உறுத்தும் உடை மட்டுமே பெண் கற்பழிப்புக்கு முக்கியகாரணமா?


பெண் உடை குறித்து விவாதம் என் நண்பர்கள் மத்தியில் நிகழ்ந்த போது , எல்லோருமே பெண் அடக்கம் ஒடுக்கமாக இருக்கவேண்டும் , என்று வாதிட்டார்கள். கல்லூரிகளில் கூட உடை கட்டுப்பாடு வேண்டும் என்றார்கள். எனக்கும் உடைகட்டுப்பாட்டில் ஆதரவு உண்டு. அளவு கோலில்தான் எனக்கு வேறுபாடு உண்டு. கவர்ச்சி உடை கல்லூரியில் அனுமதிக்க வேண்டாம், ஆனால் ஜின்ஸ் டி சர்ட் கூட கவர்ச்சி உடை என்பதைதான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஆபாச வாசக டீசர்ட் வேண்டவே வேண்டாம். நான் ஏற்றுக்கொள்கிறேன். பல கல்லூரிகளில் ஜீன்ஸ் கூட அணிய கூடாது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை . கவர்ச்சி உடைதான் ஒரு ஆண் கற்பழிக்கவும், வம்பு பண்ணவும் தூண்டும் எனில் நொய்டாவில் 25க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் கற்பழிக்கப்படடு இறந்து போனார்களே , அவர்கள் என்ன கவர்ச்சி உடை அணிந்து இருந்தார்கள். ஒரு வாரத்திற்க்கு முன், சென்னை கொரட்டுரில் முன்று வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து சாக்கடையில் சடலத்தை வீசினானே ஒரு பெயிண்டர், அப்போது அந்த குழந்தை ,அதுவும் முன்று வயது பச்சை குருத்து என்ன கவர்ச்சி உடை அணிந்து இருந்தது? இதிலிருந்து என்ன தெரிகிறது? ஒரு ஆண் எப்போது வேண்டுமானாலும் மிருகம் ஆவான், அவனுக்கு உடை ஒரு பிரச்சினை இல்லை. ஆனால் இதை எந்த ஆணாலும் ஏற்று கொள்ள முடியாது , ஏனெனில் ஆண்கள் அனைவரும் பாரம்பரியமாக உத்தமர் வேஷம் தானே போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் அன்புடன். / ஜாக்கி சேகர்

2 comments:

  1. வணக்கம்

    நீங்க சொல்வது நியாயம் தான்

    என்னை பொருத்தவரையில் உடை என்பது ஒரு பொருட்டே இல்லை

    அப்படி என்றால் பெரும்பாலான பால் வன்முறைகள் நீச்சல் குளங்களில் நடக்க வேண்டும்

    மேலும்

    உடையை ஒரு பொருட்டாக நிணைக்காத ஐரோப்பிய, அமரிக்க நாடுகளில் பால் வன்முறைகள் ஒப்பீட்டு அளவில் குறைவே

    \\ ஒரு ஆண் எப்போது வேண்டுமானாலும் மிருகம் ஆவான\\

    ஆம்

    நன்றி

    ReplyDelete
  2. நன்றி , திரு . இராஜராஜன் .
    வாசித்து நல்ல கருத்து சொல்லியதற்க்கு, எனக்கு ஒரே வருத்தம் தான் , என் நண்பர்கள் இதுவரை புரிந்து கொள்ள வில்லை, கவர்ச்சி உடை கற்பழிப்புக்கு , பாலியல் துன்புறுத்தலுக்கும் முல காரணம் என்கிறார்கள். சரிகா ஷா முழுதாக உடல் மறைத்து சுடிதார் தான் அணிந்து இருந்தார் என்பதை நாம் இன்னும் மறக்கவில்லை

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner