(பிரபாகரன்) புலிகள் தலமை என்ன செய்து இருக்க வேண்டும்????


1984களில் கடலூர் அண்ணா பாலத்திற்க்கு அருகில் விடுதலை புலிகள் ஒரு புகைப்பட கண்காட்சி வைத்து இருந்தார்கள். கறிக்கடையில் ஆடுமாடுகளை தோல் உறித்து எப்படி பார்த்து இருக்கின்றோமோ, அதே போல் தமிழர் பிணங்களை பார்த்து இருக்கிறேன். மார்பு பிளக்க பட்டு குடல் சரிந்து இறந்த பெண், கர்பினி பெண் வயிறு கிழிந்து இறந்து கிடக்கும் பச்சிளங்குழந்தை ,உயிரோடு டயர் போட்டு கொளுத்திய அப்பாவிதமிழன். இப்படி சிங்களர்களின் வெறியாட்டத்தினால் உண்டான நிறைய பிணங்களின் கண்காட்சி அது.

புலிகள் உண்டி குலுக்கினர். பாக்கெட்டில் கை விட்டு வந்த பணத்தை எல்லாம் போட்டுஅப்போது அந்த உண்டியலை நிறைத்தனர் உணர்ச்சி மிகுந்த தமிழக மக்கள். அப்போது இருந்த கூம்பு வடிவ ஒளி பெருக்கியில் கூவுங்கள் சேவல்களே, போன்ற உணர்சி மிக்க பாடல்கள் போடுவார்கள்.

எங்கள் பகுதி கூத்தப்பாக்கத்தில் புலிகள் பயிற்ச்சி செய்யும் வீடியோ ஒளிப்பரப்பி விட்டு நான் சிகப்பு மனிதன் படம் போட்டார்கள் எங்கள் ஊரில் இருந்த அனைவரும் பழைய துணிகள்,உணவு பண்டங்கள், சேமித்த பணம் எல்லாம் கொடுத்து அவர்களை கண்கலங்க வழியனுப்பி வைத்தார்கள்.

அந்த 1984 சம்பவத்துக்கு பிறகு அது போன்ற உணர்ச்சி வசப்பட்ட விஷயங்கள் புலிகளுக்காக தமிழகத்தில் நடந்ததே இல்லை.

பிறகு ராஜீவ் கொலை அதன் பிறகு சுத்தமாக இல்லவை இல்லை. அதற்க்கு அடுத்து தமிழகத்தில் முத்துகுமார் தீக்குளிப்பு சம்பவத்துக்கு பிறகு அதாவது முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் புலித்தலைவர் பிரபாகரன் படம், மற்றும் ஈழ எழுச்சி இடம் பெற்றது.

இந்த இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் எத்தனையோ, களப்போராட்டங்கள் எத்தனையோ வெற்றி தோல்விகள் ஆனால் எதுவும் தாய் தமிழனை பாதிக்கவில்லை. அதே போல் பிரபாகரன் தனியாக அரசாங்கம் நடத்திய கடந்த பண்ணிரண்டு வருடங்களில், நம்ம பய பிரபா அங்க இருக்கான் அவன் நம்ம பயலுவலையும் குடும்பத்தையும் பாத்துக்கொள்வான் என்று நம்வர்களும் இருந்தார்கள்.

பெருமையாக டீக்கடையில் உட்கார்ந்து கொண்டு, உலகத்துலயே தரைப்படை ,விமானப்படை, கப்பல்படை வச்சிருக்கற ஒரே இனம் நம்ம இனம்தான் என்ற பெருமையை எந்தனையோ பேர் கண்களில் சந்தோஷ மிகுதியுடன் பேசுவதை நான் கேட்டு இருக்கிறேன்.

ராஜீவ் படுகொலையை தமிழர்கள் மன்னிக்கவில்லைதான் ஆனால் புலிகள் செய்தார்களா இல்லையா என்பதை சர்வதேச சமுதாயத்திடம் புலிகள் விளக்கம் அளித்து இருக்க வேண்டும். அப்படி செய்து இருந்தால் இந்த காரணத்திற்க்காக, இப்படி நடந்து கொண்டதால் வேறு வழியில்லாமல் இந்த முடிவு எடுக்கபட்டது, என்று விளக்கி இருக்க வேண்டும்...வெறும் துன்பியல் நிகழ்வு என்று அடுத்த கேள்விக்கு சென்று இருக்க கூடாது....

மக்கள் செல்வாக்கு இல்லாத எந்த இயக்கமும் செயல் இழந்து போகும் என்பதற்க்கு இப்போது நடந்த நிகழ்வுகளே சாட்சி.

யாருக்குதான் பிரச்சனை இல்லை கடந்த 50 வருடங்களாக இலங்கையில் பிரச்சனை இருந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் புலிகள் தலமை தமிழகத்தில் நடந்த ஏதாவது ஒரு பிரச்சனையில் தலையிட்டு இருக்கின்றதா? அல்லது கருத்தாவத சொல்லி இருக்கின்றதா? அப்படி சொல்லியிருந்தாலும் அது இரண்டாம் அல்லது மூன்றாம் கட்ட தலைவர்கள்தான் சொல்லி இருப்பார்கள்.


அங்கு போர் நடந்து நம் சொந்தங்கள் கொத்து கொத்தாக பலியாகினர்அவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் தாய் தமிழர்களான , நாம் எந்த உணர்ச்சியையும் வெளிப்படத்தவில்லை.

ஒரே ஒருவன் வெளிபடுத்தினான் அவன் பெயர் முத்துக்குமார். அவன் போராட்டக்காரன் அல்ல, அவன் ஒரு கட்சியின் தலைவன் அல்ல, அப்ட்ரால் ஒரு வார்டு மெம்பர்கூட இல்லை, அவன் வா என்ற சொன்னால் வருவதற்க்கு 50 பேர்கூட நம்பத்தகுதியில்லாதவன். அவன் ஒரு பத்திரிக்கையாளன் அவ்வளவே, அவன் ஒன்றுமே செய்யவில்லை தன் கண்முன் இறக்கும் தன் இன மக்களை நினைத்து கையலாகத இந்திய அரசின் கீழ் பிரஜையாக இருக்கின்றோமே என்ற எண்ணி பதினாறு பக்கத்தில் தன் குமுறல்களை வெளிப்படுத்தி தீக்குளித்து இறந்துபோனான் . அதுவும் அவன் மக்களிடம் மட்டுமே தன் பிரச்சனையளை ஜெராக்ஸ் காகிதம்மூலம் தெரியப்படுத்தினான். தமிழகம் பற்றிக்கொண்டது... அவன் ஊர்வலததில் 50,000 பேர் கலந்து கொண்டார்கள்

சதாரன முத்துக்குமார் இறப்புக்கு தமிழக அரசு பள்ளி கல்லூரிகளுக்கு பத்துநாள் விடுமுறை தந்து பிரச்சனையை தீர்த்தது...


சாதாரன முத்துக்குமாருக்கே பொங்கிய தமிழகம் தேசிய தலைவர் என்ற பெயர் பெற்ற உனக்காக ஏன் வாதாடவில்லை அல்லது பொங்கவில்லை. ஏனென்றால் தமிழக மக்களிடம் பிரபாகரன் பேசவில்லை.மனம் திறந்து தன் என்ன குமுறல்களை கொட்டி இருக்க வேண்டும். நீ என்ன தமுக்கம் மைதனாத்திலும், அல்லது தீவுத்திடலிலுமா பேச சொன்னார்கள். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் அங்கு அடர்ந்த வனப்பகுதியில் பேசினாலே போதுமானது. அடுத்த நொடியே உலகம் முழுவதும் தெரிந்து இருக்கும்.


ஏன் பிரபாகரன் தமிழக மக்களிடம் தன் பிரச்சனைகளை விளக்கவில்லை, அல்லது ஏன் அதற்க்கான தளத்தை புலிகள் ஏற்படத்தவில்லை. மாவீரர் தினத்தில மட்டும் நம் தொ்புள் கொடி உறவுகளே என்று அழைப்பார்கள். அது தாய் தமிழகத்தால் அலட்சியப்படுத்தபட்டதின் விளைவே இது...

வீரப்பன் கொள்ளைகாரன் கொலைகாரன் ஆனால் கர்நாடக அரசியல்வாதிகளை மிரட்டினான் தமிழக மக்களிடம் ஹீரோ அந்தஸ்த்து பெற்றான்...

இரமேஸ்வரத்தில் இருந்து பதினாறு கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்கு அப்பால் இருக்கும் புலிகள் என்றாவது தமிழக அடிப்படை விஷயங்களுக்கு குரல் கொடுத்து இருக்கின்றார்களா? முல்லை பெரியாறு விஷயத்தில் கேரளா அரசாங்கத்துக்கு என்றாவது கண்டன அறிக்கை விடுத்து இருப்பார்களா? அல்லது காவிரி பிரச்சனையில் கார்நாடக அரசை எதிர்த்து தன் எதிர்பை பதிவு செய்து இருப்பார்களா? போராட்டம் வேண்டாம் ஒரு கண்டன அறிக்கை போதும் தமிழக மக்கள் மத்தியில் எப்போதோ புலிகள் இடம் பெற்று இருப்பார்கள்.

என்னதான் பக்கத்துவீட்டுக்காரன் சொந்தக்காரனாக இருந்தாலும், சோகத்தில் இருந்தாலும், பிரச்சனை என்று வரும் போது ஓய் என்று ஒரு குரலாவது கொடுத்தால்தான் நமக்கு அவன் மேல் பாசம் வரும். அல்லது நினைப்பு வரும்.


இதுவரை புலிகள்தலமை முன்று கடிதங்களில் மட்டுமே தமிழக மக்களோடு தங்கள் வருத்தங்களை பகிர்ந்து இருக்கின்றது, முதலாவது பிரதமர் இந்திரா இறப்புக்கு, இரண்டாவது எம்ஜீயார் இறப்புக்கு, மூன்றாவதுமுத்துக்குமார் இறப்புக்கு இப்படி இருந்தால் எப்படி புலிகளுக்கு தமிழக மக்களிடம் ஆதரவு இருக்கும்.நான் இலங்கையை வரைபடத்தில் மட்டுமே பார்த்து இருக்கிறேன்,நேரில் அதன் நிலப்பரப்பை பார்த்தது கூட இல்லை ஆனாலும் நம் இன மக்கள் வெளிச்சிறையில் படும் அவஸ்த்தை பார்த்து மனது அழுகின்றது... நிறைய தவறுகள் புலிகள் அமைப்பிடம் இருக்கின்றது, எல்லாவற்றையும் விட பெரிய தவறு தமிழக உறவுகளிடம் விலகி இருந்ததே.


இன்று தமிழகத்தில் இருக்கும் அகதிகள் புலிப்பெருமை பேசுகின்றனர், அவர்கள் அரசு கட்டுப்பாடானது. அவர்கள் பக்கத்தில் இருந்தால் பெண்பிள்ளைகள் இரவு ரெண்டு மணிக்கு கூட தனியாக பயம் இல்லாமல் போய் வருவாள்,சுனாமியில் அவர்கள் மறுவாழ்வுக்கு எடுத்த வேகம் உலகம் பராட்டியது. அவர்கள் நீதமின்றம் மக்களால் போற்றப்பட்டது, என்று எவ்வளவோ சொல்லுகின்றார்கள்...

தமிழகத்தில் பெரும்பான்மை மக்களிடம் ராஜீவ் காந்தி கொலைதவிர புலிகளை பற்றி என்ன தெரியும்???
புலிகள் கடைசி வரை தன் நிலை விளக்காதது ஏன்?


மனம் நிறைய கேள்விகளுடன்

ஜாக்கிசேகர்..

குறிப்பு,

(நம் இனம் சாகின்றது என்று தெரிந்தும் நாம் டிவிப்பெட்டியில் மூழ்கிக்கிடக்கின்றோம் என்றால் தவறு எப்படி ஏற்பட்டது என்று என்னுள் கேட்டதன் விளைவே இந்த பதிவு, கட்டுப்பாடான இயக்கத்தில் என்ன நடந்தது என்று தெரியாமல் மர்மமாகவே இருக்கின்றதே, ஆளாளுக்கு ஊகத்தில் பேசுகின்றார்களே என்ற வெறுப்பில்இந்த பதிவு எழுதப்பட்டது. இது எனது பார்வையில் தவறாக கூட இருக்கலாம் . பதிவு நியாயமாக இருந்தால் ஓட்டுப்போட்டு மக்களிடம் சேர்ப்பியுங்கள்)

31 comments:

 1. மீ த பஸ்ட்டு.
  படிச்சிட்டு மறுபடியும் வாரேன்....

  ReplyDelete
 2. ஹூம்...!!! யோசிக்கிறேன்.

  ReplyDelete
 3. பதில் சொல்ல தனி பதிவு தேவை, இருந்தாலும், சுருக்கமாக, இன்றைய நிலை எல்லாவற்றிற்க்கும் காரணம், இராசீவின் படுகொலையே!
  இப்பொழுது ஏற்பட்டிருக்கும் முடிவிற்கு முதல் அத்தியாயம் அதுவே!ரத்த ருசி கண்ட காட்டேரிகள் யாராக இருந்தாலும், (ராஷபக் ஷே வையும் சேர்த்துதான் சொல்லுகிறேன்!) முடிவு பிரபாகரன் முடிவுதான்!

  ReplyDelete
 4. //என்னதான் பக்கத்துவீட்டுக்காரன் சொந்தக்காரனாக இருந்தாலும், சோகத்தில் இருந்தாலும், பிரச்சனை என்று வரும் போது ஓய் என்று ஒரு குரலாவது கொடுத்தால்தான் நமக்கு அவன் மேல் பாசம் வரும். //

  சரியாச்சொன்னீங்க ஜாக்கி

  ReplyDelete
 5. //
  இரமேஸ்வரத்தில் இருந்து பதினாறு கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்கு அப்பால் இருக்கும் புலிகள் என்றாவது தமிழக அடிப்படை விஷயங்களுக்கு குரல் கொடுத்து இருக்கின்றார்களா? முல்லை பெரியாறு விஷயத்தில் கேரளா அரசாங்கத்துக்கு என்றாவது கண்டன அறிக்கை விடுத்து இருப்பார்களா? அல்லது காவிரி பிரச்சனையில் கார்நாடக அரசை எதிர்த்து தன் எதிர்பை பதிவு செய்து இருப்பார்களா? போராட்டம் வேண்டாம் ஒரு கண்டன அறிக்கை போதும் தமிழக மக்கள் மத்தியில் எப்போதோ புலிகள் இடம் பெற்று இருப்பார்கள்.
  //
  ?????????
  இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சனைகளில் புலிகள் என்ன செய்திருக்கமுடியும்?
  இந்திய இறையாண்மை பொங்கி எழுந்திருக்கும் இதற்கெல்லாம் புலிகள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தால்.....
  ஏற்கனவே ஈழம் கிடைத்தால் தமிழகம் தனிநாடாகிவிடும் என்று குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டவர்களுக்கு புலிகளை எதிர்க்க இன்னும் அதிக வாய்ப்பாகியிருக்கும்..

  எல்லாவற்றையும் விட ஈழத்தவருக்கு அவர்களின் உயிரையே கையில் பிடித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் நம்மைப் பற்றி என்ன கவலைப்படமுடியும் அவர்களால்?

  ReplyDelete
 6. தமிழகத்தின் பிரச்சனைகளுக்கு பிரபாகரன் எதையும் சொல்லவில்லை என கூறும் சாக்கி சேகர் அவர்களே, தமிழகத்தில் பிறந்த நீங்கள் என்ன செய்தீர்கள் ? நம் உரிமைகளை எள்ளளவும் மதிக்காத அரசுகளை எதிர்த்து நீங்கள் ஒரு கேள்வியாவது கேட்டிருப்பீர்களா?

  ReplyDelete
 7. தோல்விகளுக்கு புதிய புதிய விளக்கங்கள் கொடுப்பதில் பலர் வல்லவர்கள். சற்றே யோசித்துப் பாருங்கள் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சனைகளில் புலிகள் என்ன செய்திருக்கமுடியும்?
  இந்திய இறையாண்மை பொங்கி எழுந்திருக்கும் இதற்கெல்லாம் புலிகள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தால்.....
  ஏற்கனவே ஈழம் கிடைத்தால் தமிழகம் தனிநாடாகிவிடும் என்று குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டவர்களுக்கு புலிகளை எதிர்க்க இன்னும் அதிக வாய்ப்பாகியிருக்கும்..

  அத்துடன் தமிழகம் மேல் வட இந்தியாவுக்கு உள்ள சந்தேகம் தான் ஈழத்தமிழரின் இந்த நிலைக்கு ஒரு காரணம். அதாவது அவர்கள் தனி நாடு பெற்றால் இவர்களும் கேட்பார்கள் .
  ஈழத் தமிழர்கள் மட்டும் ஒரு வேற்று மொழி பேசுபவர்களாக இருந்தால் , வங்காள தேசம் போல என்றோ பிரிந்திருக்கும் ஹ்ம்ம்

  ReplyDelete
 8. //***முல்லை பெரியாறு விஷயத்தில் கேரளா அரசாங்கத்துக்கு என்றாவது கண்டன அறிக்கை விடுத்து இருப்பார்களா? அல்லது காவிரி பிரச்சனையில் கார்நாடக அரசை எதிர்த்து தன் எதிர்பை பதிவு செய்து இருப்பார்களா? போராட்டம் வேண்டாம் ஒரு கண்டன அறிக்கை போதும் தமிழக மக்கள் மத்தியில் எப்போதோ புலிகள் இடம் பெற்று இருப்பார்கள். ***//
  இதை எதிர்பார்பது தவறு மேலும் தமிழகம் தனிநாடாக இருந்து இதுபோல் சம்பவம் நடந்தால் அவர்கள் குரல் கொடுக்கலாம் ஆனால் தமிழகம் இந்தியா என்னும் ஆதிக்கதில் உள்ளது(இதை பற்றி விளக்க வேண்டும் என்றால் தனி இடுக்கை இட வேண்டும்)
  அப்படியிருக்கையில் அது இந்தியாவை மேலும் எரிச்சல் அடையவைக்கும் நிலைமை மேலும் மோசம் அடையும்
  இந்த கேள்வியை நிங்கள் இந்தியாவிடம் கேட்க வேண்டும்
  ஏன் என்றால் தமிழகம் இந்தியாவில் தான் ஒரு அங்கமாக உள்ளது, நம் மினவர்கள் செத்து மடியும் போது, பக்கத்து மாநிலங்கள் நம்க்கு தண்ணிர் தர மறுத்தபோது, நம் இன மக்கள் இலங்கையில் கொத்து கொத்ததாக செத்து குவியும் போது என்ன செய்துகொண்டிருந்தார்கள்
  //***என்னதான் பக்கத்துவீட்டுக்காரன் சொந்தக்காரனாக இருந்தாலும், சோகத்தில் இருந்தாலும், பிரச்சனை என்று வரும் போது ஓய் என்று ஒரு குரலாவது கொடுத்தால்தான் நமக்கு அவன் மேல் பாசம் வரும். அல்லது நினைப்பு வரும்.***//
  மறுபடியும் இதை நிங்கள் இலங்கை தமிழர்களை பார்த்து கேட்பதைவிட நம்ம பக்கத்து அண்டை மாநிலங்களை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி, பக்கத்து நாட்டில் சிங்களவர்கள், தமிழர்களை கொன்று குவிக்கிறார்கள் அதை அவர்கள் தமிழர் என்ற அளவில் பார்காமல் பல ஒரு அப்பாவி மக்கள் அங்கு கொல்லபடுகிறார்கள் அதை இந்தியா தடுக்க வேண்டும் என்று எத்தன பக்கத்து மாநிலங்கள் குரல் கொடுத்தன, நாம் எல்லோரும் இந்தியர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பாடநூலில் படிப்பதோடு சரி நடைமுறையில் செயல்படுத்துவதில்லை, இந்தியா பல மொழிகளால் ஆனது என படிக்கிறோம் ஆனால் இந்தியை அனைத்து மாநிலங்களிலும் திணிக்கிறார்கள், பெயரளவுக்கு, கொடி ஏத்துவதும், புரியாத ஒன்றை பாடிவிட்டு இனிப்பு தின்றுவிட்டு அன்றைய பொழுதை கழிக்கிறோம்
  நாட்டுபற்று/இறையாண்மை என்கின்ற பெயரால் தமிழர்களும், தமிழ் மொழியும் புறக்கணிக்கபடுகின்றன. நம்க்கே தெரியாமல் இந்திமொழிக்கு தமிழ்மொழியும், இந்திகாரன்களுக்கு தமிழன் அடிமையாகவும் உள்ளான்(இதை நான் சொன்னால் என்னை பிரிவினவாதி எனகிறது ரொம்ப மகிழ்ச்சி)

  ReplyDelete
 9. தலைவர் தமிழக மக்களிடம் இன்னும் கொஞ்சம் நெருக்கத்தைப் பேணியிருக்கலாம் என்னும் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்...

  குறைந்த பட்சம் ஈழ ஆதரவுத் தமிழகத் தலைவர்கள் இத்தனை வருடத்தில் அடிமட்ட மக்களிடம் ஈழப்பிரச்சனை முழுதாகச் சென்றடையும் வகையில் செயல்பட்டிருக்கலாம்...

  ReplyDelete
 10. தலைவர் தமிழக மக்களிடம் இன்னும் கொஞ்சம் நெருக்கத்தைப் பேணியிருக்கலாம் என்னும் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்...

  aanal ithu7vm unmai

  இந்தியாவின் உள்நாட்டுப் ..........யோ என்று கூப்பாடு போட்டவர்களுக்கு புலிகளை எதிர்க்க இன்னும் அதிக வாய்ப்பாகியிருக்கும்..

  anaithayum vida enga tamilagamum pirinthu vidum enda payame pulikalai india alikka kaaranam. aakvae intha vaathathai naan muttraka madukkireen.
  atheevelai evetha suyanalanum illamal aatharavu alithatu tamillaga makkal than.

  ReplyDelete
 11. //
  anaithayum vida enga tamilagamum pirinthu vidum enda payame pulikalai india alikka kaaranam.
  //
  ஙேஏஏஏஏஏஏஏஏ.....
  இதையே தான நானும் சொல்லீருக்கேன்??
  ஒருவேளை தமிழகம் தனிநாடாக இருந்திருந்தால் புலிகள் கர்நாடகா மற்றும் ஆந்திராவுடன் தமிழகத்திற்கு இருக்கும் பிரச்சனைகள் குறித்து தங்கள் எதிர்ப்பைப் பதிந்திருக்கலாம்..
  "ஏற்கனவே தமிழ்நாடு பிரிந்துவிடும் என்ற பயத்தில் இருக்கும் போது, புலிகள் இந்த விடயங்களில் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக அறிக்கை ஏதேனும் வெளியிட்டிருந்தால் அது அவர்களுக்கு இன்னும் பாதகமாகவே இருந்திருக்கும்..." என் முதல் பின்னூட்டத்தில் இதையே நான் சொல்ல வந்தேன்...

  ReplyDelete
 12. அப்பனே அரை கோவணம், இழுத்துப் போத்துடா மவனேன்னு சொல்லலை, அது உங்களுக்கு பெரிய குறையா தெரிஞ்சுருக்கு.

  புரிஞ்சுதான் எழுதுனீங்களா? ஏற்கனவே ஜெகதீசன் சொன்னது மாதிரி, அவங்க நம்ம சென்னை மாநகராட்சி 33வது வார்டுல 6வது தெருவுல சாக்கடை அடைச்சுக்கிட்டதுக்கு கூட குரல் கொடுக்கிற உணர்வு உள்ளவங்க தான் , ஆனா அப்ப மட்டும் குறை சொல்ற சிங்கள ரத்னாக்கள் சும்மாருந்துருக்குமா? தமிழ்நாட்டையும் ஈழத்தோடு இணைப்பது தான் நோக்கம்னு தானே சொல்லியிருப்பானுங்க.
  இதுக்கு மேலயும் விளக்கம் சொல்ல முடியும், ஆனா இன்று நான் பேசிய ஒரு ஈழத்து உறவு சொன்னது என் மனசவிட்டு போக மாட்டேங்குது. அதையேத்தான் உங்களையும் கேட்குறேன்.
  நீங்க ஈழத்துக்கு ஆதரவா என்னவெல்லாம் இதுவரைக்கும் செஞ்சுருக்கீங்கன்னு முதல்ல சொல்லுங்க.
  சும்மா பதிவெழுது ஏற்கனவே குற்றுயிரும்,குலையிருமாய் இருக்க அவங்கள இம்சிக்க வேண்டாம்.
  நம்ம சார்பா நம்ம நாடு ஏற்கனவே அங்க நிறையா செஞ்சுருச்சு. இதுல நம்ம வேற தனியா செஞ்சு இம்சைய கூட்டணுமா சார்?

  ReplyDelete
 13. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.

  பின்னுட்டம் இட்ட எல்லோருக்குமான பதில் இதுதான்.

  உங்களை விட சமுக கோபம் என்னிடம் இருக்கின்றது,நாங்ள் எங்கள் ஊரில் 1984 செய்யாத எதையும் கேள்வி கேட்ட நீங்கள்செய்து இருக்க வாய்பில்லை.

  இறந்த இடத்தில் ஆதாயம் தேட வேண்டிய அவசியம் எனக்கில்லை.
  அவர் உங்களுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் தேசிய தலைவர்தான் . தமிழக மக்களுக்கும் இளைஞர்களுக்கு ரோல்மாடல்தான்.

  கரல் கொடுத்தால் தனி தமிழகம் ஆகிவீடும் அதனால்அவர் கொடுக்கவில்லை இப்போது மட்டும் என்ன சொல்லி ஆயத உதவி செய்தார்கள் என்று சொல்ல முடியுமா?

  தனி ஈழம் அமைந்தால் தனி தமிழ்நாடு கேட்பார்கள் என்பது அரம்பத்தில் இருந்த இப்போதுவரை இருக்கும் தியரி அதை இந்திய அரசாங்கம் இன்று வரை மாற்றி கொள்ளவில்லை.

  ரெண்டாவது பதிவின் நோக்கம் முத்துக்குமாருக்கு எழுந்த அலை ஏன் ஏழவில்லை என்பதே.


  தலைவர் இப்படி பேசியிருந்தால் இன்னும் தமிழக மக்களிடம் நெருக்கம் பெற்று இருக்க முடியும் என்பதே.

  அவர் புகழை களங்கம் விளைவிப்பது எனது நோக்கம் அல்ல என்பதை எனது முந்திய பதிவை வாசித்தவர்களுக்கு புரியும்.

  புலிகள் எல்லா விஷயத்திலும் மேன்மையானவர்கள் அவர்கள் தவற செய்த இடத்தை சுட்டிகாட்டி வருத்தப்டு்கிறேன்.. அவ்வளவே

  அவர் தமிழக மக்களிடம் நெருக்கம் காண்பித்து இருக்க வேண்டம் என்பதே...

  ReplyDelete
 14. இனி பின்னுட்டம் இடும் அனைத்து பதிவர்களுக்கும் இதுதான் எனத பதில் நன்றி...  இன்று தமிழகத்தில் இருக்கும் அகதிகள் புலிப்பெருமை பேசுகின்றனர், அவர்கள் அரசு கட்டுப்பாடானது. அவர்கள் பக்கத்தில் இருந்தால் பெண்பிள்ளைகள் இரவு ரெண்டு மணிக்கு கூட தனியாக பயம் இல்லாமல் போய் வருவாள்,சுனாமியில் அவர்கள் மறுவாழ்வுக்கு எடுத்த வேகம் உலகம் பராட்டியது. அவர்கள் நீதமின்றம் மக்களால் போற்றப்பட்டது, என்று எவ்வளவோ சொல்லுகின்றார்கள்...

  தமிழகத்தில் பெரும்பான்மை மக்களிடம் ராஜீவ் காந்தி கொலைதவிர புலிகளை பற்றி என்ன தெரியும்???
  புலிகள் கடைசி வரை தன் நிலை விளக்காதது ஏன்?


  மனம் நிறைய கேள்விகளுடன்

  ஜாக்கிசேகர்..

  குறிப்பு,

  (நம் இனம் சாகின்றது என்று தெரிந்தும் நாம் டிவிப்பெட்டியில் மூழ்கிக்கிடக்கின்றோம் என்றால் தவறு எப்படி ஏற்பட்டது என்று என்னுள் கேட்டதன் விளைவே இந்த பதிவு, கட்டுப்பாடான இயக்கத்தில் என்ன நடந்தது என்று தெரியாமல் மர்மமாகவே இருக்கின்றதே, ஆளாளுக்கு ஊகத்தில் பேசுகின்றார்களே என்ற வெறுப்பில்இந்த பதிவு எழுதப்பட்டது. இது எனது பார்வையில் தவறாக கூட இருக்கலாம் .

  ReplyDelete
 15. Dear Jackie,

  Maaveran Prabhakaran addressed his (Tamil) people in Srilanka. He has
  never directly or indirectly addressed to Tamil people of Tamilnadu, to the best of my knowledge.

  With regard to your statement that Prabhakaran did not voice for TN local issues, I do not accept. What is the use, if he talks?.

  Even super star Rajini's voice did not help, remember.

  Last but not the least, every person talks about Rajiv Gandhi.
  Especially, the congress party based guys. They also address "Annai Sonia, Thyagi Sonia."
  Till this second, I have never understood what Sonia has done to this country, to deserve all these titles.

  It's equivalent to Annan JKR's Veera Dalapathi (Do not send auto).

  Today (25-May), 2 people have been killed in Punjab - Reason, some Sikh guru got killed in Vienna, Austria. Just imagine, tamilians can never think anything above then cinema and politics.

  I am not saying, that tamilians should have also behaved in the same way as that of punjabis.. But, the so-called inamana unarvu appadina ennanga?.

  ReplyDelete
 16. நீங்க சொல்லுறதுலயும் நியாயம் இருக்கு ஜாக்கி...

  ஆனா சொல்ல கூடிய நேரமிதுவா? யோசியுங்க..

  ReplyDelete
 17. As you said puligal was not very open to TN people, and never ever asked their support to us especially by Prabhakaran. I accept this point, it would have certainly made a difference. But at the same time it not necessary that they have raise their voice for our internal issues, it will further damage our relationship with our neighbors, Even if you like it or not we have to live with them and vice versa. Apart from the Puligal Thalamai I have noticed even among general srilankan Tamils they are not very much open to other communities even to Indian Tamils. Either it is in Britain or Canada where they have large population I have observed Srilankan Tamils never try to mingle with India Tamils. Initially when I analyze this I thought only Indian Tamil are not trying mix with them because Indian Tamil in aboard are from elite category but Srilankan Tamil in abroad are Refugees so mixture of every category even an illiterate person from a remote village of srilanka is here. But my notion was not true even elite srilankan Tamil also behaving the same. I have lot of Malaysian Tamil friends; their behavior is slightly different from Srilankan Tamil. They participate in all our activities and things. The reason I understand Malaysian Tamil connect them with India and Indian Tamil and they feel the special relationship with us. I strongly believe this feeling is missing among Srilankan Tamils and moreover they get offended if you say their roots are with us and they do not accept it. Only we are saying “Thai Tamilagam, Thopul Kudi Uravu” They completely deny it and they are very proud of their own Identity. I do not blame it. I remember during the recent Elam protest Kamalhassan replied to S.J Surya who proposed to get settle Elam Tamils in TN. Kamal said one that “the only similarities between “them” and “we” is just we speak the same Language”. He is among very few in TN understood about the Eealm Tamil. I would say it is like when you come abroad though you all feel Indians but if you don’t speak Hindi you will be alienated very often by the other Indians even though they are your very nice friends. Indian Tamil and Srilankan Tamils Relationship in abroad is like this or even worse than this. I do not offend anybody it is just my analysis. Nithy

  ReplyDelete
 18. வந்தாச்சு...ஓட்டும் போட்டாச்சு...நல்ல பதிவு....வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 19. Thaks jakeie,
  I had expected this from you.Appritiate a lot.weldone.
  JEEVAFLORA
  WE ARE FROM OUR OWN NATION

  ReplyDelete
 20. ஜாக்கி சார்...

  உங்களின் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.

  ரோட்டில் இறங்கி போராடும் மனோபாவம் எனக்கு இல்லை. ஏனென்ற கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை.

  நம்மை தீவிரமாக பாதிக்குமளவு ஏதும் நிகழாததுதான் காரணமோ...?

  வருத்த நித்யன்

  ReplyDelete
 21. பாராட்டியும் திட்டியும் பின்னுட்டம் இட்ட அனைத்து பதிவர்களுக்கும் நன்றி...


  புலிகள் பிரச்சனையில் இருக்கும் போது கண்டனம் தெரிவிக்க வேண்டாம் குறைந்த பட்சம் வாழ்த்தாவது தெரிவித் இருக்கலாமே...

  நமது அப்துல்கலாம் தமிழர் அவர் ஜனாதிபதியாக தேந்ந்து எடுக்கப்பட்ட போதும் இன்னபிற தமிழக சந்தோஷ நிகழ்வுகளிலும் ஒரு வாழ்த்து செய்திகாவத தெரிவித்து இருந்தால்தானே நாம் ரோட்டில் இறங்கி போராட முடியும்..

  பதிவர் நித்யாவின் மனநிலைதான் பல தமிழர்களின் மன நிலை....

  ReplyDelete
 22. //Only we are saying “Thai Tamilagam, Thopul Kudi Uravu” They completely deny it and they are very proud of their own Identity//
  Very true.
  How many of you folks have actually been friends with SriLankan Tamil's living abroad (I am not talking about the refugees in India)?. I have been very close with a whole bunch.None, trust me, not one has accepted me as a Tamil. They always address me/introduce me to their folks as "Indian,tamil speaking".
  If they call someone as தமிழன், it is by definition a SriLankan Tamil. I have been more ridiculed, humiliated and looked down for my inability to speak SriLankan Tamil than my inability to speak Hindi by North Indians.
  Nevertheless, they are good people with clear identity which is what we are lacking in.
  Just my 2 cents.

  ReplyDelete
 23. //இரமேஸ்வரத்தில் இருந்து பதினாறு கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்கு அப்பால் இருக்கும் புலிகள் என்றாவது தமிழக அடிப்படை விஷயங்களுக்கு குரல் கொடுத்து இருக்கின்றார்களா? முல்லை பெரியாறு விஷயத்தில் கேரளா அரசாங்கத்துக்கு என்றாவது கண்டன அறிக்கை விடுத்து இருப்பார்களா? அல்லது காவிரி பிரச்சனையில் கார்நாடக அரசை எதிர்த்து தன் எதிர்பை பதிவு செய்து இருப்பார்களா? போராட்டம் வேண்டாம் ஒரு கண்டன அறிக்கை போதும் தமிழக மக்கள் மத்தியில் எப்போதோ புலிகள் இடம் பெற்று இருப்பார்கள்.//

  :)))))))

  மண்னிக்கனும்.... நீங்க எதுவரை படித்துள்ளிர்கள்...???
  மீண்டும் பள்ளிக்கு சென்று அடிபடை கல்வியை கற்கவும்......:(((((

  ReplyDelete
 24. மண்னிக்கனும்.... நீங்க எதுவரை படித்துள்ளிர்கள்...???
  மீண்டும் பள்ளிக்கு சென்று அடிபடை கல்வியை கற்கவும்......:(((((-//

  சரிங்க தலைவரே

  ReplyDelete
 25. //Only we are saying “Thai Tamilagam, Thopul Kudi Uravu” They completely deny it and they are very proud of their own Identity//
  Very true.
  How many of you folks have actually been friends with SriLankan Tamil's living abroad (I am not talking about the refugees in India)?. I have been very close with a whole bunch.None, trust me, not one has accepted me as a Tamil. They always address me/introduce me to their folks as "Indian,tamil speaking".
  If they call someone as தமிழன், it is by definition a SriLankan Tamil. I have been more ridiculed, humiliated and looked down for my inability to speak SriLankan Tamil than my inability to speak Hindi by North Indians.
  Nevertheless, they are good people with clear identity which is what we are lacking in.
  Just my 2 cents. //

  விவேக் உங்கள் ஆதங்களம் என்னால் உணர முடிகின்றது

  எனது நிறைய மாணவர்கள் ஈழத்தமிழர்கள்

  ReplyDelete
 26. எனக்கு உங்களின் ஒரு கருத்தில் மிகவும் உடன்பாடு உண்டு. அது ராஜீவ் கொலையை பற்றிய விளக்கம்.
  புலிகள் முதலில் அதை செய்தார்களா என்பதே சந்தேகம் தான். அப்படியே செய்திருந்தாலும் கண்டிப்பாக அதில் சில இந்திய பெருந்தலைகள் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்பது என் எண்ணம். ஆனால் அந்த உண்மைகளை புலிகள் தான் சொல்லிருக்க வேண்டும்.
  இந்தியாவில் அத்தனை தேசிய மீடியாக்களும் ஊடு கட்டி புலியெதிர்ப்பில் இருந்த/இருக்கும் போது அவர்கள் ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்திருந்தால் ஒரு நல்ல கவுன்ட்டர் ஆக இருந்திருக்கும் என்பது என்னுடைய ஆதங்கமும்

  ReplyDelete
 27. உண்மை தான். ராஜீவ் கொலை பற்றி பிரபாகரன் மற்றும் புலிகள் உங்களுக்கு தெளிவாக விளக்கியிருக்க வேண்டும்தான்.

  அரசியல் நடத்த ஒரு மேட்டரும் சிக்கலயா? எடு ஈழப்பிரச்சினையை என்று அரசியல் பண்ணும் தமிழ்நாட்டு உன்னத அரசியல் தலைவர்கள் போல அவர்கள் தமிழ்நாட்டு அரசியல் பற்றி ‘அறிக்கை' விட்டு அரசியல் பண்ணியிருக்க வேண்டும்தான்.

  ராஜீவை துப்பாக்கியால் ஒரு சிங்கள சிப்பாய் அடித்துக் கொல்ல முயன்றானே... அதைக்கூட தங்களது சதி என்று புலிகள் இயக்கம் அறிக்கை விட்டிருக்க வேண்டும்தான்.

  தண்டனைக்காலம் முடிந்தும் நளினியை வெளியே விடாமல் அடைத்து வைத்திருக்கும் காங்கிரஸ் அரசுக்கும், நளினியை சிறையில் சந்தித்து அவரை உள்ளே வைத்திருப்பதில் பெரும் முயற்சி செய்த பிரியங்காவுக்கு ஆகக் குறைந்தது ஒரு போஸ்ட் கார்டாவது அனுப்பியிருக்க வேண்டும்தான்.

  ராஜீவ் கொலை யார் செய்திருப்பார்கள் என இந்திய அரசாங்கம் குழம்பியிருந்த வேளை ‘புலிகள் தான் செய்தார்கள்' என அடியெடுத்துக் கொடுத்த மகானுபவன் சுப்ரமணியம் சுவாமிக்கு ஒரு கோயிலாவது கட்டியிருக்க வேண்டாமா புலிகள். அந்த கோட்டில் ரோடு போட்ட போலீசார், சி பி ஐ, அரசியல்வாதிகள், இந்திய நிதித்துறை..அட சீ நீதித்துறை எல்லாவற்றுக்கும் ஒரு பாராட்டுவிழா எடுத்திருக்கவேண்டாமா புலிகள்.

  ராஜீவ் செத்ததுக்காக 1 லட்சத்துக்கும் மேலே மக்களை 6 மாதத்தில் பலி வாங்கிய வீராங்கனை அன்னை சோனியாகாந்தியின் கால்தூசு பெறுவார்களா புலிகள்?

  சாகும் மக்களுக்காக தேர்தல் வேளை என்பதையும் பொருட்படுத்தாமல் உண்ணா நோன்பிருந்து உணவு துறந்த தமிழக அரசியல்வாதிகளுக்கு முன், கேவலம் இலங்கைத் தமிழர்களுக்காக செத்த பிரபாகரனின் தியாகம் எம்மாத்திரம்?

  சரி, உயிர்ப்பிச்சை கேட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உதவ டெல்லி போக முதல்வரால் முடியவில்லை. காரணம், உடல் நலக் குறைவு. ஆனால் அவரது பிள்ளைகளுக்கு பதவி வேண்டும் என்றவுடன் டெல்லிக்கு உடனே பறந்த மேன்மைகொள் தலைவனை விட்டுவிட்டு, கேவலம் காட்டில் மறைந்து, சதம் பெறாத உயிர்களை இன விடுதலைக்காகக் கொடுக்கும் ஒரு கூட்டத்தின் தலைவன் எப்படி தமிழினத்தலைவன் ஆகமுடியும்?

  ReplyDelete
 28. And on a cool note:
  It's true that we Srilankan Tamils are a bit more reluctant to mingle with Indian Tamils..and off course I'm ashamed of such behaviour. And as some body mentioned

  இலங்கைத் தமிழரும், இந்தியத் தமிழரும் கொண்ட ஒரே ஒற்றுமை, இருவரும் தமிழ் பேசுவதுதான் என்பது ஓரளவுக்கு உண்மை. முக்கியமாக யாழ்ப்பாணத் தமிழரின் வாழ்வியல் முறைக்கும், மலையாளிகளின் வாழ்வியல் முறைக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது.

  ReplyDelete
 29. nanbare, neengal ethaum sinthiungal

  இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சனைகளில் புலிகள் என்ன செய்திருக்கமுடியும்?
  இந்திய இறையாண்மை பொங்கி எழுந்திருக்கும் இதற்கெல்லாம் புலிகள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தால்.....
  ஏற்கனவே ஈழம் கிடைத்தால் தமிழகம் தனிநாடாகிவிடும் என்று குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டவர்களுக்கு புலிகளை எதிர்க்க இன்னும் அதிக வாய்ப்பாகியிருக்கும்..

  எல்லாவற்றையும் விட ஈழத்தவருக்கு அவர்களின் உயிரையே கையில் பிடித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் நம்மைப் பற்றி என்ன கவலைப்படமுடியும் அவர்களால்?  by
  vengat
  Trichi

  ReplyDelete
 30. nanbare, neengal ethaum sinthiungal

  இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சனைகளில் புலிகள் என்ன செய்திருக்கமுடியும்?
  இந்திய இறையாண்மை பொங்கி எழுந்திருக்கும் இதற்கெல்லாம் புலிகள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தால்.....
  ஏற்கனவே ஈழம் கிடைத்தால் தமிழகம் தனிநாடாகிவிடும் என்று குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டவர்களுக்கு புலிகளை எதிர்க்க இன்னும் அதிக வாய்ப்பாகியிருக்கும்..

  எல்லாவற்றையும் விட ஈழத்தவருக்கு அவர்களின் உயிரையே கையில் பிடித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் நம்மைப் பற்றி என்ன கவலைப்படமுடியும் அவர்களால்?  by
  vengat
  Trichi

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner