பிரபாகரன்(மறைவு)குறித்தான செய்தி ஒரு பார்வை...


கொடுங்கோலன் மகிந்தா ராஜபக்சே ஏர்போர்ட்டில் என்றும் இல்லாத திருநாளாகஇலங்கை மண்ணை முத்தமிட்டு வி்ட்டு புலிகள் உடனான போர் முடிவுக்கு வந்து விட்டது என்று சொன்னதுமே, தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்கள் சற்று நிலை குலைந்து போனார்கள் என்பதே உண்மை.

முதல்நாளே ஆரிய ஊடகங்கள் ஒரு பி்ட்டு போட்டது போல் லேசாக செய்தியை கசியவிட்டன,உடனே அதை விண்டிவி மறுத்து செய்தி வெளியிட்டது. எல்லா இடத்திலும் செல்போனில் இதே பேச்சாக இருந்தது.

நேற்று காலை ஆங்கில ஊடகங்களில் டைம்ஸ் நவ் பிடிபாகரன் இறந்து விட்டார் ஒரு தீவிரவாதி அவர் நிறைய கொலைகள் செய்து இருக்கிறார். நமது பாரத பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்ற கொலைக்காரன் என்று செய்தி வெளியி்ட்டு கொண்டு இருந்தது.

சட்டென ஜெயா தொலைக்காட்சியை பார்த்தால் தப்பி ஓடும் போது பிரபாகரன் சுட்டு கொல்லபட்தாக பிளஸ் நியுஸ் போடவும் எல்லோரும் நொருங்கி போனார்கள்.

சட்டென என்டிடிவி வைத்து பார்த்தால் பிரபாகரன் பற்றி டாக்குமென்ட்ரி ஓடுகின்றது அதில் அவர்கள் சொன்னது போராளிகள் எல்லோரும் போராடிக்கொண்டு இருக்கும் போது அவரின் குடும்பம் சொகுசாக இருந்தது. அவரும் சொகுசாக இருந்தார் என்று அவர் தங்கிய ரகசிய அறையை காட்டி அதில் உள்ள லேட்டஸ்ட் எக்கியுப்மென்ட் எல்லாவற்றையும் விளாவரியாக ஒளிபரப்பி மகிழ்ந்தது.
மதிப்புக்குறிய ராஜபக்சேவிக்கும் இலங்கைக்கும் இனி நல்ல தொடக்கம். கயவன் தீவிரவாதி ஒழிந்தான், என்றெல்லாம் செய்தியை வெளியிட்டது...

மற்றோரு ஆங்கில வட இந்திய சேனல் பிரபாகரன் மகன் இறந்த போட்டோ என்று ஒருவர் கண்ணீல் சுடப்பட்டு இறந்த போட்டோவை காட்டியது.


மலையாள டிடி செனல்களில் பிரபாகரன் இறப்பு குறித்து ஒரு வயதான பெரியவர், அவர் தீவிரவாதி சகபோராளிகளை கொண்றவர் அது மட்டும் இல்லாம நமது அப்பாவி பிரதமர் ராஜீவை கொண்றவர் என்று நீ்ட்டி முழங்கினார்.

சன்டிவி வாயே திறக்கவில்லை பல மணிநேரம் கழிந்து சன் ,கலைஞர் பிளாஷ் செய்திகளில் இலங்கை அரசு அறிவித்து இருக்கின்றது என்று சொல்ல மேலும், எல்லோரும் குழம்பிபோனார்கள்.


பதிவர்களில் பல பேர் பாடைகட்டி வத்தி கொளுத்தி விட்டனர், இன்னும் சில பேர் ஒழிந்தான் தீவிரவாதி என்று ஏதோ வீரப்பன் இறந்தது போல் குறுஞ்செய்தி அனுப்பி மகிழ்ந்தனர்.

எதாவது அசம்பாவிதம் நடக்கும் என்று சென்னை மக்கள் எல்லோரும் எதிர்பார்த்து மக்கள்வீட்டி ற்க்குள் முடங்க ஆரம்பித்தனர். தென்மாவட்டத்தில் சில சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவ்வளவே.

இரவு பழ நெடுமாறனால் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தி வெளியான போதுதான் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டோம்... ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் கயவர்களின் முகத்திரை நேற்று கிழிந்து விட்டது எவ்வளவு கொண்டாட்டங்கள்,எப்படியெல்லாம் திரித்து செய்திகளை வெளியிட்டு மகிழ்ந்தார்கள் வட இந்திய மீடியாக்கள்.

தமிழனின் எழுச்சி மற்றும் போராட்ட குணம் கொஞ்சம் கொஞ்சமாக நமத்து போக ஆரம்பித்து விட்டதோ????

அன்புடன் /ஜாக்கிசேகர்

11 comments:

 1. eluchiyaavathu poraatta gunamaavathu athellaam endro mudinthu vittathu

  indaiya thamilan pannaatu company kodukkum kaasukkum vaarakkadaisi kudi matrumkoothukkum adimai ahi pala naatkal agindrana

  ReplyDelete
 2. ஜாக்கி சேகர்
  இதெல்லாம் முன்னாடியே தெரிந்தது தானே இந்த இந்திய நாய்கள் எல்லாத்துக்கும் தமிழன் என்றால் இளக்காரம் தான். நம்ம தங்க தலைவர் கருணாநிதி போல அரசியல் வாதிகள் இருக்கும் வரை தமிழனக்கு எங்க போனாலும் ஆப்பு தான். நம்மவரும் கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லாமல் அய்யா கருணாநிதிக்கு ஓட்டு போட்டவங்க தான். எல்லாம் தேவை தான்.இந்த சொட்டை தலையன் ஒரு வார்த்தையாவது டெல்லியில் போய் சோனியா கிட்ட பேசினானா. அவன் பேசினது எல்லாம் எங்கள்ளுக்கு 3 காபினெட் போஸ்ட் வேணும் சொல்லி தான். எங்க போய் சொல்றது.

  இப்போ கூட இந்த உலகத்திலே இருக்கிற ஒரு நாய் கூட மிச்சம் இருக்கிற தமிழரை பத்தி நினைகிலே. நம்ம எல்லாம் என்ன தப்பு செய்தோம் எனுக்கு தெரியிலே சார்...

  ReplyDelete
 3. இது போன்ற தவறான செய்திகைப் பரப்புவது கண்டனத்துக்கு உரியது..

  ReplyDelete
 4. ஆஸ்பத்திரியில் படுத்துக் கிடந்த முதல்வர் இன்று டெல்லி பயணம்.

  இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்...

  நித்யன்

  ReplyDelete
 5. இவ்வுலகில் வாழும் கயவர்களும், துரோகிகளும் மாண்டு போக கூடிய சீக்கிரம் பூகம்பம் எதுவும் நிகழாதோ?.

  ReplyDelete
 6. Really the death news of Prabakaran is a hapy news for the real Tamilan - Indian - Eala Tamilan and other people through out the world Really a it is a happy news - Now everybody have a peaceful world and looking for developments and improvements

  ReplyDelete
 7. 30 வருடங்களில் கழகங்கள் இன உணர்வு என்பதை அறவே அழித்து விட்டு சாலமன் பாப்பையாவின் பட்டி மன்றமும், தன்னை புகழ்ந்து வாலியின் லாலி பாடல்களும் தான் தமிழுணர்வு என்பதை போதித்து விருகிறது..


  இதையே எடுத்துச் சொல்வதாகத்தான் இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

  அதைவிட எவன் செத்தா எனக்கென்ன மவனுக்கும் மவளுக்கும் அமைச்சர் பதவி வேண்டி பிச்சை எடுக்க போய் விட்டார் தமிழின தன்மான தலைவர்.. இதையும் சேர்த்து எழுதுங்கள் நண்பரே.

  ReplyDelete
 8. tamil eena talaivar
  tamil eelam pera uthavamaattaar
  ezhavukku kavithai vendumaanaalumezhuthuvaar.
  than udanpirappugalukku.

  ReplyDelete
 9. பிரபாகரன் மரணம் குறித்த செய்திகள் பொய்யாக வேண்டும் என்பதே என் மன நிலை

  ReplyDelete
 10. I don't understand the people that who are happy about his death. Do you people think we took weapons to fight back just for fun. We have been fighting for 61 years. We did fight for 28 yrs through political venue, nothing happened. They forced us to take the arms. How do you know people all Eelam people are happy abt?? Everyone is crying abt this news. You people just watch cinema and thats your life there. We fight for our freedom, and not like you people plight for north indians.

  ReplyDelete
 11. அவர் உயிரோடு இல்லை.அனவைரும் யாதார்த்தை ஏற்றுக்கொள்ளவேண்டும்.இதே ஆராச்சியை செய்து கண் பூத்து விட்டது.மனம் ஏற்று கொள்ளவில்லை வெகு நாள்

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner