வழிப்பறி சென்னை சாலை...

ஏற்கனவே  இந்த பக்கத்தில் சில ஆபத்தான சென்னை  சாலைகள் பற்றி எழுதி இருக்கின்றேன்.  மதுரவயல் பெருங்களத்துதூர்  பைபாஸ் ரோடு பற்றியும் சென்னை ஈசிஆர் சாலை பற்றயும் தொடர்ந்து இந்த தளத்தை வாசித்து வருபவர்களுக்கு நிச்சயம் தெரியும்.



நான் எழுதிய சாலைகள் எல்லாம் புறநகர் பக்கம் இருக்கும் ரோடுகள்.. நான் இப்போது எழுத போவது சென்னை நகருக்கு மத்தியில் இருக்கும் சாலை..


போரூரில் இருந்து கிண்டிக்கு போகின்றவர்களுக்கு இந்தசாலையை பார்த்து இருக்கலாம். ராமபுரம் மற்றும் மனப்பாக்கத்தில் இருந்து காசிதியேட்டர் வழியாக அசோக் நகர் செல்லவேண்டும் என்றால் நாம் கிண்டி  கத்திபாரா போய்,ஒலிம்பியா டவர் வழியாக  ஈக்காடுதாங்கல் தாண்டி காசிதியேட்டர் போய் அசோக்நகர் போகலாம்.

ஆனால் நந்தம்பாக்கம்  சென்னை டிரேட் சென்டர் தாண்டியதும் இடது பக்கம் சாம்ராஜ்ய கல்லரைகள்  இருக்கும் அதுக்கு பக்கத்தில் ஒரு ரோடு லெப்ட்டில் உள்ளே போகும் அதுவாழியாக சென்றால் அடையாறு ஆற்றுகுறுக்கே இருக்கும் தரைபாலம் வழியாக போனால் எம்ஜீஆர் நகர் மார்கெட் போகலாம் அல்லது அப்படியே சின்ன ரைட் எடுத்தால் ஜெயாடிவி ஆபிஸ் பின்புறமாக போய் காசிதியேட்டர் முன் இருக்கும் பாலத்துக்குகொண்டு போய் விடும் அந்த ரோடு.,...

இந்த வழியில் ராணுவ பள்ளி இருக்கின்றது. பாரத் எலக்ட்ரானிக்ஸ் இருக்கின்றது.. பாரத் எலக்ட்ரானிக்ஸ் தடைசெய்யபட்டபகுதி .. அந்த இடத்தில்தான் இந்தியராணுவத்துக்கு டாங்கிக்கு தேவையான உதிரிபாகங்கள் செய்கின்றார்கள். இந்த  வழி ரொம்ப ஷாட்டாக எந்த  டிராடிபிக்கும் இல்லாமல் காசிதியேட்டர் வழியாக அசோக்நகர் போய்விடலாம்...

இரண்டு வருடத்துக்கு முன்பு அந்த வழியில் ஆறு மணிக்கு பிறகு ஒரு ஈ ,காக்கா இருக்காது.. ஆனால்  ராமாபுரத்துக்கு பக்கத்தில் எல்என்டி மற்றும் டிஎல்எப் வந்ததில் இருந்து இந்த வழியில் வாகன போக்குவரத்து அதிகமாகிவிட்டது. இரவு பத்து மணிவரை கூட வாகனங்கள் போவதும் வருவதுமாக இருக்கின்றன...

சனிஞாயிறு காலங்களில் இந்த வழியில் இருக்கும் பெரிய மைதானத்தில் பசங்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருப்பார்கள். அதே இடத்தில் காரும் கற்றுக்கொள்ளுவார்கள். ஆறுமணிக்கு மேல் குட் இருட்டாக இருக்கும்...

பலகாதலர்கள் இந்த இடத்தில் இப்போது எல்லாம் வாகனத்தில்  ரொம்ப ஸ்லோவாக வாகனம் ஓட்டியபடி தங்கள் பசியை தீர்த்து கொள்ள இந்த இடத்தை தற்போது தேர்ந்து எடுத்து விட்டனர்... குறிப்பாக அவர்களுக்கான எச்சரிக்கைதான்... இது..



ஒருவாரத்துக்கு முன் அந்த பக்கம் வந்த ஒரு அஐள அடித்து போட்டு கையில் இருந்த நகைபணம் போன்றவையை பிடிங்கி கொண்டு செமை மாத்து கொடுத்து அனுப்பி இருப்பதாக நந்தம்பாக்கம் காவல்  நிலையத்தில்  வழக்கு பதிவாக இப்போது அந்த வழியில்  வாகனசோதனை நடத்துகின்றார்கள்.

பதிந்த வழக்குகள் எனக்கு தெரிந்து குறைவு பதியாத வழக்குகள் அதிகம் என்பது என் கருத்து.. நீங்கள் அந்த சாலையில் பயணிக்கும் போது உங்களுக்கே தெரியும்..

ஜயோ அம்மா என்று கத்தினால் கூட அந்த வழியில் குரல் கேட்டு உதவிக்கு வர  அந்த யாருமற்ற இரண்டரை கிலோமீட்டரில் ஆபத்தான ரோட்டில் எந்த வீடும் இல்லை.

மிக முக்கியமாக தம்பதிகள் மற்றும் காதலர்கள் அந்த ரோட்டை இரவு எழு மணிக்குமேல் தவிர்ப்பது நலம். இரவு எட்டுமணிக்குமேல் அந்த ரோட்டில் யாரும்பயணம் செய்யாமல் இருப்பது உங்களுக்கு நல்லது.


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

12 comments:

  1. ஆஹா நான்தான் பர்ஸ்டா???

    இருங்க இருங்க படிச்சிட்டு மீதி கொம்மெண்ட்ஸ் போடுறேன்...

    ReplyDelete
  2. """மிக முக்கியமாக தம்பதிகள் மற்றும் காதலர்கள் அந்த ரோட்டை இரவு எழு மணிக்குமேல் தவிர்ப்பது நலம். இரவு எட்டுமணிக்குமேல் அந்த ரோட்டில் யாரும்பயணம் செய்யாமல் இருப்பது உங்களுக்கு நல்லது."""""

    நல்ல விளிப்புணர்வு/அறிவுரை கலந்த பதிவு ஜாக்கி அண்ணே.... நானும் சென்னையில் இருக்கும் எனது அனைத்து நண்பர்களுக்கும் இதை ஃபார்வார்டு செய்கிறேன்...

    ReplyDelete
  3. வடை எனக்கா? படிச்சிட்டு வருகிறேன.

    ReplyDelete
  4. மூன்று வருடத்திற்கு முன்பு எங்கள் office Cab டிரைவர் தாம்பரத்திலிருந்து அம்பத்தூர் செல்வதற்கு இந்த ரூட் வழியாக போவார்.
    Its really a best short route to escape from Guindy Traffic.

    ReplyDelete
  5. நண்பர் ஜாக்கி அவர்களுக்கு வணக்கம்.

    உங்கள் பதிவுகள் அனைத்தையும் படிப்பவன்.

    எங்களை போன்று வெளி நாட்டில் உள்ளவர்களுக்கு உங்களின் பதிவு ஒரு நல்லதொரு தகவல் களஞ்சியம்.


    உங்களிடம் வெகு நாட்களாக ஒரு தகவலை பகிந்துகொள்ள விரும்பினேன்.

    ஒரு நாள் ஹாலிவுட் படம் ஒன்று பார்த்தேன் .டிவி யில் தான்.

    படம் பெயர் Lord of war (2005 ). அதில் நிகோலஸ் கேஜ் ( Nicholas Cage ) ஒரு ஆயுத வியாபாரியாக நடித்திருப்பார் . ஒருமுறை ஆப்பிரிக்க நாடொன்றில் ஆயுதங்களுடன் விமானத்தில் செல்லும் பொழுது சர்வதேச போலீசினால் பிடிபட வேண்டி நேரும் . உடனடியாக விமானத்தை ஓர் வயல் வெளி போன்ற இடத்தில தரையிறக்கி , அதில் உள்ள ஆயுதங்களை எல்லாம் அந்த இடத்து மக்களை அழைத்து (வருவோர் போவோர் எல்லாம் ) எடுத்துக்க சொல்லுவர். அவர்களும் எடுத்து சென்றுவிடுவார்கள் . அப்பொழுது ஒரு பின்னணி இசை ஒலிக்கும் .

    அதை கேட்ட பொழுது எனக்கு துக்கி வரி போட்டது. ஏனெனில் அந்த இசை நம்ம ARR இசை அமைத்த பாம்பே (BOMBAY ) படத்தின் பின்னணி இசை.(புல்லங்குழல்) அப்படியே காப்பி.

    நேரமிருப்பின் பார்க்கவும்.

    நன்றி

    ஆனந்த்
    பமாகோ, மாலி

    ReplyDelete
  6. //குட் இருட்டாக இருக்கும்...//
    ahaa...

    ReplyDelete
  7. இன்ட்லியுடன் ஏன் இணைக்கவில்லை.
    நாங்கள் இணைத்து, ஓட்டும் போட்டாச்சு..

    ReplyDelete
  8. நான் போக மாட்டேன் ஏன்னா நான் சிங்கபூரில்

    நல்ல செய்தி நன்றி

    ReplyDelete
  9. பயனுள்ள செய்தி ஜாக்கிசார் நன்றி
    speedsays.blogspot.com

    ReplyDelete
  10. பயனுள்ள செய்தி ஜாக்கி அண்ணே.... நானும் சென்னையில் இருக்கும் எனது அனைத்து நண்பர்களுக்கும் இதை ஃபார்வார்டு செய்கிறேன்...

    ReplyDelete
  11. ஓ! அப்படியா? இப்படி ஒரு ரூட் இருக்கு என்பதே இப்போது தான் தெரியவந்தது.

    ReplyDelete
  12. மிக்க நன்றி நண்பர்களே. எனக்கு தெரிந்த விஷயங்களை நான் உங்கள் முன் பகிர்ந்து கொள்கின்றேன்.

    ReplyDelete