கண்ணில் பட்டவை....1 (05/04/2014)

தேவிபாரடைஸ்  மதிய காட்சி... (05/04/2014) வெள்ளிக்கிழமை


பிரமாண்டமாகவும் எடுப்பாகவும் காட்ட வேண்டும் என்பதற்காக நிறைய மெனக்கெட்டு இருக்க வேண்டும்... அந்த பெண்மணி உடை உடுத்தும் போது நிறைய பிராயத்தனம் செய்து இருக்க வேண்டும் என்பதை ஸிதுரு ஒற்றை முந்தானை தெரிவித்தது.

பார்த்ததும் பர்ஸ் பிரித்து அழைத்து செல்லப்பட வேண்டும் என்பதுதான் அவர் நோக்கம்... அது காலையிலேயே நிறைவேறி... யாரோ ஒருவர் பர்ஸ் பிரித்து தேவிபாரடைசில் நடந்து போகும் வழியில் ஓர சீட்டை தேர்ந்து எடுத்து செட்டிலாகி இருந்தார்கள்..

பொதுவாக சுவற்று ஓரம் கார்னர் சீட்டுதான் இவர்களுக்கு ஏற்ற இடம் ....ஆனால் நடைபாதையை ஒட்டிய சீட்டை ஏன் தேர்ந்து எடுத்தார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை...

கன்னியும் மூன்று களவானிகளும் என்று டைட்டில் போட்டதில் இருந்து இங்கே சிலுமிஷம் ஆரம்பித்தது...டிடிஎஸ் சவுண்டையும் மீறி நைலக்ஸ் புடவையின் சரசரப்பும், வளையல் சத்தமும் ரொம்பவே டிஸ்டர்ப் செய்து வைத்தன.... படம் இன்டர்வல் விட்டார்கள்... சன்ன ஒளியில் அலங்கோலமாக இருந்தவர்... லைட் பிரைட் ஆன போது அவரும் பிரைட் ஆனார்.

ஆரம்பத்தில் இருந்தே டீவியில் பேட்டி கொடுப்பது போல கால் மேல் கால் போட்டு ஸ்டைலாக அமர்ந்து இருந்தார்.
திரும்ப படம் ஆரம்பித்து பூமியை திருப்பி மூன்றாவது வர்ஷன் ஆரம்பிக்கும் போது அவன் அந்த கேள்வியை கேட்டான்...

படம் உனக்கு பிடிச்சி இருக்கா..?

எதுக்கு கேக்கற....?

இல்லை சம்மா கேட்டேன்...

அப்படியே படத்தை புரிய விட்டுட்டாலும்....?

ஷ்ஷஷஷஷ எதுக்கு இப்ப கத்தறே....

நீ கூட்டிக்கிட்டு வந்த படம் எனக்கு எதுக்கு புரியனும் என்றார்...???

யப்பா நான் கேட்கலை என்று அவன் மொபைலை

நோண்டிக்கொண்டு இருந்தான்....

எனக்கு ஏன் படம் புரியனும் என்று எதிர்கேள்வியை அந்த பெண் கேட்ட, சரியாக 75 வது வினாடி அந்த கன்னியும் இன்டர்வெல்லுக்கு பிறகு படம் புரிகின்றதா என்று ஆதரவாக பேசுவது போல நடித்தவனும் தியேட்டரின் உள்ளே இல்லை.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

1 comment: