தூக்கு தண்டனைக்கு எதிராக தமிழர்களின் தொடர் போராட்டம்.
நான்காம் கட்ட ஈழப்போருக்கு பிறகு தமிழகம் அடுத்த ஒரு போராட்டத்துக்கு ஒட்டு மொத்த தமிழகமும் பொங்கி எழுந்து இருக்கின்றது என்றால்,
அது ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு ,இப்போது ஜனாதிபதியால் கருனை மனு நிராகரிக்க பட்டு ,தூக்கு மேடைக்கு எப்போதும் போக தயாராக இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன்  இந்த மூவரின் தூக்குதண்டனையை ரத்த செய்யவேண்டும் என்பதற்க்காகத்தான்..

நாடு முழவதும் அன்னா அசாரேவுக்கு ஆதராவாக ஊழலுக்கு எதிரான போராட்டம் நடந்த போது தமிழகத்தில் இருக்கும் தமிழ் உணர்வாளர்கள்.. சற்றே விக்கித்து போனார்கள்.. காரணம் ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு அல்ல... அந்த போராட்டத்தினால் தூக்கு கயிற்றில் தொங்க போகும் நாட்களை எதிர் நோக்கி இருக்கும் இந்த மூவருக்கு போராட்டத்தினை பெருவாரியான மக்களை சென்று அடைய முடியாமல் போய் விடுமோ என்ற வருத்தம்தான் காரணம்.... நல்லவேளை மத்திய அரசு செவி சாய்த்து அன்னா அசாரேவுக்கு இரண்டு  சின்ன பிள்ளைகள் தேனும் இளநியும் கொடுத்து முடிக்க தமிழகம் நிம்மதி பெருமூச்சு விட்டது...
சரி நம் நாட்டு பிரதமரை கொன்றவர்களுக்கு சாமரம் வீச சொல்லுகின்றீர்களா? இல்லை அப்படி சொல்ல வில்லை....இன்னும் ஜெயின்கமிஷன் விசாரணை முடியவில்லை.. அதுக்கு முன் இந்த தண்டனை வேண்டாம் என்று சொல்லுகின்றேன்... தும்பை விட்டு விட்டு, வாலை மட்டும் பிடித்து அவசரகதியில் தண்டிக்காதீர் என்று சொல்லுகின்றேன்..

வேறு எந்த இந்திய பிரதமரும் ராஜீவ் காந்தி அவர்கள் அளவுக்கு ஈழ பிரச்சனையில்  இந்த அளவுக்கு கீழ் இறங்கி வந்து உதவி  செய்தது இல்லை  என்பது உண்மைதான்.. ஆனால் தேன்  கூட்டில் எந்த வித முன் ஏற்பாடும் இல்லாமல் சட்டென  கை வைத்து, கொட்டு வாங்கி என்ன செய்வது என்று தெரியாமல் தினறிய போது, இலங்கையின் நய வஞ்சக சூழ்ச்சியில் மாட்டிக்கொண்டு வேறு என்ன செய்வது என்ற யோசனையில் கை பிசைய,  டெல்லியில் இருக்கும் அதிகாரிகள் இலங்கை அடுத்த நாடு, அதன் உதவி நமக்கு தேவை என்று சுட்டிக்காட்ட, அதனால், தனிஈழம் வேண்டும் என்று  போராடிய விடுதலைபுலிகளை அடக்க முனைந்த காரணத்தாலும், அமைதியை நிலை நாட்ட சென்ற இந்திய ராணுவம் அமைதியை ஏற்படுத்தாமல் அராஜகம் செய்ய, அதுக்காக, நமது தமிழ்நாட்டில் ராஜீவ்காந்தி பழி தீர்க்கப்பட்டார் என்பதும், அதனால்  பாதிக்கபட்ட ராஜீவ் குடும்பம் இந்திய அரியனையின் உயரிய தலைமையில் உட்கார்ந்த காரணத்தால், நான்காம் கட்ட ஈழப்போரின் போது முற்றிலும் இந்திய அரசு மூலம் உதவிகள் பெற்று,புலிகளையும் அவர்களை நம்பிய மக்களையும் முற்றுகை செய்து, இலங்கை ஈழதமிழர்களை  கொத்து கொத்தாய் கொன்று  குவித்து ராஜீவ் கொலைக்கு பழிதீர்த்து கொண்டது என்பதுதான்  வரலாறு...

இதில் இலங்கை மிக சாமர்த்தியமாக இந்தியாவை உபயோகபடுத்திக்கொண்டது...  இந்திய பிரதமர் ராஜீவ் தோள் பட்டையில் துப்பாக்கியால் அடித்த சிங்கள ராணுவத்தின் சிப்பாய்க்கு என்ன தண்டனை கொடுத்தார்கள்... இன்று வரை அவன் இலங்கையில் இருக்கும் சிங்களமக்களின் கதாநாயகன்..

நான்காம் கட்ட ஈழப்போரின் போது தமிழகத்தில் தீ நாக்குகளின்  கோர பசிக்கு  தன் உடலை  கொடுத்தவர் முத்துக்குமார்.. அதே போல இப்போது  செங்கொடி என்ற இளம்பெண்..

முத்துக்குமரனின் தற்கொலையின் போது முதலமைச்சராக இருந்தாவர் கருணாநிதி..

இப்போது செங்கொடி தற்கொலையின் போது முதல்வராக இருப்பவர்..  ஜெயலலிதா... அவ்வளவுதான் வித்யாசம்..

இதே நான்காம் கட்ட ஈழ போராட்டத்தின் போது கலைஞர் பெரிய ஜெர்க் எதுவும் கொடுக்காமல் இருந்தார்.. காரணம் இரண்டு முறை இதே ஈழ பிரச்சனைக்கு ஆட்சியை இழந்தவர் அவர்..அதனால் மத்திய அரசின் பேச்சை  கேட்டு சின்ன சின்ன எதிர்ப்போடு அமைதியாக இருந்தார்... அவரின் தேர்தல் தோல்விக்கு இந்த  அமைதியும் ஒரு காரணம் என்பேன்..

சரி அடுத்ததாக திடிர் ஈழத்தாயாக தன்னை வெளிப்படுத்திக்கொண்ட ஜெயலலிதாவிடம் இந்த தூக்கு தண்டனை ரத்து செய்வது குறித்து சொன்னால் எனக்கு இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி  அந்த கோரிக்கையை நிராகரித்து விட்டார்.. இது குறித்து சட்டமன்றத்தில் பேச கூட யாருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை...110 விதியின் படி சபையில் தனக்கு அதிகாரம் இல்லை என்று தனது தரப்பை சொல்லி இருக்கின்றார்... இதுக்கே அதிகாரம் இல்லை என்று சொன்னால்...??? கச்சத்துவை மீட்போம் என்று சொன்னது,இலங்கை மீது பொருளாதாரதடை போன்றவைகள் எந்த அதிகாரத்தின் மூலம் வந்தது என்று தெரியவில்லை...

ஆனால்  இந்த தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்த சட்டசபையில் ஜெ தீர்மானம் போட்டு, இங்கு தமிழகத்தில் அசாதாரன சூழல் நிலவுகின்றது என்று உள்துறை அமைச்சகத்திடம் சொன்னாலே, தூக்கு தண்டனையை  உள்துறை அமைச்சகம் உடனே தள்ளி வைத்து விடும்...அல்லது நிறுத்தி விடும் என்று தமிழகத்தின் பழுத்த அரசியல்வாதி வைகோ சொல்லுகின்றார்..


தூக்குதண்டனை வேண்டுமா?  வேண்டாமா என்பது பற்றி எனக்கு நிறைய முரண்பாடுகள் இருக்கின்றது...

சரியான ஆதரத்துடன் ஒரு கொலையை  செய்தவனை தூக்கில் ஏற்றுங்கள்...யாதொரு கேள்வியும் இல்லை... ஆட்டோ சங்கருக்கு தூக்கு  என்று சொன்ன போது  தமிழகம் இது போல கொத்தளிப்பையும் தனது மனக்குமுறுலையும் முன் வைக்கவில்லை. என்பதை புரிந்துகொள்ளுங்கள்....


இன்று தமிழ்ர்கள் கட்சி பேதம் பார்க்காமல் ரோட்டில் இறங்கி போராடவேண்டிய அவசியம் என்ன??இந்த கேசில் இருக்கும் ஓட்டைகள்...

இந்திய பிரதமர் இறந்து போய் இருபது வருடங்களுக்கு பிறகுதான் ஒரு முழுமை பெறாத விசாரனையில் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு தண்டனை. கொடுமைடா சாமி...

இன்னும் இப்படித்தான் நடந்தது என்று ஒரு வாக்குமூலத்தை வாங்க முடியவில்லை.. எல்லாம்யூகம்தான்...இவன் செய்து இருப்பான் இவன் அவர்களோடு பேசி இருப்பான் என்பதாகவே இருக்கின்றது...

பாம் செய்தவனை கொண்டு வந்து  நீதியின் முன் நிறுத்துங்கள்.. அவன் சொல்லட்டும்..அப்போது குற்றாவாளிகள் மறுத்தால் உங்கள்  அசைக்க முடியாத ஆதரத்தை சமர்ப்பியுங்கள்.. சாகும்வரை தூக்கில் போடுங்கள்... நான் முன்னமே சொன்னது போல் சிவராசன் மற்றும் கூட்டாளிகள் பெங்களூரில் இறந்த உடனே இந்த வழக்கு முழுமை பெறுவது சந்தேகம் என்று எல்லோருக்குமே தெரியும்...

விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரனிடம் ராஜீவ் படுகொலை  பற்றிய கேள்விக்கு அது துன்பியல் சம்பவம் என்று சொன்னாரே தவிர... நாங்கள்தான் அதுக்கு பொறுப்பு என்றோ அதை செய்தது நாங்கள்தான் என்றோ எங்கேயும் சொல்லவில்லை...

இந்தியா பெரிய வல்லரசு.. குற்றவாளி ஏ பிரபாகரன், குற்றவாளி பி பொட்டு அம்மன் என்று சொல்லும்  இந்திய விசாரனை கமிஷன்கள் இந்த இருபது வருடத்தில் அந்த ஏவையும் பியையும் ஏன் விட்டு வைத்தார்கள்.... வேர்களை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி இருக்கலாமே...

தன் நாட்டு மக்களுக்கு செப்டம்பர் பதினொன்ரு விமான தாக்குதல் மூலம் பின்லேடன் செய்த குற்றத்தை மோப்பம் பிடித்து சந்தடிக்காட்டாமல் பாகிஸ்தான் மண்ணிலேயே  அவர்களுக்கே தெரியாமல் வந்து அழித்ததும் இல்லாமல் தடயத்தை சேகரித்துக்கொண்டு  சென்றது அமெரிக்க ராணுவம்... ஆனால் நமது இந்திய எல்லையில் இருந்து பதினாரு கிலோமீட்டரில் இருக்கும் நீங்கள் குறிப்பிட்ட ஏ மற்றும் பியை  ஏன் பிடிக்க முடியவில்லை அல்லது முயற்சிக்கவில்லை

நாயகன் படத்தில் போலிஸ்... வேலு நாயக்கரை பிடிக்க சின்னபையனை இழுத்து போட்டு அடிப்பது போல இருக்கின்றது.. கேசை முடிக்க திரைக்கதை அமைத்ததில் மாட்டியவர்கள் இவர்கள்தான்..இவர்கள் குற்றவாளியாகவும் இருக்கலாம்... இருந்தால் யார் செய்தார்கள்? எவர் செய்தார்கள்..? என்பதை ஆதாரத்துடன் சொல்லுங்கள்...இல்ங்கையோடு இன்று வரை காதல்புரியும் மத்திய காங்கிரஸ் அரசு..ராஜீவ் கொலைக்குற்றவாளிகள் பிடிக்க இலங்கையை நிர்பந்தித்து இருக்கலாமே... ஏன் அதை இருபது வருடங்களாக செய்யவில்லை...???

சரி அப்படியே அந்த மூவரும் கொலைக்கு உடந்தையானவர்கள் எனறால் அவர்கள் கதையை இரண்டு அல்லது ஐந்து வருடத்தில் கதையை முடித்து இருக்கலாமே...சூட்டோடு சூட்டாக கதையை முடித்தால் யார் கேட்க போகின்றார்கள்...
பெரிய ஜனநாயக நாடு...ஆள் பலத்துக்கும் அறிவு பலத்துக்கும் குறைவு இல்லை.. அப்புறம் எதுக்கு 21 வருடங்கள் காத்து இருக்கவேண்டும் என்பதே என் கேள்வி..


காசப் தூக்கு தண்டனை, மற்றும் ராஜபக்சே தூக்கு தண்டனைகளை எதிர்பீர்களா என்றால் நான் இல்லை என்று சொல்லுவேன்..அவர்கள்தான் குற்றவாளிகள் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன..கையில் துப்பாக்கியோடு வெறித்தனமாக சுட்ட வீடியோ ஆதாரம் இருக்கின்றது...நான்காம் கட்ட ஈழப்போரில் போர்க்குற்றம் புரிந்தற்க்கான ஆதாரங்கள் இருக்கின்றன... உலகநாடுகள் கண்டித்து இருக்கின்றது... அதனால் இந்த வெத்து வாதம் தேவையில்லாதது...அதே போல தர்மபுரியில் மூன்று பெண்கள் பேருந்தில் எரித்த கொலையில் கண்ணால் பார்த்த மாணவ மாணவிகள் சாட்சிகள் இருக்கின்றன...அதனால் அந்த தண்டனைகளை எதிர்க்கபோவதில்லை.... ஒட்டு மொத்த தூக்கு தண்டனையையே எடுத்து விட்டால்.. அது இப்போதைக்கு நடக்கின்ற காரியம் இல்லை.. அதனால்  பேசிப்பலன் இல்லை..


ஜெவின் அரசுக்கு  இது பெரிய தலைவலிதான்..திடிர் ஈழத்தாய் பட்டம் கிடைத்த உடன்  மத்திய உள்துறை அமைச்சகம் வைத்த இந்த செக்கை அவர் நினைத்து கூட பார்த்து இருக்கமாட்டார்....காரணம் பிரபாகரனை தூக்கில் போடவேண்டும் என்று சட்டசபையில் சொன்னவர்...பிரபாகரன் உயிரோடு இருந்தவரை ஈழதமிழர்கள் நலனில் எதிரான நிலைபாட்டையே எடுத்தவர் அவர் என்பதால் திடிர் ஈழத்தாய் பட்டத்தை தக்க வைக்க இது சரியான சந்தர்ப்பம்..

தமிழ்நாடு முழுவதும் இந்த தூக்கு தண்டனைக்கு எதிராக  சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் வக்கில்கள், பொதுமக்கள் என்று போராட்டம் தீவிரம் அடைந்துவிட்டது...கோயம்பேட்டில் மூன்று பெண்வக்கில்கள். தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்கள்... இன்று சென்னையில் நந்தனம் பகுதியில் மாணவர்கள் நடத்திய சாலைமறியல்காரணமாக  சென்னை டிராபிக் விழி பிதுங்கி விட்டது...

தமிழகத்தின் அனேக இடங்களில் ரயில் மறியல், சாலை மறியல் செய்து தங்கள் எதிர்ப்பினை காட்டி வருகின்றார்கள்..ஆளும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு மற்ற 27 மாநிலங்களில் உள்ள மக்களுக்கு நமது பிரதமரை கொன்றதுக்கு துணை போனவர்களை தூக்கில் போட்டுவிட்டோம் பாருங்கள் என்று சொல்லியாக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கின்றது...அன்னா அசாரேவுக்கு பணிந்ததை மக்கள் மனதில் இருந்து  மாற்றி அடுதத செய்திக்கு மக்கள் போக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு...ஆனால் மற்றமாநிலகாரர்களுக்கு இதில் இருக்கும் உள் அரசியல் புரிய போவதில்லை...

இன்னும் பத்து நாளில் நீ இறந்துவிடுவாய் என்று ஒருவனுக்கு சொல்லி அவன் நிமிடங்களை எண்ணிக்கொண்டு இருப்பது போல ஒரு பெரிய கொடுமை இந்த உலகில் இல்லை.... கொடுஞ்செயல் புரிந்தவனுக்கு இந்த தூக்குதண்டனை கொடுக்கும் போது மனது பெரிதாக அலட்டிக்கொள்வது இல்லை.. 21 வருடங்கள் சிறையில் கழிந்து.. (ஆயுள்தண்டனையே 14 வருடங்கள்தான்..) இன்னும் முழுமையான விசாரனை முடியாத ஒரு வழக்கில் தூக்குதண்டனை நிறைவேற்றபோகின்றேன் என்றால் என்ன அர்த்தம்...??


இந்த மூவரைரையும் நாளையே விடுதலை செய்து லீராயல் மெரிடியனில் அந்த மூவருக்கும் பார்ட்டி கொடுங்கள் என்று சொல்லவில்லை...தூக்கு தண்டனையை ரத்து செய்யுங்கள் என்பதே பொதுமக்களின் பொதுவான கோரிக்கை... இந்த போராட்டடத்தையும் எழுச்சியையும் சிறையில் இருக்கும் மூவருமே எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்.. ஏன் தமிழக அரசே என்  தமிழக மக்களே கூட எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் என்பதே உண்மை...

கொத்து கொத்தாய் இலங்கை முள்வேலியில் கொடுரங்கள் நிகழ்ந்த போது கைகட்டி மவுனித்த இதே மக்கள் இந்த மூவருக்காக சீறுவதை பார்க்கும் போது  தமிழர்கள் மிக லேசாக தெளிந்து இருக்கின்றார்கள்...


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ........
நீரூபிப்பதே நீ.....
EVER YOURS...


18 comments:

 1. தெரிந்தே படுகொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை சரியானதே. தவறாக வழக்கில் சிக்குபவர்களுக்கு தூக்கு தண்டனை எந்த விதத்திலும் நியாயம் இல்லை.

  ReplyDelete
 2. இந்த போராட்டடத்தையும் எழுச்சியையும் சிறையில் இருக்கும் மூவருமே எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்.. ஏன் தமிழக அரசே என் தமிழக மக்களே கூட எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் என்பதே உண்மை... This is true!

  ReplyDelete
 3. எப்பவும் கூட்டம் மொய்க்கும் கடைல ஒருவரையும் காணொமே!

  ஜாக்கி!எதிர்ப்புக்களைத் தாண்டி அடிச்சி ஆடுங்க.

  முதல் ஓட்டு என்னோடது.

  ReplyDelete
 4. நண்பரே,


  மரண தன்டனை என்பதே நாகரிகமற்ற செயல்.அதிலும் இந்த அப்பாவிகளுக்கு அளிப்பது முறையற்றது.நம்பிக்கையோடு குரல் கொடுப்போம்!!!!!!
  நன்றி

  ReplyDelete
 5. சகோதரி செங்கொடி ஏன் இந்த முடிவெடுத்தாய்....???
  உள்ளம உருகி கண்ணீர்தான் வருகின்றது.... நீ கருகிவிட்டாலும் கல்நெஞ்சம் கொண்டவர்களிடம் இருந்து தீர்வா வரப்போகிறது....???

  அண்ணா அருமையான அலசல், அனைத்தும் நியாயமான உண்மையான காத்திரமான வெளிப்பாடுகள்! உங்களுக்கு நன்றியுடன், அவர்களுக்கு நானும் எனது கேள்வியுடன்...!

  ReplyDelete
 6. தெரியாமத்தான் கேக்குறேன்...ஒவ்வொரு அமைப்பும், கட்சியும் தனித்தனியா போராட்டம் பண்றாங்களே .... இவங்கெல்லாம் ஒன்னுசேர்ந்து போராடினா கொறஞ்சா போய்டுவாங்க ....
  இவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய எங்காவது ஏதாவது நடக்காதா என்று ஒவ்வொரு வினாடியும் ஏங்குகிறது உள்ளம்....
  அருமையான நடுநிலையான பதிவு

  ReplyDelete
 7. எல்லா நடவடிக்கைகளுக்கும் உள்ளர்த்தம் கர்ப்பித்துக்கொண்டே போனால் நாட்டில் எந்த நடவடிக்கையும் எடுக்கவே முடியாது...தூக்கு என்றால் தூக்கு தண்டனை கொடுக்கத்தான் வேண்டும்..சட்டத்தின் மாட்சிமைக்கு முன்னால் தமிழ், ஆங்கிலம் , தமிழர் ஈழம்....கூழம் எதுவுமே பெரிதில்லை

  ReplyDelete
 8. இந்த மூவரைரையும் நாளையே விடுதலை செய்து லீராயல் மெரிடியனில் அந்த மூவருக்கும் பார்ட்டி கொடுங்கள் என்று சொல்லவில்லை...தூக்கு தண்டனையை ரத்து செய்யுங்கள்................ VERY GOOD FEELING.

  ReplyDelete
 9. ஜாக்கி,ராஜீவ் இறக்கும் போது அவரு பிரதமர் இல்லை..அவர் அப்போ முன்னால் பிரதமர்..if am wrong just leave it..

  ReplyDelete
 10. Jackie,
  பாண்டியம்மள் கொலைவழக்கினையும் இங்கு செர்த்து பதிவிடுங்கள், அதில் கணவன் தனது கூட்டாலிகளுடன் சேர்ந்து எப்படி கொண்றார் என்று தத்ரூபமாக கோர்ட்டில் கூரி மனைவியை கொண்றதாக தண்டணை வாங்கி கொடுத்தனர், சில மாதங்கள் கழித்து மனைவி உயிரோடு வந்து நின்றார். இப்போது தண்டனை பெற்றவர்களுக்கு குற்றத்தில் பங்கிருக்கலாம், அனால் அது தூக்கு தண்டனை பெரும் அலவிற்கு இருக்கது. நிரைய ஜோடிப்புகள் இருக்கும். ஒரு சிறு கேள்வி, ஒரு முன்னால் பிரதமரை பால்காரன், பேட்டரி விற்பவனுக்கெள்லாம் தெரியுமலவிற்கா திட்டமிடும் அலவிற்கு புலிகள் முட்டால்கள்.

  ReplyDelete
 11. "சரி நம் நாட்டு பிரதமரை கொன்றவர்களுக்கு சாமரம் வீச சொல்லுகின்றீர்களா"
  Please correct your statement he was "Ex-Prime minister" when he was killed. He was just another politician.

  ReplyDelete
 12. "கச்சத்துவை மீட்போம் என்று சொன்னது,இலங்கை மீது பொருளாதாரதடை போன்றவைகள் எந்த அதிகாரத்தின் மூலம் வந்தது என்று தெரியவில்லை..."
  -இவை அனைத்துமே தமிழக சட்டசபையால் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள். முதல்வரின் ஆணைகள்/அதிகாரம் அல்ல.
  இந்த தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் சட்டப்படி முதல்வருக்கு இல்லை. எனவே தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

  ReplyDelete
 13. உங்கள் வாதங்களை நான் ஏற்றுக் கொள்கிறேன்.....
  ஜாக்கி சார், இந்திரா காந்தி இறந்தபோது நடந்த கலவரத்தில் எத்தனை சீக்கியர்கள் இறந்தார்கள்...
  அதற்கு எத்தனை பேரை தூக்கில் போட்டார்கள் .... யாரும் இல்லை...
  மொத்தத்தில் இந்த விவகாரத்தை முழுக்க அரசியல் ஆkகிவிட்டார்கள்... எல்லோரும் நமக்கு என்ன லாபம் என்று பார்கிறார்கள்....

  ReplyDelete
 14. தூக்குதண்டனை-சட்டமன்ற தீர்மானம்: முதலமைச்சருக்கே அதிகாரம் இருக்கும் போது நடுவண் அரசிடம் கெஞ்சலாமா?

  http://arulgreen.blogspot.com/2011/08/blog-post_30.html

  ReplyDelete
 15. Well done sekar this articular looks like international quality, this is not only letter 7crores people feelings.

  God bless you
  S.Sundar

  ReplyDelete
 16. இதில் நல்லது நடந்தால் சரிதான்...

  ReplyDelete
 17. //இன்னும் பத்து நாளில் நீ இறந்துவிடுவாய் என்று ஒருவனுக்கு சொல்லி அவன் நிமிடங்களை எண்ணிக்கொண்டு இருப்பது போல ஒரு பெரிய கொடுமை இந்த உலகில் இல்லை..//

  உண்மைதான் .அவர்களின் குடும்பத்தாரும் எவ்வளவு மன வேதனையில் இருப்பார்கள் .உங்கள் கட்டுரை அருமையான விரிவான அலசல் .

  ReplyDelete
 18. // கொத்து கொத்தாய் இலங்கை முள்வேலியில் கொடுரங்கள் நிகழ்ந்த போது கைகட்டி மவுனித்த இதே மக்கள் இந்த மூவருக்காக சீறுவதை பார்க்கும் போது தமிழர்கள் மிக லேசாக தெளிந்து இருக்கின்றார்கள்... //

  மிக சரியான ஒன்று... இவர்கள் பாசம் கட்டுவது தமிழர்களுக்கு மட்டும் தானோ, இலங்கை தமிழர்களுக்கு இல்லையோ....

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner