Valanjamkanam water falls near Kuttikkanam - மயக்கும் வலன்ஜ கானம் அருவி /கேரளா.



மவுனராகம் படம் எல்லோரும் பார்த்து இருப்பிங்க…
 அதுல  மோகன் ஒரு நாள் ரேவதியை அழைச்சிக்கிட்டு வெளியே போவார்… அதுவும் தாஜ்மாகாலுக்கு மத்தவங்கள  மாதிரி தொல்பொருள்துறை பாதுகாக்கும் கட்டிடம்., நுழைவு சீட்டு   வாங்கும் இடம் என்று வழக்கமாக போகும் வழியில்லாமல்…



SABARI MALAI DOLLY STORY - சபரிமலை… டோலிகள்




சபரிமலை… டோலிகள்

தென்னிந்தியாவில் உள்ள   கேரளாவில் , மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் ஆன்மிக ஸ்தலம் சபரிமலை . 18 மலைகள்  சூழ்ந்து இருக்கும் மலையில் ஒரு மலையில் இறைவன் ஐயப்பன் வீற்று இருக்கின்றான்…  ஐய்யப்பனை காண , பம்பையில் இருந்து நீலிமலை வழியாக நான்கு கிலோ  மீட்டர் ஏற்றமான  மலைபாதையை  கடக்க வேண்டும்…

Maari(2015) Movie Review - மாரி திரைவிமர்சனம்.



மாரி…..
புதுப்பேட்டை படத்திற்கு பிறகு ரவுடி கேரக்டர் மாரி  படத்தில்  தனுஷ் செய்து இருக்கின்றார்… அவர்  கேரியரில் மறக்க முடியாத படம் புதுப்பேட்டை என்றால் அது மிகையில்லை… தனுஷ் என்ற நடிகனை  வெளிக்கொண்டு வந்த படம்… ஆனால்  மாரி அந்த அளவுக்கு ராவான  ரவுடி சப்ஜெக்ட் இல்லை.. காமெடி என்டர்டெய்னர் என்று  முன்பே சொல்லிவிட்டார்கள்…
====
மாரி படத்தின் கதை என்ன?

சாதாரணமாக புறா பந்தயத்தில் கலந்துக்கொண்ட மாரி எப்படி  பின்னாளில் ரவுடியாக பரிணமிளிக்கின்றான் என்பதும் அவன் வாழ்வில்  காதேலோடு குறிக்கிடும் பெண்ணை அவன் காதலித்தானா? அல்லது  அந்த காதலுக்காக இரண்டு மணி நேரத்தில் ரவுடி தொழிலை தூக்கி கடாசி விட்டு  உத்தமனாக மாறினானா? இல்லையா என்பதே மாரி படத்தின் கதை.
=
பாலாஜி மோகனின்  முந்தைய இரண்டு படங்கள்  மென்மையான காதல் படங்கள்…  அப்படியான இயக்குனர்  ரவுடிசப்ஜெக்ட்   எப்படி  எடுப்பார் ???என்ற ஆர்வம்  இண்டஸ்ட்ரி முழுக்க எல்லோருக்கும் இருந்தது…  ஆனால் நன்றாகவே  பக்கா  கமர்ஷியல்  படத்தை எடுத்து  இருக்கின்றார். ஆனால் கதை  சுவாரஸ்யமில்லாத வழக்கமான கதை. ஆனால் இதில் புதுமை என்வென்றால்  புறா ரேசை பின்புலமாக வைத்துக்கொண்டு களம் இறங்கி இருக்கின்றார்..


 பிரேமுக்கு பிரேம் ரஜினி சாயல் தெரிகின்றது… படத்தின் கதையே பாட்ஷா படத்தை நினைவு படுத்தி தொலைக்கின்றது. ஆனால் ரஜினி போல ஒரு கமர்ஷியல் ரூட்டுக்கு வர  வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றார்.


 தனுஷ் ஒரே ஷாட்டில் நடனம் ஆடுகின்றார்..

மேலும் வாசிக்க.... இங்கே கிளிக்கவும்.,..

 மாரி வீடியோ விமர்சனம்.





நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

Baagupali Movie (2015) review - பாகுபலி இந்திய சினிமாவின் பிரமாண்டம்.



இந்திய சினிமாவின் பிரமாண்டம் என்ற அடை மொழி…. மூன்று வருடகால  தவம்.. 250 கோடிக்கு மேல் ஏப்பம் விட்டு கிடக்கும்  திரைப்படம்...  அப்படி என்றால்   அந்த படத்தை  எப்பை சோப்பையாக எடுக்க முடியுமா???  அதே போல மொக்கையாகவா  அந்த படத்துக்கு விளம்பரம் செய்வது??? அதனால்  பாகுபலி படத்துக்கான  விளம்பரம் அதிகம் என்றால் அது மிகையில்லை.. அதே போல  பாகுபலி  படக்குழுவினர் மிக அழகாக ரசிகர்களுக்கு டெம்ட் ஏற்றினார்கள் என்றே  சொல்ல  வேண்டும்… இந்த  அளவுக்கு  பிராண்டிங் செய்ததே இந்த படம் எந்த மாதிரி எதிர்வினை ஆற்றினாலும் படம்  ஓடி  விட வேண்டும் என்ற ஒரு  கார்பரேட் கால்குலேஷன்தான்…


பாபநாசம் திரைப்பட கிளைமேக்ஸ் சர்ச்சை..

#papanasamclimax


மொள்ளமாறி ,பொறம்போக்கு, ஊரை அடிச்சி உலையில போடுறவன் , கஞ்சா கடத்தறவன், கட்டபஞ்சாயத்து பண்ணறவன்கவுரவகொலை செய்யறவன்.. நல்லது செய்யறேன்னு ஆட்சிக்கு வந்து நாட்டை சொரண்டுற அரசியல் வாதிங்க...

Papanasam (2015) movie review - அசத்தும் தகப்பன் கமலஹாசன்.





தினம் தினம் பாத்ருமில் குளிக்கும் ஸ்கான்டல் வீடியோக்கள் வெளிவந்துக்ககொண்டு இருக்கின்றன… காதலன் கெஞ்சி  கேட்டான் என்பதற்காகா   தான் குளிப்பதை தானே செல்போனில் வீடியோவாக எடுத்து  வீடியோ முடியும் போது பிளையிங் கிஸ் கொடுத்து  கேமரா அனைக்கு பெண்கள் ஒருவகை….

புலிதிரைப்படத்தின் டீசர் பிரச்சனை... நம்பகத்தன்மை இனி குறையும்...




ஆறு ஏழரை முகூர்த்த கல்யாண மண்டபத்தில்... சரியாக எழுமணிக்கே  சாப்பாட்டு பந்தியை ரெடி செய்து  பூட்டி வைத்து விடுவார்கள்..  ஆனால்  எழு மணிக்கே ஒரு ஐம்பது பேர்  பின் பக்க  வாசல் வழியாக வந்து விருந்தை சுவைத்துக்கொண்டு இருந்தால்.. மற்றவர்கள் நாங்க ஆபிசுக்கு போவனும்  என்று மல்லுக்கட்டும் பொது  வேறு வழியில்லாமல் மணமகன் தாலிகட்டும் முன்பே பந்தியை திறந்து விடுவார்கள் அல்லவா?? அது போலத்தான் புலி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசருக்கு ஆகி இருகின்றது...


Bangalore frazer town - பெங்களூர் பிரேசர் டவுன் ரம்ஜான் அசைவ உணவு திருவிழா




பெங்களூருவில்  வெள்ளைக்காரர்கள் ஆட்சி செய்த காலத்தில் உருவாக்கிய சிறிய  நகரம்… பின்னாளில்  பிரேசர் டவுன் என்று அழைக்கப்பட்டது…தற்போது புலகேஷிநகர் என்று அதனை அழைத்தாலும்… இன்னமும் பிரேசர் டவுன் என்றே அழைக்ப்பட்டு வருகின்றது… உதாரணத்துக்கு  இன்னமும்  எப்படி அண்ணாசாலை என்று அழைக்காமல் மவுண்ட் ரோடு என்பது மனதில் பதிந்து விட்டதோ??? அதே போல பெண்களூரில் பிரேசர் டவுனும் அப்படியே..


Romeo Juliet movie Review -2015 |ரோமியோ ஜூலியட் திரைவிமர்சனம்.

romeo-juliet-poster_139744498800



இயக்குனர் எஸ்ஜே சூர்யாவின் மாணவர் லக்ஷ்மன் இயக்கும் ரோமியோ ஜூலியட் என்று  படம்  பற்றிய  செய்தி வந்ததுமே…நிமிர்ந்து உட்கார்ந்தது தமிழ் திரையுலகம்.. காரணம் எஸ்ஜே சூர்யா திரைப்படங்கள்… அப்படி பட்டவை… அவருடைய சிஷ்ய கோடி என்றால் ???எதிர்பார்ப்பை  எகிற வைப்பது போல .. படத்தின் போஸ்ட்டரும் அமைந்தது…படுக்கையில் ரவியும் ஹன்சிகாவும் இருப்பது போல….
டிரரைலர் இன்னும் சிறப்பாக இருந்தகாரணத்தால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி போனது..
எங்கேயும் காதல் திரைப்படத்துக்கு பிறகு ரவியும் ஹன்சிகாவும் இணைகின்றார்கள்…

Inimey Ippadithan movie (2015) review |இனிமே இப்படித்தான் திரைவிமர்சனம்.



????????????????????????????????????????????????????????????


சந்தானம் இனிமேல் நாயகனாகத்தான்  நடிப்பேன்…. முக்கியமாக  நெருங்கிய நண்பர்களுக்காக வேண்டுமானால் காமெடி வேடம் தரிப்பேன் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில்  தெரிவித்து இருந்தார்… வல்லவனுக்குபுல்லும் ஆயுதம் திரைப்படத்துக்கு பிறகு ஹீரோவாக களம் இறங்கி இருக்கும் படம்…. லொள்ளுசபா டீமில் இருக்கும் அத்தனை நண்பர்களையும் கண்டிப்பாக இயக்குனராக களம் இறக்குவேன் என்று சொன்னதோடு அவருக்கு பஞ்ச் டயலாக் எழுதி கொடுக்கும் முருகன், ஆனந் என்ற இரண்டு நண்பர்களை முருகானந்த் என்று இயக்குனராக புரமோஷன் கொடுத்து இருக்கும் படம்.

Jurassic World Movie review|ஜூராசிக் வேர்ல்டு திரை விமர்சனம்


1993 ஆம்  ஆண்டு இயக்குனர் ஸடீவன் ஸ்பீல் பெர்க் இயக்கத்தில் வெளிவந்த போது…. தமிழ் நாட்டில் டிடிஎஸ் ஒலியும் தமிழ் திரையரங்குகளில் அடி எடுத்து வைத்தது… டிவி வந்தவுடன்  தியேட்டருக்கு போய் படம் பார்க்க வேண்டுமா? என்று யோசித்துக்கொண்டு இருந்த தமிழக மக்களை தியேட்டருக்கு கை  பிடித்து அழைத்து  வந்த பெருமை டிடிஎஸ் சவுண்டுக்கு உண்டு…



Kaakka Muttai (2015) movie review | காக்கா முட்டை திரைவிமர்சனம் |தமிழில் ஒரு உலக சினிமா



ஏற்ற தாழ்வுகள் கொண்ட  நகரம் சென்னை.. அதிலும் கடந்த  2005 ஆம் ஆண்டில் இருந்து… கடந்த  பத்து வருடத்தில்  வெவ்வேறு முகமூடிகளை  சென்னை  மாட்டிக்கொண்டுவிட்டது.…

பீட்சா ஆர்டர் செய்தால் வீடு  தேடி வரும் என்று என்  நான்கு வயது மகளுக்கு தெரிகின்றது. ஆனால்அதே பீட்சாவை சுவைத்த பார்க்காத குழந்தைகளுக்கும் இதே சென்னையில்  வாழ்கின்றார்கள்..

Mass (2015) Movie Review |மாஸ் என்கின்ற மாசிலாமணி திரை விமர்சனம்



சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் வெங்கட் பிரபுவின் ஆறாவது படம்….ஏற்கனவே அஞ்சான் படத்தின் வெளியீட்டுக்கு முன்  ஆடிய உற்சாகத்துக்கு சமுக வலைதளங்களில் குத்தி குதறியாதாலோ என்னவோ… மாஸ் திரைப்படத்துக்கு  வெளியீட்டுக்கு முன் அலப்பறை அதிகம் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்…


பாத்ரூம் செப்பல்ஸ்…. (கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்)



1988களில் அந்த செருப்பின்  விலை… பத்து ரூபாய்…  அந்த  செருப்புதான் நடுத்தர மற்றும் உழைக்கும் மக்களின் பாதங்களை ஒரு காலத்தில்  காத்தன என்றால் அது  மிகையில்லை.


Ilayaraja music copyright Issues | இளையராஜா காப்பிரைட் சர்ச்சை’




இளையராஜாவுக்கும் தனியார் எப்எம் வானொலி நிலையங்களுக்கு இடையே ஆன பனிப்போர்...

Demonte Colony Movie review |டிமான்ட்டி காலனி |திரைவிமர்சனம்


காமெடி பேய் படங்கள் கல்லா கட்டிக்கொண்டுஇருக்கும் வேளையில்   முழுக்க முழக்க திரில்லர் ஜானரில் வெளிவந்து இருக்கும் திரைப்படம்தான் டிமான்டி காலனி...

டிமான்டி காலனி என்பது சென்னை ஆழ்வார் பேட்டையில் இன்றளவும் இருக்கும் காலனி....வெள்ளைகாரன் காலத்தில் இருந்தே இந்த காலனியில்  பேய்கள் ஊலாவுதாக யாரோ கொளுத்தி போட... இயக்குனர் அஜய்ஞானம் படம் எடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது..


PurampokkuEngiraPodhuvudamai-2015| movie review|புறம்போக்கு திரைவிமர்சனம்


எங்கள் ஊர் கடலூரில் பாதிரிக்குப்பம் ஜெகதாம்பிகா டென்ட் கொட்டாயில் பார் மகளே பார், பாசமலர், துலாபாரம் , போன்ற படங்களை பார்த்து விட்டு பெண்கள் இழவு வீட்டுக்கு சென்று ஒப்பாரி வைத்து விட்டு வாயையும் மூக்கையும் சேர்த்து மூடிக்கொண்டு வருவார்களே அது போல படத்தை பார்த்து விட்டு டென்ட் கொட்டகை விட்டு வெளியே வரும் போது துக்கம் தாங்கால் புடவை தலைப்பால் வாயை பொத்தி வருவார்கள்..


50 பைசா சுற்றுலா…



சில நேரங்களில்  அப்படித்தான் நடக்கும்.. அப்படி ஏன் நடந்தது என்றோ…??  ஏன் அப்படி நடக்ககவில்லை என்றோ கேள்விகேட்கவே முடியாது…  வாழ்க்கை அப்படித்தான்…. ஆறு விரலோடு ஏன் பிறந்தான் என்ற கேள்விக்கு எப்படி  விடையில்லையோ??? அது போலத்தான்  சில விஷயங்கள் அப்படி நடந்து விடும்...வாழ்க்கையில சில விஷயங்களை கேள்வி கேட்காமத்தான்  நாம ஏத்துக்கனும்…


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்.18/05/2015




ஆல்பம்.
சட்டீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் மாவட்ட ஆட்சித்தலைவர் அமித் கட்டாரியா. தண்ட்டேவாடா மாவட்ட ஆட்சித்தலைவர் தேவசேனாபதி  இரண்டு கலெக்டர்களுக்கும்  மத்திய அரசு ஓலை அனுப்பி  இருக்கின்றது… புரோட்டகால் படி நடந்துக்கொள்ள வேண்டும் … நீங்கள் இருவரும் நடந்துக்கொள்ளவில்லை  என்பதே  மத்தியஅரசு அனுப்பிய ஓலையில் சாரம்சம். அதிலும் கலெக்டர் அமித் கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு கைகுலுக்கி  விட்டார்…  என்று ஓலைக்கான மறைமுக காரணத்தை சொல்லி இருக்கின்றார்கள்… 

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner