விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்த பாடலை பாடினால் எப்படி இருக்கும்....(கற்பனை)

விடுதலைபுலிகள் பற்றி செய்திகளை ஆனந்த விகடன் தொடர்ந்து வெளியிட்ட வண்ணம் உள்ளது. குமுதம் தன் பங்குக்கு சன் ஆப் வெல்வெட்டிதுறை திருவேங்கிடம் வெலுபிள்ளை பிரபாகரன் என்று தொடர் பா. ராகவன் மூலம் எழுதுகிறது.. குமுதம் ரிப்போர்டரில் அதே பா. ராகவன் மூலம் யுத்தம் சரணம் என்று தொடர் எழுதுகின்றது .
சிறு வயதில் நான் புலிகளை பற்றி புரிந்து இருந்ததை விட இப்போது அவர்களின் தர்க்க நியாயம்கள் குமுதத்தாலும் பா.ராகவன் எழுத்துக்களாலும் புரிந்து கொள்ள முடிகின்றது...

நான் பிரபாகரன் ஒரு பாடலை பாடினால் எப்படி இருக்கும் என்று சொல்கிறேன்.. அதுவும் கற்பனை....எல்லா பாடல்களும் தன்னம்பிக்கை தருவதில்லை சில பாடல்களை கேட்கும் போதே உள்ளுர ஒரு மகிழ்வு இருக்கும் அது போல் இந்த பாடலை எப்போது கேட்டாலும் எல்லோருக்கும் ஒரு தன்னம்பிக்கை பிறக்கும் ..

வாழ்வில் எப்போதாவது தோல்வி பக்கம் நாம் கொஞ்சம் சென்றால் இந்த பாடலை பாடிக்கொள்ள வேண்டும்

வாழ்வில் வெற்றி பெற வேண்டு்ம் என்ற வேட்கை உடையவன் அல்லது உடையவர்கள் இந்த பாடலை தினமும் கேட்டு மகிழுங்கள்... இந்த பாடலுக்கு ரஹ்மான் தன் சிம்ம குரலில் உயிர் சேர்த்து பாடி இருப்பார்...

முதலில் இந்த பாடல் இரண்டு குழந்தைகள் பாடுவது போலவும் பிறகு ஒரு ஆண்குரல் அதன் பின்பு ரஹ்மான் குரல் என்று பாடி இருப்பார்கள் இந்த பாடலில் வரும் ரஹ்மானின் “ஹைபிச்” சான்ஸே இல்லை என்பேன்

அதிலும் நிலா என் மேல் என்ற வரி ஆரம்பிக்கும் போது அந்த குரலில் ரஹ்மான் வேகம் காட்டுவார் பாருங்கள்...

பாதுகாக்கப்ட்ட பகுதியில் மக்கள் மீது இன்று கூட சிங்கள ராணுவம் குண்டு மழை பொழிந்து வருகின்றது...
எம் மக்கள் சொல்லொன்னா துயரம் அடைந்து வருகின்றனர். நம் தமிழகத்தில் யார் யாரோடு கூட்டு என்று கவலை பட ஆரம்பித்து விட்டோம்...

இன்று (24 மார்ச் 2009)ஒரே நாளில் சிங்கள ராணுவ குண்டு வீச்சில் 102 பேர் இறந்து உள்ளார்கள் அதில் 25 பேர் சிறுவர்கள்...
ஆண் வர்கம் என்று இருந்தால்தானே சந்ததி வளருவதற்க்கு என்று சொல்லி கொத்துக்கொத்தாக எம்மக்களை குறிப்பாக ஆண்களை அழித்து சிங்கள ராணுவம் வருகின்றது...கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக போர் நடத்தி வரும் புலிகள் தலைவர் பிரபாகரன் இந்த பாடலை பாடினால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை...

தேவைபட்ட இடத்தில் அவர் என்ன வார்த்தைகள் போடுவார் என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்...


இனி அந்த உணர்ச்சிமிகு பாடல் வரிகள்.....
ஒரே கனா என் வாழ்விலே..... அதை நெஞ்சில் வைத்து இருந்தேன்.
ஒரே கனாதான் அவன் வாழ்வில் இருக்கின்றது வேறு எந்த கனாவும் இல்லை... புலித்தலைவர் பிரபாகரனுக்கு என்ன கனவு இருந்து விட போகின்றது...

கனா மெய்யாகும் நாள் வரை ... உயிர் கையில் வைத்து இருப்பேன்.


உயிர் என்பது கனா மெய்யாகும் நாள் வரை இருக்க வேண்டும்.. அதன் தலையெழுத்து இருந்தே ஆக வேண்டும்...

வானே என் மேலே சாய்ந்தாலுமே... நான் மீண்டு காட்டுவேன்.

வானம் அவன் மீது சாய்ந்தாலும் அதனை மீண்டு காட்டுவானாம் எவ்வளவு தன்னம்பிக்கையான வரிகள் பாருங்கள்... வானமே எனும் போது சிங்கள ராணுவம் எல்லாம் சும்மா.....
நீ என்னை கொஞ்சம் கொஞ்சினால்... நிலாவை வாங்குவேன்.

மனைவியிடம் சொல்கிறான்,

நீ என்னை கொஞ்சம் கொஞ்சினால் நிலாவை வாங்குவேன்... இது படத்தில் வரும் வரி அது மனைவி கொஞ்சுவதாக இருக்கும் அதையே பிரபாகரனிடம் மனைவி மட்டும் அல்ல உலகம் எங்கும் உள்ள தமிழ் மக்கள் அவனை ஆதரித்தால் அல்லது கொஞ்சினால் ஈழம் என்ன அந்த நிலாவையே வாங்குவானாம்...
பாடல் வெளியான படம் “குரு” வருடம் 2007. மனிரத்னம் இயக்கத்தில் ரஹ்மான் இசையில் ரஹ்மான் பாடியது... வரிகள் வைரமு்த்து..
http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.8980/

கேட்டுப்பாருங்கள் பின்னுட்டம் இடுங்கள்

அன்புடன்/ ஜாக்கிசேகர்

6 comments:

 1. நல்லா பாடல், அதற்கு தங்களின் கருத்தும் மிக நன்று.

  ReplyDelete
 2. நல்ல பதிவு..

  நன்றாய் இருந்தது..

  ReplyDelete
 3. நல்ல பதிவு. சில இடங்களில் எழுத்துப்பிழை சரி செய்யவும்

  ReplyDelete
 4. நன்றி நைனா தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 5. நன்றி அக்னி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 6. நன்றி முரளி தங்கள் வருகைக்கு எழுத்து பிழை சரி செய்ய யோசனை சொல்லுங்கள்

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner