர வாகனத்தில் பல காதலர்களை இப்போது பார்க்கின்றேன்... பொதுவாக புறநகர் கல்லூரி மாணவ மாணவிகளை பார்க்கின்றேன்...
போலிஸ் வாகனம் எப்போதாவது அந்த வழியாக கிராஸ் ஆகின்றது.... அந்த யாருமற்ற தனிமை...பல இளவட்டங்கள் தண்ணி அடித்து ஆட்டம் போட அந்த வழி ஏதுவாக இருக்கின்றது..... அந்த சாலைகளை இப்போது பல குடும்பத்தினர் பயண்படு்த்த ஆரம்பித்து விட்டார்கள்... வாகனங்கள் விரைவாய் செல்லும் சாலை இது....
இருப்பினும் காதலர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்வேன்... அந்த வழி வேண்டாம்...பாதுகாப்பு ரொம்ப குறைவாக இருக்கின்றது...குடும்பஸ்தர்களுக்கு ஒரு எச்சரிக்கை... குழந்தைகள்.. மனைவியுடன் அந்த வழியே இரவில் செல்ல வேண்டுமாயின்.. அந்த பாதையை தவிர்த்து விட்டு ஜன நடமாட்டம் அதிகம் உள்ள பாதையை தேர்ந்து எடுங்கள்.. வண்டி பஞ்சர் ஆனால் அவ்வளவுதான்...
மூன்று மாதங்களுக்கு முன் கூட பெருங்களத்தூரில் இருந்து அந்த வழியாக இரவு7 மணிக்கு அந்த சாலையில் நான் வந்து கொண்டு இருந்த போது.. திருநீர்மலை அருகில் அந்த கைனட்டிக்ஹோண்டாவை பார்த்தேன்...
அந்த பெண் வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருந்தாள்... பின்னால் அவளை கட்டி பிடித்தபடி அவன் உட்கார்ந்து இருந்தான்...எனது வாகனத்தின் வெளிச்சம் அவனின் மேல் பட்டும் அந்த பெண் மீது இழைந்து கொண்டு இருப்பதை அவன் நிறுத்தவில்லை... அவர்களை கடக்கையில் நான் பார்த்தேன்... அவள்தலை அநியாயத்திற்க்கு கலைந்து போய் இருந்தது... பின்னால் உட்கார்ந்து இருந்தவனின்.. ஒரு கை அந்த பெண்ணின் இடு்ப்பிலும்.. ஒரு கை சுடிதார்.......................................................... இருந்தது... எப்படியும் அந்த பெண் அவள் வீட்டில்... ஸ்பெஷல் கிளாஸ் என்று சொல்லிவிட்டு வந்து இருக்கும்...ஸ்ஸஸஸஸ் பெஷல் கிளாஸ்தான் அந்த பெண் அட்டென்ட் செய்து கொண்டு இருந்தது... பட் எதாவது ஒரு தண்ணி அடிச்ச குருப் பார்த்தா... அந்த பெண்ணை தேவிடியா ரேஞ்சுக்கு...சுத்தி வளைச்சி முழு துணியை அவுக்க வச்சிடுவானுங்க...
தயவு செய்து பெண்கள் காதல் போதையில் காதலருடன்.. தனிமையான இடம் செல்வதை தவிருங்கள்...
நான் அவர்களுக்கு இந்த சாலை பற்றி எச்சரிக்கலாம் என்று நினைத்தேன்... இந்த நேரத்தில் யார் சொன்னாலும் அவர்கள் காதில் வாங்கி கொள்ளமாட்டார்கள் என்பதாலும்... நம்மை கரடி ரேஞ்சுக்கு நினைப்பார்கள் என்பதாலும் நான் வந்து விட்டேன்...
அந்த பையன் எப்படியாவது எதையாவது செய்து விட்டு தூங்கினாலும்... அந்த பெண் நிச்சயம் அந்த இரவில் தூங்கி இருக்கமாட்டாள் என்பது மட்டும் நிச்சயம்...
(புகைபடங்கள்... ஜாக்கிசேகர்)
அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....




































