சென்னை மெரினாவுக்கு அடுத்து தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரியகடற்கரை, எங்கள் கடலூர் சில்வர் பீச்சில் கோடை விழா...



என் சொந்த ஊர் கடலூரில் மே மாதம் தோறும் நெய்தல் கொண்டாட்டம் என்ற பெயரில் கோடை விழா நடப்பதுண்டு. இப்போது கூட 28 லிருந்து ஜுன் 1 ம் தேதி வரை நடக்கிறது . தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை மெரினாவுக்கு ,அடுத்து எங்கள் கடலூர் சில்வர் பீச் தான். கடலூர் வாசிகளின் செலவில்லாது பொழுது போக்குதலம் எங்கள் சில்வர் பீச். தினமும் மாலையில் நிறைய போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். தினமும் நிறையகூட்டம் வருகிறது. நிறைய குழந்தைகள் சுட்டி டீவி , ஜெட்டக்ஸ் , போகோ போன்ற சேனல்களை தியாகம் செய்து வெளி மனிதர்களை சந்திப்பதும் அவர்களோடு பழகுவது போன்ற செயல்கள் அதிகரிக்க இது போன்ற விழாக்கள்தான் காரணம் என்பேன்.தினமும் நிறைய கூட்டம் வருவதால் காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுக்ள் மிக சிறப்பாக உள்ளன. போக்குவரத்துதுறையும் நெரிசல் இல்லாத அளவுக்கு போக்குவரத்துவசதிகள் பொதுமக்களுக்கு செய்து கொடுத்துள்ளன. நேரம் இருந்தால் சில்வர் பீச் போய் பார்த்துவிட்டு வாருங்கள்.





கருத்து / புகைபடம் .. ஜாக்கிசேகர்

No comments:

Post a Comment