( பிரபாகரன்) தாய் தமிழனின் அலட்சிய மனோபாவம் ஒரு உளவியல் பார்வை...

பொதுவாக எல்லா இனத்துக்கும் சூடு சொரனை இருக்கின்றது அது சற்றே மங்கிபோய் பெருமளவு அலட்சியத்துடன் இருக்கும் ஒரே இனம் தமிழ் இனம்தான்.அதற்க்கு காரணம் என்ன என்பதை அலசுவோம்.

தாய் தமிழகத்தில் இருந்து பிழைப்புக்காக பல்வேறு இடங்களுக்கு இடப்பெயர்வு நடத்தியது போலதான் பல்வேறு சமுகத்து மக்களும் சென்றார்கள், ஆனால் தமிழன் வித்யாசமானவன். அவன் புத்திசாலி, கடுமையான உழைப்பாளி. பல சமுகத்தினர் புத்திசாலி மற்றும் உழைப்பு இல்லை என்றாலும் ஒற்றுமையானவர்கள். அதனால் மற்ற சமுதாய மக்கள் எந்த நாட்டில் பிரச்சனை என்றாலும் அவர்களின் ஒற்றுமையால் சேதாரம் குறைவாக இருக்கின்றது. ஒற்றுமையின்மையால் தமிழனுக்கு சேதாரம் அதிகமாக இருக்கின்றது.

தாய் தமிழர்களான நாம் இலங்கையில் நம் இனம் கொத்து கொத்தாக இறந்த போது நாம் என்ன செய்தோம். உலக அளவில் சர்வதேச சமுக மக்களை நம் பக்கம் பார்க்க ஏதாவது செய்தோமா? அல்லது வட இந்திய மக்களுக்காகவாவது நமது பிரச்சனைகளை புரிய வைத்தோமா? ஏதும் இல்லை....சொரனையற்ற சமுகமாகவே தாய் தமிழக மக்கள் இப்படி இருக்க என்ன காரணம், இந்த மனோபாவம் எப்படி வந்தது?.

பிரபாகரன் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாஸ்பரஸ் கு்ண்டு போட்டு கொண்று விட்டார்கள் என்று சொல்லியும், “எவ்வளவோ பாத்துட்டோம் இதை பார்க்க மாட்டோமா?” என்பதான மனநிலையில்தான் தாய் தமிழகத்தினர் இருக்கின்றார்கள் அதற்க்கு காரணம் கீழே....

1. கடந்த 300 வருடங்களாக தமிழகத்தில் வாழும் நம் மக்கள் சுபிட்சமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார்கள், சற்றே யோசித்தால் சுதந்திர போராட்டத்தில்ஒரு சில போராட்டங்களை தவிர பெரிய உயிரிழப்புகள் வட இந்தியாவில் மட்டுமே. மொகலாய படையெடுப்பு உயிர் இழப்புகள்உட்பட.

2.தனுஷ்கோடி கடல் கோள் அழிவு மற்றும் சுனாமி அழிவை தவிர பெரிய பேரழிவுகளை தாய் தமிழன் சந்தித்தது இல்லை.

3. கொள்ளை நோய்கள் அவ்வப்போது எட்டிபார்த்தாலும் அது பெரிய அளவு இழப்புகளை தமிழகம் சந்தித்தது இல்லை.

4.பசி, பட்டினி என்று சோத்துக்காக சோமாலிய மக்கள் போல் குடும்ப்த்துடன் ஒடியது இல்லை.

5.வாடகைவீட்டில் காலி செய்வதையே அலுத்துக்கொண்டு மற்ற இடத்துக்கு குடும்பத்துடன் இடப்பெயர்வு செய்யும் போது கட்டிய துணியுடன் இலங்கை தமிழர்கள் ஆர்மிகாரர்களால் சொந்த வீட்டை விட்டு வெளியேற்றிய அனுபவங்களை தாய் தமிழன் அனுபவித்து இல்லை.

6. மற்ற தேசங்களை போன்று போரினால் ஏற்ப்பட்ட இடப்பெயர்வு அதனால் ஏற்ப்ட்ட வலிகள் திரைப்படம் மூலமே தாய் தமிழன் உணர்ந்து இருக்கிறான்.(உம்/ஜெர்மன்,ரஷ்யா போரினால் துன்புற்ற மக்கள்),8.நாஜீகளினால் யூதர்களுக்கு நடந்த கொடுமையை சத்தியம் தியேட்டர் லாபியில் இந்து பத்திரிக்கை படித்துக்கொண்டு ஸ்பீல் பெர்க்கின் ஷீன்டலர் லிஸ்ட் பார்த்தே போரினால் ஏற்படும் வலிகளை தாய் தமிழன் அறிந்து இருக்கிறான்.

9.ஒரு தீப்பெட்டி 250ரூபாய் கொடுத்து வாங்கிய அனுபவம் அவனக்கு கிடையாது.

10.சாலை விபத்துகளில் மட்டுமே தாய் தமிழன் முகம் சிதைந்த உடல்களை பார்த்து இருக்கிறான். ஆர்மிக்கரார்களால் பிடித்து செல்லப்பட்ட சகோதரன் சகோதரி முகம் சிதைந்து செத்து்ப்போன உடலை பார்த்த அனுபவம் அவனுக்கு இல்லவே இல்லை.

11.தன் கண் எதிரே ஆர்மீக்காரர்களால் தன் அக்கா தங்கையின் அடையில்லாத மார்பில் கை வைத்து பிறகு உடல் எங்கும் கைவைத்து விளையாடி கெடுத்து கற்பழிக்கும் கொடுமையை எந்த தாய் தமிழனாவது அனுபவித்து இருக்கின்றானா?

12.துப்பாக்கி முனையில் உடன் பிறந்த சகோதரியை உறவு கொண்ட அனுபவம் எந்த தாய் தமிழனுக்காகவாவது இருக்கின்றதா?

13.தமிழகத்தில் ஊரடங்கு உத்திரவை நாம் அனுபவித்தது எப்போது????

14. சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது ஷெல் அடிக்கும் சத்தம் கேட்டு , சாப்பிட்ட கையோடு பதுங்கு குழியில் போய் குடும்பத்துடன் மூச்சு முட்ட உயிர்பயத்துடன் வாழ்ந்த அனுபவம் நம் எவருக்கேனும் இருக்கின்றதா? நாம் நன்றாக சப்புக்கொட்டி சாப்பிட்டபடி மானாட மயிலாட பார்த்துக்கொண்டு இருப்போம், அல்லது ஜெயா டிவியில் கயவன் கருனாநிதி என்று அம்மா தொடுக்கும் அறிக்கை போரை பார்த்து ரசித்துக்கொண்டு இருப்போம்.

15.நம்மில் யாருக்காவது குடும்பத்துடன் காட்டில் வாழ்ந்த ஆனுபவம் இருக்கின்றதா?

16.பஸ்சில் பயணம் செய்யும் போது யாராவது பிள்ளைதாச்சி வந்தால் எழுந்து சீட் கொடுக்கும் நாம் அவள் வயிறு கிழிந்து ரத்த சகதியின் ஊடே இறந்து போன பிள்ளையை பார்த்து இருக்கின்றோமா?

17. பிள்ளைகள் வெவ்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்து, அப்பா அம்மாக்கள் போர் மேகச்சூழலில் சிக்கி தினம் தினம் இன்டெர்நெட்டில் இறந்தவர் பட்டியலில் தன் உறவு பெயர் இருக்கின்றதா? என்று திக் திக் இதயத்துடன் பார்த்து தினம் தினம் செத்து செத்து அனுபவிக்கும் கொடுமையை அனுபவித்தது உண்டா?

18 முளைத்து மூனு இலைவிடாத பிள்ளைகளின் எல் கே ஜீ சீட்டுக்கு 40,000 பணம்கட்ட இரவு முழுவதும் காத்து இருக்கும் தாய் தமிழன் போரினால் ஒரு தலைமுறையே கல்வி கற்றகாத ஒரு சூழலை நினைத்து பார்த்து இருப்பானா?

19. உங்கள் பிள்ளை அல்லது உங்கள் தகப்பன் தலையில் குண்டு காயத்துடன் இறந்த பினத்தையும் உறுப்புகள் சிதைக்கப்பட்டு கொடுரமாக கொண்று கொண்டு வந்த போட்ட உறவுகளை வாயில் அடித்து கதறி பார்த்து இருக்கின்றீர்களா?


20. மிக முக்கியமா நீங்கள் போற்றி பாதுகாத்து வந்த நூலகம் என்றாவது உங்கள் கண் எதிரில் தீக்கிரை ஆனதுன்டா???

21.நம்ம இனத்தில்தான் அதிகமான எட்டப்ப தேவிடியா பையன்கள் இருப்பார்கள்.

நான் எழுதியது ஒரு சிலதான் இன்னும் எழுதினால் வலைபக்கத்தில் இடம் போதாது. இது போன்ற எந்த பாரிய இழப்புகளையும் சந்திக்காத தாய்தமிழனிடம் ,இன உணர்வு சொரனை,விடுதலை, வேட்கை, இன்ன பிற நான்சென்ஸ் விஷயங்களை தயவு செய்து எதிர்பார்க்காதீர்கள், மிக முக்கியமாக தாய் தமிழனை நம்பாதீர்கள். மேலே நான் சொன்ன விஷயங்கள் தாய்தமிழனுக்கு நடக்க வேண்டும் என்று கங்கன்ம் கட்டிக்கொண்டு எழுதியது அல்ல. உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இரு் என்பதே. இந்த பதிவு பிரச்சனையின் வீரியம் தாய் தமிழனுக்கு புரியவில்லை என்பதே எவர் மீது தவறு என்று அலசுவது நம் நோக்கம் அல்ல...இவ்வளவு நடந்தும் ஏதும் நடக்காதது போல வாழ தமிழனால் மட்டும்தான் முடியும்.

(“எவ்வளவோ பாத்துட்டோம் இதை பார்க்க மாட்டோமா?”)

we are great.


அன்புடன்/ஜாக்கிசேகர்

61 comments:

 1. விடை சொல்ல முடியாத கேள்விகள்.. வேதனை தான் மிஞ்சுகிறது..

  ReplyDelete
 2. பதிவுக்குப் பின்னால் இருக்கும் உழைப்புக்கு ஹேட்ஸ் ஆஃப்!

  ReplyDelete
 3. மிக சூர்க் கேள்விகள் ... நல்ல பதிவுனு சொல்லி உங்க உணர்வை கேவல படுத்த விரும்பல.. உங்களோடு சேர்ந்து நானும் அழுகிறேன்..

  ReplyDelete
 4. இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண உதவிகள் மருத்துவ உதவிகள் எல்லாம் இந்தியா செய்துக் கொண்டு தான் இருக்கு. சமீபத்தில் கூட இதற்காக 100 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. தமிழர்கள் பட்டினியால் தவித்த போது இலங்கை அனுமதி இல்லாம்லே இந்திய விமாங்கள் உணவுப் பொருட்களை வழங்கியது. ராஜிவ்காந்தி தான் அதை செய்ய சொன்னார்.

  இப்போது மக்கள் கொத்துகொத்தாக் சாவதற்கு முதல் காரணம் பிரபாகரன் தான். அடுத்து தான் ராஜபக்‌ஷே. புலிகள் மீது சிங்கள ராணுவம் போர் தொடுத்த போது புலிகள் மட்டும் பின் வாங்கி இருக்கலாம். ஊரிலிருந்த மக்களை எல்லாம் எதர்கு காட்டிற்கு அழைத்து சென்றார்கள். அவர்களை மனித கேடயமாக பயன்படுத்தத் தானே. இது தானே ராஜபக்‌ஷேவிற்கு சாதகமாகிவிட்டது. புலிகள் மேல் குண்டு போடுவதாக சொல்லி அப்பாவிகளை அழித்துக் கொண்டிருக்கிறான். 68 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவிச்சது இந்தியா முயற்சியால தான். அப்போ ஏன் மக்களை பாதுகாப்புப் பகுதிக்கு செல்ல பிரபாகரன் அனுமதிக்கலை? தப்பிவந்த சிலருடன் ஒரு தற்கொலைப்படை பெண்ணையும் அனுப்பி சோதனை நடந்த இடத்தில் வெடிக்கசெய்து தமிழர்களையும் சேர்த்துக் கொன்றது எதனால்? தப்பி செல்ல முயற்சிக்கும் தமிழர்களை பயமுறுத்தத் தானே.

  தமிழர்கள் படும் துன்பங்களுக்கு பிரபாகரன் தான் முதல் காரணம். இந்தியாவை குறை சொல்ல யாருக்கும் தகுதி இல்லை.

  உங்களை மாதிரி இணையத்தில் தகவல் அறியும் மேதாவிகள் கொஞ்சம் உண்மையும் அறிந்துக் கொண்டு கேள்வி கேட்டால் நல்லது.

  ReplyDelete
 5. //நம்ம இனத்தில்தான் அதிகமான எட்டப்ப தேவிடியா பையன்கள் இருப்பார்கள்.//

  நமக்கு என்னாத்துக்கு எல்லாம் மெலஉள்ளவன் பாத்துக்குவான்.... இந்த மாதிரி இழவு பழமொழிய சொல்லிசொல்லியே சொரனைகெட்டுப்போய் கிடக்கின்றோம்... நாளைக்கு நம்பள கார்நாடகா காரன், மலையாத்துக்காரன் அந்திராக்காரன் எல்லாரும் சேர்ந்து உதைக்கும் போதுதான் தெரியும்...

  ReplyDelete
 6. நன்றி கார்த்திகை பாண்டியன் என் வேதனையின் வெளிப்பாடுதான் இந்த பதிவு

  ReplyDelete
 7. நன்றி லக்கி தாங்கள் பாராட்டுக்கு,இன்னமும் நம் சமூகம் புரியாமல் இருப்பதுதான் கொடுமை

  ReplyDelete
 8. மிக சூர்க் கேள்விகள் ... நல்ல பதிவுனு சொல்லி உங்க உணர்வை கேவல படுத்த விரும்பல.. உங்களோடு சேர்ந்து நானும் அழுகிறேன்..//

  நன்றி சுரேஷ் தங்கள்உணர்வுக்கு

  ReplyDelete
 9. பாக் பதிவின் நோக்கம் யார் மீது தவறு என்பதல்ல,நம்மவர்கள் மண ஓட்டம் ஏன் எப்படி என்பதே.
  நான் மேதாவி அல்ல. நான் ஒரு அன்னாடங்காச்சி.

  நன்றி தங்கள் கருத்துக்கு

  ReplyDelete
 10. கேள்விகள் நியாயமானவை..

  யோசித்துப் பார்த்தால் நீங்கள் சொல்லியிருப்பதால்தான் தமிழகத்தில் மக்களிடையே ஆதரவில்லாமல் இருக்கிறது..

  பட்டால்தான் புத்தி வரும்.. படும்போதுதான் அடுத்தவனின் வலியை உணர முடியும் என்றால் தவறு நம் மீதுதான் உள்ளது..

  அருமையான பதிவு ஜாக்கி..!

  ReplyDelete
 11. ஜாக்கியா இது..?? யப்பா..??

  நமீதா செருப்பால அடித்தது போல இருக்கு... எனக்கும் சேர்த்து தான்.

  தொடரட்டும் கேள்விகள்.. விடை தெரியாதவரை..

  உ.தமிழனை வழி மொழிகிறேன்.

  ReplyDelete
 12. செவிட்ட அடிச்ச மாதிரி கேட்டண்ணே.
  பதில் சொல்ல முடியல..
  படிக்கும்போதே தொண்டை அடைக்குது!

  கள்ள சிங்கள நரிகளை வீழ்த்த..
  புலிகள் புத்துயிர் பெற்று திரும்பி வர..
  இறைவன் என்று ஒருவன் இருந்தால் பிரார்த்திப்போம்.
  -இப்படிக்கு,
  சொரனை இல்லாத தமிழன்.

  ReplyDelete
 13. ஹ்ம்ம்..ஆதங்கம், ஒரு வெறுமை உணர்ச்சி..! :(

  ReplyDelete
 14. பேர் தெரியாத bak,

  சாக்கி சார் சொல்வது தமிழனைப்பார்த்து!இந்தியனை பார்த்து அல்ல! ஒரு வேளை நீங்கள் தமிழன் இல்லை என்று நினைக்கிறேன். இருந்திருந்தால் சற்று உரைத்திருக்கும். இல்லையெனில் அடுத்த இனத்தையே நக்கி பிழைக்கும் தமிழனாக இருக்க கூடும். அதனால் தான் 2000 கோடி வட்டியில்லாமல் கொட்டி கொடுத்து தமிழனை கொல்ல ஆயுதம் வாங்க சொல்லிவிட்டு 100 கோடி கொடுத்து கருமாதிப்பண்ணச் சொன்னது சொன்னது உங்களுக்கு பெரிதாக தெரிகிறது.அடடா கண்ணிருந்தும் கபோதியாய அறிவிருந்தும் மூட்டாளாய் இன்னும் எத்தனை பேர் இருக்கிறீர்கள்.
  போர்தான் முடிந்துவிட்டதே பார்க்கத்தானே போகிறோம் இந்தியா என்னத்தை புடுங்கப்போகிறதென்று!

  ReplyDelete
 15. இதைவிடக் கொடுமையான கேள்விகளையெல்லாம் தமிழினம் நிறையமுறை கேட்டு, இந்தக்காதில் வாங்கி அந்தக் காதின்வழி விட்டுவிட்டது. இப்போது நீங்களூம் கேட்டிருக்கிறீர்கள். சூடு சொரணை வந்தால் மகிழ்ச்சி

  ReplyDelete
 16. எந்த கேள்விக்கும் பதில் இல்லை ஜாக்கி..........வருத்தத்துடன்

  ReplyDelete
 17. I cant read compeletely .Yes Iam also a useless came from Kolaingarin Tamilnadu.
  with Tear
  Talkless

  ReplyDelete
 18. சாட்டையடி கேள்விகள். பதிலகள் பார்ட்டிக் கொண்டாடும் டெல்லி மக்கள் சொல்லுவாங்க:x

  ReplyDelete
 19. Becoming more and more Selfish, thaanuku-nu vara varaikum kural kudukaama irundha.. appo kural kuduka yaarumey iruka poradhila..

  ReplyDelete
 20. அருமையான நெஞ்சை உருக்கும் பதில் சொல்ல முடியாத கேள்விகள்.. லக்கி சொன்னது போல் உங்கள் உழைப்பு அற்புதம்

  ReplyDelete
 21. எப்போதுமே பதில் கிடைக்காத கேள்விகள் :((((

  ReplyDelete
 22. ஆயிரம் பேருக்கு முன்னால அம்மணமா நிக்க வச்சு செருப்ப கலட்டி அடிச்சாலும் இந்த மாதிரி வலிக்காது .....

  ReplyDelete
 23. இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்

  நித்யன்

  ReplyDelete
 24. மிகச் சரியான நேரத்தில், மிக மிக நியாயமான கேள்விகளை முன்வைத்துள்ளீர்கள் ஜாக்கி. இதைப் படிக்கும்போது, 'அடடா... நாம இவ்வளவு இழிபிறவிகளா மாறிட்டோமே!' என்ற யோசனை யாருக்கெல்லாம் வரவில்லையோ... அவன் நிச்சயம் தமிழனாக இருக்க மாட்டான்.

  நன்றி

  ஷங்கர்

  ReplyDelete
 25. யோசித்துப் பார்த்தால் நீங்கள் சொல்லியிருப்பதால்தான் தமிழகத்தில் மக்களிடையே ஆதரவில்லாமல் இருக்கிறது..

  பட்டால்தான் புத்தி வரும்.. படும்போதுதான் அடுத்தவனின் வலியை உணர முடியும் என்றால் தவறு நம் மீதுதான் உள்ளது..-//

  நன்றி உண்மை தமிழன் தங்கள் உணர்ந்து கொண்டதற்க்கு

  ReplyDelete
 26. நன்றி ,சென்ஷீ வினோத்,தீப்பேட்டி உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகின்றத நன்றி

  ReplyDelete
 27. ஜாக்கியா இது..?? யப்பா..??

  நமீதா செருப்பால அடித்தது போல இருக்கு... எனக்கும் சேர்த்து தான்.

  தொடரட்டும் கேள்விகள்.. விடை தெரியாதவரை..

  உ.தமிழனை வழி மொழிகிறேன்.//

  நன்றி வண்ணத்து பூச்சி

  ReplyDelete
 28. செவிட்ட அடிச்ச மாதிரி கேட்டண்ணே.
  பதில் சொல்ல முடியல..
  படிக்கும்போதே தொண்டை அடைக்குது!

  கள்ள சிங்கள நரிகளை வீழ்த்த..
  புலிகள் புத்துயிர் பெற்று திரும்பி வர..
  இறைவன் என்று ஒருவன் இருந்தால் பிரார்த்திப்போம்.
  -இப்படிக்கு,
  சொரனை இல்லாத தமிழன்.//

  சொரனை இருக்கு ஆனா, அது புரிஞ்சிக்கற அளவுக்கான வேதனையை நாம அனுபவிச்சதில்லை

  ReplyDelete
 29. நன்றி சந்தன முல்லை, திகழ்மிளிர்

  ReplyDelete
 30. சாக்கி சார் சொல்வது தமிழனைப்பார்த்து!இந்தியனை பார்த்து அல்ல! ஒரு வேளை நீங்கள் தமிழன் இல்லை என்று நினைக்கிறேன்.//
  நன்றி தமிழ்நாடன் உங்கள் ஆதரவிற்க்கு

  ReplyDelete
 31. இதைவிடக் கொடுமையான கேள்விகளையெல்லாம் தமிழினம் நிறையமுறை கேட்டு, இந்தக்காதில் வாங்கி அந்தக் காதின்வழி விட்டுவிட்டது. இப்போது நீங்களூம் கேட்டிருக்கிறீர்கள். சூடு சொரணை வந்தால் மகிழ்ச்சி//

  நன்றி உழவன் தங்கள் கருத்துரைக்கு

  ReplyDelete
 32. எந்த கேள்விக்கும் பதில் இல்லை ஜாக்கி..........வருத்தத்துடன்//

  நன்றி அத்திரி , மங்களுர் சிவா

  ReplyDelete
 33. I cant read compeletely .Yes Iam also a useless came from Kolaingarin Tamilnadu.
  with Tear
  Talkless//

  நன்றி சோழன்

  ReplyDelete
 34. சாட்டையடி கேள்விகள். பதிலகள் பார்ட்டிக் கொண்டாடும் டெல்லி மக்கள் சொல்லுவாங்க:x//

  நன்றி வித்யா அவர்கள் சொல்லி இருந்தால் இந்த பிரச்சனை எப்போதோ மடிந்து இருக்கும்

  ReplyDelete
 35. Becoming more and more Selfish, thaanuku-nu vara varaikum kural kudukaama irundha.. appo kural kuduka yaarumey iruka poradhila..//

  நீங்கள் சொல்வது புரிகின்றது அப்போதுதான் பிரபாகரன் போன்றவர்கள் அருமை தெரியும்

  ReplyDelete
 36. அருமையான நெஞ்சை உருக்கும் பதில் சொல்ல முடியாத கேள்விகள்.. லக்கி சொன்னது போல் உங்கள் உழைப்பு அற்புதம்//

  நன்றி கேபிள் சங்கர்

  ReplyDelete
 37. ஆயிரம் பேருக்கு முன்னால அம்மணமா நிக்க வச்சு செருப்ப கலட்டி அடிச்சாலும் இந்த மாதிரி வலிக்காது //நன்றி கேன்

  ReplyDelete
 38. எப்போதுமே பதில் கிடைக்காத கேள்விகள் :((((//
  நன்றி நசரேயன்

  ReplyDelete
 39. இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்

  நித்யன்//
  நன்றி நித்யா உங்கள் கோபம் புரிகின்றது

  ReplyDelete
 40. மிகச் சரியான நேரத்தில், மிக மிக நியாயமான கேள்விகளை முன்வைத்துள்ளீர்கள் ஜாக்கி. இதைப் படிக்கும்போது, 'அடடா... நாம இவ்வளவு இழிபிறவிகளா மாறிட்டோமே!' என்ற யோசனை யாருக்கெல்லாம் வரவில்லையோ... அவன் நிச்சயம் தமிழனாக இருக்க மாட்டான்.
  நன்றி ஷங்கர் என் உணர்வை புரிந்து கொண்டமைக்கு

  ReplyDelete
 41. //நம்ம இனத்தில்தான் அதிகமான எட்டப்ப தேவிடியா பையன்கள் இருப்பார்கள்.//

  வழிமொழிகிறேன்..

  ReplyDelete
 42. //6. மற்ற தேசங்களை போன்று போரினால் ஏற்ப்பட்ட இடப்பெயர்வு அதனால் ஏற்ப்ட்ட வலிகள் திரைப்படம் மூலமே தாய் தமிழன் உணர்ந்து இருக்கிறான்.(உம்/ஜெர்மன்,ரஷ்யா போரினால் துன்புற்ற மக்கள்)//

  இங்கு 90 சதவித தமிழர்கள் பார்த்திருக்கும் ஒரே மாற்று மொழி படம் என்றால் மலையாள படம் தான்

  ஜெர்மனாம், ரஷ்யாவாம்......

  ReplyDelete
 43. //8.நாஜீகளினால் யூதர்களுக்கு நடந்த கொடுமையை சத்தியம் தியேட்டர் லாபியில் இந்து பத்திரிக்கை படித்துக்கொண்டு ஸ்பீல் பெர்க்கின் ஷீன்டலர் லிஸ்ட் பார்த்தே போரினால் ஏற்படும் வலிகளை தாய் தமிழன் அறிந்து இருக்கிறான்.//

  அது கூட 5 சதம் மட்டும் தான்

  மளிகை லிஸ்ட் தான் எங்களுக்கு தெரியும்.

  ReplyDelete
 44. சாரி ஜாக்கி

  நீங்கள் சீரியசாக எழுதியதற்கு காமெடி (போல் தோன்றும்) மறுமொழி எழுதியதற்கு....

  --

  வேலூர் கலகம், கட்டபொம்மன், மருதுபாண்டியர் காலத்திற்கு பிறகு கடந்த 6 தலைமுறைகளாக போரை பார்க்காத சமுகம் தமிழ் சமுகம்.

  எனவே போரின் வேதனைகளை அவர்களால் (உங்களும், என்னாலும்) உணர முடியாது.

  --

  மேலும் சொல்லப்போனால் 10ஆம் நூற்றாண்டிற்கு பின்னர் இங்கு பெரிய அளவு போர் என்று வந்தது கிடையாது என்றே எண்ணுகிறேன்

  சாளுக்கியர்
  நாயக்கர்
  பிரெஞ்சு
  டச்சு
  பெல்ஜியர்
  ஆங்கிலேயர்
  போர்த்துகீசியர்

  என்று யார் வந்தாலும் வரவேற்று வாழ வைத்த புண்ணிய பூமி இது (கட்டபொம்மன், வேலூர் கலவரம் போன்ற சில விதிவிலக்குகள் தவிர)

  ஏன் ஆங்கில ஏகாபத்தியத்தை போர் தவிர இதர முறைகளில் எதிர்த்ததில் முதலிடத்தில் நின்றவர்கள் தமிழர்கள் தான்

  எழுதி (பேனாவால்) எதிர்த்த பாரதி
  கப்பல் விட்டு (நிதி / வியாபார ரீதியாக) எதிர்த்த வ.உ.சி

  --

  கிட்டத்தட்ட கடந்த 1000 நூற்றாண்டுகளாக தமிழன் சண்டை போடுவதில்லை - சாதி சண்டையை தவிர்த்து :( :(

  ReplyDelete
 45. உண்மையை சொல்லுங்கள்,இந்த பரிதாபமான நிகழ்வுக்கு இந்தியாவும்,தமிழ் நட்டினரும காரணம்?அல்லது ராஜிவ் காந்தி மட்டுமா?உங்கள் தரப்பில் தவறுகளே இல்லையா.தைரியம் இருந்தால் நடுநிலையோடு உங்கள் தரப்பு தவறுகளை வெளிப் படுத்துங்கள்.முடியுமா?
  jeevaflora

  ReplyDelete
 46. //நம்ம இனத்தில்தான் அதிகமான எட்டப்ப தேவிடியா பையன்கள் இருப்பார்கள்.//

  வழிமொழிகிறேன்..//

  நன்றி சதிசு குமார்

  ReplyDelete
 47. //6. மற்ற தேசங்களை போன்று போரினால் ஏற்ப்பட்ட இடப்பெயர்வு அதனால் ஏற்ப்ட்ட வலிகள் திரைப்படம் மூலமே தாய் தமிழன் உணர்ந்து இருக்கிறான்.(உம்/ஜெர்மன்,ரஷ்யா போரினால் துன்புற்ற மக்கள்)//

  இங்கு 90 சதவித தமிழர்கள் பார்த்திருக்கும் ஒரே மாற்று மொழி படம் என்றால் மலையாள படம் தான்

  ஜெர்மனாம், ரஷ்யாவாம்......//

  செருப்பு அணிந்து இருப்பவனுக்கே கடியின் வலியும் வேதனையும் தெரியும். அதனால்தான் நமக்கு தெரிவதில்லை
  நன்றி புருனோ

  ReplyDelete
 48. //8.நாஜீகளினால் யூதர்களுக்கு நடந்த கொடுமையை சத்தியம் தியேட்டர் லாபியில் இந்து பத்திரிக்கை படித்துக்கொண்டு ஸ்பீல் பெர்க்கின் ஷீன்டலர் லிஸ்ட் பார்த்தே போரினால் ஏற்படும் வலிகளை தாய் தமிழன் அறிந்து இருக்கிறான்.//

  அது கூட 5 சதம் மட்டும் தான்

  மளிகை லிஸ்ட் தான் எங்களுக்கு தெரியும்.//

  உண்மைதான் புருனோ நம்ம ஆட்களிடம் ஒரு வித அலட்சிய மனோபாவம் எப்போதும்அ குடி கொண்டு இருக்கும்

  ReplyDelete
 49. கிட்டத்தட்ட கடந்த 1000 நூற்றாண்டுகளாக தமிழன் சண்டை போடுவதில்லை - சாதி சண்டையை தவிர்த்து :( :( // அப்ப கூட நம்மளுக்கள்ளே அடிச்சிக்கறதுலதான் ஆர்வம் காட்டுவானுங்க..

  ReplyDelete
 50. உண்மையை சொல்லுங்கள்,இந்த பரிதாபமான நிகழ்வுக்கு இந்தியாவும்,தமிழ் நட்டினரும காரணம்?அல்லது ராஜிவ் காந்தி மட்டுமா?உங்கள் தரப்பில் தவறுகளே இல்லையா.தைரியம் இருந்தால் நடுநிலையோடு உங்கள் தரப்பு தவறுகளை வெளிப் படுத்துங்கள்.முடியுமா?
  jeevaflora//

  நன்றி ப்ளோரா
  முதலில் இந்த பதிவு ஏன் தமிழனுக்கு சொரனை இல்லை என்பது பற்றியதான பதிவு. இரண்டாவது இவர்கள் கோக்கியம் தவறே செய்யதவர்கள் என்று சத்தியம் செய்ய மாட்டேன் அதே போல் யார் மீதுதான் தவறு இல்லை??? யேசு சொல்வது போல் தவறே செய்யதவன் கல் எறியுங்கள் என்றால் நீங்கள் நான் கூட கல் எறிய முடியாது என்பதே நிதர்சன உண்மை.

  ReplyDelete
 51. இன்றைக்கு ஆஸ்த்ரிய தலைநகர் வியன்னாவில் பிழைக்க சென்ற சீக்கியர்களுக்கிடையே கோஷ்டித் தகராறு. பற்றி எரியுது பஞ்சாப்பும் ஹரியானாவும்.
  இத்தனைக்கும் அடிப்பதும், வாங்குவதும் ஒரு இனத்தைச் சேர்ந்தவர்களே. ஆனால் நம் இனத்தானை வேற்றினத்தை சேர்ந்தவன் அடிப்பான், உதைப்பான், கற்பழிப்பான், கதற கதற கொன்று ஒரு இனத்தையே மெல்ல அழிப்பான். அதை நாம் கண்டும் காணாதிருப்போம்.
  இது தானே தாய் தமிழன் தாய் தமிழன் என்று நீங்கள் சொல்லும் நமது குணம்?
  கர்நாடகாவில் காவிரிப்பிரச்சனையென்றால் அங்கு கட்சி பேதங்கள் இருக்காது ஒட்டுமொத்த கன்னடியர்களும் ஒன்று திரண்டு தமிழனை அடிப்பார்கள். மங்களூருக்கும் காவிரிக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது ஆனால் மங்களூரில் கூட கலவரம் வெடிக்கும் காவிரிக்காக. ஆனால் இங்கு காவிரிப் பிரச்சனைக்காக நெல்லை மாவட்டத்தில் இருப்பவனும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருப்பவனும் போராடுவானா? அரசியல்வியாதிகள் தான் கட்சி பேதமின்றி ஒன்றினைந்து போராடுவார்களா? வெட்கம் கெட்ட இனம் இது.

  இது அழியும் இனம் தான். என் பிள்ளை சாரி ஐ டோண்ட் நோ டமில்னு சொன்னா சந்தோசப்படுவேன். இப்டி ஒன்னுமில்லாத உணர்சியில்லாத தமிழனா வளர்வதற்கு பதிலா அவனாச்சும் வீரனா வளரட்டும்.

  ReplyDelete
 52. அடுத்த படிக்கு வாருங்கள் உறவுகளுக்கு கை கொடுங்கள்
  http://kandumkaanaan.blogspot.com/

  ReplyDelete
 53. நண்பன் bak அறிக!!!

  பதிவர் jackiesekhar இன்னொரு கோள்வியை கேட்க மறந்துவிட்டார். அல்லது அவருக்கு அது பற்றி யாரும் சொல்லியிருக்கமாட்டார்கள். கேள்வி இதுதான்!!

  ஒருபக்கம் வரிசையாக உடல் சோதனைக்கு உள்ளாகும் பெண்கள். மறுபக்கம் 16 வயது ஆண். ஆயுதம் தாங்கி உடல் சோதனை செய்யும் புண்ணியவான், ஆணுறுப்பை அடைந்ததும், ”குண்டா கொட்டியா??” என்றுகேட்டு வாகாக ஒரு விரையைப் பிடித்து நசுக்குவான். உயிர்போகும் அந்த வலியை, மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவிக்கும் சுகமான அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டதுண்டா?

  எங்களுக்கு நடந்தது நண்பா. பாடசாலை வாசலில். எதிர்ப்புறம் பெண்கள் படிக்கும் பாடசாலை, இப்புறம் ஆண்கள் படிக்கும் பாடசாலை. பெண்களுக்கு மறைத்துவைத்து பெண் போலீஸ் சோதனை. எங்களுக்கு வெட்ட வெளியில் ஏறத்தாள ஒவ்வொருநாளும் விரையை நசுக்கி சோதனை. வயசுப் பெண்ணுக்கு முன்னால் வயசுப்பையனை கிண்டல் செய்தாலே கோபம் வருமே...எங்களை manhandle செய்த போது அடங்கிப்போன கொடுமை உங்களுக்குத் தெரியாது. ஆண்களின் நிலமையே இதுவென்றால்???
  வன்னிமக்களை பிரபாகரன் காட்டுக்கு அழைக்கவில்லை. அந்த மக்களுக்கு காடு செல்வதைத் தவிர வேறு வழியே இல்லை...காரணம் இலங்கை ராணுவத்தின் வீரம் அப்படி

  ReplyDelete
 54. sorry sorry sorry...
  மேலே சற்றே காரமாகப் பதில் சொல்லிவிட்டேன். அப்போது நடந்ததை இப்போது நினைத்தாலும் ‘அந்த' இடத்தில் ஒரு வலி வந்து போகிறது. புலம்பெயர்ந்து வாழும் என்போன்றோருக்கும், இப்போ அகதிகளாயிருக்கும் வன்னி மக்களுக்கும், யாழ்ப்பாணத்து திறந்த வெளிச்சிறைகளிலிருக்கும் மக்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் மனவிகாரம் எற்பட்டிருக்கிறது. அந்த மனவிகாரத்தின் வெளிப்பாடே அந்தக் காரமான பதில். மன்னியுங்கள்

  ReplyDelete
 55. கவலை வேண்டாம் சகோதரா, இனி வரும் காலத்திலாவது நமது தவறுகளை திருத்திக்கொண்டு உழைப்போமாக.எமது இனத்தின் விடுதலைக்காக உழைப்போம் இந்த புதிய நெடிய களத்தில்
  http://kandumkaanaan.blogspot.com

  ReplyDelete
 56. இங்கு கமெண்ட் எழுதிய நண்பர்களுக்கு் ஒரு பணிவான் வேண்டுகோள். தயவு செய்து நாம் அனைவரும் சேர்ந்து என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்.
  எங்கே எப்படி சேர்வது? எப்படி அணுகுவது இந்த பிரச்சனைய என்று சொல்லுங்கள். நம்மை போல் பிரபாகரன் நினைத்து இருந்தால் இவ்வளவு வருடம் போராடி இருக்க முடியுமா? நாம் எல்லோருமே அவரை கடவுளாக்கி ஹீரோவாகி ஒதுங்கி கொண்டோம். இனியாவது நமக்கு நாமே என்று முன்னெடுப்போம். அதற்கு ஒரு வழி இருந்தால் சொல்லுங்கள். தயக்கம் வேண்டாம்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner