இலங்கை பிரச்சனையில் தமிழன் ஏன் மிக மிக மட்டமாக நடந்து கொள்கிறான்???


எப்படி பல போராளி இயக்கங்கள் இலங்கையில் தோன்றியதோ அதே போல்தான் இப்போது தாய் தமிழகத்தில் இலங்கை மக்களை பாதுகாக்க பல இயக்கங்கள் தோன்றி இருக்கின்றன.


இவற்றை எல்லாம் பார்க்கும் போது தமிழ்நண்டு கதைதான் எனக்கு ஞாபகம் வருகிறது. கதை தெரியாதவர்களுக்கு இதோ கதை . எல்லா பாட்டில்களிலும் இரண்டு நண்டுகள் இருக்கும் அதுவும் ஒவ்வோறு மாநிலத்து நண்டுகள், ஒருபாட்டிலில் இரண்டு பஞ்சாப் நண்டு ,ஒன்றில் கர்நாடகா ஒன்றில் கேரளா என்று பல் வேறு மாநிலத்து நண்டுகள்.
இரண்டு இரண்டு நண்டுகளாக பாட்டிலில் போட்டு விட்டார்கள்.கொஞ்சம் நேரத்தில் எல்லா மாநிலத்து நண்டுகளும் பாட்டிலை விட்டு வெளியே வந்து விட்டன. ஆனால் தமிழ் நண்டுகள் மட்டும் வெளியே வரவில்லை.

காரணம் ஒரு நண்டு ஏற முயற்ச்சிக்கும் போதே மற்ற நண்டு காலை பிடித்து வாரி விடும் இப்படி மாற்றி மாற்றி காலை வாரினால் எப்படி பாட்டிலை விட்டு வெளியே வர முடியும்.

நம் தமிழர்களின் ஒற்றமைக்கு இதை விட சிறந்த கதை வேறு ஏதும் இருந்து விட முடியாது மற்ற மாநிலத்தவர்கள் எல்லாம் ஒற்றுமையின் சிகரங்கள் ஒருவன் பம்பாயில் உதை வாங்கி விட்டான் என்றதும்எதிர் எதிர் நாட்டாமைகளான நிதிஷ்ம் லாலுவும் சேர்ந்து பகை மறந்து குரல் எழுப்பினார்கள். அதை பார்த்து மிரண்டு போய் மத்திய அரசு மாநில அரசை கேள்வி கேட்டது.

முரண்பாடுகளின் மொத்த உருவம் என்றால் அது தமிழ் இனமாக மட்டும் இருக்கும் .

எல்லோரும் செத்து வீழ்ந்து கொண்டு இருக்கும் போது ஜனாதிபதியின் போர் நிறுத்த கண்டிப்பு ஆறுதல் தருவதாக சொல்கிறார் நம் முதல்வர். அதனால் என்ன பயன்?

இலங்கை பிரச்சனையில் எப்போதும் குரல் கொடுத்த சுப வீரபாண்டியருக்கு இலங்கை பாதுகாப்பு பேரவையி்ல் அழைப்பில்லை.

தீவிர புலி எதிர்பாளர் மடியில் வைகோஉட்கார்ந்து கொண்டு புலி கர்ஜனை செய்து கொண்டு இருக்கிறார்.

இவர்கள் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி என்றால் உடனே ஸ்டாலின் தானும் மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறேன் என்கிறார்.

நக்கீரன் பத்திரிக்கைக்கு இலங்கை தூதர் மிரட்டல் விடுத்து இருக்கிறார் அதை பற்றி தமிழக பத்திரிக்கைகள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
அட்லிஸ்ட் கடைசி பக்கத்தில் ஒரு கண்டனத்தையாவது பதிவு செய்து இருக்கலாம் அதுவும் இல்லை.


போரில் சாவது இயற்க்கை என்கிறார் பிறகு அவர்கள் இறப்புக்கு பிறந்தநாள் கொண்டாட மாட்டேன் என்கிறார்.

மயிலை மாங்கொல்லையில் காங்கிரஸ்காரர்கள் கிளஸ்டர் பாம் போடும் இலங்கை ராணுவத்தை கண்டிக்காமல் புலிகளை ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள்.

சாஸ்த்திரி பவனில் கரி கட்டயாய் மாறியவனின் இறுதி ஊர்வலத்தை போட்டி் போட்டுக்கொண்டு எவருமே காட்டவில்லை. மக்கள் தொலைகாட்சி தவிர.

ஒரே ஒருவன் உதை வாங்கினாலும் அல்லது ஒருவனுக்கு பாகிஸ்தானில் தூக்குஎன்றாலும் அவ்வளவுதான் வட இந்திய மீடியாக்கள் இறக்கை கட்டி பறந்து தூக்கு தண்டனைக்கு பாக்கிஸ்தானில் காத்து இருக்கும் அவரின் அம்மா, பாட்டி, சித்தி கொழந்தன், ஒன்னுவிட்ட சித்தப்பா எல்லாம் டிவி மைக் முன் விசும்பி தீர்ப்பார்கள்.

நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள் ஒரே ஒருவன்தான் மாட்டி இருப்பான் ஆனால் தமிழர்களுக்கு அப்படியா நேர்கிறது.

சரி இலங்கை வேறு நாடு அந்த மக்களுக்கு எப்படி குரல் எழுப்ப முடியும் என்று சில தத்திகள் கேட்கும்.

450மீனவர்கள் இலங்கை கடற்படையால் இதுவரை சுட்டு கொள்ள பட்டார்களே, அவர்கள் எல்லோரும் இந்தியர்கள் இல்லையா?
அவர்களுக்கு ராஜபக்சேவா பிரதமர்?. அவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங்தானே.....
அந்த மீனவர்களின் பிரச்சனையை இதுவரை எந்த வட இந்திய மீடியாவும் விரிவாய் காட்டியதில்லை. எல்லாம் பேருக்கதான்.

காரணம் நமக்குள் இல்லாத ஒற்றுமைதான். இரு கை தட்டல்தான் ஓசை எழுப்பும் என்பதை எப்போது தமிழ் இனம் உணரும் என்று தெரியவில்லை. அப்படி உணராதவரை பல முத்துக்குமார்கள் பெட்ரோல் கேன் வாங்கி கொண்டுதான் இருப்பார்கள்.

வேறு என்ன செய்ய முடியும்....


உலகில் சகிப்புதன்மை அதிகம் இருக்கும் ஒரே இனம் நம் தமிழ் இனம்தான்.
(குறிப்பு)
பழைய பதிவு இது. ஆனால் இப்போது மட்டும் அல்ல எப்போதும் இந்த பதிவு பொருந்தும், எப்போதும் என்பது எந்த நூற்றாண்டிலும் பொருந்தும் என்பதாகும்...எனென்றால் நாம் தமிழர்கள்...


எழுதியது பிடித்து இருந்தால் தமிழ்மணத்தில் மற்றும் தமிளிஷ்ல் ஓட்டு போட மறவாதீர்கள்
அன்புடன்/ஜாக்கிசேகர்

26 comments:

 1. அஸ்கு புஸ்கு...
  நான் ஓட்டு போட்டு நீங்க பேரு வாங்கவா...????
  ( அப்பாடா???? நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்டு தமிழன் அப்படிங்குற பேரை காப்பாத்தியாச்சு.... )

  ReplyDelete
 2. ஜாக்கி!வந்து போகிறேன்:(

  ReplyDelete
 3. யோவ் நையான்டி உன்மையிலேயே உன்னுடைய நையான்டியை ரசிச்சேன். அதவிட நீதான்ய உண்மைதமிழன்

  ReplyDelete
 4. மன்னிக்கவும் ராஜ நடராஜன்

  ReplyDelete
 5. 450 தமிழக மீனவர்களை சிங்களன் சுட்டுக்கொன்றதை கண்டித்து
  ஒட்டுமொத்த தமிழகமும் குரல் கொடுக்கவில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்...

  தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மீனவர் சமுதாயம் கூட அதற்காக கிளர்ந்து எழவில்லை...

  அவர்கள் சிந்தாமல் சிதறாமல் வேடிக்கை பார்த்த காங்கிரசுக்குத்தான் வாக்களித்து உள்ளர்கள்..

  ReplyDelete
 6. நீங்கள் சொல்வது உண்மைதான்...

  நீங்கள் பாண்டி பக்கத்து அரியாங்குப்பமா?

  ReplyDelete
 7. தமிழர்களின் ஒற்றுமை சங்க காலத்தோட போச்சு போலேருக்கு .....

  ReplyDelete
 8. /////அஸ்கு புஸ்கு...
  நான் ஓட்டு போட்டு நீங்க பேரு வாங்கவா...????
  ( அப்பாடா???? நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்டு தமிழன் அப்படிங்குற பேரை காப்பாத்தியாச்சு.... )///// ஸ்அப்பபபப.......முடியல....முடியல......... கஷேந்திரன் விருதுநகர். இந்தியா

  ReplyDelete
 9. படிக்கவே அசிங்கமா இருக்கு....குற்ற உணர்ச்சி குத்துது..என்ன செய்யலாம்..எப்படி செய்யலாம்....இதே உணர்வுள்ள நாம் எல்லோரும் சேர்ந்து ஏதாவது செய்ய முயற்சி செய்வோமே?

  ReplyDelete
 10. "450மீனவர்கள் இலங்கை கடற்படையால் இதுவரை சுட்டு கொள்ள பட்டார்களே"
  who said they were only fishing?
  they were doing business (smuggling) with ltte in a war zone...ltte attacked SLNavy from fishing boats..so only fool would think that SLN will come close and check the identity and leave...
  was any fisherman killed now? or noone goes into war zone now?

  ReplyDelete
 11. //////காரணம் நமக்குள் இல்லாத ஒற்றுமைதான்..////
  அது மட்டுமில்ங்க... நம்ம தமிழ் ஆளங்கல்ல யாரும் டாடா பிர்லா அம்பானி மாதிரி பெரிய பணக்காரங்க முதலாளிங்க கிடையாது.. அது ஒரு பிரச்சனை காரணம்..( எல்லாத்துக்கும் துட்டு வேணும்மில்ல.... எவன் தருவான்....)

  ReplyDelete
 12. //படிக்கவே அசிங்கமா இருக்கு....குற்ற உணர்ச்சி குத்துது..என்ன செய்யலாம்..எப்படி செய்யலாம்....இதே உணர்வுள்ள நாம் எல்லோரும் சேர்ந்து ஏதாவது செய்ய முயற்சி செய்வோமே?//
  நானும் இதை வழிமொழிகிறேன்!

  நம்ம அரசியல வாதிகளை நெனச்சா வாயில அசிங்க அசிங்கமா வருது...ஆனா இதை சரி செய்ய நேர்மையான வழியில போனா வேலைக்கு ஆகாது...சாணக்கியதனம் வேண்டும். சத்யராஜ் படங்கள்ல வர மாதிரி செஞ்சா தான் உண்டு...

  ReplyDelete
 13. /*ஜுர்கேன் க்ருகேர்..... said...
  தமிழர்களின் ஒற்றுமை சங்க காலத்தோட போச்சு போலேருக்கு .....*/

  ஹா. ஹா... ஹா... உங்களை பார்த்தா எனக்கு பாவமா இருக்கு....
  என்ன இப்படி சொல்லுறீங்க.
  இப்பவும் தமிழன் சங்கம்லாம் வச்சி ஒத்துமையா தான் இருக்கான். நீங்கள் பார்க்க வில்லையா? ஜாதிக்கு ஏழு சங்கம் வச்சி, இனத்துக்கு இருபது சங்க வச்சி ஒத்துமையா இருந்து நாட்டுலே கலகம் மற்றும் கொள்ளை அடிக்கிறாங்களே அது உங்க கண்ணுலே படலியா????
  ஹையோ... ஹையோ....

  ReplyDelete
 14. இன்னா பண்ணலாம்னு சொல்லுப்பா

  நித்யன்

  ReplyDelete
 15. நீங்கள் சொல்வது உண்மைதான்...

  ReplyDelete
 16. தமிழர்களின் ஒற்றுமை சங்க காலத்தோட போச்சு போலேருக்கு .....

  க்ருகேர் நீங்கள் சொல்வத உண்மைதான்

  ReplyDelete
 17. /////அஸ்கு புஸ்கு...
  நான் ஓட்டு போட்டு நீங்க பேரு வாங்கவா...????
  ( அப்பாடா???? நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்டு தமிழன் அப்படிங்குற பேரை காப்பாத்தியாச்சு.... )///// ஸ்அப்பபபப.......முடியல....முடியல......... கஷேந்திரன் விருதுநகர். இந்தியா//

  நன்றி கஷேந்திரன்

  ReplyDelete
 18. படிக்கவே அசிங்கமா இருக்கு....குற்ற உணர்ச்சி குத்துது..என்ன செய்யலாம்..எப்படி செய்யலாம்....இதே உணர்வுள்ள நாம் எல்லோரும் சேர்ந்து ஏதாவது செய்ய முயற்சி செய்வோமே?//

  சிவப்பதிகாரம் படத்துல வர்றது போல ஏதாவது செய்தே ஆக வேண்டும். நன்றி ராஜ்

  ReplyDelete
 19. "450மீனவர்கள் இலங்கை கடற்படையால் இதுவரை சுட்டு கொள்ள பட்டார்களே"
  who said they were only fishing?
  they were doing business (smuggling) with ltte in a war zone...ltte attacked SLNavy from fishing boats..so only fool would think that SLN will come close and check the identity and leave...
  was any fisherman killed now? or noone goes into war zone now?//

  உங்கள் கூற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

  ReplyDelete
 20. //////காரணம் நமக்குள் இல்லாத ஒற்றுமைதான்..////
  அது மட்டுமில்ங்க... நம்ம தமிழ் ஆளங்கல்ல யாரும் டாடா பிர்லா அம்பானி மாதிரி பெரிய பணக்காரங்க முதலாளிங்க கிடையாது.. அது ஒரு பிரச்சனை காரணம்..( எல்லாத்துக்கும் துட்டு வேணும்மில்ல.... எவன் தருவான்....)//

  இந்த காரணஙம் கூட மிகச்சிறப்பா பொறுந்துதே

  ReplyDelete
 21. நம்ம அரசியல வாதிகளை நெனச்சா வாயில அசிங்க அசிங்கமா வருது...ஆனா இதை சரி செய்ய நேர்மையான வழியில போனா வேலைக்கு ஆகாது...சாணக்கியதனம் வேண்டும். சத்யராஜ் படங்கள்ல வர மாதிரி செஞ்சா தான் உண்டு...//

  நம்மளக்கு சாணிக்கியதனம் போதாது சத்யா

  ReplyDelete
 22. ஹா. ஹா... ஹா... உங்களை பார்த்தா எனக்கு பாவமா இருக்கு....
  என்ன இப்படி சொல்லுறீங்க.
  இப்பவும் தமிழன் சங்கம்லாம் வச்சி ஒத்துமையா தான் இருக்கான். நீங்கள் பார்க்க வில்லையா? ஜாதிக்கு ஏழு சங்கம் வச்சி, இனத்துக்கு இருபது சங்க வச்சி ஒத்துமையா இருந்து நாட்டுலே கலகம் மற்றும் கொள்ளை அடிக்கிறாங்களே அது உங்க கண்ணுலே படலியா????
  ஹையோ... ஹையோ....//

  நன்றி நைனா வழக்கம் போல் உங்கள் நையான்டிக்கு

  ReplyDelete
 23. இன்னா பண்ணலாம்னு சொல்லுப்பா

  நித்யன்//

  மானாட மயிலாட பாரு எல்லாம் சரியாயிடும்

  ReplyDelete
 24. நீங்கள் சொல்வது உண்மைதான்...//

  நன்றி சண் சிவா

  ReplyDelete
 25. You Are Posting Really Great Articles... Keep It Up...

  We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

  தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
  http://www.namkural.com.

  நன்றிகள் பல...

  - நம் குரல்

  ReplyDelete
 26. இங்கு கமெண்ட் எழுதிய நண்பர்களுக்கு் ஒரு பணிவான் வேண்டுகோள். தயவு செய்து நாம் அனைவரும் சேர்ந்து என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்.
  எங்கே எப்படி சேர்வது? எப்படி அணுகுவது இந்த பிரச்சனைய என்று சொல்லுங்கள். நம்மை போல் பிரபாகரன் நினைத்து இருந்தால் இவ்வளவு வருடம் போராடி இருக்க முடியுமா? நாம் எல்லோருமே அவரை கடவுளாக்கி ஹீரோவாகி ஒதுங்கி கொண்டோம். இனியாவது நமக்கு நாமே என்று முன்னெடுப்போம். அதற்கு ஒரு வழி இருந்தால் சொல்லுங்கள். தயக்கம் வேண்டாம்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner