
கலைஞர் அவர்களுக்கு,
எனக்கு அரசியல் விளையாட்டு அந்த அளவுக்குஅதாவது உங்கள் அளவுக்கு தெரியாது எனக்கு.
எனக்கு நினைவு தெரிந்த நாளில் அரசியல் அறிந்த வயதில் எம்ஜியார் அவர்கள் கோலோச்சி கொண்டு இருந்தார். அதன் பிறகு நீங்கள்தான் இன்று வரை....
நீங்கள் சொல்வது போல் தமிழக அரசியல் எடுத்து யாராவது பேச ஆரம்பித்தால் அதில் உங்களை திட்டியோ அல்லது பாராட்டியோ பேசாமல் தமிழக அரசியல் பேச முடியாது. அது தமிழக வரலாற்றில் எவருக்கும் கிடைக்காத பாக்கியம்.
ரயில் தண்டவாளத்தில் தலை வைத்ததில் இருந்து, வீரானம் வரை எகப்பட்ட சர்ச்சசைகள் உங்களிடம்.
நான் பழய விஷயத்தை கிளற விரும்பவில்லை. அது இப்போதைய தேவையும் அல்ல...
ஆட்சியை பொருத்தவரை நன்றாகவே இருக்கிறது எப்போதாவது சிறு சிறு தவறுகள் செய்யும் போது எல்லாம் உங்களுக்காக நாங்கள் பரிந்து பேசி இருக்கிறோம், எத்னையோ நண்பர்களின் நல்ல நட்பு உங்களால் பிரிந்து போய் இருக்கிறது.
விட்டு தள்ளுங்கள் எங்களுக்கு நீங்கள்தான் வேண்டும்.
நீங்களும் திருடர்தான் ஆனால் என்ன கொஞ்சம் நல்ல திருடர்அவ்வளவுதான்.
எல்லோரும் 75 பர்சன்ட் அடித்தால் நீங்கள் பத்திலிருந்து 20 பர்சென்ட் அடிப்பீர்கள். அது எல்லோரும் செய்தே ஆக வேண்டும். அது காலத்தின் கட்டாயமும் கூட...
கட்சி நடத்த வேண்டுமே?
ஒரு சாதராண தற்க்கொலை கேஸ் உங்கள் தூக்கத்தை கெடுக்கும் என்று நீங்கள் கணவிலும் நினைத்து பார்த்து இருக்கமாட்டிர்கள்.
அந்த முட்டாள், இலங்கை தமிழர்கள் வாழ்க என்று குரல் கொடுத்து தீக்கு தன்னை தின்ன கொடுத்தது இருந்தால் அது எப்படியும் சாதாரண தற்கொலை கேசாக மாறி இருக்கும்.
நீங்களும் நிம்மதியாக இருந்து இருப்பீர்கள். அடுத்து கயல் விழிக்கு என்ன பதவி கொடுக்கலாம் என்று யோசித்து இருப்பீர்கள்.
செத்த முண்டம் தன் அறிவு தாகத்தை ஒன்று திரட்டி ஒரே நேர் கோட்டில் யோசித்துஇறப்புக்கு பிறகு தன் உடலை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்து இருக்கிறான் என்றால் யோசித்தவன் எப்படி முன்டமாவான்? அவன் எப்படி யோசிக்கதெரியாதவன் ஆவான்? தமிழகத்தில் உள்ள எல்லோரையும் பதினாறு பக்க கடிதத்தில் வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டு அல்லவா உயிர் துறந்து இருக்கிறான் . அது நீங்களே என் நாங்களே எதிர்பாராதது.
அவன் சமுக கோபத்தை மிக சிறப்பாக பதிவு செய்து விட்டு சென்று இருக்கிறான். இன்றளவும் உங்கள் மேல் மையல் கொண்டவர்கள் முத்துக்குமரன் விஷயத்தை பெரிது படுத்தாமல் இருக்கிறார்கள். அல்லது சப்பை கட்டு கட்டுகிறார்கள்
நான் அப்படி அல்ல,
இலங்கை தமிழர்களுக்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ராஜினாமா அறிவித்தது நாங்கள் அல்ல நீங்கள் தான். அதிலேயே உங்கள் பெயர் ரிப்பேர் ஆகிப்போனது.
அடுத்ததாக பிரனாப் முகர்ஜி இப்போது அப்போது இலங்கைக்கு போகிறேன் என்று சொன்ன போது நீங்கள் தலையாட்டியது மட்டும் அல்ல...எங்களையும் ஆட்ட வைத்தீர்கள்.
நீங்கள் சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினீர்கள் மத்திய அரசு உடலுறவில் கிழிந்து போன நீரோத் போல் நம் சட்ட மன்ற தீர்மானத்தை தூக்கி போட்டது. பொறுத்துக்கொண்டோம்.
கடைசியாக பாதுக்காக்கப்பட்ட இடத்தில் குண்டு போடட்டார்கள். அப்போதாவது உங்கள் கண்டனத்தை தெரிவித்தீர்களா ? இல்லையே.
இலங்கை தமிழர்களுக்காக எப்போதும் இழப்புகளை சந்திப்பது திமுகதான். இதில் கொடுமை என்ன வென்றால் எப்போதும் எதிர் பேச்சு பேசிய, இந்து ராம் ,சோ,ஜெ,சுவாமி எல்லோரும் நல்லவர்களாகி போய்விட்டார்கள். அவர்களை யாருமே கேள்வி கேட்கவில்லை, கேட்டாலும் பதில் கிடைக்காது என்பது தெரியும். அதனால்தான் நாங்கள் உங்களை கேட்கிறோம்.
தினமும் பிச்சை போடும் பெண்மனிக்குஅன்று வீட்டி்ல் சாப்பாடு இல்லை அதனால் அவள் பிச்சைக்காரனை நாளைக்கு வா என்கிறாள், ஆனால்எப்போதும் பிச்சை போடாத எதிர்வீட்டுக்காரி பிச்சை போட அந்த பிச்சைக்காரன் இப்படித்தான் சொன்னான்.
டெய்லி பிச்சை போடற தேவிடியா இன்னைக்கு போடலை..
என்னைக்கும் பிச்சை போடாத மகராசி இன்னைக்கு போட்டு இருக்கா என்றானாம் அதுதான் உங்கள் இப்போதைய நிலையும்.
அன்று ஜெ சொல்வது போல்தான் இப்போது நீங்களும் சொல்லி இருக்கிறீர்கள் இலங்கை தமிழர்களுக்கு உதவுவோம் ஆனால் புலிகளுக்கு உதவமாட்டோம் என்று சொல்கிறீர்கள்...
சோனியாவுக்காக சொல்பவர் என்றால் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து தீக்குளித்த முத்துக்குமரன் குடும்பத்துக்கு ஏன் 2 லட்சம் நிவாரன தொகை அளித்தீர்கள், சவ ஊர்வலத்தில்புலிக்கொடி போர்த்தி புலித்தலைவர் படத்தை எடுத்துபோனார்களே எம் மக்கள் அவர்களை கைது செய்ய வேண்டியதுதானே?
முடியாது ஏனென்றால் அது ஒரு எழுழ்ச்சி அதை கட்டுப்படுத்த முடியாது என்பதால் அடக்கி வாசித்தீர்கள். ஒரு சாதாரன பத்திரிக்கையாளன் தற்கொலை செய்து இறந்ததுக்கு பொதுமக்கள் ஏன் மெழுகு வர்த்தி ஏந்தி தன் துக்கத்தை தெரிவிக்க வேண்டும்.
அதை விட கொடுமை மகர ஜோதி, சொர்ககவாசல் திறப்பு என்று நேரலை செய்யும் உங்கள் டிவியும் உங்கள் பேரன் டிவியும் நேரிடி ஒளிபரப்பு செய்யவில்லை.ஒபாபமா பதவியேற்பை போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்ப செய்தீர்கள் முத்து்க்குமாரன் தமிழன் என்பதாலா அல்லது அவன் உண்மை பேசிவிட்டதாலா?
ஏன் ஏன்றால் அவன் எழுப்பிய கேள்வி நியாயமானது...அதில் கிஞ்சித்தும் சுயநலம் இல்லை.
சாதரனமாக தமிழன் ஒகேனெக்கல் கூட்டு குடி நீர் என்றாலே கர்நாடகத்தில் தமிழக பேருந்து மீது கல் வீச்சு நடக்கிறது. நாம் அதை வேடிக்கை பார்த்து 40 நமதே என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.
இப்போதும் உங்களை மட்டும்தான் நாங்கள் நம்பி இருந்தோம் பொதுக்குழுவில் ஏதாவது முடிவு எடுப்பீர்கள் என்று .....
எதிர்பார்த்தது போல் நல்ல முடிவு எடுத்தீர்கள் நீங்கள் மருத்துவமனையில் தங்கி இருப்பதை இன்னும் ஒரு வாரத்துக்கு விரிவு படுத்தி இருக்கிறீர்கள் அவ்வளவே.
இப்போது கூட அனுதினமும் உங்கள் தொலைக்காட்சியில் வருவது போல் கடலில் கட்டு மரம் என்று இனியும் கதை விட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழின தலைவர் என்ற பட்டம் கூட சிலகாலத்துக்கு வேண்டாம் அதை கொஞ்சகாலத்துக்கு தூக்கி தூர போடுங்கள்.
இந்த பதிவு கூட உங்கள் மேல் இன்றளவு நான் வைத்து இருக்கும் மரியாதைக்குதான்.
இன்னும் காங்கிரஸ்காரர்கள் பின்னால் நீங்கள் நின்றீர்கள் என்றால் 40ல் ஒன்று கூட தேறாது. இதுதான் அப்பட்டமான உண்மை. மக்கள் எல்லாவற்றையும் கவனிக்கிறார்கள்.. அதனால்தான் சரத்குமாருக்கு 800 சொச்ச ஓட்டுக்கள்.
மக்களுக்கு தகவல்கள் அசுர வேகத்தில் கிடைத்து விடுகின்றன...
சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி மட்டும் மிஞ்சும் ஏனென்றால் நீங்கள் தமிழர்களுக்கு செய்த வாழ்நாள் சாதனைக்காக...
படித்தவர்கள் மொழிப்புலமை பேச்சுத்திறமை எல்லாம் கற்றுக்கொண்டது உங்களிடம்தான். பொதுவாக படித்தவர்கள் பிரமனல்லாதவர்கள் அதிகம் இருக்கும் கட்சி திமுகதான் இப்போது
உங்களையே படித்தவர்கள் கேள்வி கேட்க ஆரப்பித்துவிட்டார்கள் என்றால் யோசியுங்கள்...
நீங்கள் மாறன் குடும்பத்தாருடன் இணைந்த நிகழ்வு புகைபடத்தை பார்த்து ரசித்தால் போதாது, புலம் பெயர்ந்த கோடிக்கணக்கான நம் இன இலங்கை தமிழ் மக்கள் தத்தம் குடும்பத்தாருடன் இணைந்து எடுத்த புகைபடத்தை உவகையுடன் பார்க்க வேண்டாமா?
உங்களுக்காக எந்த பிரச்சனை என்றாலும் ஓடி வந்து குரல் கொடுக்கும் சக பதிவர் லக்கிலுக் அவர் கையாலேயே கலைஞர் ஒழிக என்று பதிவு போட்டு இருக்கிறார் என்றால் அடி மட்ட தொண்டன் நிலையையும் கட்சிசாராத தமிழன் நிலையையும் சற்றே யோசித்து பாருங்கள்...
லக்கி லுக் சொல்வது போல் உங்களை கண்டிக்க எங்களுக்குதான் முழு உரிமை இருக்கிறது...
நான் கூட உங்களை கேள்வி கேட்ட முதல் பதிவும்இதுதான், முதல் கடிதமும் இதுதான். கேள்வி கேட்க காரணமாக இருந்த இன்லெக்சுவல் முத்துக்குமரனுக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புடன்/ ஜாக்கிசேகர்
ஆம கதிதம் என்கே, எனக்கு ஒன்றுமே தெரியவில்லை...இல்லை கதிதம் எழுதுவது வேஸ்ட் என்று சிம்பாலிக்காக் காட்டுகிறீகளா?
ReplyDeleteBlank open letter ro?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசேகர்..
ReplyDeleteஇன்றைய எரியும் சூழ்நிலையில், உங்கள் கட்சி எடுத்த வரலாற்று சிறப்புமிக்க முடிவில் உங்கள் கருத்து வழக்கம்போல்,கலைஞர் முடிவுக்கு சப்பைக்கட்டு கட்டுவதாகதான் இருக்கும் என நினைதத என்னை லக்கிலுக்,மதிபாலா,உண்மைத்தமிழன் என அனைவருமே ஏமாற்றிவிட்டீர்கள்.
ஆனால் இந்த ஏமாற்றமும் ஒருவகையில் மகிழ்ச்சிதான் எனக்கு.
உங்களுக்கு சுயமாகவும் சிந்திக்கத்தெரியும் என்பதை கடைசியாக நிரூபித்து விட்டீர்கள்.மஞ்சள் துண்டின் சாயம் வெளுத்துப்போனது உங்களைப்போன்ற 'கண்மூடித்தனமானபக்தர்'களுக்கும் தெரிந்துவிட்டதே.
திமுக'வின் இன்றைய முடிவுக்கு அவர்களின் 'வரலாற்றுச் சிறப்புமிக்க 'திருமங்கலம்' வெற்றி தந்த அசைக்கமுடியாத நம்பிக்கையே காரணம் என நான் நினைக்கிறேன்.நாம் நடத்தும் ஆட்சி,எடுக்கும் முடிவுகள் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும்,ஆனால் தேர்தல் சமயத்தில் கோடிகளைக் களமிறக்கினால்,வெற்றி என்ற துண்டு தானாக தோளில் விழும் என்ற மமதையே இன்று திமுக என்ற இயக்கம் கட்டப்பட்ட அடிப்படை கொள்கைகளையே காற்றில் பறக்கவைக்க காரணமாயுள்ளது.
இலவச டிவி,கேஸ்,1 ருபாய் அரிசி போல,இலவச செல்போன்,இலவச பஸ் பயணம்,1 ரூபாய்க்கு 1 பாட்டில் பியர்,ஓட்டுக்கு காந்திபடம் போட்ட 1000 ரூபாய் நோட்டு,அல்வாவினுள்ளே தங்கநாணயம்,ஆடு,கோழி பிரியாணி,தாகம் தீர்க்க டாஸ்மாக் என ஓடவிட்டால்... அன்னமிட்டவர்களுக்கு துரோகம் இழைக்கத்தெரியாத தமிழ்கூட்டம்,உதயசூரியனில் முத்திரையிட்டு தன்குடும்பத்தினர் மீண்டும் மத்தியமந்திரி சபையில் வேண்டிய பதவியில் அமர்ந்து விடுவார்கள்,பிறகு விட்டதைப் பலமடங்காக பிடிக்கும் மந்திரம்தான் கைவந்தக்கலையாயிற்றே...
இதை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் சன் செய்தியில் தமிழகத்தில் அனைத்தும் 'வழக்கம்போல' இன்று நடந்ததாக கூறிக்கொண்டிருந்தார்கள்.. போலீஸ் காவலுடன் காலியாக ஓடிய பேருந்தைக் காட்டியப்படி......
கடிதம் படித்தேன்,
ReplyDeleteகண்கள் பனித்தன,
இதயம் இனித்தது.
இதை விட கருணாநிதிக்கு ( கலைஞர் என எழுத கை வர மறுக்கிறது) அவருடைய இதுநாள் வரை அனுதாபிகள் சார்பாக எழுத முடியாது.. கண்களில் கண்ணீர் ... என்ன செய்ய...
ReplyDeleteதமிழ் உதயன் அவரை கருங்கலி என்றுசொல்லுவதெல்லாம் கொஞ்சம் ஓவர்...
ReplyDeleteமோகன் இரண்டு தரப்பில் யார் சிறந்தவர் என்றால் அவர்தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பச்சை சாயம் வெளுத்த கதைகள் நிறைய... அதே போல் தவறு செய்யாதவன் ஞானி, அவர் ஞானி அல்ல மனிதன். அதே போல் அவர் செய்யும் எல்லா கருத்துக்களுக்கும் சோ போல் நாங்கள் ஜால்ரா போடுவதில்லை...
ReplyDeleteஅதே போல் இலவசங்களை பற்றிய நக்கல் வேண்டாம் என் வீட்டு பக்கத்தில் இருக்கும் சித்ரா அக்கா,4 பெண்கள் கணவர் இறந்து விட்டார்.
நீங்கள் சொன்ன இலவசங்கள்தான் அவர்களை கவுரவமாக வாழ வைக்கிறது. நாம் இந்த நிலை வந்து விட்டால் எல்லோரும் இந்த நிலைக்கு வந்து விட்டார்கள் என்று அர்த்தம் இல்லை. அதே போல் அந்த இலவசங்களில் சில குளறுபடி இருக்கலாம்
களத்தில் இருக்கும் நெல்மணிகள் எல்லாம் கடைக்க போய் சேருவதில்லை...
நன்றி மோகன் தங்கள் பெரிய பின்னுட்டத்திற்க்கு..
தமிழ் உதயன் பீயில் கூட காசு பார்க்கும் கருணாநிதி என்று சொல்லி இருக்கிறீர்கள் இந்த உலகில் எல்லோரும் அப்படித்தான் நீங்கள் டாய்லட் போகும் போது அரை பவுன் மோதிரம் விழந்து விட்டது என்றால் அப்படியே விட்டு விடுவதா, மத்த யாரும் அவரை போல் இல்லை என்று சொல்லுங்கள் ஒத்துக்கொள்கிறேன்இந்த உலகில் வளர்ந்த நிலையில் உள்ள எல்லா நிறுவணங்களும் அதைதான் செய்கின்றன..என்னை பொறுத்த வரை அவரின் இன்றைய நிலைப்பாடு தப்பு அவ்வளவுதான்
ReplyDeleteமன்னிக்கவும்......
ReplyDelete//நீங்கள் சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினீர்கள் மத்திய அரசு உடலுறவில் கிழிந்து போன நீரோத் போல் நம் சட்ட மன்ற தீர்மானத்தை தூக்கி போட்டது. பொறுத்துக்கொண்டோம்.//
ReplyDeleteஅன்பரே,
தமிழக அரசியல்வாதிகள் அதை கூட கழுவி விற்கும் சாமர்த்தியம் படைத்தவர்கள்.
மற்றபடி நான் என்னுடைய மோதிரம் மலத்தில் விழுந்துவிட்டால் கண்டிப்பாக எடுத்து கழுவி வைத்து கொள்ளுவேன். மற்றவர்களுடைய மலத்தை எட்டிபார்க்கும் பழக்கம் என்னிடம் இல்லை அதனால் உங்கள் பதிலுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை.
நான் கண்டிப்பாக அந்த மாதிரி விமர்சனம் செய்து இருக்க கூடாது. தப்புதான் மன்னித்துகொள்ளுங்கள்.
நன்றி
தமிழ் உதயன்
அன்பு சேகர்,
ReplyDeleteஒரு வெளிப்படையான விவாதத்துக்கு நீங்கள் தயாரா?
> கலைஞரின் ஈழ நிலை
> திருமங்கலம் இடை தேர்தல் வியாபார வெற்றி
> தள்ளாடும் வயதில் இன்னும் முதல்வர் பதவியில் இருப்பது
> கழகத்தின் அத்தனை சொத்துகளையும் ஆண்டு அனுபவிக்கும் அவருடைய பெரிய குடும்ப நிலை
> திரு.அழகிரியின் அத்து மீறல்கள்
> மத்திய அரசின் துணையுடன் அவர் கட்சி மந்திர்கள் நடத்தும் தர்பார்.
> கொள்கைகளை விட்டு விட்டு கேவலம் ஒரு தாசி சோனா என்பவள் பேரு சொல்லும் தங்கபாலு போன்றவர்களுக்கு பயந்து ஆட்சி நடத்தும் அவலம்..
> உடல் நிலை முடியாமல் இன்னமும் அந்த பதவியில் ஒட்டி கொண்டு இருக்கும் அவலம்
இன்னும் எத்தனையோ கேள்விகள்... பதில்கள் உங்களை போன்ற கலைஞர் பித்தர்களிடம் எதிர்பார்கிறேன்
சொல்லுவிர்கள??
நன்றி
தமிழ் உதயன்
உதயன் மன்னிப்பு எனபதெல்லாம் பெரிய வார்த்தை நீங்கள் உங்கள் கருத்தை சொல்லி இருக்கிறீப்கள் அவ்வளவே.
ReplyDeleteவிவாதத்துக்குதயார் ஆனால் நேரில் என்றால் செய்யலாம். விவாதம் நேரில் மட்டுமே செய்ய எனக்கு பிடிக்கும்.
நீங்கள் கேட்ட எல்லாக்கேள்விகளுக்கும் எனக்கும் உடன் பாடுதான் இப்போதைக்கு கலைஞரை விட்டால் வேறு வழியில்லை என்பதே நிதர்சன உண்மை.
வருகைக்கு நன்றி உதயன்
நான் ஒன்றும் கலைஞர் அக்கா பையன் அல்ல உங்கள் மேல் கோபப்பட
என்னை பொறுத்தவரை ஓடறகுதிரையில இந்த குதிரை நல்ல குதிரை அவ்வளவே
நன்றி அக்னி எனக்கும் இதயம் பனித்தது
ReplyDeleteவழிமொழிகிறேன்!
ReplyDeleteஅன்பு சேகர்,
ReplyDeleteநானும் ஜெவின் தங்கச்சி மகனும் அல்ல பிரபாகரனின் அக்கா மகனும் இல்லை.
இன்றைய நிலையில் கலைஞர் இன்னும் தமிழ் இ(ஈ)னத்தின் ஒப்பட்ட்ற தலைவர் என்பதை நான் ஏற்று கொள்கிறேன். மற்ற படி அவர் ஒன்றும் தமிழ் இன தலைவர் இல்லை. அப்படி இருப்பவர் இந்த மாதிரி இருந்தால் அது ஒரு தமிழ் இனம் இல்லை தமிழ் ஈனம்.
மற்றபடி விவாதம் நேரில் என்றால் எப்படி? கடைசியில் எதில் முடியும்?? இந்த பதிவர் இன மன்னர்கள் போல யார் கடைசியில் தண்ணியடிக்க போனங்கன்னு?
நன்றி
தமிழ் உதயன்
என்னை பொறுத்தவரை ஓடறகுதிரையில இந்த குதிரை நல்ல குதிரை அவ்வளவே\\
ReplyDeleteஇதுதான் என்னுடைய நிலைப்பாடு....
மற்றபடி விவாதம் நேரில் என்றால் எப்படி? கடைசியில் எதில் முடியும்?? இந்த பதிவர் இன மன்னர்கள் போல யார் கடைசியில் தண்ணியடிக்க போனங்கன்னு?“
நீங்கள் என்னை புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்
அதே போல் நீங்களும் ஒரு தமிழின தலைவனோ அல்லது தலைவியோ அடையாளம் காட்டுங்கள் .
நாம் பின்தொடர தயார்
சொல்றதுக்கு ஒன்னுமில்லை........
ReplyDeleteஇப்படிக்கு
அப்பாவித்தமிழன்
எதிரிக்கு இடம் கொடுக்கக் கூடாதென்று துரோகிக்கு துணை போகக் கூடாது.
ReplyDeleteகயவன் கருணானிதி - துரோகி
வப்பாட்டி ஜெயலலிதா - எதிரி
இதுல சந்துல சிந்து பாடுற சோமாறிகள், கொட்டைதாங்கிகள் தொல்லை வேற
------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'09)
Very Fine Writeup Friend, you just changed ur views against Karunanithi regarding this Eizha Tamizh Eina makkal Issue. But i spoke to u lot against karunanithi and against his activities regards all the issues. Now u all realised his original, there is no need of comparison to get a Good leader, we have the rights to get a leader without doing malpractise.
ReplyDeleteThanigaivel.A
தாலி செண்டிமெண்ட் மஞ்சள் கயிறோடு சம்பந்தப்பட்டது
ReplyDeleteமஞ்சள் பொடி சேர்க்காத உணவுகள் மிக குறைவு
ஹமாம் சோப்பு மஞ்சள் சேர்த்து துட்டை அள்ளி கொண்டது
மஞ்சள் அரைக்கையில் என்று அர்சுனனுக்காக பாட்டு எழுதி
வைரமுத்து பாட்டெழுதி லகரங்களை அள்ளிவிட்டார்
தலைவரும் மஞ்சள் துண்டை மேலே போட்டார்
இழந்த ஆட்சியை பிடிததுவிட்டார்
பிறரை லட்சக்கணக்கில் ஏமாற்றியவருக்கு
கடைசியில் மஞ்சள் அறிவிப்பு அல்லவோ கை கொடுக்கிறது.
மஞ்சளின் மகிமையை தமிழ் நாட்டு திரை கதாசிரியர்கள்,கவிஞர்கள் நன்றாக் அறிவார்கள்
மஞ்சள் சுண்ணாம்போடு சேர்ந்துவிட்டால் மங்கள நீராகிவிடும்
தங்கள் கொடியில் மஞ்சள்நிறத்தின் மகிமை தெரிந்துதான்
சில கட்சிகள் அதை சேர்த்துள்ளன
மஞ்சளை நீங்கள் ஒன்றும் செய்யமுடியாது
Kalaignar is unique
ReplyDelete1. He never stop criticising the hindus even though their votes are required for him.
2.He never stop writing his comments to his followers and books on various subjects.
3.He is capable of managing his family disputes as well Political disputes with his practical approach.
4.He is always supportingthe Govt. servants.
5.He never care for the comments of of his critics but he stick on to his ideals without any break.
6. He never bother about his oldage but he is always alert about the things haappening around him
7.He know how to evade from certain issues.even though his opponents boil.
There is know leader in tamilnadu to equal him even though hehas ignored the welfare of the tamilnadu and its people in several issues to meet his selfish ends.
Dear Jackie,Do you know the meaning of Jackie?
ReplyDeleteJackie(I mean only sound) one who ride on a horse and controlling it.
As such why do you go after sombody?
You proclaim yourself as a leader and to do what ever you want to do good for the masses.
If you follow somebody you will have no freedom and you have to dance to the tunes of the leaders you follow against you conscience.
It is better to keep quiet,than surrendering yourself to some selfish people.
Pl. think over.
கோடிகளில் புரளுபவர்களை பற்றி அலசியது போதும்
ReplyDeleteஇவர்களை பற்றியும் கொஞ்சம் கவலைபடுங்கள்.
வானமே கூரையாக வாழ்கின்ற மக்களே
உங்கள் வாழ்க்கைக்கு உத்திரவாதம் யார் ?
ஐந்தாண்டுக்கொரு ஆட்சிகள் மாறும் ;
அரசுகள் என்றும் உங்களைப்பற்றி
அக்கரைப்படபோவதில்லை ;
உங்களுக்கு வாக்குரிமை இல்லாமையால்
கவலைப்படவும் போவதில்லை
உங்களைப்பற்றி எந்நாளும்
உங்களை சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும்
சமூகமும் உங்களை பற்றி கவலைப்படபோவதில்லை
நான்கு சுவர்ர்களுக்குள் வாழும் மக்களுக்கே
பாதுகாப்பில்லை ;
உங்களுக்கு எது பாதுகாப்பு ?
அது சரி, என்ன இருக்கிறது உங்களிடம்
வைத்து பாதுகாக்க ?
இருக்க வீடு கிடையாது
நடைபாதைகளும் பாழடைந்த கட்டிடம்களும்
மரத்தடிகளும்தான் நீங்கள் வசிக்கும் மாளிகைகள்
உடுக்க நல்ல உடை கிடையாது
குளிக்க குடிக்க சுத்தமான நீர் கிடையாதுஉண்ண நல்ல உணவு கிடையாது
நோய் வந்தால் மருத்துவ உதவி கிடையாது
கல்வி அறிவு கிடையாது
எல்லாம் இருந்தும் மகிழ்ச்சியற்று வாழும் மக்களிடையே நீங்கள் எதுவுமே இல்லாமல் எப்படி மகிழ்ச்சியோடு வாழ்கிறீர்கள் ?
எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்கள் கேட்டுக்கொள்ளுகிறோம் உங்கள் கூட்டத்தில் நல்லவர்களும் உண்டு
நய வஞ்சகர்களும் உண்டு
நாணயமானவர்களும் உண்டு
நச்சு பேய்களும் உண்டு ;
வாழ்ந்து கேட்டவர்களும் உண்டு
வாழ துடிப்பவர்களும் உண்டு
வயதானவர்களும் உண்டு
பக்தர் போல் வேடமிட்டு பிச்சை எடுப்போரும் உண்டு
எத்தர்களும் உண்டு ,பித்தர்களும் உண்டு
என்றாலும் நீங்கள் இந்திய குடிமக்கள்
ஒட்டுரிமையில்லாத எங்கும் ஓடவும் முடியாத
சமூக விரோதிகளின் கைப்பாவையாக
சுரண்டப்படும் சமூகம்
இந்நாட்டில் கோடீஸ்வரர்கள் குடித்து கும்மாளமிட
நீங்களோ கால் வயிற்று கூழுக்கு வழியின்றி
வாழ்நாளை தள்ள
வாழ்க சுதந்திரம் .
வாழ்க இந்திய நாடு .
உங்கள் கூட்டம் நாள்தோறும் பெருகிவருவது காலத்தின் கட்டாயம் [Photo]
நன்றி தனிகை வேல் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDelete