7வது சென்னை சர்வதேச திரைப்பட விழா...

குதுகலிக்க சென்னை தயாராகிவிட்டது.... அந்த கொண்டாட்டம் வருடத்துக்கு ஒரு முறை நடக்கும்... அந்த திருவிழாவுக்கு பெயர்... சென்னை உலக திரைப்டவிழா...

மேட்டுக்குடி மக்கள் ராகங்களை தெரிந்து கொண்டு நல்லி பட்டை கட்டிக்கொண்டு... டிசம்பர் மாதத்தில் சபா சபாவாக அலைந்து... பாடல் கேட்டு, லயித்து... உங்க அம்பி ஸ்டேட்ஸ்ல எங்க இருக்கான் போன்ற... சம்பிரதாய கேள்விகளை கேட்டுக்கொண்டு இருக்கும் .... மேட்டுக்குடி மக்கள் மட்டும் சந்தோஷமாக டிசம்பர் பொழுதுகளில் இருந்தது அந்த காலம்...

சினிமா ரசிகர்களுக்கு ஒவ்வோறு வருடமும் டிசம்பர் மாதம் மறக்க முடியாத மாதமாக கடந்து ஆறு வருடங்களாக மாறி இருக்கின்றது...

கடந்த 6 வருடமாக சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடந்து கொண்டு இருக்கின்றது.. அதில் ஒரு வருடத்தை தவிர மற்ற எல்லா வருடங்களிலும் கலந்து கொண்டு நான் சந்தோஷபட்டு இருக்கின்றேன்... இந்த வருடம் எழாவது வருடம்...

இந்த விழாவில் நான் கலந்து கொள்வது சந்தேகம்தான்.. ஏனெனில் இரண்டு படங்கள் படபிடிப்பு நடந்து கொண்டு இருப்பதால் தனிதெலுங்கான போல் சாத்திய கூறுகள் ரொம்பவும் கம்மியாக இருக்கின்றது...

ஒரு நாளைக்கு 5 படம் மொத்தம் மூன்று தியேட்டர்கள்... உட்லண்ட்ஸ்... உட்லண்ட்ஸ் சிம்பொனி..,சவுத் இன்டியன் பிலிம் சேம்பர்... அப்படின்னா ஒரு நாளைக்கு 15 படம் திரையிடுவார்கள்...ஆனால் நீங்கள் ஒரு நாளைக்கு 5 படம்தான் பார்க்க முடியும்.... மொத்தம் பத்து நாட்கள்...பத்து நாளும் பெஸ்ட்டிவல் அட்டென்ட் பண்ணினா.... ஒரு ஆள் சராசரியாக 50 படம் பார்க்கலாம்....

படம் திரையிடலுக்கு முன்பே திரைப்படம் பற்றிய சிறிய அறிமுகத் புத்தக வடிவில் கொடுத்து விடுவதால்.. நீங்கள் படங்களை செலக்ட் செய்து பார்க்கலாம்...


டிக்கெட் விலை 500 ரூபாய்.. மேம்பர்களுக்கு என்றால் 300 ரூபாய்...
டீ , பட்டை சோறு சாப்பிட்டு விட்டு அடுத்த படத்துக்கு ஓடிய பொழுதுகள் நினைவுக்கு வருகின்றன...

38 நாடுகளில் இருந்து மிகச்சிறந்த படங்கள் திரையிட இருக்கின்றார்கள்... சில படங்கள் நெஞ்சை தொடும்.. சில படங்கள் குப்பையாக இருக்கும்... சில படங்கள் எப்படி இந்த படம் எல்லாம் பெஸ்ட்டிவலில் வந்தது??? என் ற கேள்விகளோடு பார்ப்பீர்கள்....

படம் நன்றாக இருந்தாலும் இல்லா விட்டாலும் படம் முடிந்ததும் எழுந்து நின்று கை தட்டுவார்கள்...மிக அமைதியாக படம் பார்ப்பார்கள்....

18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் அனுமதி...

எந்த படத்துக்கும் சென்சார் கிடையாது.....

நான் பார்த்து எழுதிய பல படங்கள் இது போல் பெஸ்ட்டிவலில் பார்த்ததுதான்... எங்க டிவிடி கிடைக்கும்? என்றால் நான் எங்கே போவது....

பலர் வீட்டில் இருந்து ஆபிசுக்கு போவது போல் மதியம் சாப்பாடு கட்டிக்கொண்டு வந்து சாப்பிட்டு விட்டு படம் பார்ப்பார்கள்...

பத்து நாளைக்கு லாஸ் ஆப் பே பரவாயில்லை என்றால் படவிழாவில் கலந்து கொள்ளுங்கள்...

இப்போது எல்லாம் விஸ்காம் மற்றும் எல்க்ட்ரானிக் மீடியா மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் அதிக அளவில் பங்கு பெருகின்றார்கள்...
மாணவர்களுக்கு டிக்கெட் 300 ரூபாய் மட்டுமே...கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் அனுமதி...
விழாவில் சினிமா பிரபலங்கள் சர்வசாதாணமாய் வந்து போவார்கள்... 3 வது சென்னை உலக படவிழாவில் எனது பக்கத்து சீட்டில் உட்கார்ந்து படம் பார்த்தவர்.. நம்ம சியான் விக்ரம்

மேலும் விபரங்களுக்கு இந்த தளத்துக்கு சென்று விபரம் அறிந்து கொள்ளுங்கள்... சென்னை உலக படவிழா...

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(DOT THE I )18+ உலக சினிமா/ஸ்பெயின்.. முக்கோண காதல் கதை...

காதல் பற்றி என்ன பேசினாலும்.. எதோ ஒரு விதத்தில் எவர் மீதாவது காதல் வந்து தொலைத்து கொண்டேதான் இருக்கின்றது... சமுக கட்டுபாட்டுக்கு பயந்த போய் அது தலையில் தட்டி உட்கார வைக்கின்றோம்... அந்த சமுக கட்டுபாடு மட்டும் இல்லை எனில்... நினைத்த பார்க்கவே பயமாய் இருக்கின்றது...

திருமணத்துக்கு முதல்நாள் வரை சும்மா இருந்து விட்டு ...நாளை கல்யாணம் எனும் போது ஓட்டம் எடுக்கும் மணமகளையும் மணமகனையும் என்ன செய்யலாம்?... வீட்டில் பெண் பார்த்து நிச்சயம் எல்லாம் செய்து விட்டு எல்லா வற்றிர்க்கும் மண்டையை மண்டையை ஆட்டி விட்டு திருமணத்துக்கு முதல்நாள் கிளம்பிய மணமகன் கதைகள் ஏராளம்...

சில பெண்கள் நிச்சயதார்த்தம் எல்லாம் முடிந்த பின்பு அதன் பின்பு யாராவது பையனை பார்த்து மனதை கொடுத்து அந்த காதலுக்காக உயிரை கூட கொடுப்பார்கள்.. என்ன செய்வது காதல் அல்லவா? இந்த கதையும் அது போல் நிச்சயதார்த்தம் முடிந்து போய் இவன்தான் கணவன் என்று சொன்ன பிறகு... வேறு ஒரு ஆடவனுடன் காதல் வந்து தொலைக்கின்றது ஒரு பெண்ணுக்கு...

DOT THE I படத்தின் கதை இதுததான்....

Carmen ஒரு இளம் ஸ்பேனிஷ் பெண் அவளுக்கும் Barnaby'sக்கு திருமணம் நிச்சயம் செய்கின்றார்கள்..Barnaby's ஒரு பணக்காரன் ஒரு ஒயினை கூட சாதாரணகிளாசில் குடிக்கமாட்டான்... அதற்க்கு என்று இருக்கும் கோப்பையில்தான் குடிப்பான்.. அப்படி ஒரு பணக்காரதனம் அவன் வாழ்வில், நடவடிக்கையில் மிளிரும்...கார்மனுக்கு இவன் மேல்காதல்தான்....

ஸ்பெயி்னில் ஒரு பழக்கம் இருக்கின்றது... பெண்களுக்கான பேச்சிலர் பார்ட்டி அது.... அந்த பார்ட்டியில் அவள் ஒயின் குடித்து விட்டு யாருக்கு வேண்டுமானாலும் ஒரு ஆடவனுக்கு முத்தம் கொடுத்து விட்டு சிங்கிள் வாழ்க்கைக்கு குட் பை சொல்வது வழக்கம்.. அந்த பார்ட்டியில் இவள் அழகை ரசித்து அவளை வீடியோ எடுத்தக்கொண்டு இருக்கும் கிட்க்கு அந்த வாய்ப்பு கிடைக்கின்றது.... இருவரும் முத்தமிட்டாலும் அந்த முத்தமிடலில் அவள் அவன் மேல் காதல் வயப்படுகின்றாள்..... நிச்சயதார்த்த பெண்... யாரோ ஒருவனை முத்தமிட காதல் வந்து தொலைக்கின்றது... தமிழ்படம் போல இருக்கின்றதா?...

நிச்சயம் இல்லை இந்த படத்தின் ஆரம்பத்தில் தமிழ் படத்தை ஞாபக படுத்தினாலும்... போக போக இது உலக சினிமா என்பதையும் எதிர்பாராத திருப்பங்களையும் உள்ளடக்கியது இந்த படம்.....பார்த்து ரசியுங்கள்...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....

இந்த படம் முதல் பத்து நிமிடங்கள் .....ஒரு தமிழ் படம் பார்க்கும் உணர்வை இந்த படம் கொடுக்கும்...

ஒரு சாதாரண படத்தை போய் பார்க்கின்றோமே என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது இந்த படம் எதிர்பாராத திருப்பங்களை இந்த படம் கொடுக்கும்..

முக்கோண காதலாக இருந்தாலும்... அந்த பெண்ணின் உணர்ச்சி வெளிப்பாடு அற்புதம்...

கிளைமாக்ஸ் முடிந்து விட்டது என்ற பார்த்தால் டுவிஸ்ட் மேல் டுவி்ஸ்ட் வைத்து அசத்தி இருக்கின்றார் இந்த படத்தின் இயக்குனர்...Matthew Parkhill

இந்த படம் சுடான் பிலிம் பெஸ்ட்டிவலில் திரையிடபட்டது... பல்வேறு விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை பெற்ற படம் இது...

படத்தின் டிரைலர்...

படக்குழுவினர் விபரம்...

Directed by Matthew Parkhill
Produced by George Duffield
Meg Thomson
Written by Matthew Parkhill
Starring Gael García Bernal
Natalia Verbeke
James D'Arcy
Tom Hardy
Charlie Cox
Music by Javier Navarrete
Cinematography Affonso Beato
Editing by Jon Harris
Studio Alquimia Cinema
Arcane Pictures
Summit Entertainment
Distributed by Artisan Entertainment
Release date(s) Sundance Film Festival
January 18, 2003 (2003-01-18)
Spain
02003-10-31 October 31, 2003
United States
02005-03-11 March 11, 2005
Running time 92 minutes
Country United Kingdom
Spain
United States
Language English
Gross revenue $306,224


அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(BLIND CHANCE)18+ உலகசினிமா/ போலந்து... இரயிலை பிடித்தால்/விட்டால்

எல்லோருக்கும் ஒருசில வாய்புகள் ... கிடைத்தால் எப்படி இருக்கும்... சில வாய்ப்புகள் கிடைக்காவிட்டால் எப்படி இருக்கும்... வயிற்று பிழைப்புக்கு நான் தவறான பதையில் போய் இருந்தால்.. வேறு வாழ்க்கை... வேறுபாதை என்று வாழ்க்கை திசை மாறி இருக்கும்...

வாழ்வில் அது கிடைக்கவில்லை.. இது கிடைக்கவில்லை என்ற புலம்பும் பலரை பார்த்து இருப்போம்.. எது எது எப்போது கிடைக்கவேண்டும் என்று நம் தலையில் எழுதி இருக்கின்றதோ... அப்போது அது நிச்சயம் கிடைக்கும்...அதுதான் நிலைக்கும்..

BLIND CHANCE போலிஷ் படத்தின் கதை இதுதான்.....

Witek (Bogusław Linda) தந்தை இறப்பின் போது அவரது கடைசி ஆசை தன் மகன் டாக்டர் ஆக வேண்டும் என்று விருப்பம் கொள்கின்றார்... அவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற ரயிலை பிடிக்க போகும் அவன் ரயிலை பிடித்து இருந்தால் என்ன ஆகி இருப்பான் என்பதையும்.. ரயிலை பிடிக்காமல் விட்டு இருந்தால் என்ன ஆகி இருப்பான் என்பதையும்.. அவன் வரும் முன் ரயில் பிடிக்க முடியாத தூரத்தை அடைந்து இருந்தால் என்ன ஆகும் என்பதையும் இந்த படத்தில் பார்க்கலாம்...ஒருவனை சுற்றி நடக்கும் மூன்று விதமான கதை... அதற்க்கான பின்புலம் என்று பார்க்க படு சுவாரஸ்யம்.... அது என்ன என்பதை வெண்திரையில் பார்த்து மகிழுங்கள்....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

இந்த படம் 1981ல் எடுக்கபட்டு பல வருடங்கள் கழித்து 1987 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டடது...


இந்த படத்தின்இயக்குனர்Krzysztof Kieślowski உலகின் மிகச்சிறந்த இயக்குனர் பட்டியலில் இவர் பெயரும் உண்டு..

இவரின் ரெட், ஒயிட் ,புளு ,படம் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களால் கொண்டாடபட்ட படங்கள்..

படத்தில் அன்றைய போலந்து இளைஞர்களின் அரசாங்கத்து எதிரான மனநிலையையும்... அந்த கால கட்டத்து மாணவர்களின் மனநிலையையும் ஒரு சேர வெளிபடுத்திய படம் இது...

அரசுக்கு எதிரான போராட்டம் என்பது இல்லாத ஊரே... நாடே இல்லை என்று சொல்லலாம் போல் இருக்கின்றது...

படத்தின் திரைக்கதையும் அந்த இரயில் பிடிக்க ஓடி வரும் சீன்களும் அதற்க்கு எடுத்துக்கொண்ட மெனக்கெடல்கள் ரசிக்கதக்கவையாக இருக்கும்...

படத்தின் ஒரு காட்சி...

படக்குழுவினர் விபரம்...
Directed by Krzysztof Kieślowski
Produced by Jacek Szelígowski
Written by Krzysztof Kieślowski
Starring Bogusław Linda
Music by Wojciech Kilar
Cinematography Krzysztof Pakulski
Editing by Elżbieta Kurkowska
Distributed by Kino (USA)
Release date(s) May 1987
(United States)
Running time 122 minutes
Country Poland
Language Polish

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

பதிவர் சந்திப்பு...அகநாழிகைவெளியீடுகள்.. அய்யனார்கம்மா..(புகைபடங்களுடன்)


அகநாழிகை பதிப்பகத்தின் 5புத்தகங்கள் வெளியீட்டு விழா சென்னை கே கே நகரில் உள்ள டிஸ்கவரி புக்பேலஸ் புத்தக கடையில் முதல் மாடியில் நடந்தது...பொதுவாக பதிவர் சந்திப்பு இடம் கொடுத்து உதவும் புத்தககடை இதுதான்.... பல பதிவர் சந்திப்புகள் இந்த இடத்தில் அறிவித்து... மழை மற்றும் சில பல காரணங்களால் தள்ளி போனது...

இப்போது அகநாழிகை வாசு இந்த இடத்தில் தனது பதிப்பக புத்தகங்களை வெளியிட்டார்...வழக்கம் போல் இந்த இடத்தினை தேர்வு செய்து விளம்பர படுத்த.... சரியாக 5 மணிக்கு வழக்கம் போல் மழை பிசுபிசுக்க ஆரம்பித்துவிட்டது...

புத்தக வெளியீட்டு விழா என்றாலும் இது பதிவர் சந்திப்பு போல் எல்லா பதிவர்களும் ஆஜர்....விழா சரியாக 6 மணிக்கு தொடங்கியது...மேடை என்று சொல்லபட்ட இடத்தில்... எழுத்தாளர்கள்அஜயன் பாலா,பாஸ்கர் சக்தி,ஞாநி, போன்றவர்கள் அமர ... விழாவை திரு அகநாழிகை பொன் வாசுதேவன் தொகுத்து வழங்கினார்....

5புத்தகங்களை மூவரும் மாற்றி மாற்றி வெளியிட்டு போட்டோவுக்கு சிரித்தனர்... விழாவின் ஹைலைட் ஞாநியின் பேச்சு என்பேன்...ஒரு சிறுபத்திரிக்கை கூட்டம் எப்படி நடத்த வேண்டும்.. அதில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்று பேசினார்...


வெளியிட்ட புத்தகங்களில் எனக்கு நமது நர்சிம் மட்டுமே பழக்கம் ....கவிதை பற்றி சொல்லும் போது கவிதை தொகுப்பு என்பது எழுத்தாளனின் விசிட்டிங் கார்டு என்று ஞாநி... வேடிக்கையாக சொன்னார்...

பாஸ்கர் சக்தி பேசும் போது நர்சிம் கதைகளை வாசித்து விட்டு வந்து இருப்பார் போல.. சில கதைகளில் முடிக்கும் அவசரம் ஏன் என்று கேள்வி கேட்டார்...தான் தேர்ந்த சிறுகதை எழுத்தாளன் இல்லை என்றாலும் நர்சிம்மின் சில கதைகளை குறிப்பிட்டு அந்த கதைகள் இன்னும் செதுக்கி இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தார்...

அஜயன் பாலா பேசம் போது சிறுபத்திரிக்கை மற்றும் இலக்கிய கூட்டங்கள் எப்படி எல்லாம் தன் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வந்தது என்று சொன்னார்.... பேசிக்கொண்டு இருக்கும் போது...எழுத்தாளர் சாருநிவேதா என்ட்ரி கொடுத்தார்....நர்சிம் முகத்தில் 100வாட் பல்பு பிரகாசம்...
இதற்க்கு முன் இலக்கிய கூட்டத்தில் ஊடு கட்டி இறங்கி எழுத்தாளர் சாரு கபடி விளையாடிய பழைய இலக்கிய கதையை அஜயன் பாலா சொன்னார்.... இலக்கிய எழுத்தாளர்கள் மென்மையாய் இருப்பார்கள் என்று தனது கருத்து தகர்ந்து போனதை சிரித்துக்கொண்டே எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டார்...

அதன் பிறகு எழுத்தாளர் சாரு பேசினார்....இணையத்தில் எழுதும் எழுத்தாளர்கள் மட்டும் அல்ல இப்போது எல்லாம் பலர் தமிழை பிழையாக எழுதுகின்றார்கள் என்ற வருத்தத்தை பதிவு செய்தார்...தனது மகனுக்கு கொடுத்தசுதந்திரத்தில் அவன் தமிழ் படிக்காமல் பிரெஞ் படிப்பதாக சொன்னார்... பதிவர் நர்சிமுக்காக தான் இந்த விழாவில் கலந்து கொள்கின்றேன் என்று சொன்னார்....

பிறகு ஞாநி திரும்பவும் பேசினார்....வீட்டில் புத்தகங்களின் முக்கியத்துவத்தையும் தமிழ் நாட்டு குடும்ப அமைப்பு புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளாததையும் சொல்லி வருத்தபட்டார்....

பதிவர் காவேரி கனேஷ் மற்றும் ஜியோரோம் சுந்தர் இருவரும் புத்தக வெளியீட்டு எழுத்தாளர்களுக்கு சிறு சிறு செடிகளை பிரபலபதிவர்களை கொண்டு அனைவருக்கும் வழங்கிய அந்த செயல் அனைவரின் பாராட்டுதலையும் பெற்றது....


இடம் கொடுத்த டிஸ்கவரி புத்தக கடை உரிமையாளர் வேடப்பனுக்கு வாசு நன்றி தெரிவித்தார்...

பதிவர்களில் எனக்கு தெரிந்து சென்னை பதிவர்கள் எல்லோரும் ஆஜர் என்றே சொல்ல வேண்டும்... எனக்கு தெரிந்து புதியதாய் வந்தவர்கள் என்றால்... அன்புடன் மணிகண்டன்,நிலா ரசிகன், நித்யா,கார்க்கி ,அதிபிரதாபன், போன்றவர்களை சொல்லலாம்...அதே போல் ஆச்சர்யமான விஷயம் அண்ணன் உண்மை தமிழன் இந்த விழாவில் ஆஜர்....

விழாவுக்காக சில படங்கள் மட்டும் எடுத்தேன்....பல படங்கள் எடுக்கவில்லை படம் வராத பதிவர்கள் கோபித்து கொள்ளவேண்டாம்.... எனக்கு முன்னால் உட்கார்ந்து இருந்த, பட்டர்பிளை சூர்யா, கேபிள் போன்றவர்களின் படங்கள் இடம் பெறவில்லை என்பதை தெரிவித்து கொள்கின்றேன்....(பின்னுட்டத்தில் திட்ட வேண்டாம்....



எனது எழுத்துக்களை தொடர்ந்து வாசிக்கும் திரு மறத்தமிழன் தன்னை அறிமுகபடுத்திக்கொண்டு விழா முடியும் வரையில் உடன் இருந்தார்...

கடைசியில் இது செங்கல்பட்டுகாரர்கள் விழா என்றால் பொறுத்தமாக இருந்து இருக்கும் போல... விழாவில் பேசிய ஏகபட்ட விஷயங்கள் செங்கல்பட்டு என்ற ஊரின் மண்ணின் மனத்தை கமழ செய்தன....

வாசுவின் இலக்கிய பணிக்காக அய்யனார் கம்மாவை காசு கொடுத்து வாங்கி வெளியே வந்தேன்... வழக்கம் போல் வெளியே பதிவர்கள் கும்பல் கும்பலாக பேசி கலைந்து சென்றனர்...

நேற்றைய மாலை நேரத்தை அர்த்தமுள்ளதாக மாற்றிய ஆகநாழிகை பொன். வாசு தேவனுக்கும்.. அவர் பதிப்பகத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்....



ரொம்ப இலக்கிய வாசனை அதிகம் அடித்து விட்டதா? எதாவது செய்ய வேண்டும் அல்லவா? அதற்க்கு பரிகாரம் கீழே.....

தமிழில் பா படத்தை டப் செய்தார்கள் என்றால்? யார் நடிப்பார்கள்...... அதற்க்கு என்ன பெயர் வைப்பார்கள் கீழே.....









அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(THE TAKING OF PELHAM 123)இரயில் கடத்தல்...

ரீமேக் கலாச்சாரம் எல்லா இடத்திலும் இருக்கின்றது...ஏதோ நாம்தான் தொடர்ந்து செய்வது போல் கூப்பாடு போட்டுக்கொண்டு இருக்கின்றோம்...ஆனால் அது ரிமேக் படம்தானே என்பது போல் செலவு செய்யாமல் ஹாலிவுட்டில் அசத்திவிடுவார்கள்....

எந்த ஒரு பெரிய பிரச்சனை நடக்கும் போதும் சில சின்ன விஷயங்களை நாம் மறந்து விடுகின்றோம்.... அதைதான் புத்திசாலிகள் மிகவும் சாதகமாக எடுத்து கொள்கின்றார்கள்...

THE TAKING OF PELHAM 123 படத்தின் கதை இதுதான்...
Bernard Ryder (John Travolta) அவனுக்கு கீழ ஒரு நாலு பேர் ஆயுதங்களோட ஒரு சப்வே டிரைன கடத்தறனுங்க... Walter Garber (Denzel Washington) டிரைனுக்கான சிக்னல் இத்யாதி சொல்லற வேலை.. திடிர்னு ரயில் தண்டவாளத்துல தேமே நிக்க .. என்ன ஏதுன்னு விசாரிச்சா? டிரைனை கடத்திட்டோம்னு பதில் வருது...கடத்தினை ராய்டர் சாதரண ஆள் இல்லை ஜகஜால கில்லாடி... ஒரு பதினெட்டு பேரை பினைகைதியா பிடிச்சு வச்சிகிட்டு ஒரு மணி நேரத்துல பத்து மில்லியன் பணம் வேனும்னு சொல்லறான்... ஒரு செகன்ட் தப்பினாலும் ஒரு நிமிஷத்துக்கு ஒரு கொலை செய்வேன் சவால் விடறான்.... உடனே மேயருக்கு தகவல் போகுது... அவரு பத்து மில்லியன் டாலர் பணத்தை கொடுத்து பினைகைதிகளை விடுவிக்க ஆன்ஷன் எடுக்குறார்.... அந்த பணம் எல்லாம் ஒரு கார்ல போலிஸ் பாதுகாப்போட எடுத்துக்கிட்டு போயிகிட்டு இருக்கறப்ப.... அந்த கார் விபத்துகுள்ளாகுது.... அங்க சரியான நேரத்துக்கு பணம் போய் சேர்ந்துச்சா?

பினைகைதிகள் எத்தனை பேர் செத்தாங்க? அவ்வளவு பணத்தையும் எடுத்துகிட்டு ரெய்டர் எப்படி தப்பினான்... இது போன்ற பரபரபப்புகளை காரகுழம்பு சாதம் சாப்பிட்டு கிட்டே சோத்துவத்தலை தொட்டுக்குனு நல்ல டிவிடியில படத்தை பாருங்க....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

டென்சில் வாஷிங்டன் குரல், மார்கன் பிரிமேன் குரல் ஜான் டிரிவோல்டா குரல் ...இந்த மூனு பேரு குரல்லயும் ஒரு போதை கலந்து இருக்கும்....

இரண்டு லெஜன்ட்... டிரவோல்டா...டென்சில் இரண்டு பேரும் போட்டி போட்டு நடிச்சபடம் இது....

டிரவால்டோ இந்த படத்துல செம கெட்டப்.... இந்த படத்துலயும் அசத்தோ அசத்தி இருக்கின்றார்...

டென்சில் சிரிப்புக்கு ஒரு வசிகரம் கண்டிப்பா இருக்கு.... அதுவும் ஆபிஸ்ல டீ டிரஸ்மேல ஊத்திகினதும் சிரிக்கும் சிரிப்பு

ஒரு ரயிலுக்கு சிக்னல் கொடுக்கும் ஆபிசர் சட்டென நெகோஷியேஷன் டீம் ஹெட் போல் பேசுவது போலான திரைக்கதை அற்புதமான விஷயம்...

இந்த கதை ஒரு நாவலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கபட்டபடம் இது...

1974,1998ல் இதே கதையமைப்பில் இதே பெயரில் ஏற்க்கனவே இரண்டு படங்கள்எடுக்கபட்டது என்பதால்.... இந்த படம் 3வது படம்..இது ஒரு ரீமேக் பிலிம்...

2008ல் இந்த படத்தின் படபிடிப்பு தொடங்கபட்டது... பிசியான ரயில் போக்குவரத்து ஷாட்களை எடுக்க லேட் நைட் நேரத்தில் கொடுக்கபட்டது... அதே போல் பல ரயில் மற்றும் டிராக்குகள் ஸ்டுடியோவில் செட் போட பட்டது...

டென்சில் மற்றும் டிரவோல்ட பேசும் போது எடிட்டிங் மற்றம் கேமரா கோணங்கள் அற்புதம்... மிக முக்கியமாக பணத்தை எடுத்துக்கொண்டு செல்லும் காரை வேகமாக காட்டும் போது பார்வையாளனுக்கு அந்த பரபரப்பு தொற்றி்க்கொள்வது போல் படம் பிடித்து வெற்றி பெற்று இருக்கின்றார்... படத்தின் கேமராமேன்...

ஏற்க்கனவே இயக்குனர் டோனிஸ்காட்... நடிகர் டென்சிலோடு .. மேன் ஆன் பயர் , டெஜவு படங்களில் கை கோர்த்தவர்தான்....

ஒரு நல்ல ஆக்ஷன் படம் பார்க்க இந்த படத்தை பரிந்துரைக்கலாம்...


டோனிஸ்காட் ஒரு அக்ஷன் டைரக்டர் என்பதை மீண்டும் நிறுபித்து இருக்கின்றார்...
படத்தின் கிளைமாக்ஸ் டுவி்ஸ்ட் எதிர்பார்த்ததுதான்

படத்தின் டிரைலர்




படக்குழுவினர் விபரம்..
Directed by Tony Scott
Produced by Tony Scott
Todd Black
Jason Blumenthal
Steve Tisch
Written by Brian Helgeland
David Koepp (uncredited)(screenplay)
Morton Freedgood (novel)
Starring Denzel Washington
John Travolta
John Turturro
Luis Guzman
and James Gandolfini
Music by Harry Gregson-Williams
Cinematography Tobias A. Schliessler
Editing by Chris Lebenzon
Studio Columbia Pictures
Metro-Goldwyn-Mayer
Relativity Media
Scott Free Productions
Escape Artists
Distributed by Columbia Pictures
Release date(s) June 12, 2009
Running time 106 minutes
Country United States
Language English
Budget $100,000,000
Gross revenue $150,024,824 (worldwide)


அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner