
எத்தனை முறை பேசி இருப்போம் எத்தனை முறை கெஞ்சி கூத்தாடி இருப்போம், அவர் அப்படித்தான் நேற்றுவரை சொன்னார், இலங்கை இறையான்மைக்கு வேட்டு வைக்கும் விடுதலைபுலிகளை ஒழிப்போம் என்றார் ..
எல்லோரும் சொன்னார்கள் புலிகள் வேறு மக்கள் வேறு அல்ல இந்த போராட்த்தை புலிகள் நடத்துவதே மக்களுக்காத்தான் என்று மன்றாடினோம் . கிஞ்சித்தும் காது கொடுத்து கேட்காமல் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார் பிரபாகரனை பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும் என்றார் சூளுரைத்தார் ...
கலைஞர் எதாவது தீர்மானம் நிறைவேற்றினாரா? அல்லது பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று பத்திரிக்கையில் பேட்டி ஏதாவது கொடுத்தாரா? அவர் தமிழன துரோகிதான்....
போர் நிறுத்தம் வேண்டும் என்று மனித சங்கிலி நடத்தியவர் கலைஞர் அதனை பார்த்து எள்ளி நகையாடியது யார், மனசாட்சியோடு பதில் சொல்லுங்கள், அதை விட எறியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் போரில் மக்கள் இறப்பது இயல்பு என்றார் மறுநாளே நான் அப்படி சொல்லவில்லை என்றும் சொன்னார்....
ஆமாம் கலைஞர் துரோகிதான்....
இதுவரை எதிர்கட்சி தலைவராக இருந்த ஜெ இதுவரை இலங்கை பிரச்சனை பற்றி பேசவில்லை குறைந்த பட்ச கண்டனம் கூட தெரிவிக்கவில்லை...இப்போது தேர்தல் நேரத்தில் வருத்தப்டுகின்றார்...
ஈழத்தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியை இழந்தவர் கலைஞர் ... ஆமாம் அவர் துரோகிதான்..
ஒரே ஒரு முறைதான் புலிகளுக்காக பேசினார் வைகோ தேசிய பாதுக்காப்பு சட்டம் போட்டு ஒன்றரை வருடம் ஈழத்துக்காக எப்போதும் குரல் கொடுக்கும் அந்த நண்பரை கம்பி எண்ண வைத்தார்.
பாசிச வெறிப்பிடித்த ஜெயலலிதா என்று கர்ஜித்தார்..சீமான் போல் மூன்று மாதம் நான்கு மாதம் அல்ல ஒன்றரை வருடம் கொசுக்கடியில் உள்ளே இருந்தார் ....
ஆமாம் கலைஞர் தமிழின துரோகி மற்றும் நாடகம் ஆடுபவர்தான்.....
பிரபாகரனை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றவருடன் வைகோ கூட்டு வைத்தார்
அமாம் கலைஞர் இன துரோகிதான்
நேற்று வரை மத்திய அரசில்அங்கம் வகித்து விட்டு இன்று ஜெவுடன் கூட்டு வைத்துஈழப்பிரச்சனையில் கலைஞர் துரோகம் செய்து விட்டார் என்று சொல்கிறார்...
ஆமாம் கலைஞர் தமிழின துரோகிதான்.....
அன்று வைகோ கைதுக்கு பிறகு யாரும் பேசவில்லை மீறி பேசியவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளே தள்ளப்பட்டார்கள் யாரும் பேசவில்லை பேசவும் பயம். ஏன் அம்மாவாசை இரண்டாம் நாள் என்று கவிஞர் தாமரையால் வருனிக்கப்ப்ட்ட கலைஞர் ஆட்சியில் கூட இந்தியாவில் விடுதலைபுலிகள் இயக்கம் தடை செய்யப்ட்ட இயக்கம்தான்...
ஆனால் எத்தனை பேர் பேசினார்கள் முறையே அமீர், சீமான், தாமரை,சுபவீ, கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத், என்று எத்தனை பேர் வாய் கிழிய பேசினார்கள் என்ன நடந்தது எல்லோருமா? கைது செய்யப்ட்டார்கள் அவர்கள் மீது வெளிவரமுடியாத வழக்குகளா? கலைஞர் போட்டார்
சீமான்,நாஞ்சில் சம்பத் மட்டும் கைது செய்யப்பட்டார்கள் இரவரும் விடுதலை ஆனார்கள் வெளியே வர முடியாத வழக்கு போட்டு உள்ளே தள்ளுவது பெரிய விஷயம் இல்லை...
ஆம் கலைஞர் தமிழின துரோகிதான்
அதை எல்லாம் விடுங்கள் இறந்த முத்துக்குமார் உடலில் புலிக்கொடி போர்த்தப்பட்டது புலித்தலைவர் பிரபாகரன் போட்டோ வெகு காலத்துக்கு பிறகு தமிழகத்தில் வெளியே வந்தது அதனை ஜெ வாக இருந்து இருந்தால் அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருப்பார்...
ஊர்வத்தில் பிரபாகரன் போட்டோ எடுத்து வந்தவர்கள் எல்லாம் பொடாவில் கைது செய்யப்பட்டு உள்ளே போய் இருப்பார்கள் என்பதே நிதர்சன உண்மை....
ஏன் முத்துக்குமார் பினம் அன்றே புதைக்கப்பட்டு அப்படி ஒரு நபர் இருந்தான் என்று வெளி உலகத்துக்கு தெரியாத அளவுக்கு செய்து இருப்பார்
அம் கலைஞர் நடிப்பவர்தான்....தமிழின துரோகிதான்
எந்த புரட்சி பண்ணி வந்தார் அவர் ? அவரை புரட்சித்தலைவி என்று சொல்லுகிறீர்கள் வள்ளுவர் கோட்டம் மற்றும் ஐயன் வள்ளுவருக்கு சிலை வைத்தான் அது போதும் அதனால்தான் அவன் தமிழின தலைவர் என்று பெயர் போட்டுக்கொள்ளலாம் தப்பில்லை ....
எந்த மூச்சியை வைத்துக்கொண்டு இப்போது மட்டும் காப்பாற்றங்கள் என்று சொல்லுகிறீர்கள் அன்று தொண்ட்ர் நிதியில் 50 ஆயிரம் ருபாய் கொடுத்ததை கூட பிரபாகரன் வாங்கவில்லை (ஜுவி செய்தி) ஆனால் இன்று கூட கலைஞர் பிரபாகரன் என் நண்பர் என்று சொல்லுகிறார்....
அமாம் கலைஞர் துரோகிதான்.....
கலைஞரோடு இப்போது இருப்பவர்கள் ஈழத்துக்காக பல கள போராட்டங்கள் நடத்திய சுபவி, திருமாவளவன் போன்றவர்கள்தான்... ஆம் கலைஞர் துரோகிதான்
நேற்றுதான் அவருக்கு ஈழத்மிழர்கள் படும் துயரம் தெரிந்ததாம் அதை இப்போதாவது சிடி கொடுத்து புரிய வைத்த சாமியார் ரவிசங்கர் அவர்கள் கோடான கோடி நன்றிகள்....
இப்போது ஜெ சொல்லி விட்டார் தனி ஈழம் மட்டுமே தீர்வு என்று சொல்லி இருக்கின்றார் இந்த தேர்தலில் தமிழ் இன துரோகிகள் கலைஞர், திருமா போன்றவர்கள் தோற்க்கட்டும் அம்மா வரட்டும் தனி ஈழம் மலரட்டும் சந்தோஷம்.. வரவேற்க்கின்றோம்...
கலைஞர் புலிகளை கண்முடித்தனமாக ஆதரித்ததும் இல்லை எதிர்த்து்ம் இல்லை அதனால் கலைஞர் துரோகிதான் நாடகம் நடத்துபவர்தான்....
கலைஞர் மீது எனக்கும் கோபம் இருக்கின்றது காங்கிரஸ் மீதும் அதை விட கோபம் இருக்கின்றது. உங்கள் கோபத்தை காங்கிரஸ் மீது காட்டுங்கள்...
150நாள் எஸ்டேட்டில் போய் ஓய்வெடுத்து விட்டு வரவில்லை எப்போதும் செய்திகளில் அறக்கையில் இருக்கும் அந்த 85 கிழவன் தமிழின துரோகிதான், ஆம் நீங்கள் சொல்வது போல் அவர் தமிழர்களுக்காக என்ன செய்தார், ? அவர் குடும்பத்தினர் மட்டும் வளர்ந்ததை தவிர ?
சொல்லுங்கள் அதை தவிர உங்களால் என்ன செய்ய முடியும்.... நல்லவேளை தாமரை முதல்நாள் என்ற சொல்லாமல் இரண்டாம் நாள் என்றார் பரவாயில்லை அந்த அளவுக்காவது பெயர் வாங்கி வைத்து இருக்கின்றாரே?

ஒரு கதை நினைவுக்கு வருகின்றது தினமும் பிச்சைக்காரனுக்கு ஒரு பெண் சோறு போட்டால் ஆனால் பக்கத்து வீட்டுக்கார பெண் அந்த பிச்சைகாரனுக்கு எச்சில் கையில் கூட காக்கா ஓட்டாதவள்..
ஒருநாள் தினமும் பிச்சை போடுபவளுக்கு உடல்நிலை சரியில்லை, அது மட்டும் இல்லாமல் அவளே கஞ்சிசாதம் சாப்பிட்டு கொண்டு இருந்தாள் அவளுக்கு மட்டும் கொஞ்சம் வைத்து இருந்தாள்.... அதனால் அன்று அந்த பிச்சைகாரனுக்கு
பிச்சைஇல்லை என்று சொல்லி விட்டாள்...என்னைக்கும் பிச்சை போடதவ அன்னைக்கு என்று பார்த்து கொஞ்சம் சாப்பாடு அந்த பிச்சைக்காரனுக்கு போட்டாள்...
அதற்க்கு அந்த பிச்சைகாரன் இப்படி சொன்னான்..
என்னைக்கும் போடற தேவிடியா பிச்சை போடலை
என்னைக்கும் போடாத மகாராசி இன்னைக்கு போட்டு்ட்டா... என்று சொன்னானாம் .
இது எப்படி இருக்கு???
(குறிப்பு /கட்ந்த சில பதிவுகளின் பின்னுட்டத்தில் நான் கலைஞர் விட்டு பக்கத்து விட்டுகாரன் போல் சிலர் எழுதினார்கள். நான் ராதகிருஷ்ணன் ரோட்டில் கடற்கரை செல்லும் வேளையில்,சட்டென மனசு மாறி சினிமா பார்க்கும் ஆசையில் கோபாலபுரம் வழியாக சத்தியம் தியேட்டர் செல்வேன். அவ்வளவே கலைஞருக்கும் எனக்குமான சம்பந்தம்...)
அன்புடன் ஜாக்கிசேகர்
where is the post
ReplyDeleteஇது என்ன ஏட்டிக்கு போட்டியா... அதிகாரத்தில் இருப்பவர்களிடம் இருந்த தான் ஏதேனும் எதிர்ப்பார்க்க முடியும். மத்தியிலும் , மாநிலத்திலும் ஆட்சியில் உள்ளவர்கள் செய்யாததையா அவறால் செய்ய முடியுமா ? இதவே ஜெயா ஆட்சியில் இருந்தால் மு.க வின் நாடக பட்டியல் பல மடங்கு உயர்ந்திருக்கும். :)
ReplyDelete//நேற்று வரை மத்திய அரசில்அங்கம் வகித்து விட்டு இன்று ஜெவுடன் கூட்டு வைத்துஈழப்பிரச்சனையில் கலைஞர் துரோகம் செய்து விட்டார் என்று சொல்கிறார்..//
ReplyDeleteஈழம் பற்றி பேசுவது அன்பும்ணியின் வேலை அல்ல அது பிரணாப் முகர்ச்சியின் வேலை என்று சொன்னவர்கள் ஆயிற்றே அவர்கள். வன்னிய ஒற்றுமை ஓங்குக
நண்பரே,
ReplyDelete/ * போர் நிறுத்தம் வேண்டும் என்று மனித சங்கிலி நடத்தியவர் கலைஞர் அதனை பார்த்து எள்ளி நகையாடியது யார், மனசாட்சியோடு பதில் சொல்லுங்கள் */
ஜெ உண்ணாவிரத்தை கலைஞர் அவர்கள் எள்ளி நகையாடவில்லையா?
/ * ஈழத்தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியை இழந்தவர் கலைஞர் ... ஆமாம் அவர் துரோகிதான்.. */
1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் நெருக்கடி நிலை எதிர்த்த காரணத்தால் ஆட்சியை இழந்தவர் கலைஞர். அன்றைய காலகட்டத்தில் ஈழத்தில் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிட வேண்டியது.
1991 ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக அதே ஜனவரி 30 ஆம் தேதியில் ஆட்சியை இழந்த காரணத்தை இந்த பதிவில் படிக்கவும்
http://karikalan-karuthu.blogspot.com/2009/02/blog-post.html
1983 ஆம் ஆண்டு தான் இலங்கை இனப்பிரச்சினை தலைதூக்கிய சமயத்தில் அவரின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
/*கைது செய்யப்ட்டார்கள் அவர்கள் மீது வெளிவரமுடியாத வழக்குகளா? கலைஞர் போட்டார்சீமான்,நாஞ்சில் சம்பத் மட்டும் கைது செய்யப்பட்டார்கள் ஆனார்கள் வெளியே வர முடியாத வழக்கு போட்டு உள்ளே தள்ளுவது பெரிய விஷயம் இல்லை... */
அப்பொழுது எது பெரிய விஷயம்
//நேற்று வரை மத்திய அரசில்அங்கம் வகித்து விட்டு இன்று ஜெவுடன் கூட்டு வைத்துஈழப்பிரச்சனையில் கலைஞர் துரோகம் செய்து விட்டார் என்று சொல்கிறார்..//
இவர் கட்சி மற்றவர்களுக்கு எடுத்து காட்டாக செய்து இருக்கலாம் அல்லவா?
ஆமா, ஜெயலலிதா எப்பவுமே பண்ண மாட்டாங்க.
ReplyDeleteகருணாநிதி பண்ணினேன், பண்றேன், பண்ணிகிட்டே இருப்பேன்னு பொய்ச் சொல்லி முதுகுல குத்துகிறார். சரி, ஏதாவது பண்ணுவார்னு சும்மா இருந்தா ஒரு மயித்தையும் புடுங்க காணும். தெனம் தெனம் நூத்துக் கணக்குல செத்துக்கிட்டு இருக்கிறாங்க. இதுக்கு பெயர் தானே பக்கத்திலே இருந்து குழிப் பறிக்கிறது ? இதே, இவருக்கு வேண்டிய துறைகள வாங்கும்போது மத்திய அரச மெரட்டி வாங்க முடிஞ்சதே ? இவருக்கு எது முக்கியமா படுத்துன்னு அப்பட்டமா தெரியுதே ?
இதுக்கு முன்னது எவ்வளவோ மேல் இல்லையா ?
கலைஞர் ஏன் வீணாக பொய் சொன்னார். கலைஞரின் நாடகத்தால் ஈழத்தமிழரின் வேதனைகள் அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை.
ReplyDeleteஎதிர் வீட்டுக்காரன் எதிரி. பக்கத்துக்கு வீட்டுக்காரன் தோழன், நம்பிக்கையானவன், நீங்களும் உதவி செய்றீங்க, அவனும் உதவி செய்வான்னு நம்பி.
ReplyDeleteஉங்க வீட்லே பெரியவங்க யாரும் இல்லை. ஒருத்தருக்கு உடம்பு முடியாம போகுது. மருந்து கொண்டுவரேன்னு சொல்லி பக்கத்து வீட்டுக்காரன் உங்கக் கிட்டே இருந்து பணம் கொண்டு போறான். கேட்டாக்கா, இந்த வரேன், இந்த வந்துட்டேன்னு சொல்றான். ஒரு நாளாச்சி, ரெண்டு நாளாச்சி, ஒரு வாரமாச்சி, ஒரு மாசமாச்சி வரல. உயிர் போயிட்டு இருக்கு.
இப்போ சொல்லுங்க, இதுல யார் மேல் - பக்கத்து வீடுக்காரனா, எதிர் வீட்டுக்காரனா ?
ஜெ துரோகின்னு எல்லாருக்கும் தெரியும் ஆனா கலைஞர் தமிழ் தமிழன்னு சொல்லியே எல்லோரயும் நம்பவைத்து கழுத்தை அறுக்கும் ஜென்மம்
ReplyDeletejober understan drealise the pain of tamilan. in london 28 ae parameswaran doing fast last 22 days.CM doin 6 hour what a media coverage .itha paddhi news varudha?
ReplyDeleterealise if our childran runnin for life then what we will do.no need to put vote do jaya .but don't support karunanidhi in this matter.
i am rajasthan confomly i am telling i will spend my money 5000 thousand rupess for my travel .i will put my vote to vai. ko
conrass varakudahu
அன்பு உடன்பிறப்பு ஜாக்கி அண்ணனுக்கு வணக்கம்..........
ReplyDeleteமன்னிக்கவும்...... உங்கள மாதிரி hardcore சப்போர்டர்ஸ் இருப்பதால் தான் ஜெவும் கலைஞரும் மாறி மாறி ஆட்சிக்கு வந்து, நாட்டை கெடுத்தது மட்டும் அல்லாமல், உங்களை போல புத்தி உள்ளவர்களை கூட சிந்திக்க விடாமல் செய்து விட்டார்கள். பரிதாபமாக இருக்கிறது.
ReplyDeleteகலைஞர் 'கபட' வேடதாரி! இது வரை இந்திய அரசு பொறுப்பில் இருந்து கொண்டும் அந்த நடவடிக்கையில் கூட்டணி கட்சி என்ற முறையில் அதிக தொல்லை மக்களுக்கும் புலிகளுக்கும் கொடுத்தது அவரே!! ஆனல் ஜெயலலிதா விரோதியாக இருந்த பின்னர் நண்பராக (நிலைமையை சீர் தூக்கிப் பார்த்து )ஆனவர்! நயவஞ்சகமும் துரோகமும் ஜெயலிதாவின் எந்த கால அறிக்கையிலும் இல்லை!! விரோதி என்று நினைத்தவர் உயிர் நண்பராக மாறியது ஒரு இன்ப அதிர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும்!!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHa ha. Good joke.
ReplyDeleteWe cannot send Pranab Mukahjee as we wish, he needs a invittation from Srilankan Govt. Who has said this. The ***R BALU
Not very far, just before 4 months. If we cannot send someone to the country where we help a lot, then why does the diet practice by this old man.
Yes, Kalingar is not a "Tamizh thuroki" worser than that. Cheap mentality person.
We cannot send Pranab Mukahjee as we wish, he needs a invittation from Srilankan Govt. Who has said this. The ***R BALU
ReplyDeleteNot very far, just before 4 months. If we cannot send someone to the country where we help a lot,esdarday tay have iven 100 crore,yarru appan vittu casu?
//விரோதி என்று நினைத்தவர் உயிர் நண்பராக மாறியது ஒரு இன்ப அதிர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும்!!//
ReplyDeleteஜெயலலிதாவுக்கு உயிர் நண்பராக இருந்த சங்கராச்சாரியார் கதை தெரியாதா
நல்ல கருத்துக்கள்
ReplyDeleteகருணாநிதி அடிவருடிகள் என்றும் திருந்த போவதில்லை. கல் மனம் கூட இறங்கும் ஈழ தமிழர்களின் நிலயை பார்த்தால். இந்த அடிமை நாய் காங்கிரஸ் க்கு கொடி பிடிக்கிறது.
ReplyDeleteஎல்லோருக்கும் ஒரே பதில் கருனாநிதி ஒரு தமிழின துரோகி என்று நான் முன்பே சொல்லிவிட்டேன்....
ReplyDeleteno further argument
பின்னுட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்
From my point of view Eelam tamilians never believed in Jeyalalitha. But they relied on Karunanidhi which he betrayed.
ReplyDelete