சம்பாதிச்சிக்குவோம்





இரவு பத்து மணி... எங்கள் காருக்கு முன் அந்த கால் டாக்சி சென்று கொண்டு இருந்தது… அந்த கால் டாக்சி டிரைவருக்கு சென்னை புதிதாக இருக்க வேண்டும்..

Dhuruvangal16 (2016) review | துருவங்கள் பதினாறு விமர்சனம்.





#Dhuruvangal16review #D16


துருவங்கள் பதினாறு விமர்சனம்.


நீட்டான திரில்லர் படங்களுக்கு தமிழில் எப்போதும் வரவேற்பு உண்டு… ஆனால் அப்படியான திரில்லர் திரைப்படங்களை அம்மா இறந்ததுக்கு பிறகு மானஸ்த்தனாக அதிமுகவில் இருந்து விலகியவர்களை போல விரல் விட்டு எண்ணி விடலாம்….

வாழ்த்துகள் கார்த்தி





கார்த்திகேயன் மாணிக்கம் திட்டக்குடிகாரன்… நம்ம தென்னார்காடு மாவட்டத்து பையன்  என்பது கூடுதல்  சிறப்பு…. எப்படி பழக்கம் எல்லாம் நம்ம வலைபதிவு படிச்சிட்டுதான்...

Chennai 600028 II: Second Innings movie Review




#Chennai28II

சென்னை 28 2 விமர்சனம்.
2007 ஆம் ஆண்டு சென்னை 28 திரைப்படம் வெளியானது… குரோம்பேட் ராகேஷில் அந்த திரைப்படத்தை பார்த்தேன். அந்த படத்துக்கு என் தோழியோடு சென்று இருந்தேன்…

முன் சீட்டில் உட்கார்ந்து இருக்கும் நண்பரிடம் படம் மறைக்கின்றது என்று கொஞ்சம் சீட்டில் சாய்ந்து உட்காருங்கள் என்று சொல்லப்போக படம் முடியும் வரை சாய்ந்து உட்கார்ந்தவர் படம் முடியும் வரை சாய்ந்தே உட்கார்ந்தே இருந்தை மறக்க முடியாது…

Saithan - movie Review - சைத்தான் திரைவிமர்சனம்.




 
சைத்தான் என்றே சொல்லே வழக்கு ஒழிந்து போய் விட்டது…. 1980களில் தமிழ் திரைப்படங்களில் மார்வாடி சேட்டு கேரக்டர்கள் தன்னிடம் லந்து கொடுக்கும்  பொடியன்களை  சைத்தான் கி பச்சே என்று கத்தி துரத்துவார்கள்..  நீண்ட  இடைவேளைக்கு பிறகு இந்த வார்த்தையை கேட்கிறேன்.
 
1992 இல் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் எழுத்தாளர் அமரர் சுஜாதா அவர்கள் ஏழுதிய ஆ நாவலின் முதல் பாதியை மட்டும் வைத்துக்கொண்டு  திரைக்கதை  கொஞ்சம் கரம் மசாலா எல்லாம் சேர்ந்து  பிரைட் ரைஸ் செய்து இருக்கின்றார்கள்.
 
 ஆ நாவல் மொத்தம் 33 எபிசோட்… ஒவ்வோரு பாகத்தின்  முடிவிலும் ஆ என்று முடிவது போல எழுதி அசத்தி இருந்தார் ஆசான் சுஜாதா…
 


Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner