நடிகர் ஜாக்கிசானால் நான் பட்ட அவமானம்...


தமிழகத்தில் 1990களில்  என் ரோல் மாடல் ஹாங்காங்  நடிகர் ஜாக்கிசான் தமிழகத்தில் வசூலில் சாதனை படைத்த நேரம்.... புராஜக்ட் ஏ... படம் பட்டையை கிளப்ப... அதில் மணிக்கூண்டு பைட் ரொம்பவும் பிரபலம்... கடைசியில் அந்த  படத்தில் எடுத்த காட்சிகளை போடும் போது அதில் ஜாக்கி அடிபட்டு கீழே விழும் காட்சியை பார்த்து திகைக்காதவர்கள்  உலகத்தில் இருக்கவே முடியாது.....




கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....


தொடர்ந்து என் கைபேசியில் குறுஞ்செய்திகளாக ரொம்பி வழிகின்றது...படித்து விட்டு அழிக்க சிலது மனம் வரவில்லை...காரணம் சில தத்துவங்களும் சில ஜோக்குகளும்... சில மொக்கைகளும் நன்றாகவே இருக்கின்றன... அவைகள் உங்களோட பகிர்கின்றேன்...




ஹலோ சன் மீயூசிக்?


ஆமாம்.... சொல்லுங்க.... உங்க பேரு?


 என் பேரு  உண்மைதமிழன் மேடம்...


 சொல்லுங்க உண்மை தமிழன்... எங்க இருந்து பேசறிங்க????

செழிக்கும் சென்னை டியூஷன் டீச்சர்கள்...(சென்னையில் வாழப் பழக...பாகம்/6)



ஒன்றாம் வகுப்பு படிக்கும் போதே எனக்கு டியூஷன் வைத்தார்கள்...ஏபிசிடியும் ஆனா ஆவான்னாவும் சிலைட்டில் எழுதுவதை என் அம்மா கற்றுக்கொடுத்தலும், பாப்பாத்தி டீச்சர் அதனை மெருகு ஏற்றினார்...எனக்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது டியூஷன் எடுத்தார்கள்... அவருக்கு 60 வயதுக்கு மேல் வயிற்று பிழைப்புக்கு டியூஷன் எடுத்தார்....



சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்-28•07•2010)

ஆல்பம்...


 விலை வாசி உயர்வு குறித்து எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்தை நடை பெறவிடாமல் தடுத்து  இருக்கின்றார்கள்... இப்போதுதான் பொதுமக்கள் பிரச்சனைக்காக வெகு நாட்களுக்கு பிறகு நாடளுமன்றம் முடக்கபடுவது குறித்து மிகிழ்ச்சி..ங்கொய்யால இதுக்குதான் உங்களுக்கு ஓட்டு போட்டு  அனுப்பி வச்சோம்... அதை இப்போதாவது தெரிஞ்சிகிட்டிங்களே....
===============

கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து...வயதுப்பெண்களுக்கான எச்சரிக்கை...


நீங்கள் சென்னையில்   வசிப்பவரா? உங்கள் வீட்டில் வயதுக்கு வந்த பெண் பிள்ளை இருந்தால் இந்த கட்டுரை உங்களுக்காகத்தான்...என் வீட்டு பெண் ஒரு போதும் நான் சொன்ன சொல்லை தட்டியது இல்லை...பொய் சொல்லிவிட்டு ஊர் சுற்றியதில்லை.... அப்ப பையனுக்கு இல்லையா? அவர்களுக்கும்தான்... ஆனால் மிக முக்கியமாக பெண்களுக்கு....


வரிசையில் நிற்பது...சென்னையில் (தமிழ் நாட்டில்)வாழ பழக..(பாகம்/5)

ஒன்றன் பின் ஒன்றாக வரிசையில் நின்று காரியம் சாதிப்பது என்பது சென்னையில், தமிழ்நாட்டில்,இந்தியாவில் நடக்காத காரியம்..இந்தியாவின் மக்கள் தொகை 110 கோடிக்கு மேல் ....அதனால் இங்கு நாகரிகம் எனபதை எதிர்பார்க்க முடியாது... ஒரு காலத்தில் நீங்கள், நான் எல்லோரும் இந்த அநாகரிக செயலை செய்துதான் வந்து இருப்போம்... அல்லது கடந்து வந்து இருப்போம்...



மினிசாண்ட் விச் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு-25/07/2010)

ஆல்பம்....

நதிகள் இணைப்பை பற்றி முதல் மந்திரிகள் கூட்டத்தில் துனைமுதல்வர் முக ஸ்டாலின்...வலியுறுத்தி இருக்கின்றார்....வற்றாத ஜீவ நதிகள் கொண்ட வடநாட்டினர் இதற்கு ஒரு போதும் ஒத்துக்கொள்ள பேவது இல்லை...தமிழ் நாட்டை பொறுத்தவரை.. மாதம் மும்மாறி மழை பெய்யும் வரை எந்த பிரச்சனையும் இல்லை...வரும் காலங்களில் மழை பொய்த்தால் நினைத்து பார்க்க முடியாத காமெடி காட்சிகள எல்லாம் அரங்கேறும்...... பார்த்ததானே போகின்றோம்....


தில்லாலங்கடி...திரைவிமர்சனம்...ஐ லவ் யூ ஜாக்கி என்று சொல்லும் தமன்னா..

கிக் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? கிக் இருக்க வேண்டும்... சரக்கு போட்டு விட்டு வரும் கிக்கும் ஒரு கிக்குதான்....

நடைமுறை வாழ்க்கையில் எதெல்லாம் கிக்காக இருக்கின்றது?????..

நிறைய பையன்களுக்கு தன்னை நிறைய பெண்கள் காதலிக்க வேண்டும் என்பது கிக்தான்...

தன்னை எல்லா ஆண்களும ரசிக்கும் அழகு பெண்ணுக்கு கிக்தான்....


மிஷ்கினின் சித்திரம் பேசுதடி...தமிழ்சினிமாவின் நம்பிக்கை...

ஒரு புகைபடத்தை பார்த்து விட்டு இந்த படத்துக்கு போக வேணடும் என்று யாராவது முடிவு எடுப்பார்களா? நான் எடுப்பேன்.... அப்படி நான் முடிவு எடுத்து பார்த்த படம் இதயத்தை திருடதே... அந்த போஸ்டரில் ஒரு வசீகரம் இருந்தது... இந்த படத்தை எப்படியும் பார்த்து விட வேண்டும் என்று மனதில் குறித்துக்கொள்ளவும், அந்த படத்தை பார்த்தே தீர வேண்டும் என்று கங்கனம் கட்டவும் அந்த போஸ்டர் காரணமாக இருந்தது..

Turkish Delight -1973(18+ உலகசினிமா/நெதர்லாந்து)ஒரு ஓவியனின் காதல்...

எச்சரிக்கை

பொது இடத்தில் இந்த படத்தின் பக்கத்தை படிக்கும் போது மட்டும் கவனம் கொள்ளவும்..


நிரம்ப கலையில் லயித்து இருக்கும் நபருக்கு எப்போதும் ஒரு பெண்ணோடு வாழ்வதில் அவர்கள் திருப்தி அடைவதில்லை... நானும் நிறைய பார்த்து விட்டேன்...தமிழ் திரை உலகில் இந்த சமாச்சாரத்துக்கு பல உதாரணங்கள் சொல்லிக்கொண்டு போகலாம்... அவர்கள் தேடல்கள் எல்லையில்லாதது...

ஒரு கலைஞன் முழு திருப்தி ஒரு பெண்ணிடம் மட்டும் அடையாமல் இருக்கின்றான்... அவன் கலையை பற்றிய தேடல் போலவே.. பெண் பற்றிய தேடல்களும் அதிகமாக இருக்கின்றன..

சிலருக்கு பெண் வாசனை வாழ்வில் கடைசி வரை கிடைக்கவே கிடைக்காது...அது அவர்கள் வாங்கி வந்த வரம் அப்படி...இப்போதும் சிலருக்கு 35 வயது வரை பெண் பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.. அவர்களில் பலரை செக் செய்தால் பெண் அருகாமை கிடைக்காத நபராகவே இருப்பார்கள்..... இதற்கு அதீத பயமும் காரணம்.....


ஆனால் சிலர் இந்த விஷயத்தில் படு கெட்டி... அவர்கள் ஒரு நாளுக்கு பல பெண்ணோடு படுத்து எழுந்து இருப்பார்கள்.... அதே போல் அவர்களுக்கு எப்படிதான் அது போல் மாட்டுகின்றது என்று ஆச்சர்யமாக இருக்கும்...
பொறாமையாகவும் இருக்கும்....

எந்த வித குற்றஉணர்வும் அவர்களிடத்தில் இருப்பது இல்லை... அப்படி ஒரு ஓவியனில் வாழ்வில் பல பெண்கள் வந்து போகின்றார்கள்... அதில் ஒரு பெண்ணோடு மட்டும் வெறித்னமான காதல்... அந்த காதலை பற்றிய கதைதான் இந்த படம்...... டர்கிஷ் டிலைட் என்பது ஒரு உணவுவகை... அது எப்போது படத்தில் வருகின்து என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...


Turkish Delight -1973(18+ உலகசினிமா/நெதர்லாந்து) படத்தின் கதை என்ன???

எரிக்(Rutger Hauer) ஒரு சிற்ப கலைஞன்.. எந்த பெண்ணையும் பார்த்த மாத்திரத்தில் படுக்கையில் சாய்க்கும் ஆண்களால் பொறாமை கொள்ள செய்யும் ஒரு கதாபாத்திரம்.....ஓல்கா (Monique van de Ven) என்ற பெண்ணோடு எதிர்பாராமல் காரில் லிப்ட் கொடுக்கும் போது எரிக்குக்கு பழக்கம் ஏற்படுகின்றது.. அது காதலாய் மலர்கின்றது... காதலுக்கு ஓல்காவின் அம்மா எதிர்க்கின்றாள்... ஆனால் ஒல்காவின் அப்பா பச்சை கொடி காட்டுகின்றார்... திருமணம் நடக்கின்றது... சந்தோஷமாக வாழ்க்கை போகின்றது....

ஆனால் அவர்களுக்குள் விவாகரத்தும் நடக்கின்றது... சந்தோஷமான வாழ்க்கையில் விவாகரத்து வர காரணம் என்ன? என்பதை அடிக்கடி உடை களைந்து கொள்ளும் இந்த படத்தினை தரவிறக்கி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

இந்த படம் எல்லாவற்றிலும் பிரேக் த ரூல்ஸ்

இரண்டு ஜாம்பவான்கள் 1973களில் ஆரம்ப காலத்தில் பணி புரிந்து போது எடுத்த படம்...

ஜாம்பவான்ஒன்று.....

Paul Verhoeven இவர் படைப்புகள்....டோட்டல் ரீகல், பேசிக் இன்சிடன்ட்,ரோபோ கப், ஸ்டார்ஷிப் டூருப்பர்ஸ்,ஹலோவ்மேன் போன்ற பிகழ் பெற்ற படங்களை சொல்லலாம்....


இரண்டாவது ஜாம்பவான்..

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் Jan de Bont இவர் யார் தெரியுமா? உலகை புரட்டி போட்ட ஸ்பீட், டுவிஸ்டர், போன்ற படங்களை இயக்கியவர்...இவர்கள் இரண்டு பேருக்கும் இது ஆரம்பகால படங்கள்....

இந்த படம் வந்த போது 33 லட்சம் நெதர்லாண்ட் மக்கள் இந்த படத்தை பார்த்து மகிழ்ந்தார்கள்... அதாவது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 27 சதவீதம் பேர் இத்திரைபடத்தை ரிலிசான் போது ரசித்தனர்.... அப்படி என்றால் படத்தின் பெருமையயை பார்த்துக்கொள்ளுங்கள்...

சின்ன பட்ஜெட் பெரிய வருமானம்....

எரிக் மற்றும் ஓலீயாக நடித்த இருவரின் அந்தரங்கமும் பார்வையானுக்கு அத்து படி என்பது போலான படப்பதிவு...



எரிக் கதாபாத்திரம் அந்த கால ஹிப்பி வாழ்க்கை முறையை ஒத்து இருக்கின்றது... முதல் காட்சியில் எரிக்கின் ரூம் கலைந்து கிடக்கும் அழகே அழகு.... அதை சுத்தபடுத்துவது அதனிலும் அழகு....

இந்த படம் ஒரு திரைக்கதைக்காக பெரிதாக அலட்டிக்கொள்வது போல் தெரியவில்லை...

பிரிந்து போன காதலியை வித விதமாக கொலை செய்வது போல் நினைத்து பார்க்கும் காதலன் எரிக் ... காதலியின் அரைநிர்வாணபடத்தை பார்த்தும் கைமைதுனம் செய்வதும்... அதன் பிறகு பார்க்கும் பெண்களை எல்லாம் படுக்கைக்கு அழைப்பதும்.... என கவர்ச்சி ரகம்...

அதே போல் ஒரு தாயோடு புணரும் போது குழந்தை அழ அந்த குழந்தையை எப்படி சமாதனபடுத்துகின்றார்கள் என்பதை படம் பாத்து ரசிப்பது சால சிறந்தது...

இந்த கதாநாயகனின் பாத்திர படைப்பு தமிழில் வந்த பல பல படங்களில் இந்த சாயல் இருப்பதை உணரலாம்....

காரில் லிப் கொடுக்கும் பெண்ணோடு உறவு அப்போது ஜிப் போடும் போது லல்லு மாட்டிக்கொள்வதை முக உணர்ச்சியில் பலர் காட்சி படுத்தி இருப்பார்கள்.. ஆனால் இதில் அதுக்கும் ஒரு ஷாட் வைத்து இருப்பார்கள்...

பொதுவாக பல திரை படங்களில் பெண் அந்தரங்க உறுப்பு போல் ஆணின் அந்தரங்கம் கடை பரப்பபட்டதில்லை ஆனால் அந்த ரூல்சையும் இந்த படம் உடைத்து இருக்கும்....

எரிக் மாமனாரிடம் பேசும் போது.. அவர் மூக்கை நோண்டி அந்த சமாச்சாரத்தை எங்கு வைப்பது என்று தெரியாமல் நற்காலிக்கு கீழே ஒட்டுவது வரை டீடெய்ல்....ஆக காட்சிபடுத்தி இருப்பார்கள்....

படுக்கையில் கை சப்பி தூங்கும் நிர்வாண கதாநாயகி.. முதல் முறை ஆனாலும் எரிக் அந்த அழகை ரசிப்பது போலவும் வேறு ஏதும் செய்யவில்லை என்பதை இரண்டு ஷாட்டு களில் சொல்லி இருப்பார்கள்...

டாய்லட்டில் இருந்து மனைவி ஒடி வந்து... மலம் இருக்கையில் ரத்தம் வருவதை சொல்லி தனக்கு கேன்சர் இருப்பதாக பயப்படும் போது, உடனே பதட்டத்தோடு உள்ளே செல்லும் எரிக் டாய்லட்டில் இருக்கும் மலக்கட்டியை எடுத்து அதை சோதித்து விட்டு பிளஷ் செய்வதை அப்படியே காண்பிக்கும் போது இந்த படம் வேறு வகை என்பது புரியும்....இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.....

எரிக்கிடம் ஒரு பழக்கம் எந்த பெண்ணுடன் உறவு வைத்தாலும் எதாவது ஒன்றை ஞாபகமாக வைத்துக்கொள்வான் அது எது வேண்டுமானாலும் இருக்கலாம்... என்ன டேஸ்ட்???

ஒரு மார்பு சரிந்த பெண் உடை கலையும் போது அதனை பாத்ததும் எரிக் முகத்தை சலிப்புடன் மாற்றிவிட்டு,மெல் உடைகளைப்பை தடுத்து விட்டு, அதன் பிறகு பெண் உறுப்பில் இ ருக்கும் அதீத முடியை கத்திரிக்கோலால் கட் செய்து அதனை மீசை இல்லாத அவன் முகத்தில வைத்துக்கொண்டு சின்ன பையன் போல் விளையாடிவிட்டு, அந்த முடியை ஒரு ஆல்பத்தில் பேஸ்ட் போட்டு ஒட்டி அதன் பக்கத்தில் அந்த பெண்ணின் பெயர் எழுதும் போதும் அதன் பக்கத்தில் 50 வது என்று எண் எழுத பட்டு இருப்பதை பார்க்கும் போது... அந்த கேரக்கடரை விஷுவலாக புரிந்து கொள்ள முடிகின்றது...

சிலை திறக்கும் இடத்தில் எரிக்கும் ஓலாயும் செய்யும் கூத்து கொடுமை ரகம்..

இந்த படத்தின் நாயகிMonique van de Ven வை இந்த படத்தின் ஒளிபதிவு டைரக்டர் ஜான் டி போன்ட் திருமணம் செய்து கொண்டு 1973ல் இருந்து 1988 வரை வாழ்ந்து அதன்பிறகு இருவரும்விவாகரத்து பெற்றார்கள்....



இந்த படத்தின் பின்னனி இசை அந்த கால இளைஞர்களின் பேவரிட்...

1973 ல் நெதர்லாந்து நாட்டையும்,அம்ஸ்டர்டாம் போன்ற நகரங்களின் தன்னிறைவையும் பார்க்கும் போது.....அந்த நேரதிதில் நமது நாட்டை நினைக்கும் போது வயிறு எரிகின்றது.... பேசாமல் வெள்ளைக்காரனே ஆண்டு தொலைத்து இருக்கலாம்.....

படத்தின் ஒரு காட்சியின் வசனம்....

நாம் இருவரும் உடலுறவு கொள்வோமா? என்று எரிக் கேட்க?
அது என் மதத்துக்கு எதிரானது... எனஅந்த பெண் சொல்ல....
அதற்கு எரிக் உங்கள் ஜீசசைவிட........ என்ற படி வசனங்கள் கவலை கொள்ளாது எழுதி தள்ளி இருப்பார்கள்...

ஆயிரம்தான் இந்த படத்தை பற்றி எதிர் மறையான விமர்சனங்கள் முன் வைத்தாலும் அந்த கடைசி காட்சியில் ஓல்வாக நடித்து இருப்பவர் நெஞ்சை நெகிழவைத்து இருப்பார்.....
அன்றைய கனவு கன்னி மற்றும் இந்த படத்தின் கதாநாயகி... இப்போது டைரக்டரக இருண்டு படம் செய்து இருக்கின்றார்..


இந்த படம் 1973ல் பெஸ்ட் பாரின் படத்துக்கான ஆஸ்கர் விருது கிடைக்க பெற்றது என்பது குறிப்பிட தக்கது...

படத்தின் சென்சார் போட்டோக்கள்.... 18+

கிளிக்...1
கிளிக்...2
கிளிக்...3
கிளிக்...4

படத்தின் வயதுவந்தோருக்கான ஒரு காட்சி.....



இந்த டிரைலர் காட்சியின் லைட்டிங் பல திரைபடங்களில் பின்பற்ற பட்டு இருக்கும் இதில் முட்டி போட்டு இருக்கும் எரிக் நிற்கும் ஓல்கா...அப்போது லோ ஆங்கிள் ஷாட்டும்,டாப் ஆங்கில் கம்போசிசனும் அற்புதம்... அவர்களை பொறுத்தவரை போர்னோ எடுத்தாலும் அதுவும் கலை வடிவம்தான்.....அதே உழைப்புதான்...சிலதை இன்னும் உடைத்து நாகரீகம் கருதி எழுத முடியவில்லை


படக்குழுவினர் விபரம்..

Directed by Paul Verhoeven
Produced by Rob Houwer
Written by Jan Wolkers (novel)
Gerard Soeteman
Starring Monique van de Ven
Rutger Hauer
Music by Rogier van Otterloo
Cinematography Jan de Bont
Editing by Jan Bosdriesz
Release date(s) 1973
Running time 112 min.
Country Netherlands
Language Dutch
Budget € 365,000


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்-21•07•2010)

ஆல்பம்...

2 மாதத்தில் 200க்கு மேற்படடவர்கள் இந்திய ரயில்வே துறையின் அலட்சியத்தால் இரயில் விபத்துகளில் இறந்து போய் இருக்கின்றார்கள்...லஞ்ச லாவண்யம் பெருகியதாலும் பணம் கொடுத்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கை அதிகாரத்தில் உள்ள எல்லா நாய்களுக்கும் இந்த உண்மைதெரிந்து விட்டதாலும், இது போலான விபத்துகள்... இந்தியாவில் இனி இது போல் தொடர்ந்து நடக்கத்தான் போகின்றது...விபத்துக்கு காரணம் பற்றி விசாரிக்க இந்தியாவில் ஒரு கமிஷன் வைப்பார்கள்... அந்த ரிசல்ட் எப்படி இருக்கும் என்பது நம் இந்திய குடிமக்கள் அறிந்ததே.....இந்த ஆண்டு மட்டும் 15 ரயில் விபத்துகள் நடந்து இருக்கின்றன.....மம்தா........... வாயில வருது...

===============
காவல்துறையில் நிறைய கருப்பு ஆடுகள் பெருகிவிட்டன.... பெண்கள் நாட்டின் கண்கள் என்று சொல்லுவார்கள்..இயற்க்கையில் பெண்கள் இரக்க சுபாவம் உள்ளவர்கள் என்று சொல்லுவார்கள்...இனி சொல்லுவார்கள் சொல்லுவார்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான் போல... ஒரு வாரத்துக்கு முன் ஒரு கொலை சம்பவத்தில் ஒரு பெண் போலிஸ் சஸ்பெண்ட் செய்யபட்டார்... நேற்று ஒரு சப் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கிய போது கைது செய்யபட்டார்....தமிழகத்தில் மகளிர் காவல் நிலையங்கள்.... ஆலமரம் சொம்பு இல்லாத கட்ட பஞ்சாயத்து தளங்களாக மாறி வெகுநாட்கள் ஆகின்றன
===============
தன்னை காதலித்து தன் கருவை களைத்த முன்னாள் காதலனை பழி வாங்க, காதலன் குடும்பத்தோடு உறவாடி, காதலனின் இரண்டாவது பையனை கழுத்தை நெறித்து கொலை செய்து பிணத்தை சூட்கேசில் வைத்து நாகபட்டிணத்துக்கு பார்சல் செய்த பெண்ணை இன்று கைது செய்து இருக்கின்றார்கள்... எனக்கு இந்த லாஜிக்கே புரியலை....

காதலன் உன்னை ஏமாத்திட்டான்... நியாய படி அவனுக்குதானே தண்டனை கொடுக்கனும்....அவ்வளவு கோபம் உனக்கு அவன் மேல இருந்து இருந்தா... அவன் லுல்லுவை வெட்டி காக்கா கிட்ட போட்டு இருந்தா உன்னை பாராட்டி இருக்கலாம்... ஒன்னும் தெரியாத பச்ச குருத்தை சாவடிச்சிட்டு சர்ச்சில் போய் பாவமனிப்பு கேட்டு விட்டு தேம்பி தேம்பி அழுவது எந்த விதத்தில் நியாயம்...
==============
மிக்சர்

கேரளாவில் பிடிபட்ட வெறி நாய்களை...தமிழக வனத்துறையில் விட வந்த போது கேரளா வனத்தறையினரை தமிழக காவல் துறையினர் கைது செய்து இருக்கின்றார்கள்....தண்ணி விட மாட்டான்க ... வெறி நாய்களை மட்டும் விடுவானுங்க போல...
===========

சென்னை சாலைகள் இந்த மழைக்கே குளோசப் புன்னகை பூத்துக்கொண்டு இருக்கின்றன....
===========
எம்பிகளுக்கு 5 மடங்கு சம்பளம் உயர்த்த அரசு யோசனை... அவுங்க எவ்வளவோ புடுங்கறாங்க... தேவைதான்..
=========

நன்றிகள்...

பாலோ அப்.....
விழுப்புரம் அருகே தண்டவாள தகர்ப்பில் சமோயோஜிதமாக செயல்பட்டு பலரின் உயிரை காப்பாற்றிய அத்தனை பேருக்கும் நியூஸ் ரீடர் வரதாராஜன் நாடக குழுவினர் அவர்கள் நடத்திய நாடகத்தின் முடிவில் அவர்கள் அத்தனை பேரையும் அழைத்து பாராட்டி மரியாதை செய்து இருக்கின்றார்கள்...

பதிவர் மணிஜி அவர்கள் ஒளிப்பதிவாளர் செழியன் எழுதிய பேசும் படம் என்ற 135 ரூபாய் மதிப்புள்ள புத்தகத்தை எனக்கு பரிசளித்தார்... ஒரு குவாட்டர் ஏற்படுத்தும் சில மணி நேர சந்தோஷத்தை விட இது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கின்றது.... நன்றி மணிஜி...


இந்த வார நிழற்படம்



இந்த வார சலனபடம்...

சமீபத்தில் இந்த பாடல் பார்த்து விட்டு வெறுத்து போய் விட்டேன்....
ஒரு அக்மார்க் தெலுங்கு பாடல்...கதாநாயகனை நினைத்து பாடுவாதான பாடல்.. சான்சே இல்லாத சிம்ரன்... பழைய நினைவுகளில் முழ்கினால் நான் பொறுப்பு இல்லை...இந்த பாடலுக்கு பயங்கரமாக மெனெக்கெட்டு இருக்கின்றார்கள்....இவ்வளவு முறைப்பாய் இருக்கும் மனிதன் மீது கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் காதல் வர வாய்பில்லை...ஆனால் சிம்ரனுக்கு வருகின்றது...



பிலாசிபாண்டி...

சீக்கிரம் சாக... பெரிய கயிறு கழுத்துல போட்டு பேனில் தொங்கினா உடனடி
மரணம்..
பொறுமையாக சாக...சின்ன கயிறு பொண்ணு கழுத்துல 3 முடிச்சு .. எவ்வளவு ஸ்லோவா சாகறேன்னு மட்டும் பார்....

நான்வெஜ் 18+

ஜோக்..1

காதலிகிட்ட காதலன் கேட்டான்....

நீ இன்னைக்கு பிரா போடலைதானே? என்று கேட்க காதலிக்கு செம ஆச்சர்யம், இவனே ஒரு சோடபுட்டி, இன்னைக்கு வெள்ளைடாப்சும் போடலை,மழையும் பேயலை எப்படி கண்டுபிடிச்சான்னு ஒரே யோசனை.... திரும்ப காதலன்கிட்டயே கேட்டுக்குவோம்னுட்டு..

பொறுக்கி ராஸ்கல் நான் பிரா போடலைன்னு எப்படி கண்டு பிடிச்ச???

தேங்கஸ்டூ வாசன் ஐ கேர்....

===============
ஜோக்..2
ஒரு கவர்ச்சி நடகைகிட்ட கேட்டாங்களாம்... ரேப் பற்றி உங்கள் கருத்து...ரேப் என்பது என்னை பொறுத்தவரை அது கிரைம் கிடையாது... அது ஒரு எதிர்பாராத சந்தோஷம் அவ்வளவுதான் என்றாளாம்....
===========
ஜோக்..3

அப்பா தன் மகனிடம் அவனின் 18 வது பிறந்தநாளின் போது.. மகனே நீ வயதுக்கு வந்துவிட்டாய்... நாம் செக்ஸ் குறித்து எந்த ஒளிவு மறைவு இல்லாமல் பேச வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம்... அதற்கு மகன்.... சொல்லுங்க உங்களுக்கு செக்ஸ்ல என்ன சந்தேகம், எந்த இட்த்துல சந்தேகம்...????


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...

மதராசபட்டிணம் ஒரு பில் குட் மூவி....

எல்லோரும் எழுதி விட்டர்ர்கள் இந்த கதையை... படம் வருவதற்குள் ஒரளவுக்கு இது என்ன கதை என்று என்னால் யுகிக்க முடிந்தது...விமர்சனங்களை படித்தாகிவிட்டது..

அதனால் ஒரளவு சளிப்பாகதான் இந்த படத்துக்கு போக வேண்டும் என்று நினைத்து இருந்ததேன்.. ஏனெனில் இது போலான படங்களின் கதை தெரிந்து விடுவதால் பலது தொய்வை கொடுத்து இருக்கின்றன...

ஆனால் பல நண்பர்கள் இந்த படத்தை நான் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து செல்களில் குறிஞ்செய்தி அனுப்பியபடி இருந்தனர்... அந்த எஸ்எம்எஸ்கள் கூட இந்த படத்தை நான் விரைவில் பார்க்க வேண்டும் என்று உணர்வை தூண்டின என்றால் அது மிகையில்லை....

நேற்று பதிவர் கேஆர் பி செந்தில் அண்ணே பிரியா இருந்தா இந்த படத்துக்கு போயிட்டு வரலாமா என்று கேட்க.... அயம் ஆல்வேஸ் பிரி என்பதால் படம் பார்க்க ஒப்புக்கொண்டேன்....ஏவிஎம் ராஜேஸ்வரி போனோம்..

தமிழில் 23ம் புலிகேசி, இரும்புகோட்டை முரட்டு சிங்கம், போன்ற முயற்ச்சிகள் தமிழ் திரைப்பட உலகில் புது ராஜபாட்டையை போட்டு செல்கின்றன... அந்த வகையில் இந்த படமும்....இயக்குனர் விஜயின் மூன்றாவது படம்... இந்த படம் என்று நினைக்கின்றேன்......இதற்கு முன் அஜித் திரிஷாவை வைத்து கிரீடம் என்ற படத்தை எடுத்தவர்... மூன்றாவது படத்துக்கு பிரீயட் பிலிம் எடுக்க நிரம்ப தைரியம் வேண்டும்... அவர் சொன்ன கதையை தயாரிப்பு தரப்பு புரிந்து கொண்டு செலவு செய்ய வேண்டும்...அதை இந்த படம் சாத்தியபடுத்தி இருக்கின்றது....ஆனால் இதில் கண்டிப்பாக தவிர்த்து இருக்க வேண்டிய விஷயம் என்பது டைட்டானிக் படத்தின் ஒன்லைன்....

படத்தில் போட்ட பணத்தை எடுக்க அவர்கள் சேப்டி சைடுக்கு டைட்டானிக் படத்தின் ஒன்லைனையே அப்படியே எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.. என்னை பொறுத்தவரை அதில் தவறில்லை என்பேன்...பழைய படங்களை ரீமேக்கி தள்ளும் காலம்...

உதாரணத்துக்கு அஜித்தின் பில்லாவை சொல்லாம்.... அது எற்க்கனவே எடுத்த படம்... பார்த்த கதை அதையே சுவாரஸ்ய படுத்தவில்லையா? இந்த படம் நாம் வாழும் நகரத்தின் ஒரு கால கட்டத்தை .....இருக்கும் தொழில் நுட்பம் மற்றும் வியாபார மார்கெட்டுக்கு ஏற்றது போல் நம் கண்முன் காட்டமுயற்ச்சி செய்து இருக்கின்றார்கள் அல்லவா? அதற்கு எனது ராயல் சல்யூட்.....

மதராசபட்டிணம் படத்தின் கதை என்ன?

1945 ல் பிரிட்டிஷ் காலத்து இந்தியாவின் மதராசபட்டிணத்தில் அரம்பிக்கும் கதை....சலவைத்தொழிலாளயாக இருக்கும் பரிதி (ஆர்யா) என்கின்ற இளைஞனுக்கும் துரையம்மாஎன்று அழைக்கபடும் (எமி ஜாக்சனுக்கும்) வெள்ளைகார கவர்னரின் பெண்ணுக்கும் இடையே, பாழாய் போன காதல் பூ பூக்க அந்த காதல் எதில் முடிந்தது என்பது ஒரு வரி கதை...அப்படியே டைட்டானிக் படத்தை தமிழுக்கு ஏற்றது போல் மாற்றினால் என்ன வரும் அதை வைத்து சுவாரஸ்யமாக நம்மை உட்கார வைக்கின்றார்கள்....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

படத்தின் பெரிய பலமே வெள்ளைக்கார பெண்ணாக நடித்த எமி ஜாக்சன்தான்... இதை இப்படி சொல்வதால் எனக்கு வீட்டில் ஒரு வாரத்துக்கு நல்ல சோறு கிடைக்காது என்பது தெரிந்தும் நான் சுதந்திரமாக சூளுரைத்து சொல்லுவேன்...அந்த பெண்தான் எவ்வளவு அழகு....

தினமும் தேங்யூ என்ற இந்த ஆங்கில வார்த்தையை எத்தனையோ பேர் சொல்ல கேள்வி பட்டு இருக்கின்றோம்... ஆனால் எமி சொல்லும் போது ஒரு அழகு வந்து போகின்றது பாருங்கள் அது கவிதை....அந்த உதடு குவியும் போது நம் உள்ளமும் குவிவது படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கின்றன...

படத்துக்கு ரிப்பிட் ஆடியன்சுக்கு மிக முக்கிய காரணம் இந்த எமி என்ற வெள்ளைக்கார பொண்ணுதான்....

இந்த பெண்ணை பார்க்கையில் கட்டணா, அவளை கட்டனும்டா... இல்லை கட்டிணவன் காலை தொட்டுக்கும்மடனும்டா என்ற பாடல் நினைவில் தேவையில்லாமல் வந்து போனது...

டைட்டானிக் வெற்றிக்கு மிக முக்கியகாரணம் கேத்வின்செல்ட்தான்... அந்த பொண்ணோட அழகு... கொள்ளை அழகு, அந்த குழந்தைதனமான முகம்.. அப்புறம்தான் தொழில்நுட்பம், ஜேம்ஸ்கேமரோன், டிகாப்ரியோ, பிரமாண்டம் எல்லாம்.... அதுதான் இந்த படத்தில் சாத்தியபடுத்தி இருக்கின்றது...

எமி வரும் காட்சிகளில் இளமை துள்ளல் அந்த கொஞ்சி பேசுதலும், மறந்துட்டியா என்று கேட்கும் அந்த தமிழின் முதல் வசனத்துக்கு தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ்...


எமி சில காட்சிகளில் இயல்பாகவும் இரவு மெருன் உடையில் உப்பி போய் வருகின்றார்... கஸ்ட்டியூமர் கைவண்ணம்??? நம்ம ஆளுங்களுக்கு அப்படி இருந்ததான் பிடிக்கும்...

எமிக்கு அடுத்த படத்தின்வெற்றிக்கான உழைப்பு கேமராமேன் நீரவ்ஷா.... மனிதர் பின்னி எடுத்து இருக்கின்றார்...

வரலாற்று படம் என்பதால் தமிழ் படத்துக்கு பெரிய செட் போட முடியாது என்பதால் நிறைய காட்சிகள் லோ ஆங்கிளில் கேமரா பயணிக்கின்றது..அதனால் வானம் அதிகமான கமிட் ஆவதை மறுப்பதற்கு இல்லை....

வெள்ளைகாரர்கள் இருக்கும் இன்டோர் காட்சிகளில் நல்ல சாப்ட் லைட்டிங்.... நன்றாகவே இருக்கின்றது.... அது ரிச்சாகவும் காட்டி இருப்பது படத்தின் பலம் பார்வையாளன் அந்த காலகட்டத்துக்கு அழைத்து செல்வதில் பெரும் பங்கு வகிக்கின்றது....

ஏதோ கொடுத்ததை வைத்து நிறைவாய் செய்து கொடுத்த இருக்கின்றார்கள்...14 கோடியில் உலக சினிமா சாத்தியம்தான் என்பதை இந்த படம் நிருப்பிக்கின்றது...

மிக முக்கியமாக எமியின் குளோசப்ஸ் அருமை....கேமராமேன் நீரவ்ஷாவுக்கு இது அற்புதமான களம்...


இந்த படத்தின் வெற்றி என்பது எல்லோரும் அந்த பெண்ணை ரசிக்க ஆரம்பித்து விட்டனர்... அது படம் ஓடி பத்து நாளுக்கு பிறகு அந்த பெண் வரும் காட்சிகளில் ரசிகனிடம் இருந்து வரும் உற்சாகத்தில் தெரிந்து கொள்ள முடிந்தது... அதே போல் அந்த ஏற்றதாழ்வு காதல் எல்லோருக்கும் பிடித்து இருக்கின்றது...

அந்த பெண்ணை இனி வரும் படத்தில் எப்படி யூஸ் செய்ய போகின்றார்கள் என்று தெரியவில்லை... இருப்பினும் தொப்புளில் ஆம்டலெட் போடாமல் இருந்தால் சரி...

வாம் லைட்டில் காட்டன் சாரி கட்டி தெரியும் எமியின் செவத்த சின்ன இடுப்புக்கு தியேட்டரில் விசில்...

இந்த படத்தின் காட்சிகள் டைட்டானிக், அபகலிப்டோ என்று பல காட்சிகள் நினைவு படுத்தினாலும் ..... அந்த காதல் காட்சிகளில் இருக்கும் ரசனை எல்லோரையும் ரசிக்க வைத்ததில் தான் தேர்ந்த இயக்குனர் என்று இயக்குனர் நிருபித்துவிட்டார்....

மிக முக்கியமாக பல குளோசப், பிரேம் என்ட்ரி, லோ அங்கில்ஸ், ஆப் லைட்,டிராலி போன்ற இயக்கங்களில் நல்ல சென்ஸ் வெளிபடுத்தி இருக்கின்றார்...

இயக்குனர் விஜய் 200 படங்களுக்கு மேல் விளம்பர படங்களை இயக்கிய அனுபவம் இந்த படத்தில் காட்சிகளின் விஷுவலில் கை கொடுத்து இருக்கின்றது..

ஆர்யா நல்ல உடற்கட்டு... அவருக்கு கொடுக்கபட்ட பாத்திரத்தை நன்றாக செய்து இருக்கின்றார்...வாம்மா துரையம்மா பாட்டை வேறு யாராவது பாடகர் பாடி இருக்கலாம்...வெள்ளைகாரருடன் சண்டை போடும் போது டாப் ஆங்கிலில் இருவர் மட்டும் மண்ணில் இருப்பது போலான காட்சி அற்புதம்...

ஹனிபாவுக்கு கடைசி படம் நன்றாக நடித்து இருக்கின்றார்.... சிறைச்சாலை
படத்துக்கு அப்புறம் நல்ல வேடம்...மற்றும் நாசர் , பாலாசிங், பாஸ்கர் போன்றவர்கள் தங்கள் பாத்திரத்தை நிறைவாக செய்து இருக்கின்றார்கள்...

ஆர்ட் டைரக்கடருக்கு ஒரு சலாம்.. நிறைய ஹோம் ஒர்க் பண்ணி இருக்கின்றார்கள்...அதே போல் காஸ்ட்யூம்.. மிக முக்கியமாக கடைசியில் கிரேடிட் கார்டு போடும் போது பழைய சென்னையின் போட்டோக்களை அதே ஆங்கிளில் படம் பிடித்து போட்ட உழைப்பு ஒரு அற்புதம்...

அதே போல் அசிஸ்டென்ட் பெயர்களை முதலில் போட்டதற்கு நன்றிகள்.. பாராட்டுகள்

துணி துவைக்கும் காட்சியில் முதல் பெண் துவைக்க... துவைக்கும் கல் ஆடுவதை தவிர்த்து இருக்கலாம்..அல்லது கவனித்து இருக்கலாம்...

எப்போதும் தூங்கும் ஒரு கேரக்டர்...இந்தியனின் சோம்பேறி தனத்துக்கு ஒரு சாம்பிள்...

400 வருஷத்துக்கு அப்புறம் கொடுக்கும் முதல் அடி என்று பேசும் வசனங்கள் பலது மனதில் நிற்க்கின்றன...
கார்பிரேட் நிறுவன போர்வையில் பாரினரிடம் கொள்ளை அடிக்கும் விஷயங்களையும் நக்கல் அடித்து இருக்கின்றார்கள்...

இந்த படம் தப்பிக்க அடுத்த காரணம் லாகானில் விளையாட்டை மட்டும் வைத்து ஜெயித்தார்கள்...இதில் காதலைமட்டும் வைத்து ஜெயித்து இருக்கின்றார்கள்...சுதந்திர போராட்டத்தை படத்தின் பேக் டிராப்பாக வைத்துக்கொண்டு வெற்றிக்கோட்டை தொட்டு இருக்கின்றார்கள்...

ஆர்யா நல்ல உடற்கட்டு... அவருக்கு கொடுக்கபட்ட பாத்திரத்தை நன்றாக செய்து இருக்கின்றார்..

தாலியை காட்டியதும் வரும் ஒரு கிளாசிகல் இசையும் அதன்பின் வரும் பாடலும் இசை பிரகாஷை உயரச்செய்கின்றது...

வழக்கமான படம் செய்யாமல் இது போலான கதையை தேர்ந்து எடுத்தமைக்கே இந்த குழுவை பாராட்டலாம்....

படத்தில் மிகப்பெரிய ஓட்டைஇருக்கின்றது...சுதந்திர இந்தியாவில் எந்த பிளைட்டும் இங்கிலாந்துக்கு போகவில்லையா? அல்லது வரவில்லையா? என்பதும்.... பெரிய கல்லூரியை வழி நடத்துபவரின் சின்ன வயது போட்டோவை ஒருவர் மட்டும் அடையாளம் கண்டு கொள்வது வியப்பு

சுதந்திர தாகம் கொண்டவர்கள் போராட்டத்தை சரியாக காட்டவில்லை என்று குறைபட்டுக்கொண்டால்... சிறைச்சாலை என்று ஒரு படம் இதை விட டீடெய்லாக எடுத்து இருப்பார்கள் அந்த படத்தை பார்க்கவும்... அந்த படம் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய தேசம் அல்லவா இது...

படத்தின் டிரைலர்



படக்குழுவினர் விபரம்....

Directed by A. L. Vijay
Produced by Kalpathi S. Agoram
Written by A. L. Vijay
Starring Arya
Amy Jackson
Nassar
Music by G. V. Prakash Kumar
Cinematography Nirav Shah
Editing by Anthony Gonsalvez
Studio AGS Entertainment
Distributed by Red Giant Movies (India)
Ayngaran International (Worldwide)
Release date(s) 9 July 2010
Country India
Language Tamil

சென்னை ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் டிஸ்க்கி...

படம் வெளியாகி ஏவிஎம் ராஜேஸ்வரிக்கு நான், என் கசின் லக்ஷமன்,பதிவர் கேஆர்பி செந்தில் ஆகியோர் போனோம்.....

நிறைய கல்லூரி பெண்கள் வந்து இருந்தார்கள்.. அதே போல் மாணவர் கூட்டமும் கையில் நோட்டுடன் வந்து இருந்தார்கள்


யார் நடந்தாலும் அண்ணா தியேட்டர் போல் திரை மறைத்துக்கொண்டது...

படம் வந்து பத்து நாளுக்கு பிறகு கவுண்டரில் கூட்டம் இருந்தது...காசி தியேட்டரில் 80 ரூபாய் மற்றும் 90 ரூபாய் என்பதாலும் கூட ஏவிஎம் ராஜேஸ்வரியில் கூட்டம் இருக்க ஒரு காரணமாக இருக்கலாம்... திங்கள் கிழமை மதிய காட்சிக்கு ஹவுஸ்புல்லை ரொம்ப நாளைக்கு பிறகு பார்க்கின்றேன்..

தியேட்டரில் மேட்டடல் டிடெக்டர் வைத்து இருந்த காரணத்தால் எல்லோரும் வரிசையில் சென்றது ஆச்சர்யம்.. அனால் 3 மணி படத்துக்கு 3 பத்து வரை ஒவ்வோருவராக உள்ளே போக கடைசியில் நம் புத்தியை காட்டிவிட்டோம்... காரணம் அதற்குள் படத்தை போட்டு விட்டார்கள்.... இன்னும்15 நிமிடத்துக்கு முன் தியேட்டரில் விட்டு இருந்தால் எல்லாம் சரியாக நடந்து இருக்கும்... அதே போல் இரண்டு வழியில் டிடேக்டர் வைக்க வேண்டும்....

எமி ஆர்யாவுக்கு மணி கூண்டு சீனில் கிஸ் கொடுக்க உதடுவரை போய் மார்பில் சாய்ந்து கொள்ள... நான் அது வெள்ளைக்கார பெண்ணே இல்லை என்று நான் கமெண்ட் அடிக்க.... இங்க எங்கயோ லோக்கல்ல இருந்து பிடிச்சிகிட்டு வந்து இருக்காங்க என்று சொல்ல...தியேட்டரில் சிரிப்பலை..

இங்கு புகை பிடிக்க கூடாது என்று போட்டு இருந்த போர்டுக்கு பக்கத்தில் எல்லோரும் புகைத்துக்கொண்டு இருந்தார்கள்...




பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...

இரண்டு வாட்டர் பாக்கெட்டும்.. ஒருகிளாசும் (சிறுகதை)



வெள்ளிக்கிழமை இரவு டாஸ்மார்க்கில் சரக்கு வாங்குவது என்பது ரேஷனில் மண்ணெண்ணைய் வாங்குவதை விட கொடுமையான விஷயம். ஒழுங்கற்ற கூட்டத்தில் முண்டிஅடித்தபடி, தியேட்டரில் டிக்கெட் கொடுப்பது போலன சிறிய ஓட்டையில் காசு நீட்டி, பாட்டில் வாங்கி, சில்லறை வாக்குவது சாமான்ய காரியம் அல்ல...

மச்சகண்ணன் சரக்கு கையில் வாங்கிய உற்சாகம் ஸ்பெயின் அணியின் உற்சாகத்தை ஒத்து இருந்தது...பாரில் உள்ள பையனை அனுப்பினால் வெகு நேரம் ஆகின்றது என்பதால் கையோடு வாங்கி கொண்டு உள்ளே போய் உட்கார்ந்து விடுவது அவன் பாலிசி...
நான் மச்சகண்ணன்... எனக்கு பிரச்சனைன்னு எதுவும் இல்லை...டாஸ்மார்க் வந்தாலே ஏதாவது பிரச்சனை இருந்தாதான் வரனுமா? தமிழ் சினிமா உங்களை நல்லா கெடுத்து வச்சிருக்கு...

வாரத்துக்கு ஒரு நாள் நான் சந்தோஷமா இருக்கனும் அதுக்குதான் இது... நான் ஒரு தனிமை விரும்பி... ஆனாலும் சின்னதா என்னை பத்தி சொல்றேன்... எனக்கு கல்யாணம் ஆயிடிச்சி,இரண்டு பெண் குழந்தைங்க, இப்பதான் பெருங்களத்தூர் ஸ்ரீராம் நகர்ல ஒரு பிளாட் வாங்கினேன்...
என்கிட்ட இருக்கற பணத்துக்கு நான் ஸ்டார் ஒட்டலில் சரக்கு அடிக்க முடியும்னு பில்டப் எல்லாம் கொடுக்க மாட்டேன்... ஆனால் உண்மையான சோசலிசத்தை பார்ககனும்னா ஒவ்வோரு இந்திய குடிமகனும் டாஸ்மார்க் வரனும்..

ஏழை பணக்காரன்,சுத்தம் அசுத்தம் என்ற வித்யாசம் இல்லாமல் குடிக்கும் இடம் இதுவே... அதனால டாஸ்மார்க்ல தண்ணிஅடிப்பதுதான் எனக்கு பிடிக்கும்...என் பட்ஜெட்டுக்கும் அதுதான் ஒத்து வரும்...
எனக்கு சென்னையில் நண்பர்கள் கூட்டம் அதிகம்...ஆனா தண்ணி அடிக்க தனியாதான் வருவேன்... ஒரு முறை கும்பலாபோய் தண்ணி அடிச்சி பிரச்சனை ஆனதில் இருந்து இப்படித்தான்... ஆனால் பாரில் குடிக்குத் போது நடக்கும் சம்பாஷனைகளுக்கு நான் ரசிகன்.....

சில வாரங்களாக வெள்ளிக்கிழமை தோரும் தவறாமல் எங்கள் தெருவில் இருக்கு ஜானகிராமன் என் டேபிளில் ஆஜராகிவிடுவார்...முதலில் ஒரு பாக்கெட் தண்ணீர் கொடுத்து உதவியதில் இருந்து அப்படியே பேச்சு டெவலப் ஆகி இன்று வாரம் ஒரு வெள்ளிகிழ்மை தவறாமல் சந்திப்போம்.....
முதல் முறை போதை தலைக்கு ஏறி வீட்டுக்கு போகும் போது உங்கள் பேர் என்ன என்று கேட்க???,

தண்ணி அடிக்கற இடத்தல ஏற்படற பிரண்ட்ஷிப்பும், தேவிடியா வீட்ல ஏற்படற பிரண்ட் ஷிப்பையும் நான் மதிப்பதில்லை என்று சொல்லி விட்டு பேர் சொல்லாமல் போய் விட்டார்...ஆனால் இருவரும் ஒரே தெரு என்பதால் வாகனத்தை கடக்கையில், நாடார் கடையில் பொருள்வாங்கையில் என சிரித்து வைத்து, இப்போது வாரம் ஒரு முறை பாரில் மனம் வீட்டு இருவரும் பேசிக்கொள்வோம்....
இன்னும் கொஞ்ச நேரத்தில் ஜானகிராமன் என் எதிர் டேபிளுக்கு வந்து விடுவார்... என்னகாரணம்னு தெரியலை? இன்னமும் வரலை அதுக்கு முன் அவரை பத்தி சொல்றேன்...


ஜானகிராமன் மகேஸ்வரி பைனான்சில் ஜென்ரல் மேனேஜர்... வயசு55 ,மாசம் ஒரு லட்சம் சம்பளம்... ஆனா அவரை பார்த்த அப்படி தெரியாது... ரொம்ப சிம்பிளான மனுஷன்.. சின்ன வயசுல ரொம்பவும் கஷ்டபட்ட காரணத்தால் அவர் காசுலு கெட்டின்னு... நீங்களா முந்திரி கொட்டை போல யோசிக்காதீங்க... நான்தான் சொல்லிகிட்டு வரேன் இல்லை...அப்புறம்என்ன அவசரம்...???
அவர் சிம்பிளான ஆள் அவ்வளவுதான்...

இங்க டாஸ்மார்க்ல தண்ணி அடிக்கும் போதுதான் பழக்கம்...இரண்டு பேரும் ஒரே தெரு என்பதால் வந்த நெருக்கம்... அவர் பொண்டாட்டி பிரா போல சாரி உளறிட்டேன்.... புறா மாதிரி அழாக இருப்பாங்க...ஹவுஸ் ஒய்ப்தான்....


என்னை மச்சகண்ணன் என்று அழைக்காமல் மச்சி என்றுதான் அழைப்பார்... அவருக்கு ஒரே பையன் டாக்டருக்கு படிக்க வைக்கின்றார்... சின்ன வயசில் இருந்தே தன் வீட்டு வேலைக்காரி வைதேகி மகள் நிருபாவையும் தான் வளர்த்து, படிக்க வைத்து வருவதாக பெருமையுடன் சொல்லுவார்...


எனக்கும் அவரிடம் பிடித்த விஷயமே வேலைக்காரி பெண் என்று நினைக்காமல் அந்த பெண்ணையும் நிறைய நண்கொடை கொடுத்து புறநகர் கல்விதந்தைகளிடம் ஒப்டைத்து என்ஜினியரிங் படிக்கவைப்பது எனக்கு ஆச்சர்யம்.... சென்னையில் இவரை போன்றவர்களால்தான் மழை பெய்கின்றது என்று பெருமீதமாய் நினைத்துக்கொள்வேன்....

தன் பையனுக்கு ஒரு லேட்டஸ்ட் மொபைல் என்றால் அதுதான் வேலைக்காரி வைதேகியின் பெண்ணுக்கும்.... அவரின் அந்த குணம் எனக்கு பிடித்த விசயம்.... பாரில் கூட பார் அட்டென்டர் பையனை வாடா போடா என்று கூப்பிட மாட்டர்...... வயசில் எவ்வளவு சின்ன பையனாக இருந்தாலும் ஒரு ஆபாயில் கொண்டு வாங்க என்று சொல்லுவார்...



போனவாரம் கேட்டேன்...
எப்படிசார் இப்படி உதவறகுணம் உங்களுக்கு இருக்கு என்றுகேட்ட போது, மச்சி... 50 லட்சத்தை சேர்த்து பார்த்திட்டினா அதுக்கு அப்புறம் எல்லாம் பேப்பர்தான் என்று உளறினார்....அவரும் என்னை போல் குவாட்டா பாட்டில் வாங்கி, இரண்டு வாட்டர் பாக்கெட் ஒரு கிளாஸ் வாங்கி பொறுமையாக சாப்பிடும் ரகம்.....இன்று என்ன என்று தெரியவில்லை இன்னும் அவர் வரவில்லை....


தமிழகத்தில் சுதந்திரமாக குடிக்க கூட விடுவதில்லை.... சட்டம் ஒழுங்கு காப்பாற்ற இன்னும் அரை மணி நேரத்தில் பாரில் உள்ள லைட் ஆப் செய்து விடுவார்கள்...ஜானகிராமன் வருவதற்குள் அப்படியே பாரின் உள்ளே நோட்டம் விட்டேன்....


இரண்டு பேர் கையில் வாட்டர் பாக்கெட் பிய்த்து சொர் என்று கிளாசில் இருக்கும் பொன்நிற திரவத்தில் ஒரு சயின்டிஸ்ட் ரேஞ்சிக்கு கலக்கி கொண்டு இருந்தார்கள்..



புல் போதையில் ஒருவன், வரதிங்கிழமைதான் அந்த கண்டாற ஓழிக்கு கடைசி நாள்,அவமட்டும ஓகே சொல்லலை அவ பு............. கிழிச்சிட்டுதான் மறுவேலை என்று வீர வசனம் பேசினான்....

இருவர் லேட்டாக வந்தாலும் சட்டென கிளாசில் மிக்ஸ் செய்து ஒருவர் கையில் ஒருவர் மாட்டி ஒரு விதமான ஸ்டைலில் அந்த நண்பர்கள் கல்பாக அடித்தனர்....அவர்களை எல்லோரும் இரண்டு செகன்டுக்கு வேடிக்கை பார்த்தனர்...

ஒருவர் புல் போதையில் ஆபாயில் சாப்பிட மஞ்சள் கரு உடைந்து அவர் வயிற்றுக்கு போகமால் பாக்கெட்டுக்கு போனது...

தூரத்தில் ஜானகிராமன் வருவது தெரிந்தது... அவசரமாக வந்து கொண்டு இருந்தார்... வழக்கத்துக்கு மாறாக அவரிடம் பதட்டம் தெரிந்தது... கையில் குவாட்ருக்கு பதில் ஆப் பாட்டில் வைத்துக்கொண்டு இருந்தார்.... வழக்கம் போல் இரண்டு வாட்டர் பாட்டில் ஒரு கிளாஸ் இல்லாமல்... கையில் ஒரு லிட்டர் கின்லே பாட்டிலும் கிளாசுமாக வந்தார்....



வந்ததும் எதுவும் பேசாமல் கிளாசில் அரை டம்பளர் ஊற்றி அடித்து உதடு துடைத்து விட்டு என் பிளேட்டில் இருக்கும் இரண்டு கார கல்லைபயிறை வாயில் போட்டர்....அதில் ஒன்று அவர் மீசையில் மேல் பட்டு என் முகத்தில் அடித்தது... நான் எதுவும் பேசவில்லை.....



நெத்தியடி படத்தில் ஜனகாரஜ் சொல்வது போல்.. யாரும் எதுவும் வேணுகிட்டபேசாதிங்க...அவனே பேசட்டும் என்று சொல்லுவார்... அது போல அவரே பேச்சு ஆரம்பிக்க காத்து இருந்தேன்....கோவத்தில் கண்கள் சிவந்து இருந்த காரணத்தால் வீட்டில் ஏதோ பிரச்சனை என்பது மட்டும், எனக்கு எறிய பாதி போதையில் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது....


அப்படி என்ன பாவம் பண்ணினேன் மச்சி...
நீங்க என்ன பாவம் பண்ணிங்க.. எனக்கு தெரிஞ்சி நீங்க நல்லதுதான் பண்ணி இருக்கிங்க...
பையன் ரெண்டு மாசாமா மந்திரிச்சி விட்ட கோழி போல இருந்தான்... எதாவது காதல் கத்திரிக்காயா இருக்கோமோன்னு அவன் செல்லை செக் பண்ணா...

வேலைக்காரி பொண்ணு நிருபாவுக்கு ஐலவ்யூன்னு மெசேஜ் அனுப்பி வச்சி இருக்கான்....
என்று சொல்லிவிட்டு இரண்டு நிமிடத்தில் ஆப் பாட்டிலில் பாதியை காலி செய்தார்....

பதட்டத்தில் அவருக்கு கை நடுங்கி கொண்டு இருந்தது...
அந்த பொறம் போக்குக்கு என்ன குறை வச்சேன்....

எத்தனை மலையாளத்து குட்டிங்க பெருசு பெருசா படிக்ககுதுங்க...அதல எதாவது ஒன்னை கரக்ட் பண்ணி இருக்கலாம் இல்லை....
அந்த சனியனுக்கு அதுக்கு எங்க துப்பு இருக்க போவுது???

சின்ன வயசல இருந்து வீட்லேயே வளரும் பொண்ணுகிட்டயா உன் வேலையை காட்டுவது என்று மகனை எரிந்து விழுந்து கொண்டு இருந்தார்...


அதை விட அந்த பண்ணாடை நிருபா, உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செஞ்சி இருக்கா? மீ டூ ....ஜ கிஸ்யூன்னு பதில் மெசேஜ் அனுப்பி வச்சி இருக்கா.....


மச்சி நான் காதலிக்கு எதிரி இல்லை.... என் பையன் ரோட்ல போற கழுதை கூட்டி வந்து கட்டி வைன்னு சொன்னாலும் நான் கட்டி வைப்பேன் என்று சொன்ன போது இது மணிரத்னம் படத்து டயலாக் ஆச்சேன்னு ஒரு புத்தி பரபரபன்னு எந்த படம் என்று யோசிக்க....


சட்டென ஜானகிராமன் உடைந்து அழ ஆரம்பித்து விட்டார்....எல்லோரும் சட்டென ஒரு செகன்ட் எங்கள் பக்கம் பார்வை திருப்ப... நான் அவரை சமாதானபடுத்தினேன்.....


சத்தமாக பேசுவதை குறைக்க சொன்னேன்....


இப்பதான் பையன் கண்ணத்துல இரண்டு அரை விட்டு விட்டு வரேன்... நீ என்ன சொன்னாலும் அந்த பொண்ணு நிருபாவைதான் கட்டுவேன் சொல்லறான்?

ஒருதடவை சொன்ன புரிஞ்சிக்கமாட்டேன்கிறான் என்று சொல்லி வேதனைபட்டார்.....


நான் கேட்டேன்... விட்ல யாருக்காவது இந்த விஷயம் தெரியுமா?
தெரியாது என்றார்... எனக்கும் என் மகனுக்கு மட்டும் தெரியும்... அதுவும் சில மணி நேரத்துக்கு முன்னதான் தெரியும்....

சார் தப்பா நினைக்கலைன்னா நான் ஒண்ணு சொல்லட்டமா? இது ஒன்னும் கம்பள்ஷன் இல்லை இது என்னோட சஜஷன்... அந்த பொண்ணுக்கு எவ்வளவோ செஞ்சி இருக்கிங்க....

பணம் காசுக்கு அந்தஸ்த்துக்கு ஆசை படற டைப் நீங்க இல்லைன்னு எனக்கு நல்லா தெரியும்...நீங்களே சொல்லி இருக்கிங்க... ரோட்ல போற கழுதைய கூட்டி வந்தாலும் கட்டி வைப்பேன்...


சின்ன வயசல இருந்து நீங்க பார்த்து வளர்த்த பெண்ணு அது....ஏன் அந்த பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை நீங்க அமைச்சு கொடுக்க கூடாது??? அது ஏன் உங்க பையனாவே இருக்க கூடாது என்று கேள்வி கேட்டேன்... திரும்பவும் சொல்லறேன் தப்பா நினைக்காதிங்க என்றேன்...



இப்போது ஜானகிராமன் தண்ணி எதும் கலக்காமல் பாட்டில் உள்ள மீதத்தை தன் குடலுக்குள் சரித்துக்கொண்டார்... தப்பதான் நினைப்பேன்... தப்பாதாண்டா நினைப்பேன் என்று என்னை மரியாதை குறைவாக விளித்தார்...


தப்பாதான் நினைப்பேன்....
அண்ணன் தங்கச்சி யாராவது கல்யாணம் செஞ்சிப்பாங்களா? வைதேகி வேலைக்காரி மட்டும் அல்ல என் இரண்டா................வார்த்தை முடிக்காமலே மயங்கி சரிந்தார்...

அன்புடன்
ஜாக்கிசேகர்

மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/ 18/07/2010)

ஆல்பம்...

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இயக்குனர் சீமான் கைது செய்யபட்டு இருக்கின்றார்...இனி ஒருவருடத்துக்கு அவருக்கு ஜாமீன் கொடுக்க முடியாது என்று சட்டம் சொல்கின்றது...எதாவது படத்தை எடுத்துவிட்டு நிம்மதியாக இருந்து இருக்கலாம், ஏசியில் தூங்கி இருக்கலாம்....

இறந்த மீனவனின் குடும்பம் 3 லட்சம் நிவாரண தொகை வாங்கி கொண்டு அமைதியாகிவிட்டது...கடலோர மீனவர்களிடம் இருந்து அவர்கள் சங்கங்களில் இருந்து இந்த கைதுக்கு ஒரு எதிர்ப்பும் இல்லை... அடி மாசத்துக்கு கடற்கரை அம்மனுக்கு ஆடலும் பாடலும் எந்த ஊரில் இருந்து அழைக்கலாம் என்று அனைத்து மீனவர்களும் யோசித்து கொண்டு இருக்கின்றார்கள் போலும்....

எலக்ஷன் வரும் போது சீமானின் வாயை கட்ட முடியாது என்பதால் ஆளும் அரசு ஒரு வருடத்துக்கு தூக்கி உள்ளே போட்டு இருக்கலாம் என்பது என் எண்ணம்..
==================
சென்னை ரோடுகளின் மீது நெடுஞ்சாலை துறைக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை.... பல இடங்களில்ரோடுகளை கொத்தி வைத்து இருக்கின்றார்கள்...ரோடு போட போகின்றார்கள் என்று தெரிகின்றது... மகிழ்ச்சியான விசயம்தான்...

இப்போதுதான் முதல் முறையாக சென்னையில் பல இடங்களில் ரோடுகளை கொத்தி ரோடு போட போகின்றார்கள்....முன்பெல்லாம் ரோட்டின் மேல் ஜல்லி கொட்டி ரோடு போடுவார்கள் இதனால் கட்டிய வீடுகள் தாழ்வான பகுதியாகிவிட்டன அதனால் இந்த புது ஏற்பாடு....

நல்லவிசயம்தான்... ஆனால் நன்றாக இருக்கும் ரோட்டை கொத்தி வைத்து விட்டார்கள்... ஒரு இரவில் 30 அடி தூரம் ரோடு போட போகின்றோம் என்றால் அந்த 30 அடி ரோட்டை நோன்டி விட்டு மறுநாள் அந்த இடத்தில் ரோடு போட்டால் எந்த பிரச்சனையும் இல்லை....சென்னையில் எல்லா இடத்திலும் நாளைக்கே ரோடு போடுவது போல் கொத்தி வைத்து விட்டார்கள்.... எப்போது போட போகின்றார்கள் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்....

எங்க ஊரில் ஒரு பழ மொழி சொல்வார்கள்...ஆறு அரை கிலோமீட்டர் இருக்கும் போதே அவித்துக்கனானாம் கோவணத்தை என்று சொல்வார்கள்...கோவணம் நினையாமல் இருக்க தொடையளவு தண்ணியில் போய் நின்று கோவணத்தை அவுத்து தோளில் போட்டு அக்கரைக்கு போய் மாட்டிக்கொள்வார்கள்.... ஆனால் தண்ணீர் அரைகிலோமீட்டர் இருக்கும் போதே கோவணத்தை அவுத்துக்கொண்ட கதையாக நெடுஞ்சாலை துறை சென்னையில் நடந்து கொண்டு இருக்கின்றது... தேவுடா????

====================================
மிக்சர்...

காண்டம் என்றால் கண்றாவி என்று ஒதுங்கி போகும் தமிழகத்தில்தான் எய்ட்ஸ் நோயளிகளின் எண்ணிக்கை முதலிடத்தில் இருக்கின்றது.இந்தியாவில் அதிக அளவு எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் இருப்பது 87 மாவட்டங்கள் ....அதில் முக்கால் வாசி மாவட்டங்கள் தென் மாவட்டங்களாம்....அதில் முதலிடம் தமிழகம்...
===================

கடந்த வாரத்தில் ஒரு பெண் காவலர் தன் கணவருக்கு நடக்க போகும் மறுமணத்தை தடுத்து நிறுத்த போராடி எழு காவல் நிலையத்துக்கு மேல் புகார் அளிக்க சென்று எந்த காவல் நிலையமும் புகார் வாங்காமல் இழுத்து அடித்து, கடைசியில் மண்டப வாசலில் தர்ணா போராட்டம் நடத்தி அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி இருக்கின்றாள்... ஒரு பெண்காவலருக்கே இந்த நிலமை என்றால் சாதாரண குப்பம்மாளுடைய நிலயை நினைக்கும் போது பயமாக இருக்கின்றது...
===============
இந்த வருட மதிப்பெண் போலிசான்றிதழ் இதுவரை 500 பேருக்கு கொடுத்து இருப்பதாக பிடிபட்ட கும்பல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த இருக்கின்றது... கடந்த எட்டு வருடங்களாக இந்த வேலையை செய்து இருப்பதாக சொல்ல எத்தனை மாணவர்கள் இது போலான தில்லாலங்கடியில் ஈடுபட்டு இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை...எத்தனை பேர் டாக்டர் , என்ஜினியர் என்று செட்டில் ஆனவர்கள் எண்ணிக்கை தெரியவில்லை... எத்தனை திறமையான நேர்மையான மாணவனின் வாய்ப்பை, வாழ்க்கையை கெடுத்தார்கள் என்று தெரியவில்லை...

==========

பேஸ் புக்கில் பதிவர் அதிஷா ஒரு வாக்கியத்தை போட்டு இருந்தார்... அது ரசிக்கும் விதமாகவே இருந்தது....

கலைஞர் சொல்வது போல்....

ஓ தமிழர்களே தமிழர்களே என்னை தூக்கி கடலில் போடதீர்கள்... போட்டால் சிங்களராணுவம் சுட்டு விடும்...

===============


எல்லா விளம்பரத்திலும் இந்த பெண்ணே.....
மேலே உள்ள இந்த பெண்ணை நீங்கள் தினமும் பார்த்து தொலைகாட்சியில் பார்த்து இருக்கலாம்... இந்த பெண்ணை அறியபட்ட விளம்பரம் 3 ரோசஸ் டீ விளம்பரம்தான்... இப்போது டிவியில் எந்த விளம்பரமாக இருந்தாலும் இந்த பெண்தான்.... பெயர் திவ்யா பரமேஸ்வர்1. 1 brook bond 3 roses, i love you
2. 2 brook bond 3 roses, doggie
3. 3 brook bond 3 roses, Little lambs

* Divya parameshwar Acted in Sowbhagya advertisment.
* Divya parameshwar in ajinamoto advertisment.
* Divya parameshwar in TTk Prestige Mixie advertisment.
* Divya parameshwar in Prince Jwellery advertisment.
* Divya parameshwar in Kohinoor's jasmine advertisment.
* Divya parameshwar Ashok Tmt advertisment.
* And So.
* Divya parameshwar is the model of brook bond 3 roses,Sowbhagya,ajinamoto,TTk Prestige Mixie,Prince JwelleryKohinoor's, jasmineKohinoor's jasmine,Ashok Tmt.
நிறைய விளம்பரபடங்கள் லேட்டஸ்ட்டாக கோஹினூர் காண்டம் ஆட்... அது மட்டும் அல்ல சட்டென பார்த்தால் ஹாமாம் சோப்புக்கு அம்மாவாக நடிக்கின்றார்... தென்னிந்தியாவின் டாப் மாடலாக கோலாச்சிக்கொண்டு இருக்கின்றார்....இப்போது சன் டிடிஎச் விளம்பரம்ஒரே பெண் பல பாத்திரங்களுக்கு பொறுத்தமாக இருக்க முடியுமா???இந்த பெண் இருக்கின்றார் என்பது கூடுதல் விஷயம்... என்னை பொருத்தவரை பரிசுக்கான வாழ்க்கையாகதான் இதை என்னால் எடுத்துக்கொள்ளமுடிகின்றது... காதலியாக, மணப்பெண்ணாக, அம்மாவாக, என்று அசத்திக்கொண்டு இருக்கின்றார்.. ஆர்பாட்டம் இல்லாத அழகு....

திவ்யா..சினிமாவில் நடிப்பது பற்றி இதுவரை யோசிக்கவில்லை என்று சொல்கின்றார்...இரண்டு அல்லது 4 நாள் வேலை... பல லட்சம் சம்பளம்... மிக முக்கியமாக ஏசி அறையில்தான் செட் போட்டு படபிடிப்பு நடக்கும்....கூடுமானவரை யாரையும் தொடாமல் நடிக்கலாம்.....ஏம்பா மணிஜி இந்த மாதிரி மாடலை எல்லாம் வச்சி விளம்பரம் படம் எடுத்தால் என்ன???
========================
பிலாசபி பாண்டி

எல்லாரும் கவர்மென்ட் காலேஜிக்கு படிக்க போவானுங்க...
கவர்மென்ட் ஸ்கூலுக்கு போக யோசிப்பானுங்க...


எல்லாரும் கவர்மென்ட் வேலைக்கு போவனும்னு ஆசை படுவானுங்க ஆனா கவர்மென்ட் ஆஸ்பிட்டலுக்கு போக யோசிப்பானுங்க...

பைத்தியக்கார பசங்க....

===========
நான்வெஜ் 18+

சரேஜாதேவி கதை படிச்ச ஒரு வயசு பையன் பக்கத்து வீட்டு ஆண்டியை கரெக்ட் பண்ண டிரை பண்ணினான்....

நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க...
நன்றி
உங்க கன்னம் ஆப்பிள் போல இருக்கு...
நன்றி
உங்க கண்கள் திராட்சை போல் இருக்கு
நன்றி

நீங்க மட்டும் ஹாலிவுட்ல இருந்து இருந்தா என்ஜலினா ஜோலி தோத்து இருப்பாங்க....

போதும் நீ என்னதான் ஐஸ் வச்சாலும் 60 அடி ஆழ கிணத்துக்கு 30 அடி கயிறு பத்தது... போ போய் வேலையை பாரு...
=========
குறிப்பு..

கணனி சம்பந்தமாக எந்த சந்தேகத்தையும் பதிவிலகில் தீர்த்து வைப்பது வடிவலேன் ஆர் அவர் பதிவுக்கு இங்கு சுட்டவும்


பொதுவாக எனது கம்யூட்டரில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை போனில் சரி செய்து கொடுக்கும் டெக்னிக்கல் கிங் பதிவர் வடிவேலன் ஆர் பார்பர் ஷாப்பில் இருந்து இறங்கும் போது என்னை போலவே கல் தடுக்கி வண்டியில் இருந்து விழுந்து விட்டார்... நிறைய உள்காயத்துடன் ரேஸ்ட் எடுத்துக்கொண்டு இருக்கின்றார்... சீக்கிரம் குணமடைய இறைவனைபிரார்த்திக்கின்றேன்...

மினி சாண்ட் வெஜ் ,சின்னதா எழுதனும்னு நினைச்ச....ஆது பாட்டுக்கு போய்கிட்டே இருக்கு நான் என்ன செய்ய...?? இனி நேரம் கிடைக்கும் போது இது தொடரும்...

அன்புடன்
ஜாக்கிசேகர்


(INCEPTION-2010) கிரிஸ்டோபர் நோலனால் நான் குழம்பிய கனவு வேட்டை...


சிறுவயதில் எனக்கு ஒரு கனவு வரும்... ஒரு பாம்பு என் காலின் கட்டைவிரலை கடித்து கொண்டு இருக்கும்... எங்கு போனாலும் வரும்... எது செய்ததாலும் என் கூட வரும்... கூட வரும் என்றால் அது கடித்தபடியேதான் இருக்கும்... அந்த சனியனை எவ்வளவு உதறினாலும் போகவே போகாது...ஆய் போகும் போது கூட என் கால் கட்டை விரலை கடித்துகொண்டு இருக்கம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.....

அதை மரத்தில் போட்டு தேய்ப்பேன்,மண்ணில் போட்டு தேய்ப்பேன் போகவே போகாது...பலம் கொண்ட மட்டும் இழுப்பேன் ம்ஹும் அப்படியதோன் இருக்கும்


அஞ்சலி படத்தில் ஒரு தள்ளு வண்டியில் அஞ்சலி பாப்பாவை வைத்துக்கொண்டு தள்ளி போவார்களே... அது போலான ஒரு சாமாச்சாரம்தான் என் வாகனம்... அதில் ஏறி என் சொந்த ஊர் கடலூரை வானத்தில் சுற்றி வருவேன்....

இத்தனைக்கு ஏழு கழுதை வயசாகின்றது...நான் இதுவரை விமானத்தில் பறந்தது இல்லை... ஆனால் என் சொந்த ஊர் கடலூர் டாப் ஆங்கிளில் மேலிருந்து பார்க்கும் போது எப்படி இருக்கும் என்பதை உருவகபடுத்தி காட்டியது இந்த கனவுதான்...

அதன் பிறகு என் பாட்டி எனக்கு கொடுக்கும் நாலனா, எட்டனாவை என் வீட்டு பக்கத்தில் உள்ள பேபி கடையில் கடலை மிட்டாய் வாங்கி தின்று விட்டு வீடு திரும்பும் போது, அந்த பைசா கீழே கிடக்கும்... ரொம்ப சந்தோஷமாக எடுத்தால் பக்கத்தில் ஒரு ரூபாய் கிடக்கும்.... அது போல் எடுத்து எடுத்து வைக்க ஒரு பை நிறைய ரொம்பி இடமில்லாமல் அலைந்து கொண்டு இருக்கும் போது சட்டென விழிப்பு வந்து எழுந்து அந்த கனவை சபித்து இருக்கின்றேன்...


அதுமட்டும் அல்ல அதன் பிறகு இது போல் சில்லரை பொறுக்குவது போல் கனவு வந்தாலே சரி இது கனவு என்பதை கனவிலேயே பிரிலியன்டாக நினைத்துக்கொள்வேன்...

திங்கள் கிழமை தமிழ் வகுப்பில் செய்யுள் மனப்பாட பகுதியை ஒப்பிக்க முடியாமல் வகுப்பே தினரும்... போச்சுடா ... நமக்கு இன்னைக்கு சங்குதான் என்று நினைத்து சட்டென எழுந்து பார்த்தால் அது சனிக்கிழமையாக இருக்கும்... அப்போது மனம் அடையும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை.....இன்னும் ஒரு நாள் இருக்குல்ல...

அதன் பிறகு ஆஜால் குஜால் படங்கள் பார்த்து விட்டு விடியலில் கைலியை ஈரமாக்கிய கனவுகள் ஏராளம்....ஏதோ ஒரு திருமணத்தில் பார்த்த பெண்ணுடன் கனவில் உறவு கொண்டு இருக்கின்றேன்.... இத்தனைக்கும் அந்த பெண்ணிடம் ஒரு வார்த்தை பேசியதில்லை... ஆனால் அந்த பெண் வெகுநாட்கள் பழகியது போல் பேசி,முத்தமிட்டு,வளைந்து கொடுத்து என ஆச்சார்யமாக வந்த 18+கனவுகளும் கவுந்த பெண்களும் ஏராளம்....


சில கனவுகளில் முக்கியமான வாழ்க்கை திருப்பம் போன்ற ஏதாவது ஒரு சம்பவம் நடந்து கொண்டு இருக்கும் உதாரணத்துக்கு நான் என் காதலியுடன் வீட்டை விட்டு ஓடி வந்து ரெஜிஸ்டர் ஆபிசில் கல்யாணம் செய்து கொள்ள இருக்கும் போது....கையெழுத்து போட யார் இருக்கின்றார்கள் என்று ரெஜிஸ்டர் கேட்க?? நாம் தவித்து இருக்கும் போது எப்போதோ ஊட்டியில் இரண்டு சக்கர வாகனத்துக்கு பஞ்சர் ஒட்டிய பையன் சிரித்தபடி வந்து அண்ணே நான் இருக்கேன் என்று சொல்லும் போது கனவிலேயே, வாய் பிளந்து இவனுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று கனவிலேயே யோசித்து இருக்கின்றேன்....

எல்லா கனவை விட சூப்பரான கனவு என்பது எதாவது பிரச்சனையில் யார் மீதாவது கை வைத்து விட்டு கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் ஒரு ஊரே வடிவேலுவையும் முரளியையும் துரத்தி வருவது போல் வரும்... நாமும் ஓடுவோம் ஒடுவோம் ஓடிக்கொண்டே இருப்போம் , சைக்கிள், பைக், பஸ், ரயில் என மாற்றி மாற்றி ஓடிக்கொண்டு இருப்போம், எல்லா இடத்திலேயும் நம் சட்டை காலரை பிடிக்கும் அளவுக்கு வந்து விடுவார்கள்.... தட்டி விட்டு ஓடிக்கொண்டே இருப்போம்... ஒரு கட்டத்தில் பிடித்து நைய புடைக்க போகின்றார்கள் என்று நினைக்கும் போது அது கனவாக இருக்கும்.....

இன்னும் இப்படி பல சுவாரஸ்யங்களை அடிக்கி கொண்டே போகலாம்... அது போல் ஒரு கனவை வைத்து எப்போதும் போல் நான் லீனியரில் கதை சொல்லி இருக்கின்றார்...பேட்மேன் புகழ் இய்க்குனர் கிரிஸ்டோபர் நோலன்.....

(INCEPTION-2010) தமிழில், கனவு வேட்டை... படத்தின் கதை என்ன???

Cobb (Leonardo DiCaprio) ஒரு ஜகஜால கில்லாடி... அதாவது கனவின் உள்ளே போய் ஆழ்மனதில் இருக்கும் என்னஒட்டங்களை மாற்றி அமைக்கும் வித்தை தெரிந்தவன்... இந்த கனவு சோதனையின் போது அவன் மனைவி... நிஜஉலகில் கனவுலகம் என நினைத்து தற்கொலை செய்து கொள்கின்றாள்...காப்புக்கு இரண்டு குழந்தைகள்....

ஒரு பெரிய பணக்காரன் அல்லது டான்.... காப்பிடம் வியாபாரத்தில் அந்தஸ்த்தில் தன்னை விட வெகு வேகமாக வளரும் எதிரியை அழிக்க அவன் கனவில் குழப்பம் ஏற்படுத்த சொல்கின்றான்... அப்படி எற்படுத்தினால் அவன் வியாபாரத்தில் தோற்றுவிடுவான் தான் வெற்றி பெறலாம் என்று நினைத்து காபிடம் அந்த வேலையை ஒப்படைக்க... முதலில் மறுக்கும் காப்... வில்லன் கப்பின் குழந்தைகளை கொன்று விடுவேன் என்று சொல்ல, அந்த அசைன்மெடன்டுக்கு காப் சம்மதிக்கின்றான்....அந்த கனவுக்கு ஒரு ஸ்கெட்ச் போட்டு கொடுக்க தன் புரபசர் உதவியை நாட அவர் அவரது மாணவியை காப்புக்கு உதவ சொல்கின்றார்...
காப்குழு வில்லன் சொன்னஅவன் கனவில் மாற்றம் செய்ததா? காப் குழந்தைகள் என்னவானார்கள் என்பதை தலையை பிய்த்துகொண்டு தியேட்டரில் பார்த்து வையுங்கள்...


படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

உலகம் எங்கும் நேற்று ரிலீஸ் ஆகிய இந்த படம் செம்மொழியான தமிழ் மொழியில் நேற்று, கனவு வேட்டை என்ற பெயரில் வெளியானது....

நான் இந்த படத்தை சென்னை பைலட்டில் பார்த்தேன்....

மேட்ரிக்ஸ்ன்னு ஒரு படம்... செம ஹைபையா வந்தது நினைவுக்கு இருக்கலாம் அது போலதான் இந்த படம்...அந்த படம் வரவில்லை என்றால் இந்த படத்துக்கு இன்னும் எதிர்பார்ப்பு கூடி இருக்கும்...

கனவு கனவுக்குள் கனவு , கனவுக்குள் கனவுன்னு என்னை கொழப்புறேன்னு நினைக்கிறீங்களா? அப்படி கனவுக்குள்ள கனவில் போய் எதிராளியின் அறிவை திருடுதல் அல்லது நிர்மூலமாக்குதல்தான் கதை... படம் முழுவதும் இப்படித்தான் டிராவல் ஆகின்றது... நடுவில் பிளாஷ் பேக்குகள்......நோலன் விளையாடி இருக்கின்றார்....

இதை எப்படி ஸ்கிரிப்ட் எழுதி என்ற நினைக்கும் போதே அயர்ச்சி வந்து விடுகின்றது...

மேக்கிங்கில் எந்த குறையும் சொல்ல முடியாது...ஆனால் இந்த படத்தை ஆங்கிலத்தில் பார்த்தால் பொம்மை படம் பார்த்து விட்டு வந்த பீல்தான் கிடைக்கும்....ங்கோத்தா நல்ல வேளை தமிழ்ல பார்த்தோம்னு படம் பார்த்த பாதி பேர் பந்தா இல்லாம நெஞ்சை தொட்டு ஒத்துகிடுவிங்க....

ஓ ஷிட் தமிழ் டப்பிங் எல்லாம் எவன் பார்க்கறதுன்னு இறுமாப்புடன் சொன்னாலும் நீங்க பந்தா பண்ணுகின்றீர்கள் என்று அர்த்தம்...


நோலன் படங்கள் சப்டைட்டில் இல்லையென்றால் தடுமாறிவிடும் அளவுக்கு பார்வையாளனுக்கு அவ்வளவு செய்திகள் வந்து குவியும்...

படம் இரண்டரை மணி நேரம் சாலிடாக ஒடுகின்றது....

தான் மனைவியுடன் வாழ்ந்த வீட்டுக்கு வரும் போது காட்டபடும் அந்த கடற்கரை நகரம் மிக அற்புதமான காட்சிகள்...

அண்ணா யூனிவர்சிட்டி மட்டும் ஐஐடி மாணவர்கள் இந்த படத்தை பார்த்தால்.... வாட் ஏ எக்சலன்ட் ஸ்டோரி என்று கொண்டாடுவார்கள்...

ஒரு வேளை இன்டெலக்சுவலுக்கு இந்த படத்தின் சுவாரஸ்யத்துக்கு குறைவு இருக்காது என்று நம்புகின்றேன்...ஆனால் ஒரு வித்யாசமான கான்செப்ட்டில் இந்த படத்தை கொடுத்த நோலனுக்கு நன்றிகள்...

கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் இது... ஆக்ஷன் காட்சிகள் இன்னும் அதிகம் இருந்து இருந்தால் இன்னும் ரசித்து இருக்கலாம் என்பது என் எண்ணம்....



படத்தின் டிரைலர்.......


படக்குழுவினர் விபரம்..


Directed by Christopher Nolan
Produced by Christopher Nolan
Emma Thomas
Written by Christopher Nolan
Starring Leonardo DiCaprio
Ken Watanabe
Joseph Gordon-Levitt
Marion Cotillard
Ellen Page
Tom Hardy
Cillian Murphy
Dileep Rao
Tom Berenger
Michael Caine

Music by Hans Zimmer[1]
Cinematography Wally Pfister
Editing by Lee Smith
Studio Legendary Pictures
Syncopy Films
Distributed by Warner Bros. Pictures
Release date(s) July 16, 2010 (2010-07-16)
Running time 148 minutes
Country United States
Language English
Budget $160 million

தியேட்டர் டிஸ்க்கி சென்னை பைலட்......

இரண்டு ஷோ பைலட்டில் போட்டு இருக்கின்றார்கள்....

படம் ஆரம்பித்து 15 நிமிடத்துக்கு என்ன பேசுகின்றார்கள் என்று ஒரு எழவும் புரியவில்லை...

லெப்ட், ரைட்டில் மட்டும்தான் சவுண்ட் அதிகம் வருகின்றது சென்டர் ஸ்பீக்ரில் என்ன பேசுகின்றார்கள் என்று தெரியவில்லை....

ஐயா டப்பிங் திலகங்களே.. எல்லா வாய்சும் பெஸ்லதான் இருக்கு... யாருக்கும் வாய்ஸ் ஷார்ப்பாவே இல்லை....

டப்பிங் தியேட்டர்ல எந்த சத்தமும் இல்லாமல் பின் டராப் சைலன்டாக இருப்பதால் சின்ன முக்கல கூட உங்களுக்கு சவுண்ட் அதிகம் போல் தோன்றும்... ஆனால் நம்ம தியேட்டர் எதுவும் அப்படி இல்லை அதை புரிந்து வாய்ஸ் மிக்ஸ் பண்ணுங்க.....


ஒரு மணிக்கு படம் போட ஒன்னு பத்துக்கு உள்ளே வந்து இருவர் பசியில் வரும் போதே இரண்டு சிப்ஸ் பாக்கெட் கையில் பிடித்துகொண்டு வந்து விட, மொறுக் மொறுக் என சத்தம் வந்து தொலைக்க... என் ரோவில் இருந்து இரண்டு ரோ முன்னாடி போய் உட்கார,அங்கும் சனியன் பனியன் போட்டு உட்கார்ந்து இருந்தது..... எப்படியா? எனக்கு முன்சீட்டில உட்கார்ந்து இருந்தவன் மாவா போட்டு பிச்சிக் பிச்சிக்னு துப்பிக்கொண்டு இருக்க.... ஓங்கி வாயில் வைக்க மனது துடித்தாலும் நோலனுக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கொண்டு படம் பார்த்தேன்.....

ஒரு ஆள் பார்த்த முதல் நாளே பாட்டு ரிங்டோனை சத்தமா செல்லில் வச்சி இருந்திச்சி....கால் வந்துகிட்டே இருக்கு... சரி அதை வைபரேட்ர்லயும் போட்டு தொலைச்சி இருக்கலாம்... அதுவும் இல்லை...அப்புறம் நான் சத்தம் போட மொபைல் வைபரேட் மோடுக்கு தாவியது...

எல்லா சீனிலும வாய்ஸ் வந்து அப்புறம் கட்டாகி என படம் பார்க்கும் உணர்வை பைலட் தியேட்டர் டிடிஎஸ் ஆபரேட்டிங்
சிஸ்டம் கண்டம் துண்டமாக வெட்டிக்கொண்டு இருந்தது....

அப்புறம் எல்லா தியேட்டர்காரங்களும் ஒன்னை கத்து விச்சி இருக்கானுங்க... இன்டெர்வெல் முடிந்து படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஒரு சின்ன டிரிங் போட்டுட்டுதான் படம் ஆரம்பிப்பானுங்க... இப்ப எல்லாம் அப்படி இல்லை ... சின்ன டாய்லட்டில் வரிசையில நின்னு சரியா உதறி பேண்ட் ஜிப்பை போட்டு திரும்ப வரிசையில நின்னு கைய கழுவறதுக்குள்ள படத்தை போட்டுடறானுங்க...

இரண்டு காதலிகள் படத்துக்கு வந்து இருந்தார்கள்... இரண்டு பேருமே இன்டர்வெல்லில் லைட் போட்டதும் தலைகுனிந்து உட்கார்ந்து இருந்தார்கள்... எதுக்கு வெக்கம்னு தெரியலை...

ஆட்டோ பார்க்கிங் பைலட்டில் அனுமதி கொடுத்து இருப்பதால்.... ஒரு 30 ஆட்டோக்கள் ஆயுதபுஜைக்கு நிற்பது போல் வரிசை கட்டி நின்றன...

படம் இன்டர்வெல்லின் போது ஒரு அறிமுக எழுத்தாளரை சந்தித்தேன்... அவ்ர் பெயர் சினிமாவியாபரம் புகழ் கேபிள் சங்கர்....

படம் பார்த்து விட்டு வந்து இரவு டைப்பும் போது முரளிகுமார் பத்மநாபன் போனில் படம் எக்சலன்ட்னு குறிஞ்செய்தி அனுப்ப... அப்போதே போனில் பேசினேன் இன்னும் பத்து நிமடத்தில் படத்தை பற்றிய பதிவு வந்துவிடும்னு...


அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலு பேரு வாசிக்க ஓட்டும் பின்னுட்டமும் ரொம்ப முக்கியம்.. எனக்க சத்தியமா எனக்கு கள்ள ஓட்டு போட தெரியாதுங்கன்னா...

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner