ஒரு இலங்கை மாணவனின் வருத்தம்...


கடந்த வாரம் விஜய் டிவியில் இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியில் திருநங்கை ரோஸ் அவர்கள் ஒரு இலங்கை தமிழ் மாணவனிடம் ஒரு கேள்வி கேட்டார்கள், இலங்கை தமிழுக்கும் சென்னை தமிழுக்கும் என்ன வித்யாசம் ? என்று, இலங்கை மாணவர் எது பற்றியும் யோசிக்காமல் , சட்டென பதில் சொன்னார் இலங்கையில் ஆங்கிலம் கலந்து பேசினால் பைத்தியம் என்று சிரிப்பார்கள், தமிழ்நாட்டில் ஆங்கிலம் கலக்காமல் சுத்த தமிழில் பேசினால் பைத்தியம் என்று சிரிப்பார்கள், என்று மிகுந்த வருத்ததுடன் சொன்னார் . நான் சட்டென்று அந்த மாணவனின் பதில், என்னை சிரிக்க வைத்தது . சில மணிதுளிகளில் என்னை சிந்திக்கவும் வைத்தது ... உங்களுக்கு -? அன்புடன் - ஜாக்கிசேகர்

6 comments:

 1. நியாயமான கேள்வி? தமிழ் நாட்டில் தமிழில் பேச ஏன் வெட்கப்படுகின்றார்கள்.

  ReplyDelete
 2. நன்றி வந்திய தேவன் ஆங்கிலம் ஒரு மொழிதான் அது தமிழகத்தில் பேசபடும் போது அதற்க்கு கிடைக்கும் மரியாதையே தனிதான் , என்ன செய்ய

  ReplyDelete
 3. எனக்கும் ஆச்சரியமாகவே இருக்கிறது.
  தமிழ்,தமிழென எல்லாவற்றிலும் தமிழைத் தேடுபவர்கள்,மெட்ராஸை சென்னை என மாற்றியவர்கள் கூட தமிழில் பேசினால்,'என்னங்க? நீங்க மலையாளமா? 'என்று கேட்கிறார்கள்.யாரிடம் போய்ச் சொல்ல?

  ReplyDelete
 4. இங்கு வந்த ஒரு தமிழ்நாட்டு இசைக்கலைஞரை ஒரு தமிழ் கற்கும் பிரென்சு இளைஞன் கையைப் பற்றி
  "வணக்கம் -நீங்க நல்ல அழகாக பாடினீங்க..மிகவும் ரசித்தேன்..மிக்க நன்றி!" எனக் கூற அவரோ.. தங்ஸ்
  தங்ஸ் போ கம்மிங்.. என உளற அந்த இளைஞன் "நீங்க தமிழர் தானே?" எனக் கேட்க பாடகர் வழிந்தார். சகிக்க முடியவில்லை. ஆனால் அவர் திருந்தியிருப்பார் என நான் நினைக்கவில்லை. ஏனெனில் தமிழ் பேசுவது நாகரீகக் குறைவு என அவர்கள் உதிரத்தில் ஊறிவிட்டது.அதனால் தமிழ் பேசுவோரைப் புழுவாக மதிக்கிறார்கள்.

  ReplyDelete
 5. நன்றி ஷெரிப் , நீங்கள் சொல்வதை ஆமோதிக்கிறேன்

  ReplyDelete
 6. நன்றி திரு யோகன் , இது போல் தமிழர்கள் பல்பு வாங்கும் நிகழ்ச்சிகள் ஏராளம், கருத்துக்கு நன்றி

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner