வெந்த புண்ணில் பிரபாகரனை பாய்ச்ச வேண்டாம்..


ஒரு வருடம் ஆகிவிட்டது...கிளிநொச்சி பின்னடைவில் இருந்தே மனதுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத பயம் ஒன்று உருவாகி தொலைக்க... நடக்காது நடக்காது என்ற நினைத்துகொண்டு இருக்கும் போதே....இராஜபக்சே விமானத்தில் இருந்து மண்ணை மிதித்ததும் பூமியை முத்தமிட்ட போது... பல தமிழர்களின் சாமதிக்கான பூமி புஜை ஆரம்பித்துவிட்டது என்று அப்போதே தெரிந்துவிட்டது....


முள்ளிவாய்காலில் ஈழ தமிழர்களின் பினக்குவியில்....தேசிய தலைவரின் மண்டையில் வெட்டுபட்ட காயத்தோடு, முள்ளிவாய்காலில் உடலை கண்டெடுக்கபட்டதாக காட்டிய போது....இலங்கை மீடியாக்களை விட... வடஇந்திய மீடியாக்கள் ஒழிந்தான் மகாதேவன் என்று ஆனந்த கூத்தாடின.....

ஏனெனில் உலகலாவிய பரப்பில் தமிழர்களின் பேர் சொல்லிய தலைவன்.. அவன் முப்படைகளோடு வான் படையையும் வைத்திருந்த நவீன யுகத்து இராஜா அவன்....அந்த பொறாமை வயிற்று எரிச்சல்.. கூத்தாட வைத்தது....தமிழக மீடியாக்கள் சிலது வருத்தபட்டது.. சிலது ஏதுவும் நடக்கவில்லை என்று கடந்து போனது....சிலது அதனை ஒரு துன்பியல் சம்பவமாக கூட கருதவில்லை........


நெய்வேலியில் என் பூமி மாதாவை பிளந்து நிலக்கரியில் இருந்து மின்சாரம் தாயரித்து அதனை இந்தியாவின் பிற பகுதிகளுக்கு கொடுத்தால் அது இறையான்மை.... ஒகேனிக்கல்லில் இருந்து வந்த தண்ணியை கூட்டு குடிநீர் திட்டத்துக்கு பயண்படுத்தினால் அதற்க்கும் பிரச்சனை...இதற்க்கே பிரச்சனை என்றால் காவிரிநடுவர் நீதி மனறம் கொடுத்த உத்தரவை இதுவரை செயல்படுத்தவில்லை....இதை கேட்க நாதியில்லை.......இதுதான் இந்திய இறையாண்மை

கரிகாலன் கட்டிய அணையின் மயிரையே இன்னும் புடுங்க முடியவில்லை... ஆனால் முல்லைபெரியாறு அணையை உயர்த்தினால் கேரளாவுக்கு பாதிப்பு என்று சொல்லி கேரளா எதிர்ப்பு தெரிவிக்கின்றது.. முட்டையில் இருந்து அத்தியாவசிய அரிசி வரை செட்டன்களுக்கு இங்கு இருந்துதான் போகின்றது... உச்சநீதிமன்றம் அணையின் உயரத்தை கூட்ட அனுமதி அளிக்கின்றது இதுவரை செயல்படுத்தவில்லை...கேட்க நாதியில்லை... இதுதான் இந்திய இறையான்மை.....

இதுவரை இலங்கை இராணும் ....450க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்களை சுட்டு .....மன்னிக்கவும் அவன் இந்திய மீனவன் அல்ல.. அவன் தமிழக மீனவன்...இந்திய மீனவனாக இருந்து இருந்தால் அவன் கொல்லபட்ட போது நிச்சயம் மத்திய அரசு பதறிபோய் தட்டி கேட்டு இருக்கும் அவன் தமிழ் நாட்டு மீனவன்...450 மனைவிமார்களும் தாலியை அறுத்தார்கள்... இதுவரை எந்த கேள்வி மயிரும் கேட்கவில்லை....இனி கேட்க போவதில்லை...செய்திதாளின் 4ம் பத்தியில் இலங்கை ராணுவம் அட்டுழியம் என்று செய்தி வெளியிடபடும்.... அதையும் கடந்து செல்வோம்...... ஒரு கண்ணில் வெண்ணையும் மறு கண்ணில் சுண்ணாம்பும் தடவும்.....இதுதான் இந்திய இறையாண்மை


ஆனால் இலங்கையில் தனக்கு கொடுக்கபட வேண்டிய அடிப்படை உரிமைகளை பல வருங்களாக அகிம்சை வழியில் கேட்டு கடைசியில் ஒரு மயிரும் புடுங்க முடியாத நிலையில் ஆயுதம் எடுத்தான் பிரபாகரன்...அவ்வளவுதான்... அகிம்சை என்ற வழி இருக்க ஆயுதம் எதற்க்கு என்று கேள்வி எழுப்பட்டது.. இந்தியாவை உதாராணமாக காட்டியது...200 வருடங்கள் ஆங்கிலேயனின் பின்புறத்தை கழுவி்விட்டு கொண்டு ஒரு கட்டத்தில் நாற்றம் அடிக்க வெறுத்து போய் போராட போய் ...எல்லாத்தையும் சுரண்டிவிட்டு இதன் பிறகு எதுவும் இல்லை என்ற நிலையில் சதந்திரத்தை கொடுத்துவிட்டு போனான்....

மாவீரன் பிரபாகரனின் ஆட்சி காலம் சுபிட்சம் என்று மக்கள் சொல்கின்றார்கள்... போராளிகளோடு ஒரு இரவை கழித்து, அவர்களோடு படுத்து எழுந்த இந்திய பத்திரிக்கை பெண்மணி.... புலிகள் இயக்கத்தினர் போலான கட்டு கோப்பையும், மன உறுதியையும் நான் பார்க்கவில்லை என்று சொல்லி இருக்கின்றார்....ஒரு பெண்ணை இவ்வளவு மரியாதையாக நடத்த முடியுமா? என்று போராளிகளை பார்த்து வியந்து இருக்கின்றார்.....

புலிகள் செய்த அரசியல் பின்னடைவுகளை,சில தவறுகளையும் பெரிது படுத்தும் யோக்கியவான்கள்.. அவர்கள் செய்த நல்லவைகளை வெளியே சொல்வதே இல்லை...புலிகள் யோக்கியவன்கள் என்று ஒரு போதும் நான் சொல்ல போவதில்லை...எல்லோரும் அய்யோக்கியதனம் செய்யும் போது அவர்களை அதை செய்ய வைத்தர்கள்... அவ்வளவே....

போர் நடந்த இடத்தில் எந்த சர்வதேச நாடுகளையும் பத்திரிக்கையாளர்கள் என எவரையும் இலங்கை உள்ளே விட வில்லை... இதை யாராவது கண்டித்தார்களா?.... அதுவும் இந்தியா எந்த கேள்வியும் இல்லவே இல்லை.... போர் நடக்கும் போது போர் முடிந்ததும் அகதிகள் மறு வாழ்வுக்கு ஏற்பாடு செய்வதாக சொன்ன இந்தியாவின் மத்திய அமைச்சர்கள்...ஒரு வருடத்தில் எம் இன மக்கள் நடைபினமாக இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள்... கேட்க நாதியில்லை...

இந்திரகாந்தியை கொன்ற நம்பிக்கை துரோகிகளின் சீக்கிய இனத்தில் இருந்து ஒரு பிரதமர்...அது போலான ஒரு அரசியல் படுகொலையை செய்த விடுதலை புலிகளை இன்று வரை அந்த கொலையை காரணம் காட்டி அவர்களையும் அவர்கள் சார்ந்த இனத்தையும் பழிவாங்குகின்றார்கள்....நாம் தமிழர்கள் அப்படித்தான் நடத்தபடுவோம்...

என்னவோ எல்லா மக்களைளயும் துப்பாக்கி முனையில் மிரட்டி அழைத்து போனதாகவும் இல்லையென்றால் இவ்வளவு உயிர்சேதம் அதிகம் இருந்து இருக்காது என்று இங்கு பிரியாணி சாப்பிட்டு பல் குத்தி எழுதும்அறிவு ஜீவிகள் சொல்லுவார்கள்...வாழ்வோ சாவோ அது உங்களோடுதான் இருப்போம் என்று தன் தலைவனின் காலடியில் கடைசி வரை கிடந்தார்கள் எம் மக்கள் ....


கடைசி கட்ட உதவி கிடைக்க வேண்டும்.... இல்லையென்றால் சங்குதான் என்று எம் இன மக்களுக்கு நன்றாக தெரியும் இருந்தும் கடைசிவரை தலைவனை விட்டு வரவில்லை.... உயிரை பற்றியும் கவலை படவில்லை...எட்டப்பன்கள் பல்கிபெருகி இருக்கும் இந்த இனத்தை வெகு ஈசியாக பலவீனபடுத்திட முடியம் என்பது அரசியல் வாதிகளுக்கும் சர்வதேச சமுகத்தினருக்கும் நன்கு தெரியும்...அதனால் இது போலான தமிழர்களுக்கான அடிப்படை உரிமைகள் எந்த காலத்திலும் கிடைக்க போவதில்லை...போரில் மடியாமல் தப்பித்தால் நமக்கு சர்வதேச சமுகம் நல்லது செய்து விடும் என்ற நம்பிக்கை அவர்களிடத்தில் சுத்தமாக இல்லை... அகதியாக நடைபினமாக வாழ்வதை விட இறப்பது எவ்வளவோ மேல் என்று இருந்து விட்டார்கள்...

நன்றாக யோசித்து பாருங்கள்.. போரில் இறந்து போன லட்சக்கணக்கான மக்கள் அந்த நேரத்து வலியுடன் இறந்து போய்விட்டாக்ள்... உயிரோடு இருப்பவர்கள் இன்னும் அடிப்படை வசதி ஏதும் இன்றி வதை முகாம்களில் வசிக்கின்றார்கள்...போர் முடிந்ததும் கிழித்து விடுவோம் என்று சொன்ன இந்தியா... அதை பற்றி வாயே திறக்கவில்லை...இந்திய மீனவர்கள் மீது மன்னிக்கவும்..... தமிழக மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டுக்கு, ஒரு மிரட்டலையும் அல்லது கண்டனத்தையும் இலங்கை மீது இந்தியா செய்யாத போது அடுத்த நாட்டில் வாழும் எம் தொப்புள்கொடி உறவுகளுக்கு மட்டும் என்ன செய்துவிட போகின்றாகள்....


சரி போர்தான் முடிஞ்சிடுத்தே நம்ம உறவ போய் பார்க்கலாம்னு இலங்கை வந்தா... அவனக்கு கொடுக்கும் மரியதை... செமையான மாத்துதான்...நிறைய பணம் கொடுத்துதான் அவங்களை அழைச்சிகிட்டு வர வேண்டியதா இருக்கு...
எந்த தமிழ்ச்சிக்கும் அங்க சுயமரியாதை இல்லை...முகாம்களில் இருக்கும் தமிழ் பெண்களின் கற்பு தினமும் சூறையாடபட்டுகொண்டு இருக்கின்றது...

சும்மா இங்க இருந்துகிட்டு அவன் செஞ்சது சரியில்லை... இவன் செஞ்சது சரியில்லை என்று சொல்வதை தயவு செய்து நிறுத்துங்கள்..அவர்கள் ஒரு தமிழ்ஈழம் என்ற அரசை நடத்தியவர்கள்... அதுவும் எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் புலம் பெயர்ந்த மக்களின் நிதிஉதவியால் அதை சாத்தியபடுத்தினார்கள்...

எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இந்தியாவின் குள்ளநரித்தனத்தையும் மீறி இந்தனை வருடங்கள் ஒரு நாட்டின் இராணுவத்தை எதிர்த்து தன்னை நம்பி வந்த மக்களை சில வருடங்களாவது சுதந்திர காற்றை சுவாசிக்க வைத்தவர்கள்.... அவர்களை குற்றம் சொல்வதை தயவு செய்து நிறுத்திவிடுங்கள்...

எல்லோர் மீதும் தவறை வைத்துக்கொண்டு பிராபாகரன் மட்டுமே தப்பு செய்தவர் போல சித்தரிப்பது கேடு கெட்ட மடத்தனம்....டேய் அவன்தான் உங்களுக்கு பிரச்சனை... அவனைதான் பொட்டுட்டிங்களே... இந்த ஒரு வருஷத்துல என்ன மயிரை புடுங்கினிங்க???வேடிக்கை பார்த்தை தவிர????


எதிரிகளின் நயவஞ்சக சதியினாலும்...எட்டப்பன்களின் காட்டிகொடுத்தலினாலும்... அதீத நம்பிக்கை துரோகத்தினாலும்,சர்வதேச சமுகத்தின் எந்த உதவியும் இல்லாத நிலையில், அதிக கல்வி அறிவே இல்லாத எம் தலைவனுக்கு , தன்னம்பிக்கையுடன் தன் படை பலத்தால், உலகின் வராலாற்றின் பக்கங்களில் முப்படை வைத்து இருந்த போராளி இயக்கம் என்று எழுத வைத்து ...கட்டுக்கோபப்பான இயக்கம் என்று பேர் எடுத்த போதிலும்.. யுதர்களை போன்ற ஒற்றுமை தமி்ழர்களிடத்தில் இல்லாத காரணத்தினால்,4ம்கட்ட போரில் பெருத்த பின்னடைவை சந்தித்து இறந்து போன எம் இன மக்களுக்கும்,எம் மக்கள் உயிரோடு இருந்தவரை அவர்களுக்கு துணை நின்ற பேராளிகளுக்கும் இந்த பதிவி்ன் மூலம் என் கண்ணீர் அஞ்சலிகள்....


உன்னிடம் மண்டி இட்டு உயிர்பிச்சை கேட்டு வாழ்வதை விட இறப்பதே மேல் என்று இறந்து போன எம் தொப்புள் கொடி உறவுகள் செய்த தியாகத்திற்க்கு என்றாவது பலன் வந்தே சேரும்.....

நம்பிக்கையுடன்...
ஜாக்கிசேகர்...

57 comments:

 1. நிச்சயமாய் பலன் வந்தே சேரும் ...

  ReplyDelete
 2. தலைப்பு நன்றாக இருக்கிறது. சிலவிடயங்களைச்சொல்லியாக வேண்டும், எமது தலைவர், சீதனக்கொடுமை, சாதிப்பிரிவு, பெணடிமைத்தை தமிழீழ மக்களிடையே இல்லாது ஒழித்தவர். உலகமக்களிடையே தமிழரின் பக்கம் திரும்பிபார்த்தவர்.ஆனால் வழமைபோல இந்தியாவின் அரசியல்வாதிகள் நம்ப வைத்து தமிழரின் கழுத்தறுதவர்களை என்ன சொல்வது

  ReplyDelete
 3. Well said friend,

  These (H)indian bastards in government are the culprits... India will not become super power...... India will disintegrate soon..... wait and see..

  Regards
  An Indian Tamilan

  ReplyDelete
 4. வார்த்தைக‌ள் இல்லை எழுதுவ‌த‌ற்கு.
  க‌ட‌வுள்!! இருக்கின்றாரா என்ற கோப‌ம் தான் வ‌ருகிற‌து.
  ம‌னித‌னாய், த‌மிழ‌னாய், கையாலாக‌த‌வ‌னாய் இருப்ப‌த‌ற்கு ம‌ன‌ம் வேத‌னை கொள்(ல்)கிற‌து.
  "வ‌லிய‌து வாழும்" என்ற தத்துவ‌த்தை விட‌ "ஒவ்வொரு செய‌லுக்கும் அதற்கு இனைணயான எதிர் விசை உண்டு" என்ற த‌த்துவ‌த்தில் அதிக‌ ந‌ம்பிக்கை கொண்டு காத்திருக்கிறேன் க‌ண்ணீரோடு!! நிச்ச‌ய‌ம் ம‌னித‌ம் வெற்றி பெறும்.

  அருள் நித்தியாந்த‌ம். செ

  ReplyDelete
 5. ஒரு 1அல்லது2 மணி நேரம் கரண்ட்
  இல்லையென்றால் துடிக்கும் நாம் எத்தனையோ ஆண்டுகள் மின்சாரம் இல்லாமல் எப்படி வாழ்ந்திருப்பார்கள்.
  30ஆண்டுகள் தலைவர் ஆயுதம் ஏந்தி
  போராடியே இந்த கதி என்றால்?
  இப்போது தலைவரை பற்றி அப்படி செய்திருக்கலாம் இப்படி செய்திருக்கலாம்
  என்று சொல்பவர்கள் இவ்வளவு நாள்
  என்னத்தை புடிங்கிக்கொண்டிருந்தார்கள்?
  தலைவா சீக்கிரம் வா.

  ReplyDelete
 6. //இந்தியாவை உதாராணமாக காட்டியது...200 வருடங்கள் ஆங்கிலேயனின் பின்புறத்தை கழுவி்விட்டு கொண்டு ஒரு கட்டத்தில் நாற்றம் அடிக்க வெறுத்து போய் போராட போய் ...எல்லாத்தையும் சுரண்டிவிட்டு இதன் பிறகு எதுவும் இல்லை என்ற நிலையில் சதந்திரத்தை கொடுத்துவிட்டு போனான்..///

  சரியா சொல்லீடீங்கள் ... அவன் உண்மையாக பயந்தது நடுங்கியது மாவீரன் சுபாஷ் சந்திர போசுக்கு ..
  ==================================
  மன்னிக்கணும் நான்கு படைகள் தலைவரே
  உலகையே கலக்கிய வான் படையை மறந்து விட்டீர்களே..
  =================================
  //இந்த ஒரு வருஷத்துல என்ன மயிரை புடுங்கினிங்க???வேடிக்கை பார்த்தை தவிர????///

  இந்த கேள்விக்கு எவனும் வாயை திறக்க மாட்டான் ...

  பாரதியார் கண்ட கனவு நிறைவேறிய நாடு அது . அங்கே நாம் கதவை பூட்டி இரவில் உறங்கியதில்லை .அவசியமும் இல்லை . இரவில் கூட பெண்கள் நகைகளுடன் கூட நடமாடலாம் . ஒருத்தனும் கை கூட வைக்க முடியாது ....

  உங்கள் நியாயமான கருத்தை ,அனைவர் வாயையும் நியாயமான கேள்வியை கேட்டமைக்கு ... சண் டி வி காட்டியதா சநேல் போர் காட்டிய மனித படுகொலை வீடியோக்களை . என்ன காரணம் ? சுறா ட்ரெயிலர் போடவே நேரம் சரி போல இருக்கிறது .

  ReplyDelete
 7. arumaiyana pathivu.. ungal eluthukalluku mattum valimai irunthal intha kayavargalai suttu posukkum.. enna seiya intha nahittra tamil inathil piranthu vitomey.. ippadi than pulamba vendu..

  ReplyDelete
 8. உள்ளத்து உணர்சிகளை கொட்டி விட்டீர்கள்.
  இந்திய அரசுக்கு பிரபாகரன் தான் பிரச்னை என்றால்.
  இன்றுதான் பிரபாகரன் இல்லையே.(இலங்கை அரசின் கூற்றுப்படி ).
  இப்போதாவது ஈழ தமிழர்களுக்கு உதவுவார்கள?

  ReplyDelete
 9. //இந்த ஒரு வருஷத்துல என்ன மயிரை புடுங்கினிங்க???வேடிக்கை பார்த்தை தவிர????//

  எதிர் விமர்சனம் செய்கிறோம்!தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம்.இதுக்கு மேலே என்ன வேண்டும்?

  (அதிலும் தனக்கு தானே டீ ஆத்துற சில கேசுகளுக்கு குறை சொல்வது தவிர வேற மந்திரம் கிடையாது.)

  ReplyDelete
 10. ஜாக்கி அண்ணா,

  மனது கனத்தது.....

  முடிந்தால் இந்த வீடியோ லிங்க் கொடுக்கவும்.... தருவீர்கள் என்று நம்புகிறேன்...

  http://www.youtube.com/watch?v=r-ngKUbJsow&feature=related

  கண்ணீருடன்

  தமிழ் உதயன்

  ReplyDelete
 11. ஜாக்கி தாங்கள் தமிழன் இல்லை போல! ஏன்னா இவ்வளோ நினைவாற்றலும் ரோசமும் இருக்கிறதே!

  வாழ்க இந்திய மயிறான்மை!

  ReplyDelete
 12. அதே சமயம், தலைவரும் சர்வதேச சூழல் மாறுபாட்டுக்கமைய தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி இந்தியாவில் ஒரு தமிழ்நாடு இருப்பதுபோல இலங்கையில் ஒரு ஈழத்தை கொண்டுவந்திருக்கலாம். உயிர் இழப்புகளையும் தவிர்த்திருக்கலாம்.

  ReplyDelete
 13. ஜாக்கி வார்த்தைக்கு வார்த்தை வழி மொழிகிறேன்.நன்றி.

  ReplyDelete
 14. ஜாக்கி,

  அர்த்தமுள்ள இடுகை. வலியை முழுமையாய் உணர்ந்திருக்கிறீர்கள்.

  ஸ்ரீ....

  ReplyDelete
 15. //நெய்வேலியில் என் பூமி மாதாவை பிளந்து நிலக்கரியில் இருந்து மின்சாரம் தாயரித்து அதனை இந்தியாவின் பிற பகுதிகளுக்கு கொடுத்தால் அது இறையான்மை.... ஒகேனிக்கல்லில் இருந்து வந்த தண்ணியை கூட்டு குடிநீர் திட்டத்துக்கு பயண்படுத்தினால் அதற்க்கும் பிரச்சனை...இதற்க்கே பிரச்சனை என்றால் காவிரிநடுவர் நீதி மனறம் கொடுத்த உத்தரவை இதுவரை செயல்படுத்தவில்லை....இதை கேட்க நாதியில்லை.......இதுதான் இந்திய இறையாண்மை//


  கர்நாடக சட்ட மன்றத்தில், சதர்ன் பவர் கிரிட்க்கு கர்நாடகாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தரமாட்டோம் என்று சட்டம் இயற்றும், ஆனால், நாம் எல்லோருக்கும் கொடுக்கவேண்டும்....இதுதான் இறையாண்மை....

  ReplyDelete
 16. நெஞ்சு பொறுக்காமால் உழன்று கொண்டிருந்த வேளையில் உங்கள் பதிவு ஏதோ ஒரு வகையில் ஆறுதலாக இருக்கிறது ஜாக்கி.....நன்றி

  ReplyDelete
 17. wELL SAID

  India should answer for the below question
  ///எல்லோர் மீதும் தவறை வைத்துக்கொண்டு பிராபாகரன் மட்டுமே தப்பு செய்தவர் போல சித்தரிப்பது கேடு கெட்ட மடத்தனம்....டேய் அவன்தான் உங்களுக்கு பிரச்சனை... அவனைதான் பொட்டுட்டிங்களே... இந்த ஒரு வருஷத்துல என்ன மயிரை புடுங்கினிங்க???வேடிக்கை பார்த்தை தவிர????///

  ReplyDelete
 18. எத்தனையோ தடவை இங்கு வந்து படித்து பின்னூட்டம் கூட இடாமல் சென்றிருக்கிறேன்...இன்று வோட்டு போட்டு விட்டேன்...

  தமிழனுக்கு இங்கே தனியே எதிரி என்று யாரும் இல்லை...தமிழனே தமிழனுக்கு எதிரி...தமிழன் என்பதில் வெக்கப்படுங்கள்...

  அதென்னய்யா ஈழத்தமிழ்...அவங்களும் நம்ம சொந்த பந்தம் தானே...எதுக்கு எக்ஸ்ட்ரா ஒரு ஈழம்...கண்ணு முன்னாடி அக்கா தங்கச்சிய கற்பழிச்சு கொல்ற கொடுமைய பாக்குற இந்த வெக்கங்கெட்ட கூட்டத்துல நாமும் ஒருவர்...ஊருக்குள்ள அவனப் பாத்தா வெட்டி எரிஞ்சிருவேன்னு சொன்னவன் எல்லாம் அவன் வச்ச விருந்துக்கு போய் தின்னுட்டு, கூட நின்னு பல்லைக்காட்டி போஸ் குடுத்து போட்டோ எடுத்துட்டு வர்றான்...இங்க இருக்கிறவனுக்கு அவன் குடும்பச் சண்டைய தீர்த்து வைக்க, சினிமா பார்க்கவே நேரம் இல்ல...

  யார நம்ப....அவரைத் தவிர...அவர் வந்தா சந்தோசம்...

  ReplyDelete
 19. உங்கள் உள்ளத்து உணர்ச்சிகளை இங்கே பதிந்தமைக்கு என் நன்றிகள்..

  ReplyDelete
 20. அண்ணா
  உங்களின் அனைத்து பதிவுகளையும் படிதிருக்குறன் அனால் இது தான் முதல் பின்னூட்டம்
  உங்களின் எழுத்துகளுக்கு நன்றி
  ஆனால் எங்களின் கூடஇருந்தோறலையே நாம் தோற்கடிக்கப்பட்டம் அதுதான் துன்பம்
  முல்லைதீவில் பிறந்து தற்போது இலங்கையின் பல்கலைகலகம் ஒன்றில் பொறியல் படிக்கும் மாணவன்
  வான்நிலவன்

  ReplyDelete
 21. ஜாக்கி அண்ணா
  நீங்க வெளிய சொல்லிட்டீங்க, நாங்க சொல்லாம தவிச்சிட்டு இருக்கோம். ஈழத்தில் எதிரில் நின்ற எதிரியை விட, சோனியாவுக்கு காவடி எடுக்கும் துரோகிகளைத்தான் மன்னிக்கவே முடியவில்லை. இவர்கள் குடித்தது தமிழப்பால்தானா? இத்தாலியில் இருந்து வந்தவர்களால் நாட்டை ஆள முடிகிறது. நம்முடைய தொப்புள்கொடி உறவுகளை நோக்கி நம்மால் உதவிக்காக மட்டுமல்ல கண்ணீர் துடைக்கக் கூட கரம் நீட்ட முடியவில்லை. உயிராயுதம் தாங்கிய முத்துக்குமாரனின் தியாகத்தையும் வீணடித்துவிட்டு அவனது புகைப்படத்தைக் கூட பார்க்க முடியாமல் தலை குனிந்து நிற்கிறோம். பார்க்கலாம். விடியாமலா போய்விடும்.

  ReplyDelete
 22. This comment has been removed by the author.

  ReplyDelete
 23. ஒரு நண்பரின்

  கடிதம்...

  உங்கள் கருத்துகள் அனைத்துமே மறுக்கமுடியாத ,மன்னிக்கமுடியாத உண்மை ,
  கை இருந்தும் செயல்படுத்த முடியாமலும் கண்ணிருந்தும் கண்டும் காணமல் நாம் இருந்தோம் ! நம்முடைய இனம் நம் கண்முன்னே அழிவதை தடுத்து நிறுத்த முடியாத நிலையில் நாம் இருந்தோம் என்பதுதான் உண்மை ! தமிழ்நாட்டில் எந்த கட்சி வந்தாலும் தமிழன் வாழ்க்கை முன்னேரபோவது இல்லை ,
  அது போல சென்ட்ரலில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை தமிழன் நிலைமை மாரபோவதும் இல்லை
  ஆனால் ஒன்று மட்டும் உறுதி நமது தேசிய தலைவரின் தனி ஈழம் மலர்ந்தே தீரும்
  தொடரட்டும் உங்கள் எழுத்து சேவை .........வணக்கம் ஜக்கி சேகர்
  எனது பெயர்
  கு டென்னீஸ்
  பஹ்ரைன்
  சொந்த ஊர் : அழகப்பபுரம்
  மாவாட்டம் : கன்னியாகுமரி

  ReplyDelete
 24. I used to read your posts regularly and i thought why such a good writer not writing about our suffering brothers , Excellent article , cluster bombs ,phosphorous bombs all are thrown over innocent people.Coward medias in tamil nadu not even open their mouth. INTHA NAADUM NATTU MAKKALUM NASAMAI POGATTUM. Feeling ashamed to tell as a Tamil nadu tamilian.

  ReplyDelete
 25. தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா

  ஒரு வருடத்துல என்ன பண்ணிடோம்னு கேக்குறீங்கலே, என்ன மறந்துட்டீங்களா
  2,3 இடைத்தேர்தல ஜெயிச்சுட்டோம், மகன் மகளுக்கு பதவி வாங்கிட்டோம்
  10,15 "தற்புகழ்ச்சி" விழாக்கள நடத்திட்டோம்
  செம்மொழி தமிழ் மாநாடு வேற நடத்த போறோம்
  ஒவ்வொரு ஊருல இருக்கிற வீட்டுலயும் போய் ஓய்வெடுத்தோம்
  தினமும் மாறி மாறி அறிக்கை விட்டுகிட்ருக்கோம்
  இதுக்கு மேலயும் நாங்க என்ன தான் பண்ண முடியும்

  ஆமா உங்க கட்டுரையில அப்பப்ப தமிழன், ஈழம், பிரபாகரன் அப்படி இப்படினு
  என்னென்னமோ எங்களுக்கு தெரியாதத பத்தி பேசுறீங்க
  எங்களுக்கு தெரிஞ்ச மானாடா மயிலாட அப்புறம் அவுத்து போட்டு ஆட
  அஜக்கு 6 அல்லக்கை யாரு, அப்புறம் எந்த சாமியார்பய எவ கூட படுத்துருந்தான்
  இந்த மாதிரி எழுதுனா எங்களுக்கு புரியும்.

  இந்த மாதிரி எல்லாம் எழுதுகிட்ருந்தீங்க அப்புறம் இந்திய இறையாண்மைக்கு எதிரா
  எழுதுனீங்கன்னு உள்ள அள்ளிப்போற்றுவோம்

  அன்னை சோனியா வாழ்க அவங்களை தவிர மிச்ச எல்லாரும் சாக
  வந்தே மாதரம் ....... வராட்டி மூத்திரம் .........

  ReplyDelete
 26. அண்ணாச்சியின் உள்ளக்குமுறல்களுக்கு நன்றிகள்.
  குசும்பனின் கருத்துக்கு சல்யூட்
  தமிழனுக்கு எதிரி தமிழன் தான் இல்லையென்றால் மூன்று மைனஸ் ஓட்டு விழுந்திருக்காது.

  ReplyDelete
 27. I do feel sad for all these lives lost in this war, we all stood silent watching this issue for 3 decades, so there is no point blaming one day in last year for the result, we should have solved this when we had chance, for that both parties had to be blamed.

  //புலிகள் செய்த அரசியல் பின்னடைவுகளை,சில தவறுகளையும் பெரிது படுத்தும் யோக்கியவான்கள்.. அவர்கள் செய்த நல்லவைகளை வெளியே சொல்வதே இல்லை...புலிகள் யோக்கியவன்கள் என்று ஒரு போதும் நான் சொல்ல போவதில்லை...எல்லோரும் அய்யோக்கியதனம் செய்யும் போது அவர்களை அதை செய்ய வைத்தர்கள்... அவ்வளவே....

  This is the real problem, if only they acted smart and took advantage of Norway or other countries intervention, or acted responsible (no country will come in aid for people doing suicide attacks). this struggle wouldn't have went in vain.

  //smss said.. India will disintegrate soon..... wait and see

  :) this is a joke, then why you call yourself "An Indian Tamilen", in case you didn't notice all the state in India have one problem or another against other states. that doesn't mean we will disintegrate, do you know how many items you use are coming from other state?
  you are talking as if tamilnadhu is 90% in India and if you separate from them India will suffer, get real buddy :) if that happens all states will build a wall around it ask for visa to enter.

  Democracy is not perfect, but you don't have better alternative for it. Yes I agree Indian government didn't help much but I doubt they could have done anything better for that matter.

  ReplyDelete
 28. புளியம் பழம் தின்ன மாதிரி இருக்குன்னு சொன்னவனுக்கு ஒரு காப்பி அனுப்புங்க.

  ReplyDelete
 29. நீங்கள் சொல்வது அனைத்திலும் உண்மையும், உங்கள் கோபத்தில் நியாயமும் இருக்கிறது. தலைவன் மீண்டும் வருவான் என்ற நம்பிக்கை இருக்கிறது ஜாக்கி ஸார். நம்புவோம்...

  ReplyDelete
 30. James Aruputha Raj
  I echoed the same views to Jackie Sekar on Gtalk this morning. We all had many chances to resolve the issue but we were all witnessing the bloody fight for 3 decades and we were still witnessing the demise of LTTE and Tamil Ealam. LTTE blew away all the opportunities it had for a meaningful peace settlement and paid the price. Not having supported Ranil was the last straw on camel's back and that paved the way for their end. Had they formed a grand alliance under Ranil, they may have survived if not got some settlement.
  By saying this I don't support the atrocities of Rajapakshe and back biting activities of India. Until last year, I was proudly saying that MY INDIA HAS NEVER AND WILL NEVER INDULGE IN LAND CAPTURING ACTS. But with their camouflaged military support to Srilankan Government, the Govt of India has shown the ugly side of the face.

  I differ with you on 1 point, With lot of pains, I foresee India disintegrating in the next 50 years. Even today,Given a chance all the northeastern states will get out of the India map, Kashmir is always ready. Unrest in Maharashtra, TN, Andhra all signs of Disintegration. I too hope and prey that India stays united under a great leadership but I don't see neither.

  regards
  Boston Sriram

  ReplyDelete
 31. பறுவாயில்லை!! தமிழ்நாட்டில இப்பவும் எங்களுக்காக சிந்திக்கிற ஒருசிலர் இருப்பதைஇட்டு மகிழ்சி!!! இந்திய அரசை குறைகூறுவதைவிட தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அனைவரும் பெரும் துரோகிகள்!! நெடுமாறன் முதல் கருணாநிதி,திருமாவளவன், வைகோ வரை!! அவர்களை முதலில் தூக்கிவீசுங்கள்!!!

  ReplyDelete
 32. நீங்கள் வெளியிட்ட 3வது படம் புலிகளின் கொடுமையில் இருந்து மக்கள் தப்பி இலங்கை அரசின் கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் படம். இலங்கை இராணுவ இணையதளத்தில் வெளிவந்தது.

  ReplyDelete
 33. Jackie, you say like mainly north Indians deceived us, but no body talked or condemned the Tamil Brahim groups like Cho Ramasami, Hindu Ram, Subbramania Swamy even Jayalalitha canvassed for sri lankan government even from inside Tamilnadu. They are the most happiest people than north Indian. first try to remove the weeds inside then we can blame others

  ReplyDelete
 34. புலிகளை சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் இணையத்தள 23 ம் புலிகேசிகள் மத்தியில் உங்கள் பதிவு மனதை தொட்டது. நன்றி.

  ReplyDelete
 35. nichayam
  thamizh eelam
  malarum
  nanri anna

  ReplyDelete
 36. நன்றிகள் உங்களின் தமிழ் உணர்வுக்கு.

  ReplyDelete
 37. படிக்கும்போது கண்கள் குலமாகிகொண்டே இருக்கிறது அய்யா
  இந்த தீ பொறி எபோதும் சூடு சொரணை உள்ள தமிழர்களின்
  மனதில் கனன்று கொண்டே இருக்க வேண்டும் அய்யா

  ReplyDelete
 38. உங்களுக்கு ஒரு வீர வணக்கம்.

  ReplyDelete
 39. ஒரு புது நண்பர் மனோ பக்ரைனில் இருந்து...
  அவர் எழுதிய கடிதம் கீழே...  ஹாய் ஜாக்கி சேகர், நல்லா இருக்கியளா?

  நான் இன்னக்கிதான் உங்க பதிவ படிச்சேன். நாள்தோறும் தமிலீஷ் பதுவுகளை படித்தாலும், உங்க பதிவை கடந்து போய் விடுவேன். இன்னைக்கி தலைப்பே வித்தியாசமா இருக்கேன்னு உள்ளே போனேன்.
  சும்மா சொல்லப்புடாது, குயவன் பொண்டாட்டி மேல உள்ள கோபத்தில், களிமண்ணை மிதிப்பது போல சும்மா சமுட்டி எடுத்திட்டீங்க.
  இந்திய இறையான்மைய இத விட விமர்சிக்க வேற வார்த்தைகள் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.
  கமெண்ட்ஸ் எழுதிய வாசகர் பிரகாஷின், "வந்தே மாதரம் வராட்டா மூத்திரம்" கமண்ட்ஸ் அடுத்து,
  இந்திய இறையான்மைய "மயிரான்மைன்னு சொன்ன வாசகரும், எப்படி வேதனையை சுமந்து கொண்டிருக்கிறார்கள்னு புரியுதுங்க....
  சூப்பரா இருந்திச்சி.
  அன்புடன்,
  மனோ,
  பஹ்ரைன்.

  ReplyDelete
 40. எத்தனையோ தடவை இங்கு வந்து படித்து பின்னூட்டம் கூட இடாமல் சென்றிருக்கிறேன்...இன்று பின்னூட்டம் போட்டு விட்டேன்..

  ReplyDelete
 41. இப்பொழுது நம்புகிறோம் , தமிழ் நாட்டிலும் மானமுள்ள தமிழர்கள் இருக்கிறார்கள்

  ReplyDelete
 42. உங்களின் பதிவு உண்மையை பிரதிபலித்தது... இதோ புதியதோர் போர்குற்ற ஆவணம்....
  தயவு செய்து இதையும் ஒரு பதிவாக வெளியிடவும்....
  http://www.tamilwin.com/view.php?2aa889jP32eeDDpii00eccoojH22cddZZLuuccd322IPP44b44VVQ66bb42GQG11dd0eeFF2gg00

  இது என்னுடைய முதல் கருத்து....
  கணக்கும் இதயத்துடன் வஞ்சக கொழும்பில் இருந்து ஒரு மறத்தமிழன்...

  ReplyDelete
 43. //200 வருடங்கள் ஆங்கிலேயனின் பின்புறத்தை கழுவி்விட்டு கொண்டு ஒரு கட்டத்தில் நாற்றம் அடிக்க வெறுத்து போய் போராட போய் ...எல்லாத்தையும் சுரண்டிவிட்டு இதன் பிறகு எதுவும் இல்லை என்ற நிலையில் சதந்திரத்தை கொடுத்துவிட்டு போனான்...//

  2ம் உலகப் போர் வரலாற்றினை படித்தீர்கள் என்றால் பிரிட்டிஸார் வழங்கிய சுதந்திரத்தை பற்றி வேறு விதமாக எழுதியிருப்பீர்கள் !!! அங்க அவன் ஊடே பத்தி எரிஞ்சுகிட்டு இருந்துச்சு, இதுல மத்தவங்கள பார்க்க/ புடிச்சு வைக்க நேரம் இல்லைங்கறதுதான் உண்மை.

  மற்றபடி, மழை காற்றுக்கு கூட புலிகளை குற்றம் சொல்லிய மாற்று அரசியல் அறிவுச் சீவிகள் கடந்த ஒரு ஆண்டாக இணையத்தில் குவித்துள்ள குப்பைகள் தான் ஏராளம். செயலில் தான் ஒன்றையும் காணோம்.

  ReplyDelete
 44. உம் கோபம் நியாயமானது. தலைவணங்குகிறேன். விரைவில் தமிழீழம் மலரம் என்ற நம்பிக்கை இன்னும் அகலவில்லை.

  ReplyDelete
 45. உங்களின் எழுத்துக்களைத் தொடர்ந்து படித்து வருகிறேன். குறிப்பாக நீங்கள் எழுதும் பிறநாட்டுத்திரைப்படங்கள், மற்றும் நம் நாட்டுப்படங்கள் குறித்த எழுத்துக்களை விரும்பிப் படிப்பேன்.எந்த எழுத்தாயிருந்தாலும் அதில் ஒலிக்கும் உங்களின் நேர்மைக்குரல் எனக்குப் பிடித்த ஒன்று. உணர்வுமயமான ஒரு விஷயத்தைப்பற்றி உணர்வுமயமான ஒரு கட்டுரையைத் தீட்டியிருக்கிறீர்கள்.உள்ளத்தில் உள்ள கோபம் அப்படியே எழுத்திலும் வந்து விழுந்திருப்பதனால்தான் சில வார்த்தைகள்கூட வடிகட்டப்படாமல் விழுந்திருக்கின்றன. தங்களின் கொந்தளிப்பான கட்டுரைக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 46. Thanks brother for understanding us. I am writing this with tears in my eyes. I did not agree with Prabakaran in everything but he was truthful to his cause and gave his life. We won't see a Tamil hero like him in our life time again.

  ReplyDelete
 47. ///ஜாக்கி தாங்கள் தமிழன் இல்லை போல! ஏன்னா இவ்வளோ நினைவாற்றலும் ரோசமும் இருக்கிறதே!

  வாழ்க இந்திய மயிறான்மை!////
  வாழ்க இந்திய மயிறான்மை
  வாழ்க இந்திய மயிறான்மை
  வாழ்க இந்திய மயிறான்மை
  வாழ்க இந்திய மயிறான்மை
  idhudan indiyavirku porutham

  ReplyDelete
 48. புரிந்துதான் எழுதுகிறார்களா அல்லது எதையாவது ஒப்பாரி வைக்கிறார்களா?என்று புரியவில்லை.

  மானமிக்க தமிழனத் தலைவர், தமிழனுக்கு பிறந்த வீரப்புதல்வர்கள், தவப்புதல்வி - மற்றும் கற்புக்கரசி
  மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க, பாமக, தமிழன் டாக்டர் ஐயா,
  MP பதவி கொண்ட ஒரு தமிழ் சிறுத்தை

  இவர்களெல்லாம் தமிழர்களா ?? இல்லயா ??? இவர்களும் குடும்பங்களும் கும்மாளமடிக்கிறார்கள் தானே ??

  உச்ச கட்ட போரின் போது நடந்த தேர்தலில் மானமிகு (தமிழ்நாட்டு-சராசரி)தமிழன் யாருக்கு வாக்களித்து அமோக வெற்றியளித்தான் ??? சொல்லுங்கள் ......

  இதயெல்லாம் விட்டுவிடுங்கள். சோனியா, முண்டாசு, மயிராண்மை என்று ஒப்பாரி வைத்து, எவனோ வட-நாட்டான் டெல்லியில் உட்கார்ந்து கொண்டு தமிழனைக்கொன்றுவிட்டதாய் புலம்புங்கள்.

  போங்கப்பா.....இனம், மொழி என்று பேசி பேசி, இருக்கறவன் தாலியறுத்தது போதும். பிராபாகரன் என்றொருவன் வாழ்ந்தான், தன் குடும்பம் முழுதையும் தன் பாசமிக்க மக்களுக்காக போர்க்களத்தில் பலியிட்டான் . அவனொரு மாவீரன் ஆனால் அப்பாவி - என்ற கதைகளை எஞ்சியுள்ள தமிழ் குழந்தைகளுக்கு சொல்லி உறங்க வையுங்கள்.

  ReplyDelete
 49. words are came from the inner-heart. Well said...

  Please read it - http://neonlines.blogspot.com/2009/03/blog-post.html

  ReplyDelete
 50. உங்களின் கோபம் எனக்கு பிடித்திருக்கிறது. இதே கோபம் எல்லாருக்கும் வந்துவிட்டால் இந்த பிரச்சினை எப்போதோ முடிந்துவிடும்.

  "நம்மால் தான் தமிழ் ஈழம் மலரும் "

  ReplyDelete
 51. tamilar thanthai si ba athithanar kooriyathu pol tamil nadu thani nadaga anal mattum than etharku oru vidai kidaikum namey nam ranuvathai vaithu poradi avargaluku viduthalayum petru thara mudiyum 15 kodi tamilargal vazhum evvuzhagil oru tamilan matroru tamilanuku uthava mudiyathathu than veythanaiyalikirathu'tamilar yenror enamundu thaniye avarkor kunamundu' etharkana vithai tamil natil vegu kalam munbey vithaika pattu vittathu etharku neer utri valarka vendiyathu tamilargal agiya namathu anavarin kadamai

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner