Beyond the Clouds-1995 (Par-Dela les Nuages)18+ நான்கு கதைகள்...


இந்த படத்தோட டைரக்டர் 3 வருஷத்துக்கு முந்திஅதாவது 2007 ல தனது 94 வது வயசுல இறந்து போனவர்...இவரது படைப்புகளை உலகம் கொண்டாடுது....இவர் ஒரு இத்தாலி டைரக்டர்....இத்தாலியோட பிதாமகர் அப்படின்னு சொன்ன எந்த பயலும் ஒரு கேள்வி கேட்க முடியாது....

நிறைய உலகலாவிய விருதுகள் இவரோட படத்துக்கு கிடைச்சி இருக்கு....

படம் எடுக்கும் போது எந்த காம்பரமைசும் செய்து கொள்ளாத புண்ணியவான்..இவருடைய நிறைய படங்கள் விஷவல் டீரீட்தான்...அதே போல் பிரைக்தரூல்ஸ் பாணிதான்.....

நம்ம ஊர்ல இந்த வயசுல படம் எடுத்த கிழவன் அவனுக்கு என்ன தெரியும்னு சொல்லிடுவாங்க... இப்ப நாம பாலசந்தரை அப்படித்தான் தள்ளி வச்சி இருக்கோம்...இந்த படம் இவரோடு 83வது வயசுல எடுத்ததுன்னு சொன்னா யாரும் நம்ப போறது இல்லை...

சங்கர் ஜீன்ஸ் படம் ஷுட்டிங்க்கு அமெரிக்கா போய் இருந்தப்ப...அங்க நம்ம தமிழ் படத்து ஷுட்டிங் பார்த்துட்டு எங்க டைரக்டர் என்று கேட்க நம்ம இயக்குனர் சங்கரை காண்பிக்க... யாரும் நம்பவில்லையாம்...இவ்வளவு சின்ன பையனா இருக்காறேன்னு ஆச்சர்யபட்டு போயிட்டாங்களாம்...அங்க வயசு ஆக ஆக தான் மரியாதை... இங்க வயசான இத்தனை வருடம் எல்லாம் ஒரு வார்த்தையில் நம்மவர்கள் சொல்லிவிடுவார்கள்...
அது என்ன வார்த்தை என்று கேட்கின்றீர்களா?

பூட்டகேஸ்.....



இந்த படத்துல பிஹைன்ட் த சீன் இருக்கும் டிவிடி கிடைத்தால் பாருங்கள்...இந்த வயசுல எப்படி டைரக்ட் பண்ணி இருக்கார் அப்படிங்கறது தெரியும்...

Beyond the Clouds (Par-Dela les Nuages) படத்தின் கதை என்ன??

ஒரு நான்கு சின்ன காதல் கதைகள் அந்த நான்கு காதலையும் டைரக்டர் எப்படி காட்சி படுத்தி இருக்கின்றார் என்பதுதான் கதை...இதன் பின் புலத்தில் பிரான்ஸ் நகரமும் இத்தாலியும் எவ்வளவு அழகா மெனெக்கெட்டு ஒளிப்பதிவு செய்து இருக்கின்றார்கள் என்பதை பார்த்து மகிழுங்கள்....
எந்த கதையும் சொல்ல முடியாது...எல்லாம் விஷுவல் டிரிட்தான்..

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

இந்த படத்தின் இயக்குனர்.Michelangelo Antonioni இத்தாலியோடு சினிமா சொத்து

இந்த படத்தில் இவரின் டெடிகேஷன்...தள்ளாடும் வயதில் அந்த பனியில் குளிர் காற்றில் படம் எடுக்க கம்பளி போர்த்திக்கொண்டு வந்து உட்காரும் டைரக்டர்....

நான்கு கதைகள்... ஆனால் அதை காட்சி படுத்தி சொல்லும் விதத்தில் கொஞ்சம் அயற்சியாக இருக்கும்....இந்த பார்வை இந்திய பார்வை...

இந்த படம் 3 விருதுகைளை பெற்றது..

இந்த டைரக்டர் எடுத்த புளோ அப் படம் இன்னமும் சினிமா ரசிகர்களால் தூக்கி வைத்து கொண்டாடி கொண்டு இருக்கின்றார்கள்...அந்த படம் அடுத்த வரும் பதிவுகளில் எழுதுகின்றேன்...

படத்தில் நிர்வாணகாட்சிகள் அதிகம்.....

நான்கு கதையில் முதல் கதையில் வரும் பெண் நீண்ட நாட்களுக்கு உங்கள் மனதில் நிற்பார்... படம் பார்த்தால் உங்களுக்கே தெரியும்

இந்த படத்தை ஒளிப்பதிவுக்காக நிச்சயம் பார்க்க வேண்டும்...

உலக பார்வையில் இந்த படம் ஓகே... இந்திய பார்வையில் இந்த படம் ஸ்லோ.. அதனால் பார்க்க வேண்டிய படங்கள் லிஸ்ட்டில் இந்த படம்....


இந்த படம் பெற்ற விருதுகள் விபரம்..

Premiered internationally at the Venice Film Festival in September 3, 1995 winning the International Critics Prize.

Premiered in US at the AFI/L.A. Film Festival in November 1995

Featured at the New York Film Festival in September 1996

18+சென்சார் படம்...1


படத்தின் டிரைலர்..(18+ மட்டும்)



படக்குழுவினர் விபரம்...

Directed by.....................Michelangelo Antonioni
Screenplay by................Michelangelo Antonioni, Tonino Guerra and Wim Wenders
Based on Antonioni's That Bowling Alley on the Tiber
Cinematography by........Alfio Contini
Music by.............Van Morrison, Lucio Dalla and Laurent Petitgand

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலு பேரு வாசிக்க ஓட்டும் பின்னுட்டமும் ரொம்ப முக்கியம்.. எனக்க சத்தியமா எனக்கு கள்ள ஓட்டு போட தெரியாதுங்கன்னா...



சாண்டவெஜ் அண்டு நான்வெஜ் 18+(வியா/15•07•2010)

ஆல்பம்...

புரட்சித்தலைவி அவர்கள்... பொதுமக்களுக்காக போராட புறப்பட்டு விட்டார்...ஜெயா டிவி பார்க்கையில் முள்ளி வாய்காலை விட கொடுமையான வாழ்க்கையை நாம் தமிழ்நாட்டில் எல்லோரும் வாழ்வதாக சொல்கின்றது, கலைஞர் டிவி பார்த்தால் எல்லாம் நல்படியாக சபிட்சமாக நடந்து கொண்டு இருப்பதாக சொல்கின்றது...எதை நம்புவது???

ஒரு நல்ல எதிர்கட்சி நமது மாநிலத்தில் இல்லை என்பது பெரிய குறை...இவர் ஆட்சிக்கு வந்தால் அவர் சட்டசபைக்கு வரமாட்டார், அவர் ஆட்சிக்கு வந்தால் இவர் சட்டசபைக்கு வரமாட்டார்....அப்ப எப்படி ஒரு பயம் ஆட்சியாளருக்கு வரும்...எம்ஜிஆர் ஆட்சி செய்த போது கண் கொத்திபாம்பாக கலைஞர் பார்த்துக்கொண்டு இருந்தார்... ஆனால் இப்போது அப்படி இல்லையே??இந்தனை வருடம் இல்லாமல் இப்போது புரட்சி செய்ய வர காரணம் ????ஓ இன்னும் சில மாதங்களில் எலெக்ஷன் வருகின்றது அல்லவா?

===================
விஜய்டிவி திரும்பவும் செல்லக்குரலுக்கான தேடலை தொடங்கி விட்டுவிட்டது...எனக்கு வெற்றி பெற்ற கிராண்ட் பினாலேயை பார்பது விட இந்த அறிமுக பாடகர் நிகழ்ச்சி எனக்கு ரொம்பவும் பிடிக்கின்றது... காரணம் 40 லட்சத்தை குறி வைத்து குரல் நன்றாக இருக்கின்றதோ இல்லையோ... வந்து பாட வேண்டும் என்ற அந்த அட்டெம்ப்ட் எனக்கு பிடித்து இருக்கின்றது...

சிலர் டிவியில் முகம் தெரிந்தால் போதும் என்ற அளவிலும் பாடுகின்றார்கள்....இருப்பினும் எந்த பின்னனி இசையும் இல்லாமல் ஓங்கி பெருங்குரலெடுத்து படுவாதை பார்க்க ரொம்ப ஜாலியாக இருக்கின்றது...நீங்கள் வேண்டுமானால் பாருங்களேன்...நிச்சயம் ரசிப்பீர்கள்...

==================
தமிழ் டிஸ்கவரி சேனல் பார்க்க குழந்தைகளை வற்புறுத்துங்கள்...பெண்களை டிவி சீரியல் பார்பதை தவிர்த்து டிஸ்கவரி சேனல் பார்க்க சொல்லுங்கள்...நிச்சயம் நாம் ஒரு ஜிரோஎன்ற எண்ணம் நிச்சயம் வரும்... துருவ பகுதியில் வாழ போராடும் விலங்கு, தண்ணி இல்லாத பாலைவனத்தில் வாழ போராடும் தாவரம்.... அவைகள் பல சேதிகளை மனிதர்களுக்கு சொல்கின்றன... நிச்சயம் அது உங்கள் பிள்ளைகளக்கு பல செதிகள் சொல்லிதரும்.....
=================
நெதர்லாந்துக்கு கோல் போட இரண்டு வாய்புகள் வந்தது.. ஒரு வாய்ப்பில் கோல் போஸ்ட் கிட்ட போன போது கட்டி பிடித்து ஸ்பெயின் ஆட்டகாரர் ஒருவர் அழுகுனி ஆட்டம் ஆடினார்... அவர் தப்பாட்டத்தை நடுவர் தடுத்து இருந்தால் நிச்சயம் நெதர்லான்டுதான் வெற்றி பெற்று இருக்கும்.... என்ன செய்ய திறமை இருந்தாலும் அதிஷ்டம் வேண்டும் என்பது இதுதான்....
================

இந்த வார படம்... இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை...

===================

மிக்சர்...
இந்த உலக கோப்பையில் பாராகுவே அணி ஜெயித்தால் நிர்வாணமாக நடப்பேன் என்று மாடல் அழகி லாரிசா நம் அரசியல் வாதிகள் போல் சொன்னார்... நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலங்கை பிரச்சனையை தீர்த்து வைப்போம் என்று சொல்வார்கள்..... அது என்றைக்காவது நடக்குமா? அது போலாதான்...அந்த தைரியத்தில்தான் மாடல் அழகியும் சொல்லி இருப்பார்....
===========
நன்றிகள்..
நெட் பிரச்சனை, கரென்ட் பிரச்சனை எல்லாம் மீறி பதிவு எழுதினால் நோகாமல் வந்து படித்தாலும் படிக்காவிட்டாலும் மைனஸ் ஓட்டு குத்தும் அந்த தலை என்ற பெயர் கொண்ட நண்பருக்கு என் நன்றிகள் இதில் கூட்டு களவானிதனம் வேறு...இன்னும் மைனஸ் ஓட்டுகள் எதிர்பார்க்கின்றேன்... அது இன்னும் என்னை எழுத உற்சாகபடுத்துகின்றது.. எனக்கா வேலை மெனக்கெட்டு நேரம் செலவிட உன்னை வைக்கின்றேன் பார் அந்த கெத் எனக்கு பிடித்து இருக்கின்றது..
===========
தமிழ் பிளாக்கர் போராமில் தினமும் முதலில் மொக்கை அரட்டையில் டென்சன் ஆனவர்களில் நானும் ஒருவன் ... டென்சனாகி ஒன்னும் ஆக போவதில்லை சில நேரங்களில் நல்ல விஷயங்கள்.. மற்றும் சூடான செய்திகள் நம் கண் முன் வருவதால்... அதில் நானும் ஐக்கியமாகிவிட்டேன்...
==============
இந்தவார சலனபடம்...
நெட் சுலோவான காரணத்தால் என்னால் சலனபடம் பேட முடியவில்லை.... பிஎஸ் என் எல் நண்பர்கள்தான் கருணை வைக்க வேண்டும்
===============
கலக்கலான கடிதங்கள்...
கடிதம்,...1

ஹலோ,

சேகர், எஸ் ஜாக்கி சேகர்...

வணக்கம் வந்தனம்

ஹிட்லரின் அதி தீவிர ரசிகன் நான்....

இப்படி சொல்லி, நெறைய பேருகிட்ட வாங்கி கட்டிக்கிட்டது தனி கதை.... அப்படி சொன்னவங்க கேள்விகளுக்கு நான் பதில் அளித்ததும் சுவாரஸ்யமான கதை தான் :)

ஹிட்லர் பற்றி நெறைய படிச்சு, ரசிச்சு, பார்த்து தீவிர ரசிகன் ஆனேன்....

மனிதனுக்குள்ளே மிருகம் - மதன் எழுதிய புத்தகத்தை படிச்சு இருக்கீங்களா? அதுலயும் நம்ம sorry என்னோட ஹீரோ ஹிட்லர் பத்தி சொல்லி இருப்பார்...

நல்ல நேர்மையான விமர்சனம்

வாழ்த்துக்கள் சேகர்

என்றும் உங்கள் அருண் பிரசங்கி

உங்கள் பதிவுகளை அடிக்கடி பார்த்து வருகிறேன்... கலக்கலா எழுதுறீங்க...

உங்களுக்கு ஹிட்லர் சாயலில் ஒரு Royal Salute :)

என்றும் உங்கள் அருண் பிரசங்கி
============

கடிதம் ..2

Dear ஜாக்கி சேகர்,

I follow your blogspot entries via Tamilish.
I especially like your reviews on world cinemas and your social consciousness.
Keep up the great work.
Regards
Bala

Balaganesan Swaminathan
Arizona, US

இருவரின் அன்புக்கும் என் நன்றிகள்...நாஜி சல்யூட்டுக்கும் என் நன்றிகள்..

=============
பிலாசபி பாண்டி....
தோளுக்கு மேல் வளர்ந்து விட்டால் அடிப்பதே தவறு...இதில் கோடாலியால் வெட்டலாமா?
இப்படிக்கு
மரங்கள்....

மரம் வளர்ப்போம் மழை பெருவோம்
============================
நான்வெஜ்....18+

ஜோக்..1

உலகத்துலேயே ரொம்ப சிரமமான காரியம் எது தெரியுமா? எல் ஜ சி பத்து மாடி கட்டிடத்தில் லிப்ட் இல்லாமல் நடந்தே ஏறுவதோ அல்லது தமிழ்நாட்டில் மிக நேர்மையாக எந்த லஞ்சமும் கொடுக்காமல் அரசு அலுவலகங்களில் வேலை முடிப்பதோ அல்ல...சாதராணமா தொங்கி போயிருக்கும் சாமாச்சாரத்துக்கு காண்டம் மாட்ட டிரை பண்ணறதுதான்..



ஜோக்..2

ஒரு இன்டர்வியூவுல ஒருத்தன் கிட்ட உங்க ஒய்பைபத்தி இரண்டு வரி சொல்ல சொன்னான்... அதுக்கு இப்படி அவன் பதில் சொன்னான்...

என் ஒய்ப்தான் எனக்கு வலது கை.....அவள் இல்லாத நேரங்களில் என் வலது கை என் ஒய்ப்பாக மாறிவிடும்....

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலு பேரு வாசிக்க ஓட்டும் பின்னுட்டமும் ரொம்ப முக்கியம்...கள்ள ஓட்டு போட எனக்கு தெரியாதுங்கன்னா

(DOWN FALL -2004)சர்வாதிகாரி ஹிட்லரின் கடைசி நிமிடங்கள்..

போன வருட புத்தக கண்காட்சியில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ஹிட்லர் என்ற புத்தகத்தை வாசித்த போதுதான் அந்த மனிதனின் வேறுமுகம் எனக்கு தெரிந்தது...உலகத்தையே தன் வசபடுத்த நினைத்தவனின் வாழ்க்கையை வாசித்த போது... ஹிட்லர் மீது மிகப்பெரிய மதிப்பு வந்தது....இப்படியும் ஒரு மனிதனின் முன்னேற்றம் இருக்குமா? என்று என்னை வியக்கவைத்தன...

50லட்சம் யூதர்கள் இறக்க காரணமாக இருந்த கொடுர மிருகம் என்பதாய் நான் வைத்து இருந்த பிம்பம் அந்த புத்தகத்தை வாசிக்கையில் கொஞ்சம் மாறி இருந்தது.. தொழில் துறையிலும் ஜெர்மன் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கு என ஹிட்லரை வாசித்த போது வேறு பார்வை எனக்கு வந்தது நிஜம்...
அதே வேளையில் ஒரு நாளைக்கு 6 ஆயிரத்தில் இருந்து பத்தாயிரம் பேர்வரை யூதர்கள்இறப்புக்குகாரணமான கொடுங்கோலனை ரசிக்க முடியவில்லை... உலகில் ஜெர்மன் மட்டுமே உலகை ஆள வேண்டும் என்று இரண்டாம் உலக போரை ஆரம்பித்து வைத்து விட்டு 5 கோடி பேரின் இறப்புக்கு காரணமானவனை ரசிக்க முடியவில்லை....


நான்தான்... நான்தான் என்று இருமாப்புடன் வாழ்ந்த ஒரு சர்வாதிகாரியின் கடைசி நிமிடங்கள்தான் இந்த படம்.... முதல் உலக போரில் ஜெர்மனில் இராணுவ சிப்பாய்இரண்டாம் உலக போரின் போது ஜெர்மன் நாட்டை (பீயூரர்)வழி நடத்துபவர் என்று அழைக்கபட்டார்....என்றால் அந்த வளர்ச்சியை யோசித்து பாருங்கள்...
இதுவரை இரண்டாம் உலக போரை மையபடுத்தி நிறைய படங்கள் வந்து விட்டன...அதில் ஹிட்லரின் கொடுரத்தை சொல்லி அழுத படங்கள் ஏராளம்....மிக முக்கியமாக... ஐ சர்வடு கிங் ஆப் இங்கிலாந்து.. படமும் லைப் ஈஸ் பீயூட்டிபுல் படமும் , ஸ்பீல்பெர்க்கின் ஷின்டலர்லிஸ்ட் என்று அடுக்கி கொண்டே போகலாம்....


ஒரு நாட்டையே ஆண்டவன் எல்லாவ்ற்றிலும் வெற்றியை ருசித்தவன்...அவனுக்காக தலையை சீவிக்கொண்டு கொத்து கொத்தாக இறக்க கண் எதிரில் தயராக ஒரு கூட்டம்... இப்படி இருந்தால் ஒருவனுக்கு என்ன தோன்றி இருக்கும்??? உலகத்தின் பிதா நான் தான் என்ற எண்ணம் தோன்றுவது இயற்கைதானே...அதுதான் ஹிட்லருக்கும் தோன்றியது..

ஆனால் நன்றாக வாழ்ந்தவன் வீழ்வதை ஏனோ மனம் ஏற்றுக்கொள்ள
மறுக்கின்றது...காரணம் அது போல இந்த படத்தை எடுத்து இருக்கின்றார்கள்...

(DOWN FALL -2004 படத்தின் கதை என்ன????

ஒரு சர்வாதிகாரியின் படத்தை எப்படி ஆரம்பிக்க போகின்றார்கள் என்று ரொம்ப ஆர்வமாக இருந்தேன்..இட்லருக்கு பதுங்கு அறையில் இருக்கும் போது அவர் சொல்வதை குறிப்பெடுத்து அதனை டைப்செய்து கொடுக்க சில பெண்களுக்கு நேர்முக தேர்வு நடப்பதில் தொடங்குகின்றது படம்....இட்லர் பதுங்கு குழியில் ஜெர்மன்தோல்வி செய்திகள் கேட்பதில் இருந்து... நாலாவது படையணி என்ன செய்து கொண்டு இருக்கின்றது ?என்று கேட்டு கத்துவதில் இருந்து...தோல்வியால் துவண்டு திருமணம் செய்து கொண்டு,புதுமனைவியுடன் தற்கொலை செய்து இறப்பது வரை இந்த படம் பதிவு செய்கின்றது..


எல்லாம் முடிந்து ஜெர்மன் படைகள் ரஷ்ய படைகளிடம் தோல்வியை சந்தித்து முன்னேறி பெர்லினை நோக்கி வந்து கொண்டு இருக்கும் போது பாதள அறையில் உள்ள ரகசிய இடத்தில் இட்லர் வாழ்ந்த சில நாட்களை இந்த படம் மி நுட்பமாய் பதிவு செய்து இருக்கின்றது....சமகாலத்தில் வாழ்ந்த ஒரு சர்வாதிகாரியின் அந்திமகாலம் எப்படி இருந்து இருக்கும்? அது நம் கண் முன் நிறுத்தி இருக்கின்றார்கள்....
தீவிரவாதி, ஒய்பெர்ஸ் சண்டயில் 40000 குழந்தைகள் கொன்றதில் பங்கு பெற்றவன், எழுத்தாளர், சர்வாதிகாரி,ஓவியன்,அரசியல்வாதி,மது பழக்கத்தை விட்டவன்... நான்வெஜ் சாப்பிடாதவன் என்ற பன்முக தன்மை கொண்ட ஹிட்லரின் கடைசி காலத்தை பற்றி அறிய இந்த படத்தை பார்க்கவும்....

வாழ்வில் இந்த படத்தை தவறாமல் பார்ககவேண்டிய படம் இது....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

Bruno Ganz இட்லராக வாழ்ந்து இருக்கின்றார்...

ஒரு வரலாற்று படத்தை எடுக்க போகின்றோம் என்றால் அதுக்கு நிரம்ப பொறுமையும், ஆராய்ந்து உண்மைகனை தெரிந்து கொள்ள வேண்டும்... பட்ஜெட் இல்லை என்று எந்த சப்பை காரணமும் சொல்லாமல் ஷாட் வைக்க வேண்டும்...எங்கேயும் காம்பரமைஸ் ஆக கூடாது... இந்த படக்குழுவினர் அப்படி ஆகவில்லை...

இந்த படம் முழுவதும் இட்லரின் வரலாற்று பின்னனியை சொல்லவில்லை... ஏதோ காதில் விழுந்த விஷயங்களை வைத்தே இந்த படததை எடுத்து இருக்கின்றார்கள்....

எனென்றால் ரஷ்ய படைகள் நெருங்கிய போது அவர்கள் கைக்கு எந்த ஆதாரமும்
கிடைத்துவிடாமல் இருக்க எல்லாத்தையும் தீயிட்டு கொளுத்த சொன்னவன்...

அந்த நேர்முக தேர்வில் கலந்து கொண்டு இட்லர் முதல் வருகையை ரொம்ப சிம்பிளாக பதிவு செய்தாலும் அந்த பெண்கள் கண்களில் காட்டும் அந்த ஆர்வம் உற்சாகம் வாய்ப்பே இல்லை... அப்படி ஒரு பெரிய சர்வாதிகாரியை, ஜெர்மனியில் வாழ்ந்த பல லட்சகணக்கான நேசிப்பை அந்த கண்களில் உள்ள ஆச்சர்யத்தின் மூலம் காட்சி படுத்தி இருப்பார்கள்...


ஜெர்மனிக்கா போரிட்ட சிறுவர்களுக்கு மேடல் கொடுத்து பதுங்கு குழியில் இருக்கும் போது கூட மெடல் கொடுத்து உற்சாகபடுத்தியவன்...அந்த மெடல் கொடுக்கும் போது அந்த சிறுவர்களின் சந்தோஷத்தை பார்க்க வேண்டுமே???...

தளபதிகள் போர் நிலவரத்தை சொல்ல பர பரப்பாய் கேமரா அவர்களோடு கேமரா டிராவல் ஆவது நம்மையும் அந்த கூட்டத்தில் ஒருவனாக உணரவைக்க செய்த முயற்சிகள்

இட்லர் இறக்கும் வரை சிம்ம செப்பனம்தான்....

இட்லருக்கு பயம் வந்த பிறகு அதை காட்டிக்கொள்ளாமல் நடப்பது மிக அற்புதம்... எப்ப வேண்டுமானாலும் பிடிபடலாம்னு இருக்கற நிலையிலும் ஒருத்தனுக்கு தேச துரோகம் பட்டம் கொடுத்து அவனை சாகடிப்பதும் ஜெர்மனி யும் இட்லரை யும் வாழ்த்தி விட்டு சாவதும் அருமையான காட்சி.....

கேமராமேன் Rainer Klausmann யை கோவில் கட்டி கும்பிட வேண்டும்.. பதுங்கு அறை செட்டில் கேமராவை தூக்கி கொண்டு ஓடுவது, நிற்பது நடப்பது என பல செய்கின்றது...எந்த இடத்திலும் பிரேமில் வைத்த லைட் தெரியகூடாது... அதே போல் எல்லா காட்சிகளும் ஹேன்ட்ஹெல்ட் ஷர்ட்டுகள்தான்...பதுங்கு அறையில் டிராலி உபயோகபடுத்தியது போல் எனக்கு நியாபகம் இல்லை...

செட் போட்ட ஆர்ட் டைரக்டர் சம்மா சொல்ல ரொம்ப அற்புதமாக செய்து இருக்கின்றார்....


நிறைய இளைய படைவீரர்கள் இறந்து போய் விட்டார்கள்... பலருக்கு மருத்துவ உதவி இல்லை என்று சொல்லும் போது ரகசிய அறையில் உட்கார்ந்து கொண்டு.. அது அவர்கள் தலையேழுத்து அதற்கு தானே அவர்களை படையில் எடுத்தது என்று வியாகியானம் பேசுவது இட்லரின் சுயநலத்தையும், கடைசி கட்ட திமிரையும் காட்டுகின்றது....


ஜெர்மனிக்கா போரிட்ட சிறுவர்களுக்கு மெடல் தந்து அவர்களை ஊக்கு விப்பதும் அவர்கள் பெருமை அடைவதும் அந்த கால நிகழ்வை அப்பட்டமாக காட்டக்கூடிய காட்சிகள்...


எந்த உதவியும் இல்லாமல் எந்த கம்யூனிகேஷனும் இல்லாமல் பல வீரர்ர்கள் இறந்து போவது... தலமை இல்லாமல் ஒரு சாம்ராஜ்யம் எப்படி எல்லாம் சின்னா பின்னமாகிவிடும் என்பதை மிக அழகாக காட்சி படுத்தி இருக்கின்றார்கள்...

இன்னும் கொஞ்ச நேரத்தில் ரஷ்ய படையிடம் மாட்ட போகின்றோம் என்பது தெரிந்து பதுங்கு மாளிகையில் பெரிய தலைகள் எல்லாம் தண்ணியை போட்டு விட்டு , பெண்களை அரைநிர்வாணமாக ஆடவிட்டு வேடிடிக்கை பார்பதும்... பலர் எதிரிலேயே உடலுறவு வேட்கையை தனித்துக்கொள்வதும் போகின்ற போக்கில் காட்டி இருப்பது அற்புதம்....

இந்த படத்தை எல்லா பள்ளி மாணவர்களுக்கும் போட்டு காட்ட வேண்டும் என்பது என் எண்ணம்.... ஒரு வரலாற்று ஆவணம் இந்த படம்....

இட்லரின் எரிந்து விழும் விஷயத்தை நீங்கள் ரசிக்கலாம், அவர் சாப்பிடும் போது கை ஆடிக்கொண்டே இருக்கும் மேனாரிசத்தை நீங்கள் பார்க்கலாம்... முன் பக்கம் விழும் முடியை கோதி விடுவதை ரசிக்கலாம்...

இறக்கும் முன் எல்லோருக்கும் கை கொடுத்து விட்டு சிலநிமிடங்கள் அந்த மிடுக்கு குறையாமல் பேசுவது அற்புதம்....

இறக்கும் முன் நடக்கும் திருமணத்துக்கு, பயத்தில் முகத்தில் பவுடர் அதிகமாக அடித்துகொண்டு வரும் ஒரு காட்சி வாழ்கை முடிய போகின்றது என்று சலித்துகொள்ள அந்த ஒரு காட்சி போதும்...

இன்னும் சில மணி நேரத்தில் ரஷ்ய படையினர் வந்து விடுவார்கள் என்பதை யார் ஹிட்லரிடம் சொல்வது என்று பயந்து கொண்டு இருக்குங்ம தளபதிகள்... அதே போல் எல்லலா இடத்திலும் இருக்கும் அல்லக்கைகள் போல் இட்லர் பக்கத்தில் இருந்ததும் கொடுமை....


கோயபல்ஸ் மனைவி எல்லா குந்தைகளுக்கும் விஷம் கொடுப்பது...ஒருவரை ஒருவர் சுட்டுக்கொள்வது எனவும், கண் முடித்தனமாக இட்லருக்காக உயிரை விட்டவர்களை நினைக்கும் போது எந்த அளவுக்கு ஒரு தலைவனாக தனது பேச்சால் கட்டி போட்டு இருக்கின்றான் என்று நினைக்கும் போது ஆச்சர்யம் மேலோங்கி இருக்கின்றது...

இட்லர் தற்கொலை செய்து கொண்டு இரண்டு நாள் கழித்து கூட பல படைதளபதிகள் தற்கொலை செய்து கொள்வதும், ஜெர்மனிக்காக உயிர்விட்டு விசுவாசத்தை காட்டுவதும் கொடுமை...

இந்த படம் பெஸ்ட் பாரின் பிலிமுக்கான ஆஸ்கார் அவார்டு வாங்கியது...இந்த படம் ஜெர்மன் படம்...

இட்லரோடு சமகாலத்தில் வாழ்ந்த படைதளபதிகள் பதுங்குழியில் இருந்த உதவியாளர்கள் என எல்லோரிடமும் பேசி அவர்கள் தந்த அடிப்படையில் இந்த படம் எடுக்கபட்டது...

இந்த படம் பார்த்த பின்பு இட்லரை ரசிப்பீர்கள்.. அதுதான் இந்த படத்தின் பலம்


படத்தின் டிரைலர்


படக்குழுவினர் விபரம்....

Directed by Oliver Hirschbiegel
Produced by Bernd Eichinger
Written by Joachim Fest
Bernd Eichinger
Traudl Junge
Melissa Müller
Starring Bruno Ganz
Alexandra Maria Lara
Corinna Harfouch
Ulrich Matthes
Juliane Köhler
and
Thomas Kretschmann
Music by Stephan Zacharias
Cinematography Rainer Klausmann
Editing by Hans Funck
Distributed by Constantin Film
Newmarket Films (English subtitles)
Release date(s) September 16, 2004 (Germany)
February 18, 2005 (USA)
Running time Theatrical cut:
155 minutes
Extended cut:
178 minutes
Country Germany
Italy
Austria
Language German
Russian
Budget €13.5 million[1]
Gross revenue $92,180,910[1]

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலு பேரு வாசிக்க ஓட்டும் பின்னுட்டமும் ரொம்ப முக்கியம்...கள்ள ஓட்டு போட எனக்கு தெரியாதுங்கன்னா....

குறிப்பு...

நிறைய எழுதினேன் எல்லாம் பாழய் போன சிபி நெட் கனெக்ஷனால் இந்த பிரச்சனை சட்டென நெட் கட் ஆக அடித்து எதுவும் சேவ் ஆகவில்லை...பிஎஸ்என் எல் கனெக்ஷன் ஒரு வாரத்தில் தந்து விடுகின்றோம் என்று இரண்டு பிஎஸ் என் எல் வாசக நண்பர்கள் சொன்னார்கள்... அவர்கள் அதற்கான முயற்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்... அது கிடைத்தால் ரொம்ப நன்றாக இருக்கும்...






அடுத்தமாதம் எப்படியும் சிங்கள ராணுவத்தால் சாக போகும் இந்திய(தமிழக) மீனவனுக்கு ஒரு கடிதம்...

அன்புள்ள இந்திய (தமிழக) மீனவனுக்கு வணக்கம் வாழிய நலம்...
எங்க வாழிய நலம் என்று முனு முனுக்க வேண்டாம்...

உங்கள் சமுக மீனவர்களை சிங்களவர்கள் நிர்வாணபடுத்தி,உதை கொடுத்து, குண்டு அடிபட்டு சீறும் சிறப்புமாக இருப்பதாய் பத்திரிக்கைகளில் படித்துக்கொண்டு இருக்கின்றேன்...

உலகின் 5வது வல்லரசாக வளர்ந்து கொண்டு இருக்கும் நாட்டின் குடிமகன்... குண்டடி பட்டு இறப்பது வாடிக்கையாகிவிட்டது...ஆனால் அவர்களுக்கு உங்களை நம் நாட்டின் குடிமகன் என்ற நினைப்பு கிஞ்சித்தும் அவர்களுக்கு இல்லை என்றே தோன்றுகின்றது...

இந்தியாவில் பிறந்த அத்தனை குடிமகன்களுக்கும் பாதுகாப்பான வாழ்க்கை கொடுக்கவேண்டும் என்று அரசியல் சட்டம் கூறுகின்றது... அப்படி கொடுப்போம் என்று சொல்லிதான் ஆட்சியாளர்கள் அறியனை ஏறுகின்றார்கள்...

தமிழ்நாட்டை விட சிறியதாய் இருக்கும் தேசம்...இந்தியாவில் இருப்பவனை அடித்துக்கொண்டு இருக்கின்றது.. ஒரு கேள்வி இல்லை ஒரு கண்டனம் இல்லை...பிரதமர் ஒரு எச்சரிக்கை விடுத்தால் கூட அது உலக நாடுகளின் கவனம் பெரும்... அதை கூட செய்வதில் அவருக்கு தயக்கம் இருக்கின்றது...

ஒருவேளை நீங்கள் தலையில் டர்பன் கட்டி இருந்தால் தான் ஆடவிட்டாலும் தன் கால் சதையாவது அவருக்கு ஆடி இருக்கும்...ஒரு வேளை இந்திய இறையாண்மை பாராளுமன்றத்தில் மட்டும் இருப்பதாக எண்ணிவிட்டதன் விளைவே இந்த அமைதி என்று என்ன தோன்றுகின்றது....

பாரளுமன்றத்தில் துப்பாக்கியோடு உள்ளே நுழைந்தால்தான் இந்திய இறையாண்மை கேள்விகுறியாக்கபடுகின்றது... ஆனால் உங்கள் மீது துப்பாக்கி குண்டு பாயும் போது அது பற்றி எந்த கேள்வியும் இல்லை... வாழ்க்கை போராட்டத்தில் தினமும் உயிரை பணயம் வைப்பவன் விஷயத்தில் இந்திய இறையாண்மை எந்த கேள்வியும்ம இல்லாமல் தூங்குகின்றது...


நம்ம ஊரில் ஆயுதபூஜைக்கு இரும்பு சாமான்களை துடைத்து பட்டை போட்டு படையல் வைப்பது போல் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்துக்கு நம் ராணுவ தளவாடங்கள் அணிவகுத்து காட்சி நடத்துவோம்....அது ஒரு நாளும் இந்திய பெருங்கடலில் சிங்கள ராணுவத்தையோ அல்லது சிங்கள மீனவனையோ இது போல் செய்தது இல்லை அல்லது பயமுறுத்துவது போல ஒரு சின்ன லுலுலாயி வேலையை கூட செய்தது இல்லை...


எல்லைதாண்டி வந்த எத்தனையோ சிங்கள மீனவனையும்,பங்களாதேஷ் மீனவனையும் கைது செய்து முறைபடி அவர்கள் அரசிடம் அல்லது அவர்கள் நாட்டின் தூதரகத்தில் விட்டு விடுவோம்... யாரையும் நிர்வாணபடுத்தி துப்பாக்கியால் சுட்டது இல்லை....



உலகின் மிக பழைமையான தொழில் உங்களுடையதுதான்...அதே வேளையில் உலகில் ஆறு மொழிகள் மட்டுமே மிக தொன்மையானவையாம்.....அதில் நீ பேசும் தமிழ் மொழியும் ஒன்று...

ஆம் எவ்வளவு பெருமையான விசயம் அல்லவா? இப்போது கூட நீ பேசி சிலாகிக்கும் நம் தமிழ் செம்மொழிக்கு450 கோடியில் விழா எடுத்தார்கள்...நம் பரப்பரை வீரம் பற்றி சீலாகித்தார்கள்.. யாரும் நம் வீரம் பற்றி மறந்து விடக்கூடாது அல்லவா? அதனால்தான்

அது எல்லாம் பழம் கதை இப்போது எல்லாம் அது பேசி புரயோஜனம் இல்லை....நீ கூட தெருமுக்கில் டீ குடித்து கொண்டே தினத்தந்தி படித்து விட்டு இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை கூட தமிழர் வீரம் பற்றி பெருமை பேசி இருக்கலாம்...ஆனால் அந்த வீரத்துக்கும் ஆதீத துரோகத்தால் முள்ளிவாய்காலில் முடிவு கட்டபட்டது..

முள்ளிவாய்காலில் மவுனம் காத்தோம் காரணம்....மாநில அரசு எல்லை இந்யிவில் வறையறுக்கபட்ட விசயம் அனைவருக்கும் தெரிந்ததுதான்...இறந்து போனது நம் இந்திய நாட்டு அதுவும் நம் தமிழ் நாட்டு செம்மொழியான தமிழ் மொழி பேசும் மீனவன்...


மாநிலத்தில் ஆட்சி செய்த எல்லா அரசுக்குமே இது போலான கையாகளாத தனம் இருக்கினறது...இதில் குறிப்பிட்ட யாரையும் குற்றம் சொல்ல முடியாது...இதில் மாநிலத்தில் ஆட்சி செய்த அனைவருக்கும் இதில் பொறுப்பு உள்ளது...

ஒரு 50 பேர் சாகும் போதுதான் ஒரு அரசு விழிக்கும்... ஏனெனில் அரசுக்கு எத்தனையோ தலைக்கு மேல் வேலை இருக்கின்றது....சரி மாநில அரசு விழிக்க வேண்டும்... அதுவும் விழிக்கவில்லை....100 பேர் செத்தார்கள்.. மத்திய மாநில அரசுகள் விழித்து இருக்க வேண்டும்...அவர்கள் விழிக்கவில்லை...200 ஆயிற்று,300 ஆயிற்று,400 ஆயிற்று,500 ஆயிற்று அதுக்கு மேலும் இறந்து கொண்டு இருக்கின்றார்கள்...எந்த கேள்வியும் கேட்கவில்லை என்றால் ஏதோ தப்பு இருப்பதாக உங்கள் மர மண்டைக்கு எட்டவில்லை...உங்களுக்குள் ஒற்றுமை இல்லை.. அல்லது மாநிலத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை....

எனக்கு தெரிந்து நீங்கள் தொழிலை மாற்றி விடுவது நல்லது... உயிர் பயம் இருந்தால் நீங்கள் தொழிலை மாற்றியே ஆக வேண்டும்.... ஆம் நண்பர்களே உங்களுக்கு இதே நிலைதான் நீடிக்கும்..

அடுத்த மாதம் இதே போல் இந்திய பெருங்கடலில் வலையறுப்பு சம்பவம் மற்றும் சிங்களவர்கள் நிர்வாண மீனவ பேஷன் ஷோ நடத்துவார்கள்...யாராவது ஒரு மூளை சூடுள்ள சிங்களவன் துப்பாக்கியால் சூட்டு வைப்பான்... நீங்கள் எப்படியும் நிச்சயம் இறந்து போவீர்கள்...அப்படி நீங்கள் இறந்து போய்விட்டால் என்ன நடக்கும் என்பதை தீர்க்க தரிசனம் போல் சொல்கின்றேன் கேளுங்கள்...

இங்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கும் தெரியுமா?

தினத்தந்தியில் மீண்டும் சிங்கள இராணுவம் அட்டுழியம் என்ற தலைப்பிட்டு செய்தி வரும்...

தமிழகத்தில் எந்த முதல்வர் ஆட்சிக்கு இருந்தாலும் ஒரு கண்டன்ம் தெரிவிப்பார்... இப்போதைய முதல்வர் கடிதம் எழுதுவார்... மாட்டுகாரன் செனைக்கு மாடு அழைத்து வருவதை கூட செல்போனில் பேசி முடிக்கும் போது... இப்போதும் கடிதம்தான்.....

உள்துறை அமைச்சகத்தில் இருந்து இலங்கையிடம் விளக்கம் கேட்கபோவதாக கடிதம் வரும்...

ஒரு வாரத்துக்கு பிறகு அந்த கடிதம் மற்றும் விஷயம் டிவி சீரியல்களால் மறக்கடிக்கபடும்....

ரொம்ப தீவிரமான தமிழர் அமைப்புகள் இலங்கை தூதரம் முன் ஆர்பாட்டம் நடத்தும்...

தேர்தல் வந்தால் தமிழனாய் இருந்து கொண்டு மீனவ்ர்கள் மீதான தூப்பாக்கி சூட்டை கண்டிக்காத ஆளும்கட்சியே ஒழிக என்பதாய் கோஷம் எழுப்பபடும்...

எதிர்கட்சி இறந்த மீனவனின் போட்டோவை பெரிதாக வால் போஸ்ட் அடித்து தேர்தல் நேரத்தில் ஓட்டி போஸ்டரில் சக்கரை கரைசலை ஊற்றி ஈக்களை மொய்க்க வைத்து பரிதாபம் தேடி....தேர்தலில் ஜெயிக்க வழிபார்பபார்கள்...

இறந்த மீனவன் குடும்பத்துக்கு பிரச்சனையின் சமயத்துக்கு ஏற்ப... ஒரு லட்சம் இரண்டு லட்சம் வழங்கபடும்... எலெக்ஷன் நேரம் என்றால் 3லட்சத்தில் இருந்து 5 லட்சம் கொடுக்கபடும்... போராட்டம் ரொம்ப தீவிரமானால் இறந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கபடும்...

இதுதான் நடக்கும் நீங்களும் மணலில் புதைத்து வைத்த டப்பா கஞ்சியை குடித்துக்கொண்டே அரசு கொடுத்த தொலைகாட்சியில் பார்த்து வைப்பீர்கள்...ரொம்பவும் போதை ஏறிவிட்டால் செல்போனில்

ஹலோ ....மீயிசிக்கா?
சித்ரம் பேசுதடி படத்தில் இருந்து வலை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் பாட்டை போட சொல்லி நேயர் விருப்பம் கேட்பீர்கள்...

யாராவது எல்லைதாண்டும் சிங்கள மீனவர்களை தமிழ எல்லையில் வந்தால் அவர்களை கைது செய்து புது உடை கொடுத்து...உணவு கொடுத்து தூதரகம் மூலம் இலங்கைக்கு கப்பல் மூலமோ அல்லது விமானம் மூலமோ வந்தாரை வாழவைக்கும் தமிழனால் அனுப்பி வைக்கபடுவான்...


தமிழக மீனவர்களே உங்களுக்கு உயிர் தப்பிக்க ஒரு உபாயம் சொல்கின்றேன் கவனமாக கேளுங்கள்...
உயிர்தப்ப வேண்டும் என்றால் ஒரே வழி... இருக்கின்றது... இல்லை எங்கள் தொழிலைதான் நாங்கள் செய்வோம் என்றால் எந்த பிரச்சனையும் இல்லை....ஊரில் இருக்கும் சொத்தை வந்த விலைக்கு விற்றுவிடுங்கள்... தர்பூசனி மொத்தமாக பயிரிடும் இடத்தில் போய், ஒரு காய் 10 ரூபாய் மேனிக்கு பேசி ஒரு 500 தர்பூசனி வாங்கி லாரி பிடித்து சென்னையில் ஏதாவது ஒரு நடையோரத்தில் கடை போடுங்கள்...

போலிசுக்கு லஞ்சம் என்றும், அந்த பகுதி தாதாக்களை கவர் செய்ய என கொஞ்சம் அமவுன்ட் எடுத்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்...நோச்சிகுப்பம் அல்லது அயோத்திக்குப்பம் பக்கம் வாடைகைக்கு வீடுபிடித்துக்கொள்ளுங்கள்....சப்போஸ் தொழிலில் தோர்தாலும் சென்னையில் உள்ள கடலில் வலை போட்டு மீன் பிடிக்கலாம்...

போர்குற்றத்தை விசாரிக்கவந்த பான்கீ மூனை மாமா என்று அழைத்தவர்கள்...சிங்களவர்கள்...இந்தியாவின் பாதுகாப்புக்கு பிரச்சனை செய்யாதவரை இந்திய அரசு எந்த கேள்வியும் கேட்க போவதில்லை../


வட இந்திய சேனல்களை பொறுத்தவரை பஞ்சாப்பீல் இறந்தால்தான் அது செய்தி... அதைவிட பாகிஸ்தானில் நடக்கும் விசயத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நம் நாட்டின் தென் கோடி இந்தியனுக்கு கொடுப்பதில் பெரும் தயக்கம்....அவர்கள் அப்படித்தான்...தமிழக சேனல்கள் பேசி புரயோஜனம் இல்லை..

தினமலரும், இந்துவும் எப்போதும் சிங்களவர் பக்கம்தான்...அவர்கள் செய்வது நியாயம் என்று எழுதுவார்கள்...இவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்து இருக்க கூடாது என தரையில் இருந்து கொண்டு வாதம் செய்வார்கள்...அவர்களை பொறுத்தவரை மயிலாபூரில் தண்ணியும் கரண்டும் ஒழுங்காக தடையில்லாமல் வந்தால் போதும்....


ஆனால் சிங்களவர்கள் ஒரு போதும் இந்தியாவை ஒரு நேச நாடாக வைத்து பார்ப்தில்லை... விரைவில் நம் கண்ணை குத்த தொடங்கும் படலம் விரைவில் நடக்கும்...அப்போது எல்லோரும் ஒன்று சேர்ந்து கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல் குரல் கொடுப்போம்.... அப்போது எல்லாமே கடந்து போய் இருக்கும்..

ஒரு கோபத்தின் வெளிபாடாய் இந்த கடிதம்.... மீனவ மக்களை காயபடுத்த அல்ல....

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலு பேரு வாசிக்க ஓட்டும் பின்னுட்டமும் ரொம்ப முக்கியம்...

குறிப்பு ..
எழுத்து பிழைகள் இருக்கும்.. வேலை இருப்பதால் வந்து சரி செய்கின்றேன்..

சென்னை இணைய கருத்தரங்கம் மற்றும் சின்ன பதிவர் சந்திப்பு... ஒரு பார்வை...

அரசின் இலவச திட்டங்களை எள்ளி நகையாடும் அல்லது நக்கல் விடும் மேட்டுக்குடியினர் அதிகம் வசிக்கும் சென்னை போட் கிளப், 3ஆவது அவென்யூவில் இருக்கும் அண்ணா பல்கலைகழக அலுமினி கட்டிடத்தில் உள்ளே உள்ள, ஹேக்டே ஹாலில்...தமிழ் இணையவளர்ச்சி பற்றிய சிறிய கருத்தரங்கம் நடந்தது....


நான் காலையிலேயே குடும்பஸ்தனாக சில வேலைகள் பார்த்து விட்டு... அங்கு புறப்பட சற்று நேரம் பிடித்தது... மணி பத்துக்கு மேல் ஆனதாலும் கூட்டம் ஆரம்பித்து விடும் என்ற காரணத்தாலும்.... பதிவர் லக்கிக்கு போன் செய்ய... இன்னும் யாரும் வரவில்லை...நீங்கள் பொறுமையாக வாருங்கள் என்றதும் நானும் கொஞ்சம் வண்டியின் வேகம் குறைத்து போனேன்...
(நம்ம சென்னை பதிவர்களுடன் நான்....)

முந்தாநாள் பின்புறமாக விழுந்த வலியின் எச்சங்கள் அல்லது மிச்சங்கள் நடுமுதுகில் சின்ன வலிகளை சின்ன சின்ன பள்ளங்களில் ஏற்படுத்திக்கொண்டு இருந்தன....அதனால் வாகனத்தை வேகம் குறைத்தே செலுத்தினேன்...போட்கிளப்பில் ஏற்கனவே பலமுறை வாகனத்தில் சுற்றி இருக்கின்றேன்... அதனால் வழியில் எந்த குழப்பமும் இல்லாமல் போய் சேர்ந்தேன்...

கூட்டம் சேர்ந்ததும் இனிதே ஆரம்பித்தது...பழம் பதிவர் ஓசை செல்லா... வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தார்...நம்ம ஆசிப் அண்ணாச்சி இனிய அதிர்ச்சியாக வருகை தந்து இருந்தார்....

நண்பர் அஜயன் பாலா...சிக்கிமுக்கி மற்றும் தடாகம் இணையதளமும் இணைந்து... கொஞ்சம் தேநீர் நிறைய ஆகாயம் எனும் சிறு தமிழ் இணையகருத்தரங்கம் அவசரகதியில் எந்த அழைப்பிதழும் இல்லாமல் இவ்வளவு குறிகிய காலத்தில் அழைப்பு விடுத்து..அந்த அழைப்பை ஏற்று வருகை தந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்...
(ஓசை செல்லா....மணிவண்ணன்,ஆசிப்அண்ணாச்சி,பாலாபிள்ளை,நான்)
சிக்கிமுக்கி இணையதளம் சார்பாக பேச வந்த தாரா இணையதளவளர்ச்சியை புள்ளி விவரத்துடன் சிறு குறிப்பில் இருந்து எல்லா விவரத்தையும் சொன்னார்.. பொதுவாக இணையதளபயண்பாடு என்பதுஇராணுவத்துக்காக உருவாக்கபட்டதையும் அது சட்டென உலகை வலைத்துக்கொண்டதையும் சொன்னார்.... இன்னும் இணையம் தமிழில் வளர பல படைப்புகள் வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்... அதையே தடாகம் இணையதளம் சார்பாக பேச வந்த நண்பரும் அதே கருத்தை பகிர்ந்து கொண்டார்...

அடுத்ததாக கொஞ்சம் தேநீர் எல்லோருக்கும் கொடுக்கபட்டது...இரண்டு சின்ன சைஸ் சம்மோசாவும் காரசில்லிசாசும் வைத்து காலை பசி ஆற்றினேன்...காலையில் எதுவும் சாப்பிடவில்லை....அடுத்ததாக பதிவர் லக்கி இணையம் பற்றி பேசினார்... திரட்டிகளில் ஓட்டுக்களுக்கு அடித்துக்கொள்ளும் கயவாலி தனத்தை சாடினார்......

அதன் பிறகு பேச வந்த அண்ணாச்சி ஆசிப்மீரான்... இணையம் கடந்து வந்த பாதையையும்.. முதன் முதலில் தமிழ் எழுத்துக்களை இணையத்தில் பார்த்த போது ஏற்பட்ட சந்தோஷத்தையும்.... தமிழ் மொழி இணையத்தில் வளர்ச்சி அடைய ஆரம்பித்த கதைகளை அற்புதமாக தொகுத்து சொன்னார்... தனக்கு கவிதைகள் பிடிக்காது என்பதையும்... அதனால் கவிதைகளுக்கு நக்கலாக கவுஜை என்று வைத்ததையும் சொன்னார்.....

இப்போது எல்லாம் முன்னை போல் அதிகம் எழுதுவது இல்லை என்று சொன்னார்....அண்ணாச்சியை கம்பேர் செய்யும் போது நான் எல்லாம் இரண்டு வருடத்தில் வந்து ஆட்டடம் போடும் காமெடியன் நான்.....அவர்கள் கடந்து வந்த நீண்ட நெடிய வரலாற்றை மிக சுத்தமான தமிழில் சுவைபட தெரிவித்தார்...

ஓசை செல்லா நடக்கும் நிகழ்வுகளை சலனபடமாக தனது கைபேசியில் எடுத்தக்கொண்டு இருந்தார்...

அடுத்ததாக கேபிள் பேச ஆரம்பிக்க...4வருடத்துக்கு முன்பே வலைதளத்துக்கு தான் வந்தாலும் வெகுதீவிரமாக எழுத ஆரம்பித்தது.... இரண்டு வருடங்களாகதான் என்று சொன்னார்...பதிவு எழுதுவதை விட அதற்கு மார்கெட்டிங் ரொம்ப முக்கியம் என்று சொன்னார்.... அதனால் திரட்டிகள் அவசியத்தை பற்றி பேசினார்...

நடுவில் பதிவர் மற்றும் இயக்குனர் செல்வகுமார் ஒரு கேள்வி எழுப்பினார்.......இணையத்தில் இப்போது எல்லாம் பள்ளிகூடம் போல் பல பயனுள்ள தளங்கள் செயல்படுகின்றன... அதில் தமிழ் மொழியை எப்படி புகுத்துவது என்பதையும் சற்று விளக்கி சொல்ல சொன்னார்....
(வந்திருந்த கூட்டம்...)

மணிவண்ணன் அவர்கள் கேபிளுக்கு அடுத்து பேச வந்தார்....தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டுஅங்கு சில கோரிக்கைகள் வைத்து விட்டு வந்ததை சொன்னார்....அமெரிக்காகவில் 30 ஆண்டுகள் இருந்த போது அந்த நாட்டின் மக்கள் மனநிலை கருத்து சுதந்திரம் போன்றவற்றை மிக மிக அழகாக விளக்கினார்....எனக்கு மிக அதிக தகவல்கள் கிடைக்கபெற்றன...
(முக்கிய விருந்தினர்...மணிவண்ணன் மற்றும் பாலாபிள்ளை)

அதன் பிறகு பேச மலேசியாவில் இருந்து வந்த பாலாபிள்ளை அவர்கள் இணையத்தில் தமிழ் எழுத்துருவை பலரும் பயன்படுத்தும் விதத்தில் ஆரம்பகால முயற்ச்சிகளையும்...அதன் பின் நம் சமுகம் வளர்ச்சி அடைந்த சமுகமாக எண்ணிக்கொண்டு இருக்கின்றோம்.. ஆனால் உண்மையில் நாதம் வளர்ச்சி அடையவில்லை... நமக்கு எல்லாம் தெரியும் என்று அலட்சியமாக இருக்கின்றோம்... ஆனால் நாம் இன்னும் பாயச்சலாக தபவ வோண்டிய கட்டங்கள் நிறை உள்ளது... என்றும் அதற்கு இந்த தமிழ் இணையம் மற்றும் அதிக அளவில் பயண்படுத்தும் பிளாக்கர்களுக்கு பெரும்பங்கு இதில் உண்டு என்று பல மேனாரிசங்களுடன் உத்வேகத்துடன் பேசினார்......

முடிவாக எழுத்தாள நண்பர் முருகள் பேசினார்... இன்னும் அரசு சரியான எழுத்துருவை அறிவித்து அரசாணையாக போட்டு செயல்படுத்தவில்லை என்று குறைபட்டுக்கொண்டார்..

முடிவாக நேரமின்மைகாரணமாக இத்தோடு நிகழ்ச்சியை நிறைவு செய்கின்றேன் என்று சொல்லி நிகழ்ச்சியை நன்றி கூறி நிறைவு செய்தார்.. அஜயன் பாலா............

இந்த கருத்தரங்கில் பேச அழைத்து இருந்தாலும்.... எங்கள் தலைவர் உண்மைதமிழன் அவர்கள் உடல் நிலை சரியல்லாத காரணத்தால் தனது எண்ணவோட்டங்களை தனது வலைபதிவில் ஒரு 30 பக்கத்துக்கு ஏதாவது எழுதி வைப்பார் என்று நம்பிகின்றேன்...

எப்போதும் இது போல எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கூடலே இருக்கும் செவ்வாழையான வண்ணத்து பூச்சி சூர்யவை காணவில்லை... எனக்கு தெரிந்து ஆந்திராவில் பணி காரணமாக போய் இருக்கலாம் என்று நினைக்க தோன்றுகின்றது.....

தண்டோரா மூன்று மணி நேரம் கழித்து மாயமாய் மறைந்து போனார்....
(ஒரு குரூப் போட்டோ)

படங்களை கிளிக்கி பார்க்கவும்...

கீழே எல்லோரையும் நிக்க வைத்து குரூப்போட்டோ எடுத்தேன்...நான் இருக்கும் போட்டோவை ஓசை செல்லா எடுத்தார் அவருக்கு என் நன்றிகள்....

================================

சென்னை போட்கிளப் பார்வைகள்......

இது அடையாறு கரையில் மந்தவெளி பக்கத்தில் உள்ளது.... ஒரு கிரவுண்டின் இப்போதைய சந்தை மதிப்பு எட்டுகோடிரூபாயாம்....

இந்த இடத்தில் இனியாராவது விற்பனை செய்ய வேண்டும் என்றால் கிளப்பிடம் விற்க வேண்டுமாம் அதில் இதுவரை புக் பண்ணி இருப்பவர்கள் 218 அந்த பிரபல நடிகர் 218வது இடத்தில் இருக்கின்றாராம்...அதற்குமுன் அந்த இடத்தில் பங்களா வாங்க போட்டி போடுபவர்கள் 200க்கு மேல் இருக்கின்றார்கள்...

கூட்டம் இரண்டு மணிக்கு முடிந்து... நான், லக்கி,காவேரிகணேஷ்,நட்டு போல்டு,நித்யகுமாரன், என மாலை 5வரை பேசக்கொண்டு இருக்க... அதன் பிறகு கேபிள் மற்றும் கேஆர்பி செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்....

போட்கிளப்பின் வாசலில் உள்ள சின்ன பிள்ளையாருக்கு மணி அடித்து அர்சனை செய்தனர்.....

பல பணக்கார வீட்டு பெண் குழந்தைகள்... டென்னிஸ் மற்றும் ரன்னிங் பயிற்சி எடுத்தனர்...அவர்களைதான் பார்க்கின்றோம் என்று தெரிந்த பிறகு ஆட்டத்திலும் நடையிலும் வித்தயாசத்தை உணர முடிந்தது....

பதிவுலக நண்பர்களோடு பேசிக்கொண்டு இருந்த போது பேச்சை கெடுக்கும் விதமாக, போட் கிளப்புக்கு வெளி சாலையில் டிசர்ட் போட்டு, சின்ன டவுசர் மாட்டி... சின்ன தொப்பையையும் பெரிய தொப்பையையும் கரைக்க ஜாக்கிங் போய் கொண்டு இருந்தார்கள்....வயது பெண்கள் கிராஸ் செய்யும் போது நான் பேசும் வாக்கியங்களில் எனக்கு தடங்கல் ஏற்பட்டது...

ஜாக்கியோட கேரக்டர் தெரியும் என்பதால் பதிவுலக நண்பர்கள் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை


மாலை 5மணிக்கு மேல் நிறைய முதியவர்கள் வாங்கிங் போக போட்கிளப் சாலை களைகட்ட தொடங்கியது.... ஹாய், பாய்களோடு அமெரிக்காவின் அரிசோனா மாநில தெருவில் நிறபது போல் ஒரு பிரம்மை ஏற்பட்டது...
வாக்கிங்கில் இந்தியா சிமெண்ட் தலைவர் சீனுவாசன் நடைபயின்றார்....

பென்சும், பிஎம்டபுள்யூவுமாக.... போவதும் வருவதுமாக வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்திக்கொண்டு இருந்தது...நிறைய காரை பெண்கள் ஓட்டிச்சென்றனர்... பலதில் கொழு கொழு நாய்கள் உட்கார்ந்து இருந்தன....


ஒரு பெண் காரில் உட்கார்நது இருந்தார்.. உதட்டில் தேவைக்கு அதிகமாகவே லிப்ஸ்டிக் போட்டு இருந்தார்... ஒரு சிகரெட் பற்ற வைத்து ரசித்து நுரையிரலில் நிக்கோடின் நிரப்பிக்கொண்டு இருந்தார்.. புகை நமக்கு பகை என்பதை எங்கேயோ படித்து இருப்பார் போல... அதனால் டிரைவரை காரை விட்டு பத்து அடி தள்ளி நிக்கவைத்து விட்டார்....கணவர் வந்தார் கட்டி பிடித்தார்... டிரைவர் வந்து உட்கார்ந்து காரை சீறீனார்....

வழக்கம் போல படங்களை கிளிக்கி பார்க்கவும்...

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலு பேரு வாசிக்க ஓட்டும்,பின்னுட்டமும் ரொம்ப முக்கியம்...

(The Tournament -2009)15+ மரணம் மட்டுமே விடுதலைக்கான வழி...

ரொம்ப நாள் ஆயிற்று இது போல ஒரு ஆக்ஷன் படம் பார்த்து...துரத்துதல் மற்றும் விறு விறுப்புடன்...நிறைய வன்முறையோடு ஒரு படம்....இந்த படத்தை தவறவிடாமல் கண்டிப்பாக பார்க்கலாம்...

13டாஸ்மேட் அப்படின்னு ஒரு படம் ரொம்ப நாளைக்கு முன்ன பாத்தே தீர வேண்டிய படத்தின் லிஸ்ட்டில் எழுதி இருப்பேன்...அந்த படத்தை போலவே ஆனால் இது கொஞ்சம் வித்தியாசம்...


அதீத பணம் இருந்தால் மனம் அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று கேள்வியோடு கும்மாளமிட்டபடி எந்த தவறுக்கு துணை நிற்கும்.. எது நடந்தாலும் பணத்தால் அடித்து காரியத்தை சாதித்து கொள்ளலாம் என்ற நினைப்பு மேலோங்கும்...

மிதமிஞ்சிய பணம் இருந்தால் குன்றின் மீது ஏறி யானை போர் பார்க்க முதலில் மனது ஆசைபட்டாலும்... எவ்வளவு நாளைக்குதான் யானை போரையே பார்த்துக்கொண்டு இருப்பது....

யானைக்கு நடுவில் சக மனிதர்கள் இரண்டு பேர் இருந்தால் எப்படி இருக்கும்? என்று குரூரமாக அதிக பணம் இருந்தால் மனம் குரூரமாக கணக்கு போடும்... அவர்கள் ஓடுவதையும் தப்பிக்க நினைத்து, உயிர் பயத்தில் கதறுவதை பார்க்க மனது குதுகலிக்கும்...ஏனென்றால் பணத்தை வீசி எறிந்தால் எதுவும் கிடைக்கும் என்ற நிலை ...

சரி மேலே சொல்வது எல்லாம் ஒரு பணக்காரன் நினைத்தால் இதனை செய்ய முடியும்... இதுவே ஒரு 50 பேர் கொண்ட பண முதலைகள் ஒன்று சேர்ந்தால்.. அவர்கள் எப்படி பட்ட விளையாட்டை ரசிப்பார்கள்.... நம்மளை மாதிரி வெத்தா உலக கோப்பையை நடு ராத்திரியில கண் முழிச்சி பார்ப்பாங்கன்னு நினைக்கிறீங்களா? இல்லைவே இல்லை....ரத்தம் தெறிக்க உயிர்பயத்தில் ஒடுவதை பார்த்து ரசிக்கும் விளையாட்டுகளைதான் ரசிப்பார்கள்.........

உதாரணத்துக்கு ஏழை வர்கத்தின் விளையாட்டு என்ன... ? சில்லு, கண்ணாமூச்சி, கோலி, கோட்டி,இப்படித்தான் இருக்கும்....கொஞ்சம் அப்பர் மீடில்கிளாஸ்கிட்ட.. செஸ்,கேரம் போர்டு,பிசினஸ் போன்ற கேம்கள் இருக்கும்...

ரொம்ப பணம் அதிகமா இருக்கும் வீட்ல பார்த்திங்கன்னா.... இரத்தம் வன்முறை தெரிப்பது போலான குவாலிட்டியுள்ள வீடியோ கேம்ஸ் இருக்கும்... அது அப்படித்தான்... அது போலதான் இதுவும்....

(The Tournament -2009) படத்தின் கதை என்ன???


அந்த விளையாட்டை பத்து வருடத்துக்கு ஒரு முறை...ஏழு வருடத்துக்கு ஒருமுறை விளையாடுவாங்க...விளையாட்டு என்னன்னா? அந்த நகரத்துல ஒரு பத்து பேர் அந்த போட்டியில கலந்து கிட்டா....அந்த பத்து பேரும் யாரும் யாரையும் சாவடிக்கலாம்...


எப்படி வேண்டுமானாலும் சாவடிக்கலாம்...ஆனா எப்பபடியாவது சாவடிக்கனும்...போட்டியில இருந்து நீங்க விலகவே முடியாது... அப்படி விலகனும்னா... உங்க உயிரை எடுத்துடுவாங்க... காரணம் உங்க மேல மில்லியன் கணக்குல பணம் கட்டி ஒரு பணக்கார கூட்டம் விளையாடிகிட்டு இருக்கு.....அதுல கடைசியா உயிரோட ஜெயிக்கறவனுக்கு மில்லியன் கணக்குல பணம் கெடைக்கும்......

1.அதிகமான இரக்கம் இல்லாத கிரிமினல் விளையாடும் போட்டி இது ... உதாரனத்துக்கு ஒருத்தன் ஆள்காட்டி விரலை மட்டும் ஆயிரத்துக்கு மேல் கட் பண்ணறதே தொழிலா பண்ணறவன் இதுல கலந்துகிட்டு இருப்பான்...

2. இரக்கம் என்பதே இதில் துளியும் கிடையாது...இரக்கபட்டால் உன் உயிர் ஹோகயா.....

3.ஜெயிப்பவனக்கு 10 மில்லியன் டாலர் பரிசு கெடைக்கும்...

4. போட்டியில யாரு செத்தாலும் கேஸ் கிடையாது.... எல்லா இடத்துலயும் கேமரா பொருத்தி இருப்பாங்க... அரசாங்கத்தின் போக்குவரத்து பர்சனல் கேமராகூட இவங்களுக்கு சப்போட் பண்ணும்....எல்லாத்துக்கும் லஞ்சம்

5. போட்டியில கலந்துகிட்டவங்களுக்கு முதல்ல சின்ன ஆப்ரேஷன் பண்ணி ஒரு டிவைசை உங்க உடம்புல வச்சி தச்சிடுவாங்க... அதனால் நீங்க எங்க போனாலும் தெரியும்....

6. உங்க கைல ஒரு கல்குலேட்டர் போல ஒரு சின்ன ரிசீவர் கொடுத்துவாங்க அதுல உங்க மூவ்மென்ட் எல்லாம் எல்லாருக்கும் தெரியும்... சோ உங்க பக்கத்துல போட்டியில இருக்கறவன் வந்தா உங்களுக்கு தெரியும்.....அவனை கொலை செய்யறதுதான் உங்க வேலை.....

7. சப்போஸ் போட்டியில எதிராளி உங்களை அட்டாக் பண்ணி உங்க கிட்ட இருக்கற ஆயுதத்தை பிடுங்கிட்டு நீங்க நிராயுதபாணியா கெஞ்சி உங்களை மன்னிச்சு விடுறது மட்டும் நடக்க வாய்ப்பே இல்லை.....நீங்க நிராயுதபாணியா இருக்கறத கேமராவுல பார்த்துட்டா... உங்க வயித்தல வச்சி தச்சது சின்ன டிவைஸ் மட்டும் அல்ல அது ஒரு பாமும் கூட... உங்க உடல் சிதறிடும்... அந்த திருப்பணியை போட்டி நடுவர்களே செஞ்டுவாங்க....

8.முப்பது போட்டியாளர்கள்....

9. முப்பது பேரும் மாத்தி மாத்தி அடிச்சிகிட்டு,சுட்டிகிட்டுவெட்டிகிட்டு எப்படிவேனாலும் சாகனும்...

10. இருபத்தி நாலுமணிநேரம்தான்...அதற்குள் ஒருவன் ஜெயித்தாக வேண்டும்... ஒரே ரூல் கொலை செய் அல்லது செத்து போ....

கேம் ஸ்டார்ட் நைள... நீங்க தயாரா????????????????




படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

டாப்லெஸ் ஷாட்டுகள் பார் சீனில் இரண்டு மூன்று வந்தாலும்... அதீத வன்முறை படத்தில் அதிகம்... தலை சிதறுவது.. உடல் சிதறுவது என படம் முழுவதும் ஒரே ரத்த சகதி... அதனால்தான் 15+ கொடுத்து இருக்கின்றேன்....

இந்த விறுப்பான போட்டியில சம்பந்தமே இல்லாமல் ஒரு பாதர் வந்து மாட்டுவது தனிக்கதை....

படத்தின் ஒளிப்பதிவு பாராட்ட வேண்டிய விஷயம்... ஏகபட்ட ஷாட்டுகள்..

எவன் எவனை சாவடிக்கபோறான் என்பது தெரியவே அரைமணி நேரம் ஆகும்...

எந்த ரூபத்துல வந்து சாவடிக்கபோறாங்கன்னு தெரியாம டிராவல் ஆகறதுதான் படத்தோட உயிர் நாடி..

கிளைமாக்ஸ்ல டிரக்இ பஸ் சேசிங் நைட் எபக்ட்ல எடுத்து இருப்பாங்க....அந்த சேசிங் ரொம்ப கஷ்டம்... நைட் எபக்ட் லைட் பண்ணி அதில் சேசிங் ஷாட் லைட்டிங் பண்ணி எடுக்கறதுகுள்ள தாவு தீர்ந்திடும்...இதுல வேற கார் டைவ் ஷாட்டுகள் வேறு....


முக்கியமா ஒரே நேரத்துல 11 பேர் ஒரு பாருல உயிருக்கு போராடி சண்டை போடுவது போலான அந்த ஷாட்டு எடுக்கபட்டு இருக்கும் விதம் இயக்குனர் குவன்டின் எடுத்தது போல் இருக்கும்...

படத்தின் திரில்லருடன்.. விறுவிறுப்புகடைசிவரை கொண்டு போவது படத்தின் திரைக்கதையின் சிறப்பு....

பாதர் பேசும் போது... இந்த கேம் பைத்தியக்காரதனமா இல்லையா? என்று கேட்க.. அதற்கு அந்த பெண் டிவி பார்த்திங்கன்னா அதுல எவ்வளவு விஷயம் இருக்குதுன்னு சொல்லறது அழகான வசனங்கள்...

பாருல நடக்கற சண்டையில் ஒரு டாப்லெஸ் பெண்ணின் இரண்டு மார்புக்கு நடுவில் துப்பாக்கி வைத்து ஸ்லோ மோஷனில் அந்த சண்டை ஆரம்பிக்கும் இடம்... கேமரா கோணத்துக்கும் ரசனைக்கு பெயர் போன காட்சி...

இந்த படத்தை எடுக்கும் போதே ஏகபட்ட பிரச்சனையாம்.... பட்ஜெட் டபுள் மடங்கு ஆயிடுச்சாம்...காரணம் படத்தை பார்த்தாலே தெரியும்... எந்த இடத்திலியும் இயக்குனர் காம்பரமைஸ் பண்ணிக்கலை.....அது எல்லா சீன்லயும் தெரியும்...

படத்தை 2007ல எடுக்க ஆரம்பிச்சு2009லதான் ரிலிஸ் செஞ்சாங்க...

நானே எல்லாத்தையும் சொல்லிட்டா சுவாரஸ்யம் கொறஞ்சிடும்... அதனால இந்த படத்தை அவசியம் பாருங்க...

படத்தின் டிரைலர்....



படக்குழுவினர் விபரம்..

Directed by Scott Mann
Produced by Gina Fegan
Glenn M. Stewart
Keith Bell
Written by Jonathan Frank
Nick Rowntree
Gary Young
Starring Robert Carlyle
Kelly Hu
Ving Rhames
Sébastien Foucan
Liam Cunningham
Ian Somerhalder
Scott Adkins
Music by Laura Karpman
Cinematography Emil Topuzov
Editing by Rob Hall
Distributed by AV Pictures (worldwide)
Dimension Films (US)
Entertainment Film Distributors (UK)
Release date(s) Oct 20, 2009
Running time 97 minutes
Country United Kingdom
Language English
Budget £3,600,000

அன்புடன்
ஜாக்கிசேகர்

பிடித்து இருந்தால் ஓட்டுபோடுவது உங்கள் இஷ்டம்....

குறிப்பு....
பதிவுகளுக்கு ஒட்டிட்டும், பின்னுட்டம் இட்டும் என்னை உற்சாகபடுத்தும் உங்களுக்கு என் நன்றிகள்...வலைசரத்தில் இந்த பக்கத்தை பற்றியும்எழுதிய
பதிவர் கேஆர்பி செந்திலுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...

8லட்சம் ஹிட்ஸ்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகள்...

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner