கலைஞரை மட்டும் ஏன் எல்லோரும் திட்டுகிறார்கள்?



கலைஞருக்கு வக்காலத்து வாங்குவது இந்த பதிவின் நோக்கம் அல்ல, ஆனால் கலைஞரை மட்டும் ஏன் எல்லோரும் திட்டு கிறார்கள் என்பதை சற்று யோசித்தால் கிழிள்ளவைதான் பதிலாய் வருகின்றது....


உளவியல் ரீதியாகவே இதை பார்ப்போம் பொதுவாக தமிழனுக்கு நம்ம அக்மார்க் கலரான கருப்புக்கலரில் எவன் முன்னேறினாலும் பிடிக்காது... ச்சே ச்சே இன்னா சார் அப்படி திங் பன்றிங்க, அப்படி எல்லாம் கிடையாது சார் , நாங்க கலர் பார்க்கமாட்டோம். சரி அப்படின்னா சொளக்கார் பேட் புல்லாவும் சேட்டு, எப்படி வந்தான், இன்னமும் கிராமத்துல வட்டி மேல வட்டி போட்டு நம்ம ஆள் பணத்தை முழுசா அட்டை பூச்சி போல உறியறானுங்களே அது எப்படி?


இதுவே நம்ம ஆள் பணத்தை வட்டிக்கு நியாயமா கொடுத்தாலும் அவனை எமாத்துறதுலயும் அவனை கவுக்கறதுலயையும் உறுதியா இருப்பான்.

அதே போல தமிழை தப்பா பேசனும் அப்படி பேசறவனைதான் தமிழ்ன் நம்புவான் இதை தனது பிதாமகன் படத்துல கூட கின்டல் செய்து இருப்பார் பாலா...


ரெண்டாவது தாழ்த்தபட்ட இடத்துல இருந்து மேலை வந்தவன் எப்படி இவ்வளவு செல்வ செழிப்போட இருக்கறது, இதுவே அவன் உயர்ந்த சாதியா இருந்தா கேள்வியே கிடையாது....

தமிழ் நாட்டுல ஒரு சேட் தப்பா தமிழ் பேசி கோடியை சுருட்டுலாம், வெள்ளையா இருந்தா அவன் நல்லவன் என்ற நிலைப்பாடு நம்ம சமுகத்துல காலம் காலமா இருக்கு...

ஆங்கில புலமை மட்டும் இருந்தாதான் வட இந்திய சேனல்கள் எல்லாம் மதிக்கும் இதற்க்கு கூட அன்பே சிவம் படத்தை உதாரணத்துக்கு சொல்லலாம் மூஞ்சு கோனையான கமல் மாதவனுக்கு நல்லதுதான் செய்வாரு ஆனா அவன் நம்பறதும் பேசி பழக ஆசைப்படுவதும் பிராடு கேரக்டர்ல நடிச்ச யூகிசேதுகிட்டதான்... ஏன்னா அவன் இங்கிலி்ஷ் பேசுவான் அவ்வளவுதான்...



25 பைசா எடுத்துக்கிட்டு வந்து சென்னையில் வளர்ந்த விஜிபி பன்னிர்தஸை ஒத்துக்குவோம் பெட்ரோல் பங்குல பெட்ரோல் போட்ட அம்பானியை ஒத்துக்குவோம் இன்னம் நிறைய சொல்லலாம்


கலைஞர் அப்ப யோக்கியமா என்ற கேள்வி நிச்சயம் கேட்பார்கள் அவர் யோக்கியம் என்று நான் சொல்ல வில்லை அவர் மீதும் தவறு இருக்கின்றது ஆனால் அவரை மட்டும் குற்றம் சொல்வதைதான் நான் வன்மையாக கண்டிக்கிறேன்


கலைஞர் செய்த ஒரே தப்பு தமிழனாக பிறந்ததும், பார்பானியத்தை எதிர்த்ததும், திராவிடத்தை பரப்பியதும்தான், பார்பானியத்தை எதிர்பவர்கள் எல்லொரும் நம்மை பொறுத்தவரை கேட்டவர்களே....
எனென்றால் அவர்கள் எல்லோரும் சொல்லும் இடத்தில் இன்னமும் இருக்கின்றார்கள். (தினமலர் இந்து துக்ளக்)
நாம் கேட்டு கொள்ளும் இடத்தில் இன்னமும் இருக்கின்றோம் அவ்வளவுதான்.....

பார்பானியத்தை எதிர்த்த கோபம்தான் கலைஞரை திரும்பிய பக்கம் எல்லாம் தாக்குகின்றது...


அன்புடன்/ஜாக்கிசேகர்

23 comments:

  1. நிறைய வாசகர்கள், நிறைய எதிர்பார்ப்புகள் .சிறு வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள்.உங்களின் இந்த ஆக்ரோஷமும் கோபமும் நடுநிலையோடு இருந்தால் மிகவும்மகிழ்வோம்.
    we are from our own nation

    Jeeavaflora

    ReplyDelete
  2. நன்றி ஜீவா தாங்கள் வருகைக்கும் கருத்துக்கும் உண்மைதான் தவற எல்லோர் மீதும் இருக்கும் போது ஒருவரை மட்டும் வசவு பாடுவது ஏன் என்பதே பதிவின் நோக்கம்

    ReplyDelete
  3. ஜாக்கு இப்பத்தான் அண்ணன் அப்துல்லா வீட்ல தும்ப விட்டுட்டு வாலைப் பிடிக்கிற மாதிரின்னு சொல்லிட்டு வந்தேன்.நீங்களும் மூலத்தை விட்டுட்டு பிரள்கிறீர்கள்.நல்லா யோசிங்க அண்ணே:)

    (எனக்கு திடீர்ன்னு ஒரு சந்தேகம்.எல்லோரும் குழு பிரிச்சிகிட்டுத்தான் பதிவிடுகிறீர்களா என்று:))

    ReplyDelete
  4. தலைவரே நான் அதிகம் யார் கூடயும் பேச மாட்டேன் இது என் கருத்து அவ்வளவுதான் நன்றி ராஜ நடராஜன்

    ReplyDelete
  5. அம்பானியும் மற்றவர்களும் தமிழினத்தலைவன் என்று தனக்குத்தானே பட்டம் கொடுத்துக்கொண்டு ஏமாற்றுவது இல்லை.

    மற்றும் கருணாநிதி ஒன்றும் தாழ்த்தப்பட்டவர் இல்லை.தேவதாசி பரம்பரையில் வந்தவர்,பார்ப்பனிய வித்தில் வந்தவர்,எனவே கருணாநிதி ஒரு பார்ப்பனர்.

    ReplyDelete
  6. நன்றி ராகவன் தகவலுக்கும் வருகைக்கும்

    ReplyDelete
  7. ஏன் இந்த உண்ணா விரத நாடகம் இன்று கொஞ்சம் தி.மு.க.ஆதரவு இல்லாமல் நடுனிலமயோடு பதிவு போடுங்கள்

    ReplyDelete
  8. //உளவியல் ரீதியாகவே இதை பார்ப்போம் பொதுவாக தமிழனுக்கு நம்ம அக்மார்க் கலரான கருப்புக்கலரில் எவன் முன்னேறினாலும் பிடிக்காது..//

    அதானே ஏன் சோனியாவையும் (அக்மார்க் வெள்ளைங்க) எதிர்க்கறாங்க ஒன்னும் புரியலப்பா...

    //கலைஞர் செய்த ஒரே தப்பு தமிழனாக பிறந்ததும், பார்பானியத்தை எதிர்த்ததும், திராவிடத்தை பரப்பியதும்தான், பார்பானியத்தை எதிர்பவர்கள் எல்லொரும் நம்மை பொறுத்தவரை கேட்டவர்களே...//
    மாநிலத்தில் ஆட்சி, மத்தியில் வேண்டும் என்று கேட்ட அமைச்சகம் இன்னும் என்ன வேண்டும் இவருக்கு? கலைஞர், சன் தொலைக்காட்சிகள், பல வார தின இதழ்கள் இது பத்தாதா?

    ReplyDelete
  9. கருணாநிதி, மற்றும் அவர் பிள்ளைகள் செக்க செவேல் என்று தானே இருக்கிறார்கள்? அதனால் சிவப்பை நம்புவான், கருப்பை வெறுப்பான் இந்தியன் என்ற உங்களது உளவியல் வாதம் அடிபட்டு போகிறது.

    கருணாநிதியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த அரசியல்வியாதிகளையே தமிழகமும், உலகில் பல நாடுகளில் வாழும் தமிழர்களும், ஈழப் பிரச்சினையை வோட்டுகளாக மாற்றும் வியாபாரிகளாகத் தான் பார்க்கிறார்கள்.

    ReplyDelete
  10. உதவித்தொகை வேண்டாம்... ஈழம் வேண்டாம்.. உயிர் வேண்டும்.

    ஆம்..ஈழ தமிழர்க்கு இப்போது ஈழம் வேண்டாம்..உங்களின் (காங்கிரஸ்) பிச்சை காசு வேண்டாம். போரை நிறுத்த சொல்லுங்கட அரசியல் பன்னிகளே..
    இருக்கும் மிச்ச மீதி உயிர்களை நாம் மே 13 முன் காப்பாற்ற வேண்டும். இல்லையெனில் இத முதுகு எலும்பில்லாத தலைவர்களே மீதி இருக்கும் எல்லா உயிர் களையும் எடுத்து விடுவார்கள்.

    முதுகு எலும்பில்லாத முதல்வரின் நாடகம் நல்லா இருந்துச்சு. வடிவேலு காமெடி விட நல்லா காமெடி யா இருந்துச்சு.

    ReplyDelete
  11. நிறைய வாசகர்கள், நிறைய எதிர்பார்ப்புகள் .சிறு வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள்.உங்களின் இந்த ஆக்ரோஷமும் கோபமும் நடுநிலையோடு இருந்தால் மிகவும்மகிழ்வோம்//

    எது நடுநிலை என்பதே குழப்பமாக இருக்கப் போய்த்தானே இத்தனை களேபரமும்.

    ReplyDelete
  12. ஈழத்திற்காக, ஈழத்தமிழருக்காக கலைஞரை திட்டிக்கொண்டிருப்பவர்கள் கிழித்ததை விட, கலைஞர் நிறையவே கிழித்திருக்கிறார் என்பதே நிதர்சன உண்மை.

    டிஸ்கி : நான் தி.மு.க காரன் இல்லை

    ReplyDelete
  13. இப்போதைக்கு இந்தியாவை பிடித்துக் கொண்டு இந்த தொங்கு தொங்கும் இந்த ஈழ உணர்வாளர்கள், புலிகள் ஐரோப்பிய நாடுகளின் அடிவருடிக்கொண்டிருந்த போது எதை வருடிக்கொண்டிருந்தார்கள்....

    இவர்கள் எதையோ வருடிக்கொண்டிருந்த நேரத்தில் ராஜபக்‌ஷே புத்திசாலித்தனமாய் இந்திய உதவியுடன் புலிகளுக்கு சவப்பெட்டி அடித்து விட்டார்.

    ReplyDelete
  14. வன்னிய ஒற்றுமை ஓங்குக

    ReplyDelete
  15. கர்னாடகாவிலிருந்து வந்த ஒரு கருப்பனை கொண்டாடும் மண் இது.கருணாவின் கலர் கருப்பு இல்லை.உள்ளம் அந்த கலர்தான்.இன்னும் எத்தனை காலம் தான் இத்து போன இந்த வாதத்தை தொடர போகிறீர்கள்..மக்கள் துன்பம் வரும்போது ஆள்பவரை சாடுவது இயல்பான ஒன்றுதான்...(மல்லிகா மாறன்,திருமதி தயானிதி.இன்னும் நிறைய சம்பந்தங்கள் நீங்கள் சொல்லும் அந்த ஜாதி கருணாவின் குடும்பத்தில் உண்டு..நிற்க ஜாதியும் இல்லை........தீயும் இல்லை....எல்லாம் காசுய்யா..காசு..அது இருந்தால் தோல் கலர் ..... ல் கலர் இதெல்லாம் ......

    ReplyDelete
  16. ஜாக்கிசேகர் அவர்களின் கருத்துகளை நான் வரவேற்கிறேன். அனைவரும் ஏற்று கொள்ள கூடிய கருத்தாகும். ஆரியர்களின் (பார்பனர்) ஆதிக்கம் இன்னமும் இருக்கின்றது. கருணாநிதியை மற்றும் குற்றமோ, குறையோ கூறுவது ஏற்று கொள்ள முடியாது.

    தனி முயற்சி பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை. தமிழர்களான நாம் முதலில் கூடு முயற்சியாக ஒன்று பட்டு செயல்பட்டால்தான், தாய் தமிழ்நாட்டில் வாழும் தமிழன் முதல் இலங்கை முதல் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களின் பிரட்சனைகள் தீர்க்க முடியும்.

    ஒன்று பட்டு செயல்பட எல்லாருக்கும் மனது இருக்குமா ?

    ReplyDelete
  17. எத்தனை நாள் தான் இந்த பார்பனீய எதிர்ப்பை சொல்லியே தமிழ்ர்களை ஏமாறறுவீர்கள
    திமுகவிடம் இருக்கும் பல லட்சம் கோடி ரூபாய்களுக்கு இந்தியாவில் உள்ள எல்லா பத்திரிகையுமே விலைக்கு வாங்க முடியும் அப்படி இருக்க என் தமிழக மக்களை இன்னும் இந்து துக்ளக் படிக்க அனுமதிகிறீர்கள். நேற்று முழுவது சன் கலைஞர் தொலைக்காட்சிகளில் கலைஞரே நம்பும் அளவுக்கு பொய் unamai போல மீண்டும் மீண்டும் ஒளிபரப்ப பட்டதே

    ReplyDelete
  18. எத்தனை நாள் தான் இந்த பார்பனீய எதிர்ப்பை சொல்லியே தமிழ்ர்களை ஏமாறறுவீர்கள
    WELL SAID SUPERSUBRA

    ReplyDelete
  19. கலைஞரின் ஈழத்தமிழர் காவியம் (பகுதி 1) நாடக விமர்சனம் பார்க்க
    http://ponmaalai.blogspot.com/2009/04/1.html

    ReplyDelete
  20. ராவணன்,ஷாபி, தண்டோரா,பணங்காட்டான்,டாக்டர் எஸ்கே, சுப்பர்சுபுரா, பலிகேசி ,யட்சன் ,ஜோ, மதிபாலா, குறும்பன், ஷபி போன்ற வந்த அனைவருக்கும் என் நன்றிகள் பதிவு போட்டு விட்டு யோசித்துபார்த்தேன் குறிப்பிட்ட சமுக எதிர்ப்பு இப்போது குறைந்துதான் போய் உள்ளது அந்த துரோகி பற்றி அடுத்த பதிவில் போட்டு இருக்கின்றேன் படித்து பாருங்கள் அதில் நீங்கள் எக்கிடம் வினா எழுப்பிய கேள்விக்கு பதில் அதில் இருக்கும் என்று நம்புகிறேன்

    ReplyDelete
  21. ஜாக்கி
    "குறிப்பு /கட்ந்த சில பதிவுகளின் பின்னுட்டத்தில் நான் கலைஞர் விட்டு பக்கத்து விட்டுகாரன் போல் சிலர் எழுதினார்கள். நான் ராதகிருஷ்ணன் ரோட்டில் கடற்கரை செல்லும் வேளையில்,சட்டென மனசு மாறி சினிமா பார்க்கும் ஆசையில் கோபாலபுரம் வழியாக சத்தியம் தியேட்டர் செல்வேன். அவ்வளவே கலைஞருக்கும் எனக்குமான சம்பந்தம்...)"

    முடியல

    :-)))))))))))

    ReplyDelete
  22. ஏன் கலைஞரை மட்டும் ஏன் எல்லோரும் திட்டுகிறார்கள்?'

    Reason

    ம‌க‌ன் ந‌டிப்ப‌து பிள்ளையோ பிள்ளை அப்ப‌ன் அடிப்ப‌து கொள்ளையோ கொள்ளை. இப்போது குடும்ப‌ம் முழுவ‌தும் அடிப்ப‌து கொள்ளையோ கொள்ளை.

    ReplyDelete
  23. கலைஞர் கருணாநிதி கருப்பு நிறம் என்பதால் தமிழர்கள் ஒதுக்கவில்லை எம் ஜி ஆர் என்கிற மனிதர் இருக்கும் வரை செல்லாக்காசாக இருந்தார் அவரின் மரணத்திற்கு பின் அ தி மு க இரண்டு பட்ட போது கூத்தாடி கலைஞர் கொண்டாடினார் ஒன்றுபட்ட போது மண்ணை கவ்வினார் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்த்தவர் அல்ல கலைஞர் நாதஸ்வரம் வாசிக்கும் ஆந்திராவை சேர்ந்த இசை வேளாளர் வகுப்பை சேர்ந்தவர் உயர் சாதி யினரின் அடக்கு முறை, தீண்டாமை போன்ற கொடுமையை தீவிரமாக எதிர்த்தவர் பெரியார் அவர் வழியில் வந்தவர் அண்ணா அண்ணா வின் தம்பி கலைஞர் இன்று உயர் ஜாதி கட்சி,தாழ்த்த பட்டவர்களின் கட்சி கூட்டணி வைத்துக் கொண்டு அரசியல் செய்வது ஒன்று தான் அவர் செய்த சாதனை நீங்கள் அவரின் எழுத்துக்களை பற்றி கூறி இருந்தால் இன்னமும் சுவையாக இருக்கும் இந்துக்கள் தீ மிதிப்பது காட்டு மிராண்டித்தனம் என்றவர் மனைவி சனிஸ்வரர் கோவிலில் எள் தீபம் ஏற்றி தி மு க வெற்றி பெற வேண்டும் என வழி படுவது நல்லதனம்மா? முரண்பாடு உள்ள மனிதர் கலைஞர் தமிழர் கள் வெறுப்பது இது போன்ற காரணங்களால் மட்டுமே அன்றி நிறத்தால், பிராமணர் அல்லாதார் என்கின்ற காரணத்தினால் அல்ல என்பது என் கருத்து

    ReplyDelete