இன்றிலிருந்து கொண்டாட்டத்துக்கு தயாராகுங்கள்.....


ஒரு வாரத்துக்க சென்னையில் உலக பட விழா நடக்க இருக்கிறது ஏன் உலக படங்களை பார்க்க வேண்டும்.

சினிமா என்பது ஒரு சமுகத்தின் வெளிப்பாடு .உலக சினிமாக்கள் பார்ப்பதன் முலம் உலகில் இருக்கும் கடை கோடி வாழ் மக்களின் வாழ்கை பற்றியும் அவர்கள் சமுக வளர்ச்சி பற்றியும் அறிய முடியும்.
ஒவ்வோறு நாட்டின் கலாச்சாரமும் சூழ்நிலைக்கு ஏற்ப்ப மாறுபாடு கொண்டவை அந்த கலாச்சாரங்களை எந்த நிர்பந்தத்துக்கம் ஆட்படாமல் திரையில் பார்க்கலாம்.



நீங்கள் என்னதான் ஊர் சுற்றுபவராக இருந்தாலும் இந்த பூமீயின் பல பகுதிகளை நீங்கள் பார்த்தே இருக்க முடியாது ஆனால் உலக படவிழா அதற்க்கு வாய்ப்பு அளிக்கிறது...


நீங்கள் தென் கொரியாவில் ஓடும் அழகான தெருவையும்,வியட்நாமின் குறுகிய தெருக்களையும், பின்லாந்தின் அழகிய ஏரியையும் ஆஸ்த்ரியாவின் அழகிய கடற்க்கரையும், போலந்து நாட்டின் அழகான பெண்னையும், செக்கொஸ்லாவாகியாவின் மலை முகடுகளையும் இந்த ஒரு வாரத்தில் பார்த்து ரசிக்கலாம்.


நம் கலாச்சாரத்தையும் அவர்கள் நாட்டு கலாச்சாரத்தையும் வாழ்க்கை முறையையும் ஒப்பிடு செய்து ரசிக்கலாம் வியக்கலாம்.

இந்த 10 நாட்களும் சினிமா சினிமா என்று எல்லோரும் அலைவார்கள் எல்லா உதவி இயக்குநர்களும் கண்ணில் கனவுகளுடன் குறிப்பெடுக்க ஒரு நோட்ட புத்தகத்துடன் வந்து இருப்பார்கள் சவரம் செய்யாத தாடியிலும் உதட்டில் புகையும் சிகரேட்டிலும் வறுமை எட்டிப்பார்க்கும்.

அதே போல் நிறைய பில்டப்பு பேச்சுகளையும் அவர்களிடத்தில் கேட்கலாம்

“நேத்து அஜித் வீட்டுக்கு போய் கதை சொன்னம்பா மனுஷன் ஆடி போயிட்டாரு, பத்து நிமிஷத்துக்கு ஏந்த பேச்சும் இல்லை அப்புறம் ஷாலினி மேடம் காப்பி கொடுக்க வந்தப்பதான் அந்ம அறையோட இருக்கம் தனிஞ்சுது...

எப்படியும் பஸ்ட் ஷெட்டியுல் பிப்பரவரியில ஸ்டார்ட் ஆயிடும் மச்சான் ஒரு டீ ரெண்டு சிகரேட் ஒரு வடைக்கு காசு கொடுத்துடு மச்சி என்பது போன்ற சம்பாஷனைகள் சர்வ சாதாரணம்...


இங்கு உதவி இயக்குநர்கள் பற்றிய எனது கவிதையை மீண்டும் தருகிறேன்







அழுக்கேறிய ஜுன்சும்


ஆறுமாதகால தாடியும் தான்


இவர்களின்


அடையாளங்கள் ...







தொடர்ந்து புகைப்பதால்


தடித்த உதடுகளும்


எண்னைப் பார்க்காத தலையும்


அவர்களின்


அக்மார்க் முத்திரைகள்...



தூக்கம் தொலைந்த


கண்களில்


அரை நூற்றாண்டு


சரித்திரத்தை மாற்றும்


கனவுகள் இலவசம்.





புரிந்தாலும்


புரியாவிட்டாலும்


ஒரு நாவல் புத்தகம்


ஒரு கைக்குறிப்பேடு


இவர்களின் கையில்


நிச்சயம் இருக்கும்





தெருவோர


டீக்கடைகள் தான்


இவர்கள் இளைப்பாறும்


வேடந்தாங்கல்.





இவர்களின்


பெற்றோர்களின் கனவு


தன் மகனை


மருத்துவராகவோ


பொறியாளனாகவோ


பார்க்கத்தான் ஆசை


ஆனால்


இவர்களின் கனவோ


வேறானது...





திருமண வயதை தாண்டி


ஜன்னல் வழியாக


சாலை வெறித்துப்


பார்க்கும்


சகோதரிகள்...





ஒரு பக்க நுரையீரலை இழந்து


காச நோயால் அவதிப்படும்


அம்மா...





வெள்ளாமை பொய்த்தால்


ஐம்பது வயதிலும்


வேதனைப்படும்


அப்பா...





இது


எதுபற்றியும் இவர்களுக்கு


கவலை இல்லை


இவர்களின் ஒரே கவலை


"வாழ்நாள் கவலை"


நல்ல தமிழ் சினிமா


எடுப்பது தான்...


(சமர்ப்பணம் சினிமா பற்றிய புரிதல் இல்லாது சினிமா பார்ப்பதாலேயே தாணும் ஒரு இயக்குநராக மாறவேண்டும் என்று தென்மாவட்டங்களிலிருந்து பஸ் பிடிக்கும் அனைத்து இளைஞர்களுக்கும்)

தமிழ்நாட்டு இளைஞர்களை நினைத்து நொந்தபடியே,

அன்புடன் -ஜாக்கி சேகர்




இந்த மாதிரி நிறைய தென் மாவட்டத்து இளைஞர்களை இந்த பெஸ்ட்டிவலில் நீங்கள் பார்க்கலாம்


நீங்களும் இந்த அனுபவத்தை பெற ஒரு பாஸ் போட் சைஸ் போட்டோவை எடுத்துக் கொண்டு ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் தியேட்டர் சென்றால் நீங்கள் அனுமதி சீட்டு பெற்று முன்று தியேட்டர்களில் ஓடும் படங்களை உங்களுக்கு பிடித்த படங்களை பார்க்கலாம்.


வருடத்தில் ஒரு பத்து நாள்தானே செலவு செய்யுங்கள்....

அன்புடன்/ ஜாக்கிசேகர்



டிசம்பர் பிட் பட போட்டிக்கான படங்கள் உங்கள் பார்வைக்கு....


முதல் படத்தைதான் தலைப்பு நிழலுக்கான புகைப்பட போட்டிக்கு அனுப்பிஉள்ளேன்

அன்புடன் /ஜாக்கிசேகர்

முதல்வர் கலைஞருக்கு எனது கனிவான வேண்டுகோள்


கலைஞர் ஆட்சியில் பத்தாயிரம் சாலை பணியாளர்களை வேலைக்கு வைத்து அழகு பார்த்தது அன்றைய திமுக அரசு.....

அதன் பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு சாலை பணியாளர்கள் வேலையை திமுக அபிமானிகளுக்கே கொடுதது விட்டதாக சொல்லி ஒரே ஒருகையெழுத்து போட்டு அனைவரையும் வீட்டுக்கு அனுப்பியதுபோன முறை ஆட்சியில் இருந்த ஜே அரசு...



எனக்கு தெரிந்தவரை ஜே ஆட்சியில் இருந்த போது அதிகமான போராட்டங்கள் நடத்தியது சாலை பணியாளர்கள்தான். இந்த போராட்டத்தின் போது பலர் தற்கொலை செய்து கொண்டு இறந்து போன கதையும் இந்த தமிழகத்தில் நடந்தேரியது...

சாலை பணியாளர்களின் பணி தமிழகம் முழுவதும் சேதப்பட்ட சாலைகளை சீர் படுத்துவதே இவர்களை பணியில் வைத்த தன் நோக்கம்...

கலைஞர் நான் ஆட்சிக்கு வந்தால் வந்ததும் சாலை பணியாளர்களை வேலையை நிரந்தர படுத்துவேன் என்றார் அதே போல் செய்தும் முடித்தார்.

அனால் மழை முடிந்து பல நாட்கள் ஆகியும் இந்த பத்தாயிரம் பேரும் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை..

ஒரு கிலோமீட்டருக்க 50 பேர் என்றால் கூட இந்நேரம் சாலைகளை கொஞ்சமாவது அதாவது வண்டி போகும் அளவுக்காவது செப்பனிட்டுஇருக்க முடியும்...

அரசு நிர்வாகம் என்ன செய்து கொண்டு இருக்கிறது என்பது எனக்கு விளங்க வில்லை ..
நாட்டின் தலைநகரிலேயே சாலைகள் நிலை இப்படி என்றால் பனைமரத்து பட்டி கிராமங்களின் நிலை சொல்லவே வேண்டாம்

பொதுமக்கள் தார் சாலை கேட்கவில்லை பள்ளமாக தற்போதைக்கு குண்டும் குழியுமா இருக்கும் சாலைகளில் சற்று மண்ணும் செங்கல்லும் போடுங்கள் என்றுதான் கேட்கிறார்கள்.

சாலை பணியாளர்கள் பணி செய்யவில்லை என்றால் அவர்களுக்கு மேல் உள்ள அதிகாரிகள் மாதா கோவிலில் மணியாட்டிக்கொண்டா இருக்கிறார்கள்?

முதலில் அரசு வேலை வேண்டும் என்று முதலில் நாயாய் அலைவது, பின்பு சங்கம் அமைத்துஊதிய உயர்வுக்கு கொடி பிடிப்பது. இதுதான் அரசு அதிகாரிகளின் வேலை...

சன்டிவி பிரச்சனை முடிந்து பல நாட்கள் ஆகிவிட்டது அதன் பிறகு இன்று அறிவாலயத்தில் நடந்த திருமணத்தில் கூட அழகிரியும் தயாநிதி மாறனும் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்து பாச மழை பொழிந்த காட்சியை தமிழ் நாடே பார்த்து விட்டது .

இந்த பாச மழை மயக்கத்தில் இருந்து தலைவர் கலைஞர் வெளியே வந்து பொது மக்களின் அன்றாட பிரச்சனையில் கவனம் செலுத்துமாறு கேட்டு கொள்கிறேன்.

கோபாலபுரமும் போயஸ்கார்டன் மட்டும் தமிழ்நாடு இல்லை என்பதையும், கோபாலபுரத்தில் இருந்து தலமைசெயலக ரோடும், கோடம்பாக்கம் முரசொலி அலுவலகம் வரை ரோடும் சரியாக இருந்தால் தமிழ்நாடு முழுவதும் ரோடுகள் சரியாக இருக்கும் என்று அர்த்தம் அல்ல.....

நான்கு சக்கர வாகனத்தில் போகும் உங்களுக்கு இரண்டு சக்கர வாகனத்தில் போகும் என்னை போன்ற நடுத்தர வர்கத்தினரின் வலி உங்களுக்கு தெரிய நியாயமில்லை...




அன்புடன்/ ஜாக்கிசேகர்

LADDER 49--9/11 மற்றும்27/11 இரண்டு சம்பவங்களில் உயிர் நீத்த வீரர்களுக்கு இந்த படம் சமர்பனம் (பாகம்/11)



நாம் இந்த உலகில் உயிர் வாழவும் நம்மை நம்பிய ஜீவன்களை காப்பாற்றவும் தினமும் வெவ்வேறு பிரச்சனைகளுடன் போராட வேண்டி இருக்கிறது. வெவ்வேறு வேலைகள் செய்து பொண்டாட்டி பிள்ளைகளை காப்பாற்ற வேண்டி இருக்கிறது.

அது பல ஆயிரம் ஆண்கள் பெண்கள் ரோட்டில் முக்கை பிடித்து நடக்க....


மேன் ஹோல் திறந்து அதில் மிதக்கும் கட்டியாக இருக்கும் மலங்களை தன் கையால் விலக்கி மலமும் வீட்டு கழிவுகள் கலந்த ஒரு விதமானசிமென்டகலரும் மஞ்சளும் கலந்த தண்ணியில் ஜட்டியுடன் ( அந்த ஜட்டியின் பின் புறத்தை கவனித்தால் அதில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கும்)

இறங்கி அடைப்பெடுககும் வேலையில் இருந்து், பாதுகாப்பு ஆலோசகர் என்ற போர்வையில் தண்ட சம்பளம் வாங்கும் நாரயணன் வரை வேலைகள் பலவிதம்.....


இதை போல் மேல் உள்ள பல வேலைகள் காலையில் போனால் மாலையில் வீடு வந்து மனைவியை முத்தம் இட்டு மழைக்கு இதமாக அடை சாப்பிட்டு கலைஞர் வீட்டு செய்திகளை சன் டிவி காமெடி திரை போல் ரசிக்கலாம்....

ஆனால் வேலைக்கு போனால் அன்று உயிருக்கு உத்ரவாதம் இல்லை என்ற நிலைதான் இராணுவம், கமெண்டோ, காவல் துறை, தீயனைப்பு துறை போன்றவைகள்....

மும்பையில் உயிர்நீத்த போலிஸ்காரர்களின், மனைவியும் பிள்ளைகளும் புதிய ஷாருக்கான் படம் பார்க்க ஆவலாய் இருந்து இருக்கலாம் அல்லது அடுத்த வாரம் பைக் பிள்ளைக்கு வாங்கி கொடுபபதாக சத்தியம் செய்து இருக்கலாம், 27/11 அன்று இரவு தன் மனைவியுடன் சல்லாபிக்க மதியம் ஜீப்பில் ஏதாவது ஒரு விசாரனைக்கு போகும் போது மாறாப்பு விலகிய ஏதாவது ஒரு பெண் காரணமாக இருந்து இருக்கலாம்....


இந்த எல்லாம் 27/11 அன்று இரவு தீவிராவதிகளுடன் ஏற்பட்ட நேருக்கு நேர் தாக்குதலில் உயிர்நீத்த,

சாரி வீரமரனம் அடைந்த அந்த முகம் தெரியாத போலிஸ்காரர்களின் கனவுகள் நொடியில் கலைந்து போயின.....

அதே போல் 9/11 அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்ந்த போது உயிர் போகும் என்று தெரிந்தே வேலைக்கு போய் தீயனைப்பு வீரர்கள் என்னற்ற பேர் இறந்தனர்....


நாம் நிம்மதியா உறங்க,
அவர்கள் உறக்கம் மட்டும் இல்லை முடிந்தால் உயிரையும் துறக்கின்றனர்..
நம் பொது மக்கள் என்ன நினைக்கிறோம் தீ அனைந்த பிறகே பயர் சர்விஸ் வருவதாக சொல்கிறோம் ஆனால் அந்த பயர் சர்விஸ், வண்டியும் ஆம்புலன்ஸ்ம் செல்லும் போது எத்தனை போ் வழி விட்டு ஒதுங்கி இருக்கிறோம்...
உலகில் அம்புலன்ஸ்வுடனும் பயர் சர்வீஸ் வாகனத்துடன் போட்டி போட்டி போட்டு வாகனம் ஓட்டுபவர்கள் நம்மவர்களே வீட்டை சவுக்கார் பேட்டை ஏரியாவில் கட்டி விட்டு பத்து அடி ரோட்டு இருக்கும் வீட்டில் தீ பிடிக்க ..

3வது தெருவு வரை வண்டி வந்து அதற்க்கு மேல் வராது என்று தெரிந்து முடிவு எடுத்து பைப்பை இனைத்து எரியும் வீட்டுக்கு ஓஸ் நீமிர்த்தும் போது எல்லாம் பஸ்பமாகி இருக்கும்.. உடனே ஜனுன் சேட்... பான்பராக் வாயோடு என்னைக்குதான் சரியான நேரத்துக்கு பயர் சர்விஸ் வந்து இருக்கு? என்று கேள்வி எழுப்புவான்....



நாம் கூட தினத்தந்தியில் படித்தும், பார்த்தும் இருக்கலாம்..

வேளச்சேரியில் வீட்டில் புகுந்த மலைபாம்பை பிடித்த தீயனைப்பு வீரர்கள்பாம்புடன் படத்தில்காணலாம்...

சரவனாஸ் ஸ்டோரில் ஏற்பட்ட தீயை பக்கத்து கடைக்கு பரவாமல் எட்டு மணி நேரம் போராடி அனைத்தனர் என்பது நம்மை பொறுத்த வரை காலையில் புரு காப்பி நாக்குக்கும் தொண்டைக்கும் உசலாடும் போது படிக்கும் செய்தி....
ஆனால் அது பொது மக்களையும் உயிர்களையும் காக்க எமனுடன் நெஞ்ச நிமிர்த்தி நடத்தும் போராட்டம் ...



எமனுடன் “ங்கோத்தா ”நீயா நான பாத்துடலான்ட என்று மனைவி பிள்ளை உறவுகள் எதிர் வீட்டு சிறு மார்பு பெண் என்று எது பற்றியும் கவலை கொள்ளாது தீயுடன் போராடும் அந்த வெள்ளந்தி மனிதர்கள் பற்றிய கதைதான் லேடர்49 படம்...


லேடர் 49 படத்தின் கதை...

ஜாக் மாரிசன் ஒரு பயர் பைட்டர். அமெரிக்காவில் இப்படிதான் பயர்சர்விஸ் மேன்களை அழைப்பார்கள்... ஒரு பெரிய கட்டடத்தில் ஏற்ப்ட்ட தீ விபத்தில் இருப்பவர்களை மீட்க லேடர் 49 குழு செல்கிறது.

அந்த மீட்பு பணியில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு எகனை முகனையான இடத்தில் ஜாக் மாட்டி கொள்கிறான் சய நினைவையும் இழந்து தான் காப்பாற்ற படமாட்டோம் என்ற நிலையில் அவன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை நினைத்து பார்ப்தே லேடர் 49 படத்தின் கதை...

ஜாக் மாரிசன் கேரக்ட்ரில்Joaquin Phoenix நடித்து இருக்கிறார் இதற்க்கு முன் இவரை நினைவு படுத்த கிளடியேட்டர் படத்தில் நாட்டின் அரியனைக்கு ஆசை பட்டு அப்பாவை அனைத்து கொலை செய்வாரே அவரேதான்.


இந்த லேடர் 49குழுவின் தலைவராக John Travolta நடித்து இருப்பார் எனக்கு ஹாலிவுட் நடிகர்களில் எனக்கு ரொம்பவும் பிடித்த நடிகர் அவரின் முந்தைய படங்களான புரோக்கன் ஏரோ, பேஸ் ஆப் போன்ற படங்களில் அவர் பின்னி பேடல் எடுத்து இருப்பார். அதுவும் அவர் கடித்து பேசும் ஆங்கிலத்துக்கும் சிகரேட் பிடிக்கும் ஸ்டைலுக்கும் நான் காதலன்..


கதாநாயகன் ஜாக் பயர் சர்விஸ் வேலையில் சேர்ந்ததும் நடக்கும் ராகிங் மற்றும் அவனுக்கு ஏற்படும் காதல்,






வேலை பளு, அதன் ஆபத்துக்கள் என்று
பிளாஷ் பேக்கில் நினைத்து பார்பதாய் கதை நகரும்... அவன் இடி பாட்டில் மாட்டி இருக்கும் போது
அவனை காப்பாற்ற போராடும் வீரர்களிடம் அவன் என்ன சொன்னான் அவன் கப்பாற்றபட்டானா? என்பனபோன்றவற்றை சின்ன திரையோ அகன்ற திரையோ ஏதாவது ஓன்றில் சர்வ நிச்சயமாக பார்த்து தொலைக்கவும்....


படத்தை பற்றி சில சுவாரஸ்யங்கள்...

சில நேரத்தில் மன பாரமாக இருக்கும் போது சற்று உணர்ச்சிவசப்பட்டு அழ வேண்டும போல தோன்றினால் இந்த படத்தை பார்க்கவும்..

சற்று மாறு பட்டு எடுததால் கூட டாக்குமென்டரி பட சாயலில் வந்து இருக்க வேணடிய படம் , அதை தனது திரைக்கதை சுவாரஸ்யத்தால் பூசி மொழுகி இருப்பார் Jay Russell


இந்த படத்தின் படபிடிப்பு வேர் ஹவுஸ்ல் நடக்கும் போது நிஜமாக பற்றி எறிவதாக பொது மக்கள் எமெர்ஜன்சி நம்பர்களுக்க தொடந்து போன் செய்ய அப்புறம் படபிடிப்புகுழுவினர் லோக்கல் ரேடியோவில் இது படபிடிப்புக்காக ஏற்படுத்திய தீ என்று விளக்கம் அளித்த பின்னரே போன் அழைப்பு சற்ற குறைந்ததாம்.

இந்த படத்தில் மேயராக நடித்து இருப்பவர் உண்மையாலுமே மேயராம்.. அவர் அப்பா கருனாநிதியா? என்பது எனக்கு சத்தியமாக தெரியாது...



இந்த படத்தின் ஹீரோJoaquin Phoenix பயர் அக்கடமியில் டிரைனிங் எடுத்தார் அதே போல் பயர் வாகனத்தில் வேகமாக ஏறி இறங்கும் பயிற்ச்சிகளையும் மேற்கொண்டார்.

அதே போல் படத்தின் ஆரம்பத்தில் 20 அடி உயரத்துக்கு தொடை நடுங்கி இருக்கிறார் அகடெமியில் டிரைனிங் முடித்ததும் 20அடி மாடியில் சிங்களி ரோப்பில் உயிர்பயம் அற்று தொங்கயி நிகழ்வும் நடந்து இருக்கிறது..

படத்தின் படபிடிப்புக்கு நிஜமான பயர் மேன்கள் சுமார் இராண்டாயிரம் பேர் பங்கேற்று நடித்தனர்
நுற்றுக்கனக்கான பயர் வாகனங்கள் படப்பிடிப்பில் இடுபடுத்தப்பட்டன.



கதாநாயகன்Joaquin Phoenix ஒரு கட்டத்தின் மேற்புறத்தில் அதாவது மாடியில் இருக்கும் போது பில்டிங் இடிந்து விழுவது போன்ற காட்சியில் நிஐமா விழப்போக படபிடிப்பு குழு லேசான தீக்காயங்களுடன் காப்பாற்றியது...


மீட்பின் போது தன் முகத்தை தீயின் கோரத்துக்கு தின்ன கொடுதத ஒரு பயர் சர்விஸ் மேன் புலம்பும் புலம்பல் உங்களை வெகு நாட்களுக்கு நினைவில் இருக்க செய்யும்.


நன்றாக துங்கும் போது அலாரம் அடிக்க அவர்கள் கிளம்பும் அழகுக்கு நாமே பயர் சர்விஸில் சேராமல் போய்விட்டோமே என வருத்தம் கொள்ள செய்யும்...


மைக்கேல் மதன காமராஜன் தான் தமிழில் எனக்கு தெரிந்ந சற்ற விரிவான பின்புலம் அப்புறம் சமீபத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வந்த டிஷ்யும் படம் சசி கூட லேடர் படத்தின் பாதிப்பு டிஷ்யும் படத்தில் இருக்கம்....

இந்த படம் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன் எடுத்தது...(2004)

இந்த படத்தின் இயக்குநர் Jay Russell இதற்க்கு முன் மை டாக் ஸ்கிப் படத்தை இயக்கியவர்.
இந்தலேடர் 49 படத்தை பார்த்து விட்டு நீங்கள் வீட்டில் பார்த்தாலும் எழுந்து நின்று கைதட்டுங்கள் அந்த கைதட்டல் ஒளி நிச்சயம் அந்த கலைஞனால் உணரப்படும்




MPAA:
Rated PG-13 for intense fire and rescue situations, and for language.
Runtime:
115 min
Country:
USA
Language:
English
Color:
Color
Aspect Ratio:
1.85 : 1 more
Sound Mix:
DTS | Dolby Digital | SDDS
Filming Locations:
Baltimore, Maryland, USA





அன்புடன் / ஜாக்கிசேகர்

இருபாலின பதிவர்களுக்கும் என் தன் நிலை விளக்கம்....



கடந்த சில பதிவுகளில் தலைப்புகளில் சிலர் வரம்பு (ஆபாசம்) மீறல் இருப்பதாக போன் செய்தும் பதிவிட்டும் சொன்னார்கள். சில நேரங்களில் இப்படி நேர்வது உண்டு. அனால் எப்போதும் இப்படி இல்லை என்பதற்க்கு என் கடந்த பதிவுகளே சாட்சி... உலக சினிமாவை சொல்லும் போது காமம், போதை மருந்து இல்லாமல் கதை சொல்வது ரொம்ப கஷ்டம்....இது கதை சம்பந்த பட்ட விஷயம்.

அதே போல் காமத்தை எந்தளவுக்கு எழுத்தில் சொல்லலாம் என்ற வரையரை எனக்குள்ளும் இருக்கிறது.

டீத் மற்றும் அலெக்சான்ட்ரா புராஐக்கட் இரண்டு கதை சூழலுக்கு ஏற்ப்ப இது போன்ற கவர்ச்சியான தலைப்பு வைக்க வேண்டியதாகி விட்டது, அதே போல் என்னால் அந்த இடத்தில் பல் வளர்ந்தால் என்று எழுத முடியாது.

பெண் உறுப்பை, பிறப்பு உறுப்பில் பல் வளர்ந்தால் என்று எழுதுவது என்னை பொறுத்த வரை தவறே இல்லை. ஆனால் அதையே பு........யில் பல் வளர்ந்தால் என்று எழுதினால் ஆபாசம்.ஆபாசத்தின் அளவுகோள் எனக்கு நன்றாகவே தெரியும்.... இருப்பினும் என் பதிவை படித்து தலைப்பில் மாற்றம் தேவை என்று நிஜமான அக்கரையுடன் போன் செய்தும் பின்னுட்டம் இட்டு சுட்டி காட்டிய கார்க்கி மற்றும் உண்மைதமிழன் போன்றோர் வேண்டுகோள் சந்தோஷத்தை தருகிறது.



உங்கள் இருவருக்கும் என் நன்றிகள். என் எல்லை எனக்கு தெரியும் நண்பர்களே..... ஆனால் இது போல் இனிமே வராது என்று சொல்ல மாட்டேன் கதை அது போல் இருந்தால் அந்த தலைப்புகளைதான் வைக்க முடியும்.. ஆனால் இதையே பொழப்பாக தினமும் வைக்கமாட்டேன்.

ஆனால் ஒன்று மட்டும எனக்கு புரிந்தது... உலகதரத்தில் ஒரு தெலுங்கு சினிமா என்று எழுதினேன் ஒருபய படிக்கவில்லை அது பற்றி எனக்கு கவலையும் இல்லை.உங்கள் மனைவி மார்பில் கை என்று தலைப்பு வைத்தேன், படித்தவர் எண்ணிக்கை ஒரே நாளில் மூவாயிரம்....

அதே போல் எந்த பதிவருடன் என்னை கம்பேர், தயவு செய்து செய்ய வேண்டாம். இது எனது பக்கம்
என் சந்தோஷங்களையும் சகித்து கொண்டவைகளையும் பகிர்ந்து கொள்ள ஒருதளம்.

கற்பு ஒழுக்கம் கட்டுபாடு போன்ற நமது தமிழ் நாடுதான் உயிர்கொல்லி நோயான எயிட்ஸ் பதிக்கபட்டவர்கள பட்டியலில் இரண்டாவது ஆக இருக்கிறது...

திரும்பவும் இந்த வரி ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது...

காமத்தை ரசித்து கொண்டே காமத்தை எதிர்க்கும் நம்மவர்கள்...

அன்புடன்/ஜாக்கிசேகர்

உங்கள் மனைவி மார்பில் யாரோ ஒருவன் கை வைத்து இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்???



(கண்டிப்பாக வயது வந்தோருக்கான படம் மற்றம் பதிவு)

நான் எத்தனை யோ படங்கள் பார்த்து இருக்கிறேன் அனால்அலெக்சான்ட்ரா புராஜெக்ட் படம் போல் எந்த படமும் என் மனதில் நீண்ட நாட்கள் இருந்தது இல்லை. இந்த படத்தை பார்த்தால் நீங்களும் இதையேதான் சொல்லுவீர்கள்


இந்த படம் பார்த்த பிறகு இப்படி கூட பத்து பைசா பொறாத விஷயத்தை வைத்து உலகில் உள்ள சினிமா ரசிகர்களை மூக்கில் விரல் வைக்கவும், சீட்டுநுனியில் உட்கார வைக்கமுடியுமா? முடியும் என
அகதளம் பண்ணிய மற்றும் அந்தர் பண்ணிய இயக்குநர்
Director: Rolf de Heer என்றென்றும் என் மதிப்புக்கு உரியவர்....


ஸ்டிவ் இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன். தன் மனைவியோடு சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருபவன். ஒரு கம்பேனியில் உயர் அதிகாரியாக பணி புரிபவன். அன்று அவனுக்கு பிறந்தநாள் .


அலுவலகத்தில் பர்த்டே கொண்டாடி விட்டு ரொம்ப சீக்கிரமாக வந்தவன் தன்மனைவி அலெக்சான்டராவை காதலுடன் வீடு எங்கும் தேடியும் மனைவி மற்றும் பிள்ளைகள் இருவரும் காணாமல் தவிக்கிறான் . வீடு எங்கும் தேடினால் வீடு இருட்டாக இருக்கிறது.


ஒரு டிவி மற்றும் டெக் மட்டும்தான் இயங்குகிறது மற்றது எல்லாம் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. வீடு முழுவதும் கும் இருட்டு...

ஆர்வத்தில் அந்த வீடியோ கேசட் போட்டதும் மனைவி டிவியில் தோன்றி ஹேப்பி பர்த்டே என்கிறாள் குழந்தை பக்கம் கேமரா திரும்ப அவர்களும் அப்பாவுக்கு பர்த்டே விஷஸ் சொல்கீறார்கள்.


குழந்தைகளை வேறு அறைக்கு அனுப்பிவிட்டு என்ன ஸ்டிவ் நீ பயந்து விட்டாயா? வீடு இருட்டாக இருக்கிறது என்று...

உன்னிடம் ஒரு ரகசியம் சொல்ல வேண்டும் . நீ என்ன செய்கிறாய் போய் பிரிட்ஜில் இருக்கும் குளிர்ந்த பீரை எடுத்து நுரை பொங்க உன் உதட்டில் வைத்துக்கொள் என்கிறாள் அவனும் வீடியோவை பிரிஸ் செய்து விட்டு.. பீர் சாப்பிடுகிறான் திரும்பவும் வந்து படத்தை ஓட விடுகிறான்.



அதில் அவன் மனைவி என்ன முக்கியமான விஷயஙம சொல்ல போகிறாள் என்றும். இந்த புதுமையான முறையில் அவள் சொல்ல முயற்ச்சிப்பதை பார்த்து ரொம்பவும் ரிலாக்ஸாக டிவி பார்த்த படி இருக்கிறான் .


டிவியில் அவன் மனைவி நான் சொல்லுவதற்க்கு முன் இசை கேள் என்று இசையை சுழல விட்டுக்கொண்டே.. அவள் ஆட ஆரம்பிக்கிறாள். அடும் போது முதலில் அவள் மேலுள்ள ஓவர் கோட்டை கழட்டுகிறாள் .இவன் ரொம்ப ஆர்வமாக இருக்க அவள் ஆடிக் கொண்டேமேல் சட்டை கழட்ட பிராவுடன் இருக்கிறாள். அவன் சாதரனமாக பார்த்து கொண்டு இருந்தவன் தன் கால்களை கால் மேல் போட்டு அமர்ந்து அவன் மனைவி அடுத்து என்ன கழட்ட போகிறாள் என்ற ஆர்வத்துடன் இருக்க


தியேட்டரிலும் என்னை போல் எல்லோருமே கால் மேல் கால் போட்டு அடுத்தவன் பொண்டாட்டி என்ன கழட்ட போகிறாள் என்று ஆர்வத்துடன் இருந்தோம்.

தீயேட்டரில் இருந்த 900 பேரும் அவள் பிரா அவிழ்க்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டோம்.. கடவுள் கைவிட வில்லை எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது...

அவள் பிரா அவுத்ததும் சிறிதாய் தன் தொங்கும் மார்பை பிடித்தபடி என்ன ஸ்டிவ் கொஞ்சம் தொங்கன மாதிரி இருக்கில்ல???
இது மட்டும் தொங்காம கொஞ்சம் ஸ்டிப்பா இருந்தா நல்லா இருக்கும் இல்லை என்று கேள்வி எழுப்ப தன் மனைவி எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறாள் என்று பீரும் கையுமாக யோசிக்கும் போது,


அவள் அவளின் மார்பை தடவிக் கொண்டே இருக்க திடிர் என்று ஸ்டிவ் உன் கிட்ட உண்மை சொல்லும் நேரம் வந்து விட்டது. நேற்று டாக்ட்ரை போய் பார்த்தேன் அவர் எனக்கு மார்பக புற்றுநோய் வந்து விட்டதாக சொன்னார் என்றதும் ஸ்டிவ் அதிர்நது கண்ணில் நீர் வைத்துக் கொள்வான்

படம் பார்த்த நானும் மற்றும் 200 பேர் மட்டும், அந்த பெண்ணை காமம் தவிர்த்து அவளை பரிதாபத்துடன் பார்த்தோம்.



இந்த மார்பில் இருக்கிறது பார் அந்த கறுப்பான பகுதி அதுதான் கேன்சர் வந்த பகுதி என்றதும் பர்த்டே அதுவும் ஸ்டிவ் அழ ஆரம்பிக்க,

அவள் ஸ்டிவ் அழுகிறாய? அழுவதால் எதும் நடந்து விடப் போகிறது அடுத்த ஜென்மத்தில் சந்திப்போம் நான் தற்கொலை செய்ய போகிறேன் என்று சட்டடென துப்பாக்கி எடுதது தலையில் வைத்துக்கொள்ள,

ஸ்டிவ் ஏதும் செய்ய முடியாமல் தவிக்க படம் பார்த்த நானும்தான் . சட்டென ஸ்டிவ் இதெல்லாம் உண்மையில்லை என்று சொல்லி துப்பாக்கி கிழே வைத்து வி்ட்டு சட்டென மார்பில் இருக்கம் கறுப்பு ஸ்டிக்கரை பிய்த்து விட படம் பார்த்த நம் அனைவருக்கும் குப்பென்று வேர்க்கும் போது ஸ்டிவுக்கு ரொம்பவே சந்தோஷம். தன் மனைவிக்கு ஏதும் இல்லை. எல்லாம் விளையாட்டுக்கதான் என்று நினைக்கும் போது நிம்மதியுடன் இருக்க திரும்பவும் இசை ஒளிக்க அவள் ஆடிக் கொண்டே...

ஆடிக்கொண்டே கீழே இருக்கும் ஸ்கர்ட்டையும் அவிழ்த்து முழு நிர்வானமாக அலெக்சான்ட்ரா மாற திரும்பவும் ஸ்டிவ் மகிழ்ச்சியுடன் கால் மேல் கால் போட இப்போது கேமரா அவள் மாப்பு வரை ஜீம் செய்ய இப்போது வீடியோ திரையில் கீழே இருந்து அவள் மார்பை ஒரு கை தடவ......அவனுக்கு அடி வயிறு கலங்குகிறது. அது நிச்சயமாக அவன் கை இல்லை. அந்த கையை அவள் எதிர்பே காட்டாமல் இருக்க அது இன்னும் தடவ,

படம் பார்த்த நான், கதாநாயகன் ஸ்டிவ் எல்லோரும் வியர்த்து போக ....

அப்புறம் கொய்யால இவ்வளவுதான் அலெக்சான்டரா புராஜெக்ட் படத்தோட கதையை சொல்ல முடியும் . இது ஆஸ்த்ரேலியா படம். முடிஞ்சா அங்க போய் மீதி படம் பாரு நைனா.... அல்லது டிவிடியில பாரு ஒரு காப்பி எனக்கும் கொடுங்கப்பா? எத்தனையோ படம் எங்கிட்ட இருந்தாலும் இந்த படம் எங்க தேடியும் கெடக்கலை....


படத்தை பற்றி சில சுவரஸ்யங்கள்.....


இந்தபடம் சென்னை 4வது உலகத்திரைப்ட விழாவில் திரையிடப்படட்து.

இந்த படம் சென்னை உட்லண்சில் திரையிடப்பட்ட போது பின்டிராப் சைலன்சாக படம் பார்த்தார்கள் படம் முடிந்த போது பயங்கரமாக கைதடடி இந்த படத்தை வரவேற்றார்கள்.

படம் முடிந்த பல நாட்களுக்கு இந்த படத்தை பற்றிய பேச்சாகவே இருந்தது.

இந்த படம் பல உலக படவிழாக்களில் நிறைய விருதுகள் பெற்றது ,விவரம் கிழே காண்க..

இரண்டே கதாபாத்திரங்களை மட்டும் வைத்து சுவாரஸ்யமா இயக்கியதிலே இயக்குநத் திறமை பளிச்சிடும்.


இந்த டைரக்டர் ஆஸ்த்ரேலியா நாட்டின் முக்கிய இயக்குநர்


இந்தனைக்கும் டிவி மற்றம் ஒரே ஒரு ஆள் மட்டும்தான் படத்தின் பெரும்பாலான காட்சிகள் இருக்கும்.

மனைவி பிள்ளை பெரும் மெஷின் மட்டும் அல்ல அவளுக்கும் மனது இருக்கிறது என்பதை வலியுருத்தும் படம் .


சம்பாதித்து போடுவதால் மட்டுமே ஒரு ஆண் கணவனுக்கான தகுதியை அடைவதில்லை...

வீட்டில் இருக்கும் பெண்ணக்கும் மெல்லிய உணர்வுகள் உள்ளதை இந்த படம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

கள்ளகாதல் மலிவாய் இருக்கும் இந்த காலகட்டத்தில் இந்த படம் தமிழ்நாட்டு ஆண்கள் எல்லோரும் இந்த படத்தை பார்க்க வேண்டுமாய் கேட்ககொள்ள படுகிறார்கள்

இந்த படத்தின் திரைக்கதை நல்ல திரைக்கதைக்கான மிகச்சிறந்த உதாரணம்....

இந்த படத்தின் பட்ஜெட் என்று பார்த்தால் நம்ம ஊருக்க 10 லட்சத்தில் படத்தை முடித்து விடலாம்


Director: Rolf de Heer

Producers: Julie Ryan, Domenico Procacci, and Rolf de Heer

Executive Producer: Antonio Zeccola



Writer: Rolf de Heer

Cinematographer: Ian Jones ACS

Editor: Tania Nehme



Composer: Graham Tardif

Co-Producers: Sue Murray and Bryce Menzies



Sound Design: James Currie, Andrew Plain, and Nada Mikas

Hair/Make-up/Wardrobe: Beverley Freeman

Associate Producer: Nils Erik Nielsen



Production Companies:

* Australian Film Commission
* Fandango Australia
* Hendon Studios
* Palace
* South Australian Film Corporation
* Vertigo Productions Pty. Ltd.



Distributors:

* Fandango (Italy)
* Film Movement (USA)
* Filmhouse (Mexico)
* Gutek Film (Poland)
* Palace Films (Australia)
* Paradiso Entertainment (Netherlands)



Format: 35mm

Screen Ratio: 2.35



Country of Production: Australia

Stock: Fuji and Kodak



Running Time: 103 minutes



Sound: Dolby Digital

Year: 2003



Budget: AUD $2,000,000



Released: 8 May 2003



CAST

Steve: Gary Sweet

Alexandra: Helen Buday

Bill: Bogdan Koca


AWARDS

- Official Selection in Competition Berlin Film Festival 2003

- 48th Valladolid International Film Festival 2003 Best Actress: Helen Buday

- Montreal World Film Festival 2003: Golden Zenith for the Best Film from Oceania

- Victorian Premier's Literary Awards 2003 Winner: Best Screenplay

- Australian Film Institute 2003 Nominations: Best Film, Best Actress (in a lead role), Editing, Sound Design, and Music

- IF Awards 2003 Nominations: Best Screenplay, Best Actress (in a lead role), and Sound Design

- Film Critics Circle of Australia 2003 Nominations: Best Film, Best Director, Best Actress (in a lead role), Best Actor (in a lead role), Best Actor (in a supporting role), Original Screenplay, and Editing






FILM FESTIVALS

- Berlin International Film Festival: Germany 6-16 February 2003

- Edinburgh International Film Festival: UK 13-24 August 2003

- Montreal World Film Festival: Canada 27 August- 7 September 2003

- Telluride Film Festival: USA 29 August-1 September 2003

- Toronto International Film Festival: Canada 4-13 September 2003

- Chicago International Film Festival: USA 2-16 October 2003

- Valladolid International Film Festival: Spain 24 October ö 1 November 2003

- Stockholm International Film Festival: Sweden 13-23 November 2003


இந்த பார்த்தே தீர வேண்டிய படங்கள் தொடரை உங்கள் நண்பர்களுக்கு தெரியபடுததுங்கள்..என்னை பின்னுட்டம் போட்டு உற்சாகப் படுததுங்கள்

அன்புடன்/ ஜாக்கிசேகர்

எய்ட்ஸ் தினமான இன்று இந்த ஜோக் பொருந்தும்....



இந்த ஜோக் படித்து ரசிக்க மட்டுமே யார் மனதையும் புன் படுத்தும் நோக்கம் இல்லை. என்பதனை பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன்


சிம்பு / அப்பா அப்பா

டி ராஜேந்நதர்/ என்னடா மொவனே?


சிம்பு/ நாளைக்கு சினிமாவுக்கு போலாமா? புதுசா ஜேம்ஸ்பாண்ட் படம் வந்து இருக்கு....


டி ராஜேந்தர்/ என்ன படம்டா அது?


சிம்பு/ காண்டம் ஆப் சேல்ஸ்



டி ராஜேந்தர்/ தறுதலை தறுதலை எப்ப பார்த்தாலும் அதே நினைப்புதானா?

ஆத காண்டம் ஆப் சேல்ஸ் இல்லை குவாண்டம் ஆப் சேலஸ்..



ஏதோ நம்பளாலான தேச சேவை....

அன்புடன்/ ஜாக்கிசேகர்

யோசித்து பாருங்கள் இந்தியர்களே......



சற்று முன் கிடைத்த ஒரு குறுஞ்செய்தி என்னை யோசிக்க வைத்தது. அது உங்களையும் சற்று யோசிக்க வைக்கும் என்று நம்புகிறேன்..

இந்திய ஒலிம்பிக்கில் துப்பாக்கி சூடுதலில் வெற்றி பெற்று ரொம்ப நாட்களுக்கு பிறகு நம் மானத்தை உலக அளவில் காப்பாற்றிய அபினவ் பிந்ராவுக்கு நமது மத்திய அரசு 3 கோடி கொடுத்து கவுரவித்தது. அவரும் துப்பாக்கியால் சுட்டார் அது விளையாட்டு.

அனால் அதே போல் உயிரை பணயம் வைத்து மும்பை தாக்குதலில் எண்ணற்ற உயிர் காப்பாற்ற பட்டு ,உலக அளவில் இருந்து சுற்றுலா வந்தவெளிநாட்டுகாரர்களை காப்பாற்றி தன் இன்னுயிரை தந்த நம் நாட்டு மானத்தை காப்பாற்றிய கமான்டோக்களுக்கும், உயிர்விட்ட காவலர்களுக்கு வெறும் 25 லட்சம் கொடுதது இருக்கிறது.


ஒருகோடி இறந்தவர் குடும்பத்துக்கு கொடுததால் என்ன இந்தியா வறுமை கோட்டுக்கு கீழே போய்விடுமா என்ன???

யோசித்து பதில் சொல்லுங்கள்,

பணி முடிந்து அந்த வீரர்க்ளை ரயில் ஏற்றி அனுப்பியதாகவும் தகவல். இந்தியாவில் ரானுவத்துக்கு ஒதுக்கப்படுமதொகை அதிகம் . அவர்கள் ஹெலிகாப்டரில் அனுப்பலாம். பக்கத்தில் இருக்கும் திருவள்ளுருக்கே ஹெலிகாப்டரில் பறந்து போன அரசியல்வாதிகளை எனக்கு தெரியும்.




அன்புடன்/ஜாக்கிசேகர்

சென்னையில் ஒரு கோடி கொடுத்து வீடு வாங்கனவன் எல்லாம் தெருகோடியில நிக்கறானுங்க....


மும்பை குண்டு வெடிப்பும் பாரபட்சம் உள்ள வட இந்திய மீடியாவும் சென்னை பெருமழை பற்றி பெரிதாய் அலட்டிக்கொள்ளவல்லை. முன்னாள் பிரதமர் விபிசிங் இறந்ததை கூட இரண்டு நிமிடம் சொல்ல மனம் வராத மீடியாக்கள்தான் வட இந்திய மீடியாக்கள்.


சென்னையில் ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னை வடபழனியை அடுத்த ராமாபுரம் , ஆழ்வார் திருநகர், தேவிகுப்பம் , வளசரவாக்கம், ஆலபாக்கம், இந்த பக்கம்வேளச்சேரி ராம்நகர், பள்ளிக்கரனை, பம்மல் மடிப்பாக்கம் போன்ற இடங்களில் எல்லாம் வீட்டு வாடகை என்பது டபுள் பெட்ரும் 10,000 ஒரு லட்சரூபாய் அட்வான்ஸ் தொகை கொடுத்து குடிபுகுந்தார்கள்.

அதுவும் சொந்தமாக கிரவுண்டு வாங்கி வீடு கட்டடும் போது ஒரு கோடி முதலிடு செய்தார்கள். வாங்கிய இடங்கள் எல்லாம் ஏரி மற்றும் தாழ்வான பகுதிகள். ஒரு கோடி கொடுதது வாங்ககியவர்கள் எல்லாம் தெரு கோடிக்கு வந்துஇருக்கிறாப்கள்.

தண்ணீர் உள்ள இடத்தில் இருந்து ஒரு ஆளை அழைத்து வர 80ரூபாய் வாங்கி அழைத்து வந்தார்கள் ஆட்டோ டிரைவர்கள் .

இப்போது மட்டும் அல்ல எப்போதுமே சென்னை ஆட்டோகாரர்கள் போல் நியாயமானவர்கள், சட்டத்துக்க கட்டுபட்டுநடப்பவர்கள் இநத உலகத்தில் இருக்க முடியாது.

பைக்கில் போன ரோட்டில் குழந்தை குட்டிகளுடன் போட்டில் போய் கொண்டு இருக்கிறார்கள் இந்த முதலிட்டை சொந்த ஊரில் செய்து இருந்தாலும் 25 டபுள் பெட்ரூம் தனி வீட்டுக்கு சொந்தக்காரகளாக இருந்து இருக்கலாம்.


அலச்சல்கார வீட்டு ஓனர்கள் பணம் வாங்கி பர்க்கெட்டில் போட்டதும் அந்த பக்கமே வர வில்லை இந்த ஆட்சி மட்டும் இல்லை எந்த ஆட்சியும் வெள்ளம் வரும் போது இரண்டாயிரம் பணம் பத்து கிலோ அரிசி கொடுப்பதோடு தன் கடமையை முடித்து கொள்கிறது.

அதற்க்கான உள் கட்டமைப்பை மேம்படுத்துவதும் தொலை நோக்கு பார்வையும் இவர்களிடம் இல்ல இல்லை.
கவுன்ஸ்லர்களும் காண்ட்ராக்ட் காரர்களும் கடன் இழவே என்று ரோடு போடுவதும் சாக்கடை கட்டுவதும் ஏதும் நிரந்தர தீர்வை தர இயலவில்லை.


ஆட்சியாளர்கள் போயஸ் கார்டனிலும் அதன் எதிர்புறம் உள்ள கோபால புரத்திலும் மனைவி நண்பியோடு இருக்கம் போது புறநகர் மக்கள்பற்றி அவர்களுக்கு என்ன கவலை வந்து விட போகிறது.


அன்புடன்/ஜாக்கிசேகர்.

எங்கே போனார்கள் அந்த பொட்டை பசங்க???


அமிதாப்பச்சன் ஏதாவது சொல்லி விட்டால் போதும் அவ்வளவுதான் ராஜ்தாக்கரே ஆட்கள் நிரா யுதபானி மும்பை மக்களை உண்டு இல்லை என்று செய்து விடுவார்கள்.

ஒரு அம்பாசிட்டர், ஒரு அரசு பேருந்தை எறித்து இருபது முப்பது கடைகளை உடைத்தால்தான் அவர்களுக்கு நிம்மதி தரும்.
அதே போல் இப்போதும் பொட்டை பொறுக்கிகள்தான் ஏகே 47 எடுத்து வந்தார்கள். இந்த பொட்டைகள் பானிபூரி சாப்பிட்டு என்.டி.டிவி பார்த்து கொண்டு இருந்தார்கள் இப்போது போய் ஏதாவது புடுங்க வேண்டியது தானே.

இவர்கள் பருப்பு அங்கே வேக வாய்பில்லை. வேக வைக்க நினைத்தாலும் நினைக்கும் போதே பயிறுகள் இறைந்து விடும்.



ஏகே 47 எடுத்துக்கொண்டு கடல் வழியாக தீவரவாதிகள் வந்த போது, ராஜ் தாக்கரே இது எங்கள் மஹாராஷ்ட்டிரா மண் , இந்த தீவிரவாதிகளை நாங்கள்தான் விரட்டுவோம். எங்கள் மண்ணின் மைந்தர்கள்தான் இதை புடுங்குவார்கள் வேறு யாரும் புடு்ங்க வேண்டாம் என்று சொல்ல வேண்டியதுதானே.


எங்ககிருந்தோ எந்த மாநிலத்தில் இருந்தோ வந்த கமாண்டோக்கள் மாநில எல்லை பார்க்காமல்உயிர் துறந்து எல்லோரையும் காப்பாற்றி நிலமையை கட்டுக்குள் எடுதது வந்தார்கள்.

அந்த பொட்டை பசங்க அமிதாப்பச்சன் பேனர் கிழிக்கவும் ஐஸ்வர்யாராய் போஸ்டருக்கு மீசை வரையவும் டுவீலரில் வரும் நிராயுதபானி குடிமகனை மிரட்டி இன்பம் காணவும்தான் லாயக்கு.....

அன்புடன்/ஜாக்கிசேகர்

Anukokunda Oka Roju 2005 (பாகம்/9) உலக தரத்தில் ஒரு தெலுங்கு சினிமா.



பொதுவாக தெலுங்கு படம் என்பது1980களில் பெல்பாட்டம் போட்டு பாக்கியராஜ் போடுவது போல் பெரிய கண்ணாடி அணிந்து பாக்கியராஜ் போலவே உடற்பயிற்ச்சி ஆட்டம் ஆடுவார்கள் அந்த கால கட்டத்து தெலுங்கு ஹிரோக்கள்.


தெலுங்கு ஹிரோயின்கள் கட்டாயம் விதவை டிரஸ் ஆன, மன்னிக்கவும் வெள்ளை உடை உடுத்தி மழையில் நனைய வைப்பார்கள். அப்போது கண்டிப்பாக அவர்கள் கருப்பு பிரா அல்லது சிவப்பு பிரா அணிந்து இருப்பார்கள், அவர்களுக்கு
பின்புறம் என் ஆம்மா வயது ஒத்த பெண்கள் பெருத்த தொப்பையுடன் டூபீஸ் மாட்டிக்கொண்டு ஆடுவார்கள்.


இடுப்பில் பவுன் கலரில் ஒரு மினுக்கும் கயிறு அணிந்து இருப்பார்கள், லைட்டாக தொப்புள் பக்கம் லேசாக நீர்த்திவலைகள் இருக்க எங்கிருந்தோ வரும் ஆப்பிள் அல்லது ஆரஞ்சு பழம் தொப்புளில் அடிக்க சம்மா அதிருதில்லை கணக்காக தொப்புள் அதிரும்.

இப்படிதான் தெலுங்கு படங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் தலைமுறை மாற்றம் மெல்ல மாறியதும் இளம் இயக்குநர்கள் தங்கள் கையில் தெலுங்கு சினிமாவை எடுத்துக்கொண்டு இப்போது வெற்றி நடை போடுகிறார்கள். அப்படி வெற்றி நடை போட்டபடம்தான் ANUKOKUNDA OKA ROJU.


படித்து கொண்டே பாடகி சான்ஸ் தேடும் சர்மிலி... அம்மா அப்பா சின்ன வயதிலேயே டிவோர்ஸ் வாங்கி பிரிந்து விட்டார்கள். அப்பா மற்றும் ஸ்டெப்மதர்  மற்றும் அவர்களின் இரண்டு  குழந்தைகளோடு   வீட்டில் தங்கி படிக்கிறாள். சித்தி  கொடுமைகாரி. எப்படியாவது சினிமாவில் பெரிய பாடகி ஆகி விட வேண்டும என்று தொடர்ந்து முயற்ச்சிசெய்து வருபவள். அவ்வப்போது கோரஸ்ம் பாடுவாள்.

ஒரு நாள்  அப்பா அவர்  குடும்பத்துடன் வெளியூர் செல்ல நண்பி ஒருத்தி பேச்சை கேட்டு இரவு பார்ட்டியில் வியாழக்கிழமை இரவு கலந்து கொள்கிறாள். மறுநாள் எப்போதும் போல் கல்லூரி செல்ல, எப்போதும் கூட்டம் இருக்கும் பேருந்தில் அன்று கூட்டம் சுத்தமாக இல்லை. கல்லூரிக்கு அவசர அவசரமாக செல்ல அங்கும் யாரும் இல்லை. ஏன் யாரும் இல்லை என்று பியுனிடம் கேட்க இன்று சனிக்கிழமை என்று சொல்ல ,அவளுக்கு தூக்கிவாரி போட படம்பார்க்கும் நமக்கும்தான்.

அந்த ஒருநாள் என்ன ஆனது? அந்த ஒருநாள் எங்கே இருந்தாள்? அந்த ஒருநாள் அவள் நினைவு அடுக்கில் ஏன் இல்லாமல் போனது? வயசுப்பெண்ணாயிற்றே அந்த சுய நினைவு இல்லாத அந்த தினத்தில் அவள் கற்புடன்தான் இருந்தாளா? என தெரிய ANUKOKUNDA OKA ROJU படம் பார்க்கவும்

படத்தை பற்றி சில சுவாரஸ்யங்கள் சில.....

படத்தி்ன் இன்ஸ்பெக்டர் வேடம் ஏற்று இருப்பது கெஜபதி பாபு. டாக்ஸி டிரைவராக செஷான்க் இருவரும் அற்புதமாக நடித்து இருப்பார்கள்.

இந்த படத்தின் ஓப்பனிங் சீன் வழக்கமான தெலுங்கு படம் போல் இல்லாமல் ரொம்ப அற்புதமாக இருக்கும் இதுவே இது வித்யாசமான படம் என்று சொல்ல வைக்கும்.



குறைந்த முதலீட்டில் நட்சத்திடர அந்தஸ்த்து இல்லாத ஆட்களை வைத்து காமெடி கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் தந்த இயக்குநர் அதுவும் தெலுங்கில் இப்படி ஒரு படம் எடுத்த Chandra Sekhar Yeleti
என் பெருமைக்கு உரியவர்.

தொடந்து தெலுங்கு படத்தை பற்றிய என் எண்ணவோட்டத்தை மாற்றிய இயக்குநர் என்பேன்.

படத்தின் பெரியபலம் இந்த படம் வேறு எந்த படத்தையும் ஞாபகப்படுததாது.


எவராலும் கண்டுபிடிக்க முடியாத திரைக்கதை. எல்லா கேரக்டர்களும் பிரமாத படு்த்தியிருப்பார்கள்.

முக்கியமாக அந்த இங்கிலிஷ் வாத்தியார், சாமியார் இருவரும்


கவர்ச்சி சர்மிலி இதில் நடிப்பில் பின்னி பெடலெடுத்து இருப்பபார்.

கீரவானி பின்னனி இசை படத்துக்குமேலும் மெருகு....

இந்த படத்தின் ஒளிப்பதிவு அவய்லபுள் லைட்டில் எடுக்கப்பட்டது போல் தோற்றம் இருப்பதால் இந்த படத்துக்கு அது ரியாலிட்டி எபெக்ட் கொடுக்கின்றது.

இந்த படத்தின் இயக்குநர் இதற்க்கு முன் அய்த்தே என்ற தெலுங்கு படம்தான் இவரின் முதல் படம் அதுதான் தமிழில் நாம் என்ற படமாக வந்தது..

இனிமே யாரும் ஹாலிவுட் ஹாலிவுட்தான் என்று தயவு செய்து சொல்லாதீர்கள். நம்ம ஆட்களை முதல்ல மதிக்க கத்துக்கோங்க



இப்படி ஒரு தெலுங்கு படம் நீங்க பாத்திருக்க வாய்பில்லைதான் என்று நான் அடித்து சொல்லுவேன்




eevi rating: 3.5/5
Punchline
: Anukunnate Oka Manchi Cinema
Genre:
Thriller
Type:
Straight
Banner:
Just Yellow Media
Cast
: Charmy, Sashank, Pavan Malhotra, Harsha Vardhan, Narsing Yadav, Pooja Bharati, Jagga Rao, Sivannarayana, Ravi Prakash, Kaushal, Amit, Pingpong, Vasu Inturi, Sandra, Jayalakshmi, Baby Roopika

Dialogues: Gangaraju Gunnam
Lyrics: Sirivennela, MM Keeravani, Gangaraju Gunnam & Marut
Music: MM Keeravani
Choreography: Nixon
Cinematography: Sarvesh Murari
Stunts: Ramana
Editing: Mohan - Rama Rao
Art: Ravindar R

Costumes: Rama Vastala & Sandhya Ravi
Presents: Ramaraju D
Executive Producer: Urmila Gunnam
Story - Screenplay - Direction: Chandra Sekhar Yeleti
Producers: Gangaraju Gunnam & Venkat Dega

Theatrical release date: 30th June 2005


அன்புடன்/ ஜாக்கிசேகர்

மும்பை பற்றி எறிகிறது....

நேற்று இரவு பதினோரு மணியளவில் மும்பையில் தாஜ் ஓபராய் ஓட்டல்களில் தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு துப்பாக்கி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் .இதுவரை 80 பேர் பலி , 7 காவல் துறையினர் பலியாகி உள்ளனர். இன்னும் இடங்களில் குண்டு வெடிப்பும் நிகழ்த்தி உள்ளனர். இந்த பதிவு எழுதிக் கொண்டு இருக்கும் வரை மும்பை ஒபராய் ஓட்டலில் இன்னும் முழுமையாக காவல்துறை கட்டுப்பாட்டில் வர வில்லை. இராணுவம் ஒபராய் ஓட்டலில் நுழைந்து இருக்கிறது.




முன்பு எல்லாம் குண்டு வைத்து தீவிரவாதிகள் தலைமறைவு ஆனார்கள் இப்போதெல்லாம் டைஹார்டு படம் போல் இருபது தீவிரவாதிகள் ஒன்று சேர்ந்து குண்டு வெடிப்பும் துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள். வழக்கம் போல் மத்திய அரசின் உளவு துறை மயிர் புடுங்கி கொண்டு இருக்கிறது.

என்ன ஒரே ஆறுதல் அண்ணாடங்காட்சிகள் பயணம் செய்யும் பேருந்து, ரயில், மார்கெட் போன்ற இடங்களில் குண்டு வைக்காமல் பைவ் ஸ்டார் ஓட்டல்களில் அட்டாக் செய்து இருக்கிறார்கள்.


ஒருவேளை மேல் மட்டத்து மக்களுக்கு வலிகளையும் வேதனைகளையும் புரியவைப்பதற்க்காகவோ???

பார்ப்போம் மன்மோகன் அரசு இன்னும் எத்தனை பேரை மண்ணுக்கு அனுப்ப போகிறது என்று?


இந்த இடத்தில் என் பழைய பதிவை இணைக்கிறேன். அது எப்போதும் இந்தியாவுக்கு பொறுந்தும்

நேற்று அசாம் கவுகாத்தியில் குண்டு வெடித்து 70 பேர் பலியானார்கள்(30/10/2008) இந்த பதிவு டெல்லி குண்டு வெடிப்பின் போது எழுதியது. இப்போதும் எப்போதும் இந்தியாவிற்க்கு பொறுந்தும்.....

இன்னும் குண்டு வெடிக்கும் போதெல்லாம் இதே பதிவை உயிர் சேதம் மற்றும் நாளை மடடும் மாற்றி போடலாம் என்று இருக்கிறேன். எனெனில் இத்தனை பலியாகி இருக்கிறார்கள் உளவுதுறை என்ன செய்கிறது? அவர்களுக்கு கெபடுககும் சம்பளம் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தானா?

இதற்க்கு மேல் பழைய பதிவை படியுங்கள் இது எப்போதும் பொறுந்துவது போல்தான் எழுதியுள்ளேன்


நேற்று முன் தினம் தலைநகர் டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பில் இதுவரை 30 பேர் உடல் சிதறி மடற்றும் 100க்கு மேற்பட்டவர்கள் பலியாக உள்ளனர்.



சில மாதங்களுக்கு முன் அகமதாபாத், பெங்களுர், சூரத் போன்ற இடக்ளில் குண்டு வெடித்து இறந்து போனது ஞாபகம் இருக்கலாம் அல்லது தமிழனாக இருக்கும் பட்சத்தில் அது மறந்து போய் இருக்கலாம்.இந்தியனாக இருக்கும் பட்சத்தில் அதை சகித்து கொண்டு இருக்கலாம். அல்லது பொதுவானாக இந்தியனாக இருந்தால் பக்கத்து வீட்டில்தானே நடந்தது நமக்கேன் கவலை என்ற உயர்ந்த பண்பு காரணமாகவும் நாம் மறந்து போய் இருக்கலாம்,


பெங்களுர், சூரத், அகமதாபத் போன்ற இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது எப்படி பொங்கி எழுந்து தீவரவாதத்தை அடக்குவதாக பாவித்து என்ன சூலுரைத்தார்களோ, அதே போல்தான் இப்போதும் பெரிய தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.


இதுவரை தீவரவாதத்தை அடக்க எந்த ஒரு முன் ஏற்பாடும் எடுத்ததாகதெரியவில்லை. உளவுதுறை என்ன மயிர் புடுங்கி கொண்டு இருக்கிறது என்பது புரியவில்லை.

இந்தியாவில் ஒவ்வோரு முறை குண்டு வெடிப்பின் போது கீழுள்ளவை நிகழும்...

1. குண்டு வெடிப்பு நிகழ்ந்ததும் உடல்களை உடனே அப்புறபடுத்தி உடனே லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிப்பார்கள்

2. காயம் பட்டவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறி ஒரு போட்டோ எடுத்து அதனை இந்தியா முழுவதும் வெளிவரும் பிராதன பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் வரும் படிபிரதமர் வட்டாரத்தினர் பார்த்து கொள்வார்கள்.

3.சோனியா காந்தியும் நேரில் போய் பார்க்கிறார் என்றால் குண்டு வெடிப்பு சேதம் அதிகம் என்று அர்த்தம்.

4. அத்வானி பொடா சட்டம் இருந்தால் தீவிரவாதமே நிகழாது என்று பேட்டி கொடுப்பார்.

5. இந்திய மீடியாக்கள் நான்கு நாட்கள் நாம் இருப்பது இந்தியாவிலா அல்லது இலங்கையிலா என்று தற்போது விஸ்காம் முடித்த வெள்ளை தோல் பெண்களை வைத்து மூண்றுநாள் ஓப்பாரி வைத்து விட்டு சல்மான்கான் யார் உதட்டில் இப்போது ஈரப்டுத்தி கொள்கிறார் என்பதை ஆராய போய் விடுகிறார்கள்.

6.கொஞ்சம் கோபம் உள்ளவர்கள் பத்திரிக்கையிலும் பிளாக்கிலும் எழுதி தன் கோபத்தை தீர்த்து கொள்கிறார்கள்.

7. எல்லா தலைவர்களும் கண்டனம் தெரிவிப்பார்கள்.

8.குண்டு வெடிப்பில் தன் உற்றாரை இழந்து வாடும் உறவினர்கள் மார்பில் அடித்துகொண்டு அழும் காட்சி மறுநாள் தினசரிகளில் நிச்சயம் இடம்பெறும்.



9. ஒருவாரம் கழித்து இறந்தவர் ஒருவருடைய சோக செய்தி வாரப் பத்திரிக்கையில் இடம்பெறும்.



10. இந்தியர்கள் பத்திரிக்கை, தொலைகாட்சி, வாரபத்திரிக்கைகளில் குண்டு வெடிப்பு செய்திகளை படித்து விட்டு பார்த்து விட்டு, த்சோ த்சோ என்று சொல்வார்கள் .


அடுத்த குண்டு வெடிப்பு நடந்ததும் இதே செயல்கள் இந்தியாவில் நிச்சயம் நடைபெறும் இந்தியர்கள் த்சோ, த்சோ சொல்ல காத்து இருப்பார்கள்...

அன்புடன்/ஜாக்கிசேகர்

(பாகம்/8) மதிப்பில்லாத காதல். priceless பிரெஞ்சு பட விமர்சனம்.



நான் முதல் முதல் எழுதிய கவிதை

காதல் புனிதமானது
தெய்வீகமானதும் கூட
என் வீட்டு சகோதரிகள்
காதல்வயப்படாதவரை......

என்று அந்த வயதில் காதல் பற்றிய புரிதல் இல்லாமல் எழுதியது. நாட்கள் நகர்ந்தன என் திருமணமும் காதல் திருமணத்தில் முடிந்தது. அதுவும் ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல பத்து வருடங்கள்.


காதல் சக்தி வாய்ந்த விஷயம்தான். அது எந்தளவுக்கு என்பதுதான் பிரைஸ்லெஸ் படத்தின் கதை.

ஜேன் ஒரு பார் அட்டன்டர். நாளைய சோத்துக்கு ஜிங்கிஅடிப்பவன். ஒரு நாள் அந்த ஓட்டலில் இருந்த பாருக்கு நேரங்கெட்ட நேரத்தில் ஐரின் வருகிறாள்,
அவளை பற்றி சில வரிகள் பார்த்தே ஆக வேண்டும்.


எண்ணை வளம் உள்ள நாடுகளின் மேல் எப்படி அமெரிக்காவுக்கு ஒரு கண்இருக்கிறதோ அதே போல் யாரிடம் எல்லாம் பணம் இருக்கிறதோ அவர்கள் மீது எல்லாம் ஐரினுக்கு ஒரு கண் இருக்கும், அதே போல் அவர்கள் கைபேசி எண் அவள்டைரியிலும் இருக்கும்.


பணம் ஒரு அறுபது வயது கிழவனிடம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் எதை பற்றியும் கவலை படாமல் முனியாண்டி விலாஸ் ஓட்டலில் காடை ,கவுதாரி ,சிக்கன், எல்லாம் ஒரு டிரேயில் வைத்து நீட்டுவார்களே அது போல் யாரிடம் வேண்டுமானாலும் தன் உடம்பை காட்டி விடுவாள்.

எல்ஐசி பாலிசி போல் அவளுக்கும் ஒரு பாலிஸி இருந்தது.
சுகத்துக்கு சுகம் பணத்துக்கு பணம் இதுதான் அந்த பெருமை வாய்ந்த பாலிஸி.


எத்தனையோ பேரிடம் எத்தனையோ இரவுகள் கழித்தாலும், ஜேன் வேலை செய்யும் ஓட்டலுக்கு அவள் வந்தது அறுபது வயது கிழவருடன்.

கிழவர் ரெண்டு பெக் போட்டதும் மட்டையாகி விட அன்று பார்த்து அவளுக்கு பர்த்டே.
கம்பெனிக்கு வந்த கிழவன் மட்டையானதால் சோகத்துடன் பாருக்குவர அங்கு ஜென் தவிர வேறு யாருமில்லை.


ஐரின்ஜேனை கம்பல் செய்து இரண்டு பெக் கம்பெனி கொடுக்க சொல்ல , தேவதை போன்ற பெண் கம்பனி கொடுக்க சொல்லும் போது யார்தான் கம்பெனி கொடுக்காமல் இருக்க முடியும்....

அது கடைசியில் இரண்டு பேர் உடம்பிலும் ஒட்டு துணி கூட இல்லாமல் செய்ய, அது அந்த கிழவனுக்கு தெரிய வர, அப்புறம் அந்த விஷயம் அந்த ஓட்டடல் முதலாளி்க்கு தெரிய வர கிழவன் அவளை கழட்டி விட, ஓட்டல் நிர்வாகம் இவனை கழட்டி விட இருவரும் நடுதெரு நாராயணனாக நடுத்தெருவில் நிற்க்கிறார்கள்.


ஐரின் தன் செய்த செயலை நினைத்து வருந்தி அடுத்த ஆளை தேடி போக, ருசி கண்ட பூனையான ஜேன் அவள் பின்னாடியே வர அடுத்த வேளை சோறும் தங்க இடமும் இல்லாத இருவரும் என்ன ஆனார்கள் அவன் காதல் கை கூடியதா?. அவன் காதலை அவள் ஏற்றுக்கொண்டாளா? என்பதை காமெடி கலந்த விறுவிறப்புடன் சொல்லி இருக்கிறார் இயக்குநர்Pierre Salvadori


படத்தை பற்றி சவாரஸ்யமான சில வரிகள்....

ஒரு சின்ன முடிச்சை வைத்து காமெடி கலந்து ரொம்ப அற்புதமாக லோ பட்ஜெட் படமாக இயக்கி இருக்கிறார் இயக்குநர்.


எவ்வளவுதான் ஜெனை ஜரின் உதாசினப்படுத்தினாலும். கடைசி கை இருப்பாக ஒரு யூரோ நாணயத்தை கொடுத்து பத்து செகன்டு உன்னைபார்த்து கொள்கிறேன் என்று சொல்ல அவள் அந்த ஒரு யூரோ பணத்தையும் வாங்கி கொண்டு பத்து செகண்டு முடிந்து விட்டது என்று சொல்லி அவள் நகர அவளை காதலுடன் பார்க்கும் நாயகனை கோவில்கட்டி கும்பிடலாம்.

காதல் வயப்பட்டவர்கள் இந்த படத்தை மிகவும் ரசித்து பார்ப்பார்கள்.

நாளைய சோத்துக்கு வழி இல்லாத நாயகன் நம்பிக்கையுடன் அவளை தொடரும் போது what ever may happen but life must go on.... என்ற வரி ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை

நாயகன் காக்டெயில் கலந்து அவளுக்கு கொடுக்க அது நிறைய பெக் சென்றுவிட்டதை சிறு குடைமூலம் விளக்கியிருப்பார் இயக்குநர்.

நல்ல படம் பார்த்து நாளாயி்ற்று என்று வருத்தப்படுபவர்களுக்கு இந்த படம் அந்த ஏக்கத்தை பூர்த்தி செய்ய வல்லது.


Director: Pierre Salvadori

Cast: Audrey Tautou, Gad Elmaleh, Marie-Christine Adam, Vernon Dobtcheff full cast

Rated: 12A

Duration: 106 mins

UK Release: Jun 13 2008
US Release: Mar 28 2008

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner