(இலங்கை தமிழர் நிலை)ஆனந்த விகடன் பொக்கிஷத்துக்கு கோடான கோடி நன்றிகள்...

ஆனந்த விகடன் தன் பொலிவை சில மாதங்களுக்கு முன் மாற்றிக்கொண்டது நாம் அனைவரும் அறிந்ததே..அதே வேலையில் ஆனந்த விகடன் சத்தம் இல்லாமல் ஒருகாரியம் செய்து வருகிறது . விகடனின் பழைய மலர்களை இப்போதைய பிரச்சனைகளுக்கு ஏற்றது போல் கடந்த காலங்களில் நடந்த நிகழ்வுகளை ஆனந்த விகடன் பொக்கிஷம் என்ற பெயரில் சில பல பக்கங்களில் பிரசுரித்து வருகிறார்கள்.

அது கடந்த காலத்திய பதிவு மட்டும் அல்ல இந்த இளைய தலைமுறையினர் அந்த காலத்து நிகழ்வுகளையும் இந்த காலத்து நிகழ்வுகளையும் ஒப்பீடு செய்ய ஏற்றதாக இருக்கிறது.

தமிழகத்து மக்கள் எந்த அளவுக்கு ஞாபக மறதி உள்ளவர் எந்த அளவுக்கு உணர்ச்சி வசப்படுவார்கள் என்பதற்க்கு 1983ல் விகடனில் வந்த தலையங்கமே நம்மை நாமே செறுப்பால் அடித்துக்கொண்ட உணர்வை ஏற்படுத்தியது என்பது உண்மை.7/8/1983ல் வெளிவந்த தலையங்கம் இதுதான்.....

ஸ்ரீலங்காவின் அரக்கர் கூட்டடம் கேட்பாறின்றி தமிழ் மக்களை பலி வாங்கி கொண்டு இருக்கிறது.
செய்வதறியாது நாம் உடலும் உள்ளமும் துடிதுடிக்க கண்ணீர் விட்டு கதறிக்கொண்டு இருக்கிறோம்.

வேறு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உரிமையில்லை, இது மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட வெளிநாட்டு விவகாரம். ஆனால் இது மத்திய அரசுக்கோ இது ஸ்ரீலங்காவின் உள்நாட்டு விவகாரம்.வெளியுறவு அமைச்சர் அங்கு சென்று பேசிவி்ட்டு வந்ததை தவிர வேறு ஓன்றும் செய்ய முடியவில்லை.


தமிழர்கள் மேல் பாசமும் நேசமும் கொண்ட மத்திய அரசு இலங்கை இறையான்மைக்கு எந்த குந்தகமும் விளைவிக்காமல் பேசி விட்டு வர நேற்று கூட அதாவது 16/01/2009 அன்று கூட சிவ சங்கர் மேனன் அங்கே உள்ள மாதாக்கோவிலில் மணி ஆட்ட சென்று இருக்கிறார்.
பாருங்கள் தமிழர்களே வெட்கி வேதனை படுங்கள். 26 வருடக்ளாக இன்னும் வெளியுறவு துறை மந்திரி போயிட்டு வந்துக்குனுதான் இருக்கிறார் இன்னாத்தை அவுரு கிழிச்சாரு அல்லது இந்திய அரசாங்கம் என்னத்து கிழிச்சது....


அடுத்த அந்த பழைய தலையங்கத்தை பார்ப்பபோம்

இணவெறியர்கள் தமிழர்களைநடு வீதியில் வேட்டையாடிக்கொண்டு இருக்கிறார்கள். இதை தடடிக்கெட்க தமிழக அரசுக்கும் உரிமையில்லை மத்திய அரசுக்கும் உரிமையில்லை. இந்த நிலையை நினைத்தால் நெஞ்சு வெடிக்கிறது.


இப்போதும் இலங்கையில் வெள்ளை வேன் வைத்து தமிழர்களை கடத்தி சித்தரவதை செய்து கொல்லும் செயல்கள் நடப்பதாக அதே ஆனந்த விகடனில் சிங்களத்து சித்திரவதை என்ற தலைப்பில் எழதி இருக்கிறார்கள்

இன்னம் நிறைய எழுதி இருக்கிறார்கள் கடசியாக இப்படி முடித்து இருக்கிறார்கள்.

வல்லரசகளாம் சமாதானமாம் ஐநா சபையாம், பாதுகாப்பாம், மனித உரிமைகளாம் சே....
உண்ணாவிரதம் இருந்து ஒன்றும் ஆகப்போவதில்லை. நாம் தமிழர்கள் நம்க்குள்ளேயே எகப்பட்ட எட்டப்ன்களை வைத்தக்கொண்டு எப்படி பிரச்சனைகள் தீர்வுக்கு கொண்டு வர முடியும்?


எது எப்படி இருந்தாலும் 26 வருடக்ளுக்கு முன் நடந்த நிகழ்வுகளை இப்போது அளிக்கும் போது இலங்கை பிரச்சனை இன்னம் ஒரு அடி கூட நாம் எடுதது வைக்கவில்லை என்பதை விகடன் பொக்கிஷம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.

இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று தமிழ் திரை உலகினரின் உண்ணாவிரதம்,வியாபாரிகள் கடை அடைப்பு,பெப்ஸி அமைப்பினர் உண்ணாவிரதம், நடிகர் விஜய் உண்ணாவிரதம் , சின்னத்திரை கலைஞர்கள் உண்ணாவிரதம்,சென்னை டு செங்கல் பட்டு வரை கொட்டும் மழையிலும் மனித சங்கிலி, சீமான் அமிர் கைது திரும்பவும் சீமான் கைது, பழ நெடுமாறன் போராட்ம், எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தானா?

வாரா வாரம் இது போன்ற செய்திகளை இளை தலைமுறையினரும் எளிதில் எல்லாவற்றையும் மறக்கும் தமிழர்களையும் விகடன் பொக்கிஷம் உசுப்பி விடும் என்று எண்னுகிறேன்


அந்த வகையில் விகடன் நிறுவனத்துக்கு என் நன்றிகள் பல.....

6 comments:

 1. //எது எப்படி இருந்தாலும் 26 வருடக்ளுக்கு முன் நடந்த நிகழ்வுகளை இப்போது அளிக்கும் போது இலங்கை பிரச்சனை இன்னம் ஒரு அடி கூட நாம் எடுதது வைக்கவில்லை என்பதை விகடன் பொக்கிஷம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது//

  உங்க பதிவை பார்த்த பிறகு அத் தலையங்கத்தை நானும் படித்தேன்!

  இன்னும் ஒரு அடிகூட முன்னேற்றம் காட்டாமல்தான் இருக்கிறது இந்திய அரசு என்பது வேதனைக்குரிய உண்மை!

  :(

  ReplyDelete
 2. தகவலுக்கு நன்றி,ஜாக்கி.

  கடைசி செய்தி:
  இந்திய வெளியுறவு செயலாளர்
  சிவ்சங்கர் மேனன் சார்க் மாநாடு பற்றியும் மற்ற
  நேச உறவு பற்றியும் தான் பேசினாராம்,மகிந்த-வுடன்.

  கலைஞருக்கு நல்ல மரியாதை செய்துள்ளது,அவரின் மத்திய
  அரசு.

  ReplyDelete
 3. கடைசி செய்தி:
  இந்திய வெளியுறவு செயலாளர்
  சிவ்சங்கர் மேனன் சார்க் மாநாடு பற்றியும் மற்ற
  நேச உறவு பற்றியும் தான் பேசினாராம்,மகிந்த-வுடன்.

  கலைஞருக்கு நல்ல மரியாதை செய்துள்ளது,அவரின் மத்திய
  அரசு.//

  நன்றி முகு பொதுவாக தமிழர்கள் என்பவர்கள் ஒற்றுமை இல்லாதவர்கள், அவர்களை எப்படி வேண்டுமானாலும் ஆட்டி வைக்கலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு எப்போதும் உண்டு..

  ReplyDelete
 4. //பாருங்கள் தமிழர்களே வெட்கி வேதனை படுங்கள். 26 வருடக்ளாக இன்னும் வெளியுறவு துறை மந்திரி போயிட்டு வந்துக்குனுதான் இருக்கிறார் இன்னாத்தை அவுரு கிழிச்சாரு அல்லது இந்திய அரசாங்கம் என்னத்து கிழிச்சது....//

  சிவசங்கர் மேனனின் பயணம் வெற்றிகரமா முடிஞ்சதுன்னு கலைஞர்கிட்ட இருந்து அறிக்கை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு எல்லா விசயங்களையும் சாதாரணமாக பார்க்க பழகி வசைட்டாங்க நம்ம சனநாயகவாதிகள்...ஒவ்வொரு அரசாங்கமும் இந்த விசய்த்துல ஒரு அடிகூட எடுத்து வைக்க யோசிக்கிறாங்க...இவங்களை மேலே ஏத்தி வச்ச மக்கள்தான்....................../////

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner