இலங்கை பிரச்சனையில் ஏன் தமிழன் மிக மிக மட்டமாக நடந்து கொள்கிறான்.


எப்படி பல போராளி இயக்கங்கள் இலங்கையில் தோன்றியதோ அதே போல்தான் இப்போது தாய் தமிழகத்தில் இலங்கை மக்களை பாதுகாக்க பல இயக்கங்கள் தோன்றி இருக்கின்றன.


இவற்றை எல்லாம் பார்க்கும் போது தமிழ்நண்டு கதைதான் எனக்கு ஞாபகம் வருகிறது. கதை தெரியாதவர்களுக்கு இதோ கதை . எல்லா பாட்டில்களிலும் இரண்டு நண்டுகள் இருக்கும் அதுவும் ஒவ்வோறு மாநிலத்து நண்டுகள், ஒருபாட்டிலில் இரண்டு பஞ்சாப் நண்டு ,ஒன்றில் கர்நாடகா ஒன்றில் கேரளா என்று பல் வேறு மாநிலத்து நண்டுகள்.
இரண்டு இரண்டு நண்டுகளாக பாட்டிலில் போட்டு விட்டார்கள்.கொஞ்சம் நேரத்தில் எல்லா மாநிலத்து நண்டுகளும் பாட்டிலை விட்டு வெளியே வந்து விட்டன. ஆனால் தமிழ் நண்டுகள் மட்டும் வெளியே வரவில்லை.

காரணம் ஒரு நண்டு ஏற முயற்ச்சிக்கும் போதே மற்ற நண்டு காலை பிடித்து வாரி விடும் இப்படி மாற்றி மாற்றி காலை வாரினால் எப்படி பாட்டிலை விட்டு வெளியே வர முடியும்.

நம் தமிழர்களின் ஒற்றமைக்கு இதை விட சிறந்த கதை வேறு ஏதும் இருந்து விட முடியாது மற்ற மாநிலத்தவர்கள் எல்லாம் ஒற்றுமையின் சிகரங்கள் ஒருவன் பம்பாயில் உதை வாங்கி விட்டான் என்றதும்எதிர் எதிர் நாட்டாமைகளான நிதிஷ்ம் லாலுவும் சேர்ந்து பகை மறந்து குரல் எழுப்பினார்கள். அதை பார்த்து மிரண்டு போய் மத்திய அரசு மாநில அரசை கேள்வி கேட்டது.

முரண்பாடுகளின் மொத்த உருவம் என்றால் அது தமிழ் இனமாக மட்டும் இருக்கும் .

எல்லோரும் செத்து வீழ்ந்து கொண்டு இருக்கும் போது ஜனாதிபதியின் போர் நிறுத்த கண்டிப்பு ஆறுதல் தருவதாக சொல்கிறார் நம் முதல்வர். அதனால் என்ன பயன்?

இலங்கை பிரச்சனையில் எப்போதும் குரல் கொடுத்த சுப வீரபாண்டியருக்கு இலங்கை பாதுகாப்பு பேரவையி்ல் அழைப்பில்லை.

தீவிர புலி எதிர்பாளர் மடியில் வைகோஉட்கார்ந்து கொண்டு புலி கர்ஜனை செய்து கொண்டு இருக்கிறார்.

இவர்கள் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி என்றால் உடனே ஸ்டாலின் தானும் மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறேன் என்கிறார்.

நக்கீரன் பத்திரிக்கைக்கு இலங்கை தூதர் மிரட்டல் விடுத்து இருக்கிறார் அதை பற்றி தமிழக பத்திரிக்கைகள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
அட்லிஸ்ட் கடைசி பக்கத்தில் ஒரு கண்டனத்தையாவது பதிவு செய்து இருக்கலாம் அதுவும் இல்லை.


போரில் சாவது இயற்க்கை என்கிறார் பிறகு அவர்கள் இறப்புக்கு பிறந்தநாள் கொண்டாட மாட்டேன் என்கிறார்.

மயிலை மாங்கொல்லையில் காங்கிரஸ்காரர்கள் கிளஸ்டர் பாம் போடும் இலங்கை ராணுவத்தை கண்டிக்காமல் புலிகளை ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள்.

சாஸ்த்திரி பவனில் கரி கட்டயாய் மாறியவனின் இறுதி ஊர்வலத்தை போட்டி் போட்டுக்கொண்டு எவருமே காட்டவில்லை. மக்கள் தொலைகாட்சி தவிர.

ஒரே ஒருவன் உதை வாங்கினாலும் அல்லது ஒருவனுக்கு பாகிஸ்தானில் தூக்குஎன்றாலும் அவ்வளவுதான் வட இந்திய மீடியாக்கள் இறக்கை கட்டி பறந்து தூக்கு தண்டனைக்கு பாக்கிஸ்தானில் காத்து இருக்கும் அவரின் அம்மா, பாட்டி, சித்தி கொழந்தன், ஒன்னுவிட்ட சித்தப்பா எல்லாம் டிவி மைக் முன் விசும்பி தீர்ப்பார்கள்.

நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள் ஒரே ஒருவன்தான் மாட்டி இருப்பான் ஆனால் தமிழர்களுக்கு அப்படியா நேர்கிறது.

சரி இலங்கை வேறு நாடு அந்த மக்களுக்கு எப்படி குரல் எழுப்ப முடியும் என்று சில தத்திகள் கேட்கும்.

450மீனவர்கள் இலங்கை கடற்படையால் இதுவரை சுட்டு கொள்ள பட்டார்களே, அவர்கள் எல்லோரும் இந்தியர்கள் இல்லையா?
அவர்களுக்கு ராஜபக்சேவா பிரதமர்?. அவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங்தானே.....
அந்த மீனவர்களின் பிரச்சனையை இதுவரை எந்த வட இந்திய மீடியாவும் விரிவாய் காட்டியதில்லை. எல்லாம் பேருக்கதான்.

காரணம் நமக்குள் இல்லாத ஒற்றுமைதான். இரு கை தட்டல்தான் ஓசை எழுப்பும் என்பதை எப்போது தமிழ் இனம் உணரும் என்று தெரியவில்லை. அப்படி உணராதவரை பல முத்துக்குமார்கள் பெட்ரோல் கேன் வாங்கி கொண்டுதான் இருப்பார்கள்.

வேறு என்ன செய்ய முடியும்....


உலகில் சகிப்புதன்மை அதிகம் இருக்கும் ஒரே இனம் நம் தமிழ் இனம்தான்.


அன்புடன்/ஜாக்கிசேகர்

8 comments:

 1. ஆதங்கத்துடன் சொன்னாலும், ஆத்திரமாய்ச் சொன்னாலும் இதுவே வருத்தமளிக்கும் உண்மை.

  அல்லல்படும் நம் தமிழர்க்கு நல்லதே நடக்கட்டும்!

  ReplyDelete
 2. தல நச்னு சொல்லியிருக்கீங்க... இலங்கை விசயத்துல மீடியா முதற்கொண்டு வேடிக்கை மட்டும் பார்ப்பது..... ஒட்டு மொத்த தமிழனின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

  ReplyDelete
 3. உங்கள் பதிவுகளிலேயே சிறந்த ஒன்று இது. பாராட்டுக்கள்!

  ReplyDelete
 4. vsk நீங்கள் சொல்வது போல் நடந்தால் ரொம்ப சந்தோஷமே அதற்க்க திடழர்கள் ஒருமித்த குரல் எழுப்புதல் வேண்டும்
  தங்கள் கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 5. நன்றி அத்திரி தங்கள் பாராட்டுக்கு, என்ன செய்வது கோபத்தை எழுதி மட்டும் தீர்க்க வேண்டி இரு்கிறது

  ReplyDelete
 6. நன்றி வானத்தின் கீழே தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 7. மக்களுக்கு அந்த கோபம் வர வேண்டும்..ஓட்டு போட மாட்டோம்..என்று புறக்கணீிக்க வேண் டும்..

  செய்வார்களா? திருமங்கலம் தந்த பாடம் ?? கருப்பு பணம்,கறீ விருந்து,டாஸ்மாக்.???

  அந்த நாட்டையும் மக்களையூம் ஆண்டவந்தான் காக்க வேண்டும்..(இப்போது ஆள்கிறவர் அல்ல...)

  ReplyDelete
 8. Sarabjit's singh is not Pakistan Citizen, He is an Indian citizen.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner