சென்னை மெரினா கடற்கரையில் தினமும் கூடும் இருபதாயிரம் புறாக்கள்.... காரணம் என்ன???



சென்னை மெரினா எனக்கு இரண்டாவது தாய்…


  
1994 இல் இருந்து அவள் எனக்கு  பழக்கம்… எனக்கு தங்க பிளாட்பாரத்தில் இடமும், பாதுகாப்பும் கொடுத்து  என்  ,வயிற்று பசியை தீர்த்து வைத்தவள் அவள் என்பேன்… 

ஆக மொத்தம் எனக்கும்  மெரினாவுக்கும் இருபது வருட பழக்கம், பினைப்பு எல்லாம் இருக்கின்றது… அப்படியான மெரினாவில் சில  மாதங்களாக நான் பார்த்து வியக்கும் விஷயத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்…



பொதுவாக மீடியாக்களின் மீது  வைக்கப்படும் குற்றச்சாட்டு  என்ன தெரியுமா? நெகட்டிவ் விஷயங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம்  பாசிட்டிவ் விஷங்களுக்கு கொடுப்பதில்லை என்பதுதான்.. ஆனால் நம்மில் பலரே  நல்ல விஷயங்களை மனதார பாராட்டுவதில்லை என்பதுதான்  உண்மை.

உதாரணத்துக்கு ஒரு மாலுக்கு அல்லது  ஏசி செய்யப்பட்ட கடைக்கு செல்லும் போது   யாரோ  ஒருவர் நம் மேல் அந்த தானியங்கி கதவு  இடித்து விடக்கூடாது என்பதற்காக  திறந்து வைத்து பிடித்து இருப்பார்.. நாம் உள்ளே  சென்று.. கதவை நமக்காக பிடித்துஇருந்தவரை பார்த்து புன்னகைத்து  நன்றி என்று சொல்ல வேண்டும்.. ஆனால் நம்மில் பலர் நன்றி சொல்லாமல் பெரிய மயிறு போல சென்று விடுகின்றார்கள்..


 அவர்கள் என்னவோ நம்ம வீட்டில் வேலை செய்யும் அடிமைகள் போலவும்…  நம்மில் பலர் அந்த இடத்தை விட்டு கடந்து விடுகின்றோம்..

சகமனிதன் மீதான மரியாதையோ  நேசமோ கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டு இருக்கின்றது என்பேன்.. சரி  தடி தாண்டவராயன்கள்தான் அது போல நடந்துக்கொள்ளுகின்றார்கள் என்று பார்த்தால்   முளைச்சி மூணு இலை விடாத பொடிசுங்க  கூட அப்படித்தான் நடந்துக்குதுங்க.. என்ன செய்ய?


 சமீபத்தில் ஒரு பையன் லிப்ட் கேட்டான் கொடுத்தேன்… அவன் எறங்கி அவன் பாட்டுக்கு போனான்…. எனக்கு செம்ம கோபம்.. தம்பின்னு கூப்பிட்டேன்.. நான் உனக்கு ஒன்னும்  டிரைவர் இல்லை பெரிய புடுங்கி போல போற… ஒரு நன்றி சொல்லக்கூட உங்க வீட்டுல கத்துக்கொடுக்கலையான்னு சொன்னேன்… அதுக்கு அவன் தேங்ஸ் சொல்ல ரொம்ப யோசிச்சதுதான் கொடுமை.

 இதுபோல இருக்கறதுதான்  பிற்காலத்துல வாத்தியார் செவிட்டை அடிச்சி கிழக்கறதுங்களா வளர்ந்து தொலைக்குதுங்க.. 1980 களில் ஹோம் ஒர்க் செய்யலைன்னா  பிரம்பால பின்னுவானுங்க..   இப்ப அப்படி எல்லாம் இல்லை… ஏம்பா லேட்டா  வந்தேன்னு வாத்திமாரு  கேட்டாலே.... மேல  பாஞ்சி பிராண்டிடறானுங்க.. மரியாதை இருந்தாதான்…  பாசம், நேசம், அன்பு எல்லாம் வரும்… இப்ப இருக்கற பெற்றோரும்  பெரியவங்களை  மிதிக்கனும்னு சொல்லி கொடுக்கறதில்லை.

 சரி விஷயத்துக்கு வருவோம்.

 உலகிலேயே மிகப்பெரிய  இரண்டாவது கடற்கரை மெரினா… அந்த மெரினா கடற்கரையில்  ஒன்றல்ல இரண்டு அல்ல… நூறல்ல   ஐநூறு அல்ல..  ஒரு நாளைக்கு மொத்தம் 20,000 புறாக்கள்…  சென்னை விவேகானந்தர்  இல்லம்  எதிரே விடியற்காலையில் ஒன்று கூடுகின்றன என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா?


ஆம்  தினமும்  இருபதாயிரம் புறாக்கள் ஒன்று கூடுகின்றன…

 நாயகன் திரைப்படத்தில் மும்பையில்   சரண்யாவை அழைத்துக்கொண்டு நடந்து வரும் போது கேட்வே ஆப்  இந்தியா அருகே  இரண்டு பேரும் நடந்து வரும் போது புறாக்கள் பறந்து போகுமே..? அது போல   அவ்வளவு பெரிய எண்ணிக்கையில்  ஆனா  புறாக்களும் சென்னையில் இருக்கின்றன என்பது நம்மில்  பலரும் அறியாத சேதி..


 எனக்கு புறாவுக்கும் பெரிய  சம்பந்தம் எல்லாம் இல்லை.  அது போலான குடும்ப சூழலிலும் நாம் வளரவில்லை.. கடலூர் ரமேஷ் தியேட்டரில் மேய் னே பியார் கியா? திரைப்படத்தில் நாயகி கபூத்தர் ஜா ஜா என்று பாடுவார்… ஏழு கழுதை வயதான  பிறகுதான்  புறா என்றால்  இந்தியில் கபூத்தர் என்று அறிந்துக்கொண்டேன்… அந்த அளவுக்கு மக்குபிள்ளை  நான்.


அதன் பின் கூட்டமான புறாக்களை திருவல்லிக்கேனி ,மவுன்ரோடு பள்ளிவாசல்களிலும்,அமீர்மாஹாலிலும் பார்த்து இருக்கின்றேன்… அதையும் மீறி  சென்னை வாணி மஹால் அருகே  இருக்கும் ரெசிடன்சி ஓட்டல் சன் ஷேடுகளில் நிறைய  புறாக்கள் ராஜ்ஜியம் செய்வதை பார்த்து இருக்கின்றேன்.  அவ்வளவுதான் புறாக்களுக்கும் எனக்கு இருக்கும் சம்பந்தம்.. 


20,000 புறாக்கள் ஒரே இடத்தில்  நான் சென்னை வந்து இத்தனை வருடங்களில்  நான் பார்த்ததே இல்லை என்பேன்…  மிகச்சரியாக காலை 5,45க்கு அத்தனை புறாக்களும் அசெம்பிள் ஆகின்றன. அங்கே  அனைத்து புறாக்களும் ஒன்று கூட ….அது என்ன தென்மாவட்டத்தில் இருந்து பேருந்து பிடித்து, பேனர் கட்டிக்கொண்டு, பொழப்பை மறந்து விட்டு, வட்டம் மாவட்டம் கொடுக்கும் குவாட்டருக்கும்  பிரியாணிக்கும் வந்து கூடும் அரசியல் அல்லக்கைகளா-?

இல்லை காலை டிபனை மெரினாவில் முடித்துக்கொண்டு பொழப்பை பார்க்க போகும் புறாக்கள் அவை.


மெரினாவில் சரியா  ஏழு  ஆண்டுகளுக்கு முன் ஜெயின்  சமுகத்தை சேர்ந்த அமர் சந்த் என்பர்  தனது மனைவியோடு மெரினா கடற்கரையில் புறாக்களுக்கு தினமும்  உணவு ((தானியங்கள்)) இட தொடங்கினார்… அன்று  சும்மா டைம் பாசுக்காக தொடங்கிய விஷயம் இன்று வருடத்துக்கு அரை கோடி செலவு  செய்து  தானியம் இடும் அளவுக்கு வளர்ந்து இருக்கின்றது என்பது வியப்பான விஷயம்தான்..

 ஆம் கடந்த ஏழு வருடங்களாக இந்த புறாக்களுக்கு அன்னதானம் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது…  எந்த நாளும் விடுமுறை அல்ல…   வருடத்தில் 365 நாட்களும் சென்னையில்  புறாக்களுக்கு   தானியமிட்டு வருகின்றார்கள் இந்த தம்பதிகள்..


இவ்வளவு ஏன் சுனாமியில் கூட தானியம் இடுவதோடு கொட்டும் மழையிலும் தானியங்கள் புறாக்களுக்கு அளித்து வருகின்றார்கள்…

முக்கியமாக மழைகாலத்தில்  இரை கிடைப்பது கடினம்…  ஆனால் அமர்சந்த் உணவு இடுவார் என்று தெரிந்து  அங்கே கொட்டும் மழையிலும் பறாக்கள் ஆஜர்  ஆகின்றன என்பது எவ்வளவு பெரிய கொடுப்பினை….


ஒரு புறா தினமும்  50 கிராம் சாப்பிடுகின்றது..


20,000 புறாக்கள் தினமும் சாப்பிடுகின்றன…
600 கிலோவில் இருந்து 700 கிலோ அளவுக்கு  தானியங்கள் தினமும்  வழங்கப்படுகின்றன…

 தினமும் 12 ஆயீரத்தில் இருந்து 15 ஆயிரம் வரை செலவாகின்றது.. மாதத்துக்கு நாலு லட்சம் செலவாகின்றது..

வருடத்துக்கு 50 லட்சம் வரை செலவாகின்றது என்கின்றார் அமர்சந்த்…


எல்லோரும் உதவுகின்றார்கள்.. யார் வேண்டுமானாலும் உதவலாம்..
வீட்டில் நடக்கு விசேஷ நாட்களுக்கு புறாக்களுக்கு தானியங்கள் வாங்கி நீங்களே  நேரில்  போய் இடலாம்.. அல்லது  காசு பணமாக அவர்களிடம் கொடுக்கலாம்...

  போட்டோ எடுக்கின்றேன் பேர்வழி என்று புறாக்கள் உணவு உண்பதை போட்டோ எடுக்கின்றேன் என்று அதனை சில நேரத்தில் சாப்பிடுவதை டிஸ்டர்ப செய்வதை தவிர்த்து வேறு எந்த பிரச்சனையும்  இல்லை என்கின்றார் அமர்சந்த்.

மெரினாவில்  ஒரு ஓரத்தில் புறாக்களுக்கு தானியங்கள் இட தனியாக ஒரு   நாலு சக்கர வண்டியில்  சேமித்து வைத்து இருக்கின்றார்கள்..
 காலையில் 5.30 மணிக்க அமர் சந்த மற்றும் அவர் மனைவியும் தினமும் வந்து புறாக்களுக்கான உணவுகளை இடுகின்றார்கள்..

இதனை நிறைய மக்களிடம் கொண்டு போய்  சேருங்கள்...


 அமர்சந்த்  தொலைபேசி எண்...9381036615


மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள வீடியோவில் அமர்சந்த் பேட்டி மற்றும் புறாக்கள்  உணவு  உண்ணும்  காட்சிகளையும்  கண்டு மகிழுங்கள்.  ஜாக்கி சினிமாசின் வீடியோ பிடித்து இருந்தால் சப்ஸ்கிரைப் செய்து  ஷேர் செய்யுங்கள் நன்றி.




பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்...




நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

8 comments:

  1. நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்

    ReplyDelete
  2. ரொம்ப நல்ல விஷயம்... அவரை வாழ்த்துவோம்...

    ReplyDelete
  3. சீரிய செயல்! பாராட்டுக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. http://athibanspeaks.blogspot.in/2014/06/chennais-pigeons.html

    ReplyDelete
  5. Jackie it's good that you have shared this.... And pls keep sharing thing like this... Not only about movies..

    ReplyDelete